என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    இந்தியாவில் சுமார் 1.5 கோடி ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் மால்வேர் தாக்குதல் நடைபெற்றிருக்கிறது.



    ஏஜன்ட் ஸ்மித் எனும் மொபைல் மால்வேர் சர்வதேச அளவில் 2.5 கோடி ஸ்மார்ட்போன்களை பாதித்து இருக்கிறது. இதில் 1.5 ஸ்மார்ட்போன்கள் இந்தியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த மால்வேர் ஸ்மார்ட்போன்களில் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் செயலிகளை நீக்கிவிட்டு, தீங்கிழைக்கும் செயலிகளை இன்ஸ்டால் செய்யும்.

    செக் பாயிண்ட் எனும் ஆய்வு மையம் புதிய மால்வேர் பற்றிய தகவலை வழங்கியது. கூகுள் சார்ந்த செயலியாக வெளிப்படும் இந்த மால்வேர் ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் ஆனதும், பயனருக்கு தெரியாமலேயே தீங்கு விளைவிக்கும் செயலிகளை ஸ்மார்ட்போனில் இன்ஸ்டால் செய்யும்.

    மால்வேர் - கோப்புப்படம்

    இந்த மால்வேர் இந்தி, அரபிக், ரஷ்ய மற்றும் இந்தோனேசிய மொழி பேசும் பயனர்களை அதிகளவு பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மால்வேர் மூலம் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளனர். 

    இவை தவிர லண்டன், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளை சேர்ந்தவர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மால்வேர் பயனர் ஸ்மார்ட்போன்களில் நிதி ஆதாயம் காட்டும் போலி விளம்பரங்களை காண்பித்து அவர்களை சிக்க வைத்திருக்கிறது. மேலும் இதனை மிக எளிமையாக தீங்கு விளைவிக்கும் காரியங்களுக்கு பயன்படுத்த முடியும்.
    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஸ்மார்ட்போன் விலையில் ஆண்ட்ரய்டு டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது.



    மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களை அறிமுகம் செய்தது. இவற்றின் விலை ரூ. 13,999 முதல் துவங்குகிறது. 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கும் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களில் 16:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ கொண்டிருக்கின்றன.

    இந்தியாவில் புதிய டி.வி. மாடல்கலின் விற்பனை ஜூலை 11 ஆம் தேதி முதல் துவங்குகிறது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகின்றன.

    மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்டு டி.வி.

    புதிய மைக்ரோமேக்ஸ் ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களில் பயனர்கள் கூகுள் பிளே ஸ்டோர், கேம்கள், திரைப்படங்கள் மற்றும் இசை உள்ளிட்ட சேவைகளை பயன்படுத்த முடியும். இத்துடன் பில்ட் இன் க்ரோம்காஸ்ட் வசதியும் வழங்கப்படுகிறது. இதுதவிர கூகுள் அசிஸ்டண்ட் சேவையும் இருப்பதால், பயனர்கள் தங்களின் குரல் மூலம் தேடல்களை மேற்கொள்ளலாம்.

    புதிய டி.வி. மாடல்களின் விரிவான அம்சங்களை மைக்ரோமேக்ஸ் இதுவரை அறிவிக்கவில்லை. ஆண்ட்ராய்டு டி.வி. மாடல்களுடன் மைக்ரோமேக்ஸ் புதிய டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஒன்றையும் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலை ரூ. 10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
    ரெட்மி பிராண்டு ரெட்மி கே20 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய முன்பதிவு தேதி மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.



    சியோமி பிராண்டு இந்தியாவில் தனது ரெட்மி கே20 மற்றும் கே20 ப்ரோ ஸ்மார்ட்போன்களை ஜூலை 17 ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது. இந்நிலையில், அறிமுகம் செய்வதற்கு முன் இரு மாடல்களுக்கும் பிரீ-லான்ச் ஆல்ஃபா சேல் அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் முன்னதாகவே அவற்றை வாங்க முன்பதிவு செய்யலாம்.

    ரெட்மி கே20 ஆல்ஃபா சேல்

    ரெட்மி கே20 மற்றும் ரெட்மி கே20 ப்ரோ மாடல்களை முன்பதிவு செய்வது எப்படி?

    - ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 12 ஆம் தேதி மதியம் 12.00 மணிக்கு ரூ. 855 செலுத்தி ஸ்மார்ட்போனினை முன்பதிவு செய்யலாம்.

