search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    • கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்தியுள்ளார் அவரது மனைவி மெஹர் ஜஹான்
    • சிசிடிவி காட்சிகளை காட்டி காவல்நிலையத்தில் புகார் அளிக்க மனைவி தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்

    உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில், கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய அவரது மனைவி மெஹர் ஜஹானை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கணவனுக்கு போதைப்பொருள் கொடுத்து மயக்கத்தை ஏற்படுத்திய பிறகு அவரை கட்டிப்போட்டு அவரது ஆண் உறுப்பை சிகரெட்டால் சுட்டு காயப்படுத்தி கொடுமைப் படுத்தியுள்ளார்.

    மனைவி தன்னை கட்டி வைத்து தாக்குவது சிகரெட்டால் சுடுவது போன்ற காட்சிகளை சிசிடிவி காட்சிகள் மூலம் கணவன் பதிவு செய்துள்ளார். இதனை ஆதாரமாக கொண்டு கடந்த 5-ம் தேதி காவல்நிலையத்தில் அவர் புகார் கொடுத்துள்ளார்.

    இதனையடுத்து, மெஹர் ஜஹான் மீது கொலை முயற்சி, சித்திரவதை செய்தல் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த காவல்துறை அவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

    • அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார்.
    • தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    டெல்லி மாநில மதுபானக் கொள்கை தொடர்பான பண மோசடி வழக்கில் டெல்லி மாநில முதல்வர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது செல்லாது என உச்சநீதிமன்றத்தில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை முடிய அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் என்றால், தேர்தலை முன்னிட்டு இடைக்கால ஜாமின் குறித்து பரிசீலனை செய்யப்படும். இது தொடர்பாக இரு தரப்பினரும் மே 7-ந்தேதி (இன்று) தயாராக வரவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.

    அதன்படி இன்று மதியம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது இது தரப்பினரும் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர். வாதங்கள் முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கவில்லை.

    கெஜ்ரிவால் தொடர்பான வழக்கு நாளை மறுதினம் அல்லது அடுத்த வாரம் மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவலை வருகிற 20-ந்தேதி வரை நீட்டித்துள்ளது சிறப்பு நீதிமன்றம்.

    • பிரதமர் மோடி பழங்குடியினரின் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை 14 முதல் 15 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறார்.
    • மோடி கடந்த 10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார்.

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான ராகுல் காந்தி காங்கிரஸ் வேட்பாளர்களையும், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

    இன்று ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பிரதமர் மோடி பழங்குடியினரின் தண்ணீர், காடு, நிலம் ஆகியவற்றை 14 முதல் 15 தொழில் அதிபர்களிடம் ஒப்படைக்க விரும்புகிறார். மோடி கடந்த 10 ஆண்டுகளில் 22 பேரை கோடீஸ்வரர்களாக்கியுள்ளார்.

    வாக்குகள் பெற்று ஆட்சிக்கு வந்தால், ஏழை பெண்களுக்கு வருடத்திற்கு ஒரு லட்சம் வழங்கப்பட்டு, கோடிக்கணக்கானோரை லட்சாதிபதியாக்குவோம். டிப்ளமோ மற்றும் பட்டதாரி வேலைவாய்ப்பு இல்லாத இளைஞர்களுக்கு ஒரு வருடம் பயிற்சி அளிக்கப்படும்.

    இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.

    • வீட்டின் கழிவறைக்குள் ஒரு பாம்பு இருக்கும் காட்சிகளுடன் வீடியோ தொடங்குகிறது.
    • பாம்பை சர்ப்மித்ரா அசால்டாக கைகளால் பிடித்து அப்புறப்படுத்தும் காட்சிகள் பயனர்களை வியக்க வைத்துள்ளது.

    மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகர் மாவட்டம் அகில்யா நகரை சேர்ந்தவர் சர்ப்மித்ரா சிடல்காரா என்கிற சிட்டு. இவர் பாம்பு பிடிக்கும் காட்சிகளை சமூக வலைதளங்களில் வெளியிட்டு பிரபலமானவர்.

    அந்த வகையில் சமீபத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கழிவறைக்குள் புகுந்த பாம்பை லாவகமாக பிடித்து அப்புறப்படுத்திய காட்சிகள் இணையத்தில் பரவி வருகிறது.

    அதில் வீட்டின் கழிவறைக்குள் ஒரு பாம்பு இருக்கும் காட்சிகளுடன் தொடங்குகிறது. பின்னர் கழிவறையில் இருந்து பாம்பு வெளியே வர முயற்சிப்பது போன்ற காட்சிகள் உள்ளது. அந்த பாம்பை சர்ப்மித்ரா அசால்டாக கைகளால் பிடித்து அப்புறப்படுத்தும் காட்சிகள் பயனர்களை வியக்க வைத்துள்ளது.

    • யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
    • போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோட்டில் தேசிய தொழில் நுட்ப கல்வி மையம் (என்.ஐ.டி) செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்த யோகீஸ்வர்நாத் என்பவர் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வந்தார்.

    அவர் அங்குள்ள விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில் மாணவர் யோகீஸ்வர்நாத் விடுதியின் சி-பிளாக்கின் 7-வது மாடியில் இருந்து கீழே குதித்தார். இதில் அவர் படுகாயமடைந்து உயிருக்கு போராடியபடி கிடந்தார். இதையடுத்து அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    ஆனால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியிலேயே மாணவர் யோகீஸ்வர்நாத் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மாணவர் யோகீஸ்வர்நாத் மாடியில் இருந்து குதித்து எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது உடனடியாக தெரியவில்லை. பாடங்கள் தொடர்பாக மன அழுத்தம் ஏறபட்டதன் காரணமாக அவர் இந்த விபரீத முடிவை எடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தேசிய தொழில் நுட்ப கல்வி மையத்தின் விடுதியில் 7-வது மாடியில் இருந்து குதித்து மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கோழிக்கோட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • எக்ஸ் தளத்தில் பரவி வரும் வீடியோவில் மெட்ரோ ரெயிலில் தானியங்கி கதவுகளுக்கு அருகே இளம் தம்பதி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் உள்ளன.
    • வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட தம்பதி மீது மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர்.

    டெல்லி மெட்ரோ ரெயில்களில் பயணிகள் சண்டை போட்டது, ஆபாச செயல்களில் ஈடுபட்டது, மிகவும் கவர்ச்சியாக உடை அணிந்து சென்றது என பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

    இந்நிலையில் தற்போது இணையத்தில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் பெங்களூருவில் மெட்ரோ ரெயிலுக்குள் ஒரு இளம்ஜோடி மிகவும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் உள்ளது. எக்ஸ் தளத்தில் பரவி வரும் அந்த வீடியோவில் மெட்ரோ ரெயிலில் தானியங்கி கதவுகளுக்கு அருகே இளம் தம்பதி ஒருவரையொருவர் கட்டியணைத்து முத்தமிடும் காட்சிகள் உள்ளன.

    இந்த வீடியோ வைரலான நிலையில் பயனர்கள் பலரும் சம்பந்தப்பட்ட தம்பதி மீது மெட்ரோ நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்துக்களை பதிவிட்டனர். இதைத்தொடர்ந்து பெங்களூரு போலீசார் வீடியோ தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்
    • உள்துறை அமைச்சர் அமித்ஷா அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்

    உத்தரபிரதேசம், குஜராத், பீகார், அசாம், சத்தீஸ்கர், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்கள், 2 யூனிய பிரதேசங்களுக்கு உட்பட்ட 93 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர்.

    அதே போல் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் வரிசையில் நின்று தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்றி வருகின்றனர். அதன் விவரம் வருமாறு:-

    அகமதாபாத்தில் காந்திநகர் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் பிரதமர் நரேந்திர மோடி தனது வாக்கினை செலுத்தினார்.

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அவரது குடும்பத்தினர் அகமதாபாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

    கர்நாடக மாநிலத்தின் குல்பர்கா பாராளுமன்ற தொகுதியில் தனது வாக்கினை பதிவு செய்தார் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே.

    குஜராத்தின் போர்பந்தரில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா வாக்களித்தார்.

    அகமதாபாத்தில் அதானி குழுமத்தின் தலைவர் கௌதம் அதானி வரிசையில் நின்று வாக்களித்தார்.

    மத்திய பிரதேசத்தில் முன்னாள் முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் வாக்களித்தார்.

    மகாராஷ்டிராவில் கணவர் ரித்தேஷ் தேஷ்முக் உடன் வரிசையில் நின்று வாக்களித்தார் நடிகை ஜெனிலியா.

    தெற்கு கோவா மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பல்லவி டெம்போ தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார்.

