என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது.
எல்.ஜி. நிறுவனம் இந்தியாவில