    - ஸ்மார்ட்போன் அறிமுகமானதும் அதற்கான தொகையை செலுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

    - ஆல்ஃபா சேல் கட்டணம் பயன்படுத்தப்படாமல் போகும் பட்சத்தில் அந்த தொகை பயனர்களின் Mi அக்கவுண்ட்டில் சேர்க்கப்பட்டு விடும். ப்ளிப்கார்ட் பயனர்கள் இதனை ப்ளிப்கார்ட் தளத்தில் பொருட்களை வாங்க பயன்படுத்திக் கொள்ளலாம்.

    ரெட்மி கே20

    இரு ஸ்மார்ட்போன்களிலும் 6.39 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் AMOLED டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு பை மற்றும் MIUI 10 இயங்குதளம், 48 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX586 சென்சார், 8 எம்.பி. டெலிபோட்டோ லென்ஸ், 13 எம்.பி. 124.8° அல்ட்ரா-வைடு சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

    இத்துடன் 20 எம்.பி. பாப்-அப் செல்ஃபி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 3D வளைந்த வடிவமைப்பு, 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. 

    ரெட்மி கே20 ப்ரோ ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. ரெட்மி கே20 ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அதிகபட்சம் 6 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது.
    வோடபோன் வழங்கும் 6 ஜி.பி. டேட்டாவினை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.



    வோடபோன் நிறுவன பிரீபெயிட் பயனர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. ரூ. 599 விலையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய சலுகையில் பயனர்களுக்கு 6 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை ஆறு மாதங்களுக்கு வழங்கப்படுகிறது.

    இச்சலுகையில் பயனர்களுக்கு மாதம் 300 எஸ்.எம்.எஸ். வழங்கப்படுகிறது. இத்துடன் நேரலை டி.வி., திரைப்படங்கள், நிகழ்ச்சிகள் உள்ளிட்டவற்றை வோடபோன் பிளே செயலி மூலம் இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. தற்சமயம் இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட சில வட்டாரங்களில் மட்டுமே வழங்கப்படுகிறது.

    மொபைல் போன் பயன்பாடு - கோப்புப்படம்

    இந்த சலுகை ஏர்டெல் வழங்கும் ரூ. 597 பிரீபெயிட் சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் வழங்கும் ரூ. 597 சலுகையில் பயனர்களுக்கு 6 ஜி.பி. டேட்டா, அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 168 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் ஒரு வருடத்திற்கான நார்டான் மொபைல் பாதுகாப்பு சலுகை, ஏர்டெல் டி.வி. சந்தா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

    வோடபோன் நிறுவனம் தனது ரூ. 129 பிரீபெயிட் சலுகையை மாற்றியமைத்தது. அதன்படி பயனர்களுக்கு இலவச வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். மற்றும் 2 ஜி.பி. டேட்டா உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த சலுகையில் பயனர்களுக்கு 1.5 ஜி.பி. டேட்டா வழங்கப்பட்டது.

    வோடபோனின் ரூ. 129 சலுகை ஏர்டெலின் ரூ. 129 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஏர்டெல் ரூ. 129 சலுகையில் பயனர்களுக்கு தினமும் 100 எஸ்.எம்.எஸ்., 2 ஜி.பி. டேட்டா, அனிலிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் பயனர்களுக்கு மொத்தம் 1 ஜி.பி. டேட்டா மட்டுமே வழங்கப்பட்டது.
    இந்தியாவில் பப்ஜி லைட் பீட்டா பதிப்பு வெளியாகியுள்ளது. இதனை எவ்வாறு டவுன்லோடு செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்ப்போம்.



    பப்ஜி லைட் பீட்டா இந்தியாவில் வெளியாகியுள்ளது. இதனை பயனர்கள் டவுன்லோடு செய்து குறைந்த திறன் கொண்ட கணினிகளில் விளையாட முடியும். இதற்கான முன்பதிவுகள் கடந்த மாதம் துவங்கியது. இந்நிலையில், பப்ஜி லைட் பீட்டா வெளியாகி முதல் அப்டேட் வெளியிடப்பட்டது.