    இந்நிலையில், மூன்றாம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் மதியம் 1 மணி நிலவரப்படி 39.92 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

    மாநில வாரியாக விவரங்கள்:

    அசாம் 45.88 சதவீதம்

    பீகார் 36.69 சதவீதம்

    சத்தீஸ்கர் 46.14 சதவீதம்

    கோவா 49.04 சதவீதம்

    குஜராத் 37.83 சதவீதம்

    கர்நாடகா 41.59 சதவீதம்

    மத்திய பிரதேசம் 44.67 சதவீதம்

    மகாராஷ்டிரா 31.55 சதவீதம்

    உத்தரபிரதேசம் 38.12 சதவீதம்

    மேற்கு வங்காளம் 49.27 சதவீதம்

    • மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
    • மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன.

    குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தில் கராசனா கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் மாணவர்களின் தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 4-ம் வகுப்பு படித்து வரும் மாணவி மனிஷாபாய் வம்சிபிள் என்ற மாணவி எழுதிய தேர்வுகளில் குஜராத்தி மற்றும் கணித பாடங்களில் தேர்வு மதிப்பெண் அதிகபட்சமாக 200-க்கு 211 மற்றும் 212 பெற்றதாக முடிவுகள் வழங்கப்பட்டது. இதனை பார்த்து ஆச்சரியம் அடைந்த மாணவி தனது மதிப்பெண் சான்றிதழை தனது வீட்டிற்கு கொண்டு சென்று பெற்றோரிடம் காட்டினார். இதைப்பார்த்து அவரது பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

    அவர்கள் தங்கள் மகளுக்கு வழங்கப்பட்ட விவரங்களை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். அந்த புகைப்படங்கள் வைரலாக பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து கல்வி அதிகாரிகள் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டனர். அப்போது தேர்வு முடிவுகளை தொகுத்த போது பிழை ஏற்பட்டது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து மாணவியின் மதிப்பெண் விபரங்கள் சரி செய்யப்பட்டன. அதன் படி மாணவி குஜராத்தி பாடத்தில் 200-க்கு 191 மதிப்பெண்களும், கணிதத்தில் 200-க்கு 190 மதிப்பெண்களும் பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

    • வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது.
    • வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார்.

    டெல்லியின் கிழக்கு விஹார் போலீஸ் நிலையம் அருகே சாலையோரத்தில் ரொட்டிக்கடை நடத்தும் 10 வயது சிறுவன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிது.

    சரப்ஜித் சிங் என்ற உணவு பதிவர் ஒருவர் அந்த கடைக்கு சென்றுள்ளார். கடையில் இருந்த 10 வயது சிறுவன் ஜஸ்பிரீத்திடம் உனது தந்தை எங்கே என்று கேட்க... அதற்கு ஜஸ்பிரீத் எனது தந்தை சமீபத்தில் உடல் நலப்பாதிப்பால் உயிரிழந்து விட்டார். அதன் பிறகு எனது தாயார் என்னையும், எனது சகோதரியையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட்டார். இதனால் நானும், எனது சகோதரியும் மிகவும் அதிர்ச்சியடைந்தோம். பின்னர் வாழ்வாதாரம் கருதி எனது தந்தையின் கடையை நானே நடத்த தொடங்கி விட்டேன். என் தந்தையிடம் இருந்து எக்ரோல் மற்றும் சிக்கன் ரொட்டி வகைகளை செய்ய பழகி இருந்தேன். தற்போது பல்வேறு வகையான ரொட்டி வகைகளை விற்பனை செய்கிறேன். வருபவர்கள் எல்லோருமே நல்ல வரவேற்பு கொடுக்கின்றனர் என கூறுகிறார்.

    அவரது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி 96 லட்சம் விருப்பங்களை குவித்தது. வீடியோவை பார்த்த பிரபல தொழில் அதிபர் ஆனந்த் மஹிந்திரா சிறுவனுக்கு உதவ முன் வந்தார். இது தொடர்பாக அவர் தனது வலைதள பக்கத்தில் வெளியிட்ட பதிவில், தைரியம், உன் பெயர் ஜஸ்பிரீத். ஆனால் அவரது கல்வி பாதிக்கப்பட கூடாது. யாரேனும் அவரது தொடர்பு எண்ணில் இருந்தால் பகிரவும். ஜஸ்பிரீத்தின் கல்விக்கு ஆதரவு அளிப்பதற்கான வாய்ப்புகளை எனது அறக்கட்டளை செய்யும் என கூறியுள்ளார்.

    • பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    • காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    திருப்பதி:

    குஜராத், கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடக்கிறது.

    குஜராத் மாநிலத்தை பொருத்தவரை 1995-ம் ஆண்டு முதல் பா.ஜ.க. ஆட்சியில் உள்ளது. கடந்த 2 பாராளுமன்ற தேர்தலிலும் மொத்தம் உள்ள 26 இடங்களிலும் பா.ஜ.க வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 இடங்களில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    கோவாவில் உள்ள 2 தொகுதியில் ஒரு தொகுதியில் பா.ஜ.க. வெற்றி பெற்றது.