    இந்தியாவில் பப்ஜி லைட் விளையாட என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    பப்ஜி லைட் பீட்டா பதிப்பினை பயனர்கள் பப்ஜி லைட் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்ததும் உங்களது கம்ப்யூட்டரில் .exe ஃபைல் டவுன்லோடு ஆகும், அதனை க்ளிக் செய்ததும் பப்ஜி லான்ச்சர் இன்ஸ்டால் ஆகிவிடும். இனி கூடுதலாக மற்றொரு கேம் ஃபைலை டவுன்லோடு செய்ய வேண்டும்.

    பப்ஜி லைட்

    இத்துடன் உங்களது கணினிக்கான என்விடியா, இன்டெல் மற்றும் ஏ.எம்.டி. ரேடியான் டிரைவர்களையும் டவுன்லோடு செய்ய வேண்டும். இனி பயனர்கள் பப்ஜி அக்கவுண்ட் உருவாக்க வேண்டும். ஏற்கனவே பதிவு செய்தவர்கள், லாக் இன் செய்தாலே போதுமானது. கேம் விளையாட தேவையான ஃபைல்களை இன்ஸ்டால் செய்ததும், விளையாட துவங்கலாம்.

    இந்தியாவில் பப்ஜி விளையாட இந்தி மொழி வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதுதவிர கேமினை விளையாட முன்பதிவு செய்தவர்களுக்கு பப்ஜி பிளாக் ஸ்கார்ஃப், பன்க் கிளாசஸ், பிளடி காம்பேட் பேண்ட் உள்ளிட்டவற்றை வழங்கப்படுகிறது. இவற்றுக்கான குறியீடுகள் மின்னஞ்சல் மூலம் ஜுலை 11 ஆம் தேதி வழங்கப்படுகிறது. 

    பப்ஜி லைட் கேமினை இலவசமாக விளையாட முடியும் என்றாலும், கேம் விளையாடும் போது சில அம்சங்களை பணம் கொடுத்து வாங்கும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கேம் குறைந்த திறன் கொண்ட கணினிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், கேமினை விளையாட குறைந்தபட்சம் விண்டோஸ் 7, 8 அல்லது 64 பிட் விண்டோஸ் 10 இயங்குதளங்களை பயன்படுத்த வேண்டும்.

    கணினியில் குறைந்தபட்சம் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் இன்டெல் கோர் ஐ3 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 4000 மற்றும் 4 ஜி.பி. ஸ்பேஸ் இருக்க வேண்டும்.
    கூகுளின் ஜிமெயில் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.



    அலுவல் ரீதியில் மின்னஞ்சல்களை அனுப்பும் போது சில சமயங்களில் அவற்றை அனுப்ப சரியான நேரத்திற்கு காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். சில சமயங்களில் பின்னர் அனுப்ப வேண்டிய மின்னஞ்சலை மறந்து, தாமதமாக மின்னஞ்சல் அனுப்புவோரும் உண்டு. அவ்வாறானவர்கலுக்காக ஜிமெயிலில் ஷெட்யூல் எனும் அம்சம் வழங்கப்படுகிறது.

    கூகுள் ஜிமெயில் சேவையின் 15வது ஆண்டு விழாவை முன்னிட்டு கூகுள் மின்னஞ்சல் சேவையில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்வதுடன் மூன்று புதிய வசதிகளை வழங்கியுள்ளது. ஜிமெயிலில் மின்னஞ்சல்களை ஷெட்யூல் செய்ய பின்வரும் வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது.

    ஜிமெயில் ஷெட்யூல்

    முதலில் வெப் பிரவுசரில் mail.google.com வலைதளம் சென்று உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் கடவுச்சொல் பதிவிட வேண்டும்.

    ஜிமெயிலில் சைன்-இன் செய்ததும் 'Compose' பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இது திரையின் மேல்புறம் இடதுபக்கம் காணப்படும். மின்னஞ்சலை டைப் செய்து அனுப்ப வேண்டியவரின் மின்னஞ்சல் முகவரியை பதிவிட வேண்டும்.

    அடுத்து மின்னஞ்சலை அனுப்புவதற்கான பட்டனிற்கு பதில் அதன் அருகில் இருக்கும் கீழ்புற அம்பு குறியை க்ளிக் செய்ய வேண்டும். இனி அனுப்ப வேண்டிய நேரத்திற்கு ஷெட்யூல் செய்ய வேண்டும்.

    இவ்வாறு செய்ததும் புதிய ஆப்ஷன் திறக்கும். அதில் மின்னஞ்சல்களை அனுப்ப மூன்று ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கும். தேர்வு செய்த ஆப்ஷன்களில் நீங்கள் அனுப்ப வேண்டிய தேதி மற்றும் நேரம் இடம்பெறவில்லை எனில், 'Pick date & time' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

    இனி காலெண்டரில் நீங்கள் அனுப்ப வேண்டிய விவரங்களை தேர்வு செய்ய வேண்டும். மின்னஞ்சலை கம்போஸ் செய்யும் போது அதிகபட்சம் பத்து நாட்களுக்குள் ஷெட்யூல் செய்யும் வசதி வழங்கப்படுகிறது. 

    மின்னஞ்சல் ஷெட்யூல் செய்யப்பட்டதும் அது மின்னஞ்சலின் இடதுபுறம் இருக்கும் 'scheduled' பகுதியில் இருக்கும். இங்கு ஷெட்யூல் செய்யப்பட்ட மின்னஞ்சல்களை ரத்து செய்யும் வசதி வழங்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் போது மின்னஞ்சல் டிராஃப்ட்ஸ் பகுதியில் திறக்கும்.
    பயனர் விவரங்களை கையாள்வது பற்றிய காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் குற்றச்சாட்டுக்கு டிக்டாக் பதில் அளித்திருக்கிறது.



    காங்கிரஸ் கட்சியின் சசி தரூர் பிரபல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த வீடியோ செயலியான டிக்டாக் பயனர்களின் விவரங்களை சேகரித்து அவற்றை சீனாவிற்கு வழங்குவதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

    குழந்தைகளின் விவரங்களை அனுமதியின்றி சேகரித்ததாக, டிக்டாக் செயலி மீது அமெரிக்க அரசு 57 லட்சம் டாலர்கள் அபராதம் விதித்தது. சீனா டெலிகாம் உதவியுடன் டிக்டாக் செயலி பயனர் விவரங்களை பரிமாற்றம் செய்வதாக சசி தரூர் தெரிவித்தார். தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதால் அரசாங்கம் உடனடியாக பயனர் விவரங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.

    இந்நிலையில், சசி தரூர் குற்றச்சாட்டுக்கு டிக்டாக் பதில் அளித்துள்ளது. அதில், சசி தரூர் குற்றச்சாட்டுகளில் எவ்வித உண்மையும் இல்லை. தனியுரிமை மற்றும் பாதுகாப்பு தான் டிக்டாக் செயலியின் முக்கிய நோக்கமாக இருக்கிறது. டிக்டாக் செயலி கிடைக்கும் சந்தைகளில் உள்ளூர் சட்ட விதிகளை முறையாக பின்பற்றி வருகிறோம்.

    டிக்டாக்

    சீனாவில் டிக்டாக் செயல்படவில்லை, மேலும் அந்நாட்டு அரசாங்கத்திடம் டிக்டாக் பயனர் விவரங்கள் எதுவுமில்லை. இதுதவிர டிக்டாக் மற்றும் சீனா டெலிகாம் இடையே எவ்வித ஒப்பந்தமும் போடப்படவில்லை, என டிக்டாக் தெரிவித்துள்ளது.

    இந்தியாவில் அறிமுகமான குறைந்த காலக்கட்டத்திலேயே டிக்டாக் செயலி அதிக டவுன்லோடுகளை பெற்று பிளே ஸ்டோரில் முன்னணி இடம் பிடித்தது. முன்னதாக டிக்டாக் செயலியை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. பின் கடும் நிபந்தணைகளுடன் செயலி மீதான தடை நீக்கப்பட்டது. 

    தடைக்கு பின் மீண்டும் அறிமுகமான டிக்டாக் பிளே ஸ்டோரில் அதிகளவு டவுன்லோடு செய்யப்பட்டது. சமீபத்தில் வெளியான விவரங்களின் படி பிளே ஸ்டோரில் அதிக டவுன்லோடுகளை கடந்த செயலிகள் பட்டியலில் டிக்டாக் கடந்த ஐந்து காலாண்டுகளாக தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது. 2019 முதல் காலாண்டில் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிக டவுன்லோடு செய்யப்பட்ட செயலியாகவும் டிக்டாக் இருக்கிறது.
    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சைன் இன் வித் ஆப்பிள் சேவை அத்தனை பாதுகாப்பானது கிடையாது என ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். 13, ஐபேட் ஒ.எஸ். மற்றும் மேக் ஒ.எஸ். கேட்டலினா உள்ளிட்ட இயங்குதளங்கள் கடந்த மாதம் நடைபெற்ற 2019 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    ஆப்பிள் மென்பொருள்களில் புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டதோடு ஆப்பிள் நிறுவனம் சைன் இன் வித் ஆப்பிள் (Sign In with Apple) எனும் பாதுகாப்பு சார்ந்த அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ஒபன் ஐ.டி. பவுன்டேஷன் இந்த அம்சம் செயல்படுத்தப்பட இருக்கும் வழிமுறையில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் புதிய சைன் இன் வித் ஆப்பிள் அம்சம் வழக்கமான சைன் இன் வித் ட்விட்டர், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் சேவைகளை கொண்டு சைன் இன் செய்வதை போன்றே அதற்கு மாற்றாக அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் பயனரின் தனிப்பட்ட விவரங்களை வலைதளம் அல்லது ஆப் டெவலப்பர்களுக்கு வழங்காது.