    இந்த தேர்தலில் பா.ஜ.க கடந்த தேர்தலைப் போலவே சாதிக்குமா? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    குஜராத் மாநிலத்தில் ராஜ்கோட் எம்.பி.யும் மத்திய மந்திரியுமான புருஷோத்தம் ரூபாலா ராஜபுத்திரர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்தார்.

    இந்த கருத்து அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட காரணமாக அமைந்தது. ராஜபுத்திர பெண்கள் ஒன்றாக பா.ஜ.க. அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்க போவதாகவும் எச்சரித்தனர்.

    குஜராத் மாநிலத்தில் ராஜபுத்திரர்கள் 17 சதவீதம் வரை உள்ளனர். அவர்கள் எதிர்ப்பை பா.ஜ.க.வால் சமாளிக்க முடியாது என்பதால் பிரதமர் மோடி நேரடியாக அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டார்.

    மேலும் பா.ஜ.க.வின் உள்ளூர் நிர்வாகிகளுக்கு எதிராகவும் சில வேட்பாளர்களை பா.ஜ.க தலைமை களமிறக்கி உள்ளது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை பா.ஜ.க. ஆட்சியில் இருந்தது. அப்போது 25 இடங்களில் வெற்றியை எட்டியது. தற்போது கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

    அவர்கள் பெண்களுக்கு என பல்வேறு திட்டங்களை அறிவித்தும் தேர்தல் அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். இது காங்கிரசுக்கு செல்வாக்கை அதிகரித்துள்ளது.

    கோவாவில் வடக்கு மற்றும் தெற்கு கோவா தொகுதிகள் உள்ளன. இந்த இரு இடங்களிலும் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

    கடந்த தேர்தலில் ஆம் ஆத்மி இங்கு தனித்து போட்டியிட்டதால் பா.ஜ.க.வுக்கு நல்ல பலன் கிடைத்தது. இதனால் வடக்கு கோவாவில் பா.ஜ.க எளிதாக வெற்றி பெற்றது. தெற்கு கோவாவில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் வாக்குகள் அதிகம் இருப்பதால் காங்கிரஸ் அங்கு வெற்றியை தக்க வைத்துக் கொண்டது.

    இந்த முறை காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆம் ஆத்மி மற்றும் கோவா பார்வர்டு கட்சி ஆதரவளித்து உள்ளன.

    கோவாவில் உள்ள 2 தொகுதிகளில் பா.ஜ.க.வுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் 3 அம்சங்கள் பா.ஜ.க.வுக்கு தொந்தரவாக மாறி உள்ளன. விறுவிறுப்பான வாக்குப்பதிவும் நடந்து வருகிறது.

    தேர்தல் முடிவுக்கு பிறகு தான் இந்த பிரச்சினைகளால் பா.ஜ.க.வுக்கு பின்னடைவு ஏற்பட்டதா என்பது தெரியவரும் என அரசியல் பிரமுகர்கள் தெரிவித்துள்ளனர்.

    • கடந்த 50 ஆண்டுகளாக நான் வாக்களித்து வருகிறேன்.
    • என்னுடன் நின்ற ஏழை மக்களுக்கு நன்றி உள்ளவனாக நான் அவர்களுடன் இருக்கிறேன்.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் மொத்தம் 28 பாராளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த 26-ந்தேதி 14 இடங்களுக்கு தேர்தல் நடைபெற்றது. எஞ்சியுள்ள 14 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று நடந்தது.

    அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது மனைவி ராதாபாய் கார்கேவுடன் கலாபுர்கியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.

    பின்னர் மல்லிகார்ஜூன கார்கே நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    கடந்த 50 ஆண்டுகளாக நான் வாக்களித்து வருகிறேன். கர்நாடகாவில் பழமைவாய்ந்த கட்சியான நாங்கள் பெரும்பான்மையுடன் அமோக வெற்றி பெறுவோம்.

    பெங்களூரு தொகுதி எங்களுக்கு கொஞ்சம் கடினமாக இருந்தது. ஆனால் எங்களுக்கு கூடுதல் ஆதரவு இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    மந்திரியான போதும், எதிர்க்கட்சித் தலைவராகவும், கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆனபோதும் பசவநகரை நான் என்றும் மறந்ததில்லை.