    லாப நோக்கமின்றி செயல்படும் தொண்டு நிறுவனமான ஒபன் ஐ.டி. பவுன்டேஷன் ஆப்பிளின் சைன் இன் வித் ஆப்பிள் அம்சம் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. புதிய ஆப்பிள் அம்சம் பல்வேறு சைன்-இன் தளங்களில் இருப்பதை போன்ற பொதுவான வழிமுறையை தான் பயன்படுத்துகிறது.

    சைன் இன் வித் ஆப்பிள்

    இது பயனர்கள் தனித்தனி பாஸ்வேர்டுகள் இன்றி அவர்களை உறுதிப்படுத்த டெவலப்பர்களுக்கு அனுமதி வழங்குகிறது. எனினும், ஆப்பிள் புதிய அம்சத்திற்கும் ஒபன் ஐ.டி. கனெக்ட் அம்சத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. இவை பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என கூறப்படுகிறது.

    தற்சமயம் ஒபன் ஐ.டி. கனெக்ட் மற்றும் சைன் இன் வித் ஆப்பிள் சேவைகளுக்கு இடையேயான வித்தியாசம், இது பயனர்கள் எங்கெங்கு சைன் இன் வித் ஆப்பிள் சேவையை பயன்படுத்துவர் என்பதில் மட்டும் வேறுபடுகிறது. இதனால் பயனர்களின் விவரங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

    இதுதவிர இந்த அம்சம் ஒபன் ஐ.டி. கனெக்ட் மற்றும் சைன் இன் வித் ஆப்பிள் டெவலப்பர்களுக்கு தேவையற்ற தொல்லையை ஏற்படுத்தி வருகிறது. ஒபன் ஐ.டி. பவுன்டேஷன் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து, ஒபன் ஐ.டி. டெஸ்ட் சூட் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஆப்பிளை கேட்டுக் கொண்டுள்ளது. 

    ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தரப்பு ஐ.ஒ.எஸ். செயலிகள் சைன் இன் வித் ஆப்பிள் பட்டனில் எஸ்.எஸ்.ஒ. சேவைகளை ஒருங்கிணைக்க உத்தரவிட்டிருக்கிறது.
    ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் வியாபாரத்தை தொடரலாம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.



    ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களுடன் வியாபாரத்தை தொடரலாம் என அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்திருக்கிறார். 

    முன்னதாக அமெரிக்க வர்த்தக சபை ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய் தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.

    தற்சமயம் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஹூவாய் நிறுவனம் அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார். ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் டிரம்ப் இந்த தகவலை தெரிவித்தார்.

    ஹூவாய் மேட் 20 ப்ரோ

    ஜி20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் க்சி ஜின் பிங் சந்தித்து வர்த்தக விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தையில்  ஈடுபட்டனர். இருநாடுகளிடையேயான வர்த்தக விவகாரம் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இருதரப்பும் இணைந்து பொருட்களை விற்பனை செய்வது பற்றி சாதகமான முடிவை எட்டின.

    அதன் படி அமெரிக்க நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்திற்கு பொருட்களை விற்பனை செய்ய துவங்கலாம். இந்த ஆண்டு மே மாதத்தில் அமெரிக்க வர்த்தக துறை ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய்ய தடை விதித்ததால் கூகுள், குவால்காம், இன்டெல் மற்றும் பல்வேறு நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்துடனான வியாபார ஒப்பந்தங்களை ரத்து செய்தன.

    கூகுள் நிறுவனம் ஹூவாயுடன் வியாபாரம் செய்துவந்த நிலையில், அந்நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை ஹூவாய் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் ஹூவாய் தனது சாதனங்களில் வழங்குவதற்கென சொந்தமாக ஹாங்மெங் ஒ.எஸ். (ஆர்க் ஒ.எஸ்.) உருவாக்கி அதற்கான காப்புரிமைகளை பெற்று வருகிறது.
    ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை கடந்திருக்கிறது.



    ஆப்பிள் ஐடியூன்ஸ் தலைவர் எடி கியூ ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆறு கோடியை கடந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இத்துடன் ஆப்பிளின் 'பீட்ஸ் 1' ரேடியோ ஸ்டேஷனை சுமார் ஒரு கோடி பேர் கேட்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 5.6 கோடியாக இருந்தது. பல்வேறு சாதனங்கள் மற்றும் பிளாட்ஃபார்மில் இயங்கும் வகையில் ஆப்பிள் மியூசிக் சேவையை தொடர்ந்து மேம்படுத்த இருப்பதாக கியூ தெரிவித்துள்ளார்.

    தற்சமயம் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்தி வரும் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. எனினும், ஆப்பிள் தளத்தில் ஆப்பிள் மியூசிக் சேவை தான் முன்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    ஆப்பிள் மியூசிக்

    முன்னதாக ஸ்பாடிஃபை சேவையில் சுமார் பத்து கோடி பிரீமியம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மைல்கல்லை ஸ்பாடிஃபை ஏப்ரல் மாதத்தில் கடந்தது. அமெரிக்காவில் ஸ்பாடிஃபை பிரீமியம் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை ஆப்பிள் மியூசிக் இந்த ஆண்டு கடந்தது.

    தற்சமயம் ஆப்பிள் மியூசிக் கட்டண சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.8 கோடியாக இருக்கிறது. ஸ்பாடிஃபை சேவையில் கட்டண சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.6 கோடி ஆகும்.
    ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 பதிப்பை இன்ஸ்டால் செய்வதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.



    கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்தின் மூன்றாவது பீட்டா பதிப்பை வெளியிட்டது. இதனை அந்நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த கூகுள் I/O 2019 நிகழ்வில் அறிவித்தது. ஆண்ட்ராய்டு கியூ இயங்குதளத்துக்கான முதல் பீட்டா பதிப்பு இந்த ஆண்டு மார்ச் மாதத்திலும் இரண்டாவது பீட்டா ஏப்ரல் மாதத்திலும் வெளியானது.

    புதிய பீட்டா வெர்ஷன் பிக்சல் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி கூகுள் அல்லாத 15 ஸ்மார்ட்போன்களுக்கு ஆண்ட்ராய்டு கியூ பீட்டா வழங்கப்படுகிறது. இதில் ஒப்போ, சியோமி, ரியல்மி, ஒன்பிளஸ், நோக்கியா மற்றும் பல்வேறு இதர பிராண்டுகள் இருக்கின்றன.

    ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 இயங்குதளத்தை இன்ஸ்டால் செய்ய விரும்பினால் அதனை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம். 

    ஆண்ட்ராய்டு கியூ பீட்டா டவுன்லோடு செய்யும் முன் இது சீரான இயங்குதளம் இல்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதுபோன்ற பீட்டா இயங்குதளங்களில் பிரச்சனைகள் குறைவாகவோ அல்லது அதிகமாகவோ இருக்க அதிக வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் பீட்டா இயங்குதளத்தை நீங்கள் பயன்படுத்தும் முக்கிய மொபைல் போனில் இன்ஸ்டால் செய்வது சரியான முடிவாக இருக்காது. 

    எதுவானாலும் இன்ஸ்டால் செய்ய முடிவு செய்ய விரும்பினால், தங்களது ஸ்மார்ட்போனை முழுமையாக பேக்கப் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது பீட்டா இயங்குதளத்தால் மொபைல் போன் டேட்டாவுக்கு பாதிப்பு ஏற்படும் பட்சத்தில் தகவல்கள் பாதுகாப்பாக இருக்கும். 

    ஆண்ட்ராய்டு கியூ பிராண்டுகள்

    - முதலில் பீட்டா திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதனால் உங்களது கூகுள் அக்கவுண்ட்டில் சைன்-இன் செய்ய வேண்டும். இதற்கு https://www.google.com/android/beta வலைதளம் செல்ல வேண்டும். இங்கு எந்தெந்த சாதனங்களில் இந்த இயங்குதளம் இயங்கும் என்பதை பார்க்க முடியும். 