    இங்குள்ள மக்கள் எனக்கு அன்பையும் பாசத்தையும் கொடுத்துள்ளனர். அவர்கள் உண்மையில் எனது தலைமையை வளர்த்துள்ளனர். என்னுடன் நின்ற ஏழை மக்களுக்கு நன்றி உள்ளவனாக நான் அவர்களுடன் இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கார்கேவின் மருமகன் ராதாகிருஷ்ண தொட்டா மணி குல்பர்கா (கலாபுர்கி) தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

    • உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.
    • காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள்.

    போபால்:

    பிரதமர் மோடி இன்று மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசியதாவது:-

    உங்கள் ஒரு வாக்கு இந்தியாவை 5வது பெரிய பொருளாதாரமாக மாற்றியது. இந்தியாவின் உலகளாவிய செல்வாக்கை அதிகரித்தது. 70 ஆண்டுகளுக்குப் பிறகு சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது.

    ஆதிவாசி மகளை ஜனாதிபதியாக்கியது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளித்தது. ஊழல்வாதிகளை சிறைக்கு அனுப்பியது. இலவச உணவு மற்றும் சிகிச்சைக்கு உத்தரவாதம் அளித்தது.

    இளைஞர்களின் எதிர்காலத்தை உயர்த்தியது. வரம்பற்ற வாய்ப்புகளை உருவாக்கியது. 25 கோடி மக்களை வறுமையில் இருந்து விடுவித்தது. உங்களின் ஒரு வாக்கு 500 வருட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரமாண்டமான ராமர் கோவிலை உருவாக்கியது.

    பாகிஸ்தானில், இந்தியாவுக்கு எதிராக ஜிகாத் செய்யப் போவதாக பயங்கரவாதிகள் மிரட்டி வருகின்றனர். மோடிக்கு எதிராக வாக்களிக்க சிலரையும் காங்கிரஸ் கேட்டுக் கொள்கிறது.

    குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவர்களிடம் மோடிக்கு எதிராக வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். அவர்கள் அவநம்பிக்கையால் சூழப்பட்டிருக்கிறார்கள். வாக்கு ஜிகாத் ஏற்கத்தக்கதா? இதை ஜனநாயகத்தில் அனுமதிக்க முடியுமா? காங்கிரஸ் எனக்கு எதிராக வாக்களிக்கும் ஜிகாத்துக்கு அழைக்கிறது. அவர்களை நான் அம்பலப்படுத்தியதால், எனக்கு எதிரான துஷ்பிரயோகங்களை செய்கி றார்கள்.

    வரலாற்றின் திருப்பு முனையில் இந்தியா உள்ளது, வாக்கு ஜிகாத் பலிக்குமா அல்லது ராம ராஜ்ஜியமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.


    காங்கிரசின் நோக்கம் எவ்வளவு ஆபத்தானது என்பதைப் புரிந்து கொள்ள, 20 முதல் 25 ஆண்டுகளாக அக்கட்சியில் இருந்து வெளியேறியவர்களைக் கேட்டு பாருங்கள். ராமர் கோவிலுக்கு சென்றதற்காக தான் மிகவும் துன்புறுத்தப் பட்டதாகவும், அதனால் காங்கிரசை விட்டு வெளியேறியதாகவும் ஒரு பெண் கூறினார்.

    காங்கிரசை முஸ்லீம் லீக் மற்றும் மாவோயிஸ்டுகள் அபகரித்துள்ளனர் என்று மற்றொருவர் கூறினார். இன்னொருவர் கூறும் போது, ஷா பானோ வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை அவரது தந்தை மாற்றியது போல் ராமர் கோவில் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை காங்கிரஸ் இளவரசர் (ராகுல்காந்தி) மாற்ற விரும்புவதாக தெரிவித்தார்.

    மக்களின் நம்பிக்கை அல்லது தேச நலன் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கவலைப்படவில்லை. இவர்களுக்குள் தேச விரோத கருத்துக்களை வெளியிடுவதில் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு கட்டமாக காங்கிரசுக்கு பாகிஸ்தான் மீதான அன்பு அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் முன்னாள் முதல்வர் ஒருவர், நமது ராணுவம் தீவிரவாத தாக்குதல் நடத்துகிறது என்றும் பாகிஸ்தான் அப்பாவி என்றும் கூறினார்.

    மும்பை தீவிரவாத தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இல்லை என மற்றொரு காங்கிரஸ் தலைவர் கூறினார். பாகிஸ்தான் மீது அன்பையும், நமது ராணுவத்தின் மீது வெறுப் பையும் காங்கிரஸ் காட்டுகிறது. இது ஏன் என்று காங்கிரசை கேட்க விரும்புகிறேன்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    ×