    - வலைதளம் சென்றதும், ஸ்மார்ட்போனை திட்டத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும். 

    - இனி என்ரோல் (Enroll) ஆப்ஷனை க்ளிக் செய்ததும், பதிவு செய்த ஸ்மார்ட்போனிற்கு சிஸ்டம் அப்டேட் தயார் என்பதை குறிக்கும் நோட்டிஃபிகேஷன் திரையில் தோன்றும். 

    - இத்துடன் அதனை இன்ஸ்டால் செய்யக் கோரும் ஆப்ஷனும் தோன்றும். இந்த வழிமுறையின் போது ஸ்மார்ட்போன் தானாக ரீஸ்டார்ட் ஆகும். பின் ஸ்மார்ட்போனில் புதிய ஆண்ட்ராய்டு கியூ பீட்டா 3 இயங்குதளம் இன்ஸ்டால் ஆகியிருக்கும். 
    கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது.



    கூகுள் நிறுவனத்தின் மேப்ஸ் ஆண்ட்ராய்டு செயலியில் புதிதாக ஸ்டே சேஃபர் (Stay Safer) எனும் அம்சம் வழங்கப்படுகிறது. புதிய அம்சம் கூகுள் மேப்ஸ் செயலியில் சில காலமாக சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், இந்த அம்சம் தற்சமயம் பயனர்களுக்கு வழங்கப்படுகிறது.

    மேப்ஸ் செயலியில் பொது போக்குவரத்தை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் புதிய அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது. இது கால் டாக்சி, ஆட்டோ ரிக்‌ஷா மற்றும் இதர பொது போக்குவரத்துகளை பயன்படுத்துவோருக்கு பயன்தரும் விதமாக இருக்கிறது.

    புதிய அம்சம் மூலம் பொது போக்குவரத்தை பயன்படுத்தும் பயனர்கள் பயணிக்கும் இடம் சார்ந்த விவரங்களை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் பகிரந்து கொள்ளலாம். இந்தியாவில் முதற்கட்டமாக இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்த கூகுள் மேப்ஸ் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.



    ஆண்ட்ராய்டு தளத்தில் கூகுள் மேப்ஸ் செயலியினை அப்டேட் செய்ததும், நீங்கள் செல்ல வேண்டிய இடத்தை தேடி, அதற்கான வழியை பார்க்க வேண்டும். இவ்வாறு செய்யும் போதே ஸ்டே சேஃபர் பட்டன் திரையில் தோன்றும். ஸ்டே சேஃபர் பட்டன் ‘கெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ்’ (get off-route alerts) மற்றும் ‘ஷேர் லைவ் ட்ரிப்ஸ்’ (share live trips) என இரு ஆப்ஷன்களை கொண்டிருக்கிறது.

    இதில் கெட் ஆஃப் ரூட் அலெர்ட்ஸ் அம்சத்தை க்ளிக் செய்தால், கூகுள் மேப்ஸ் பரிந்துரை செய்த வழியை விட்டு 0.5 கிலோமீட்டர் சென்றதும், பயனருக்கு நோட்டிஃபிகேஷன் வழங்கி எச்சரிக்கை செய்யும். பின் பயனர்கள் பரிந்துரைக்கப்பட்ட பகுதியில் இருந்து எத்தனை தூரம் கடந்து வந்திருக்கின்றனர் என்பதை ஒப்பிட்டு காண்பிக்கும். பின் மேப்ஸ் உதவியுடன் அப்பகுதியில் இருந்து செல்ல வேண்டிய இடத்தை அடையலாம்.

    இதேபோன்று ஷேர் லைவ் ட்ரிப் அம்சத்தை க்ளிக் செய்தால், பயனர் செல்லும் இடம் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருக்கு நேரலையில் பகிரப்படும். இந்த அம்சம் கொண்டு பயனர் தனது லொகேஷனை ஃபேஸ்புக், வாட்ஸ்அப், ஸ்லேக் உள்ளிட்ட செயலிகளிலும் பகிர்ந்து கொள்ளலாம். புதிய பாதுகாப்பு அம்சம் ஐ.ஒ.எஸ். பயனர்களுக்கு எப்போது வழங்கப்படும் என்பது பற்றி இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
    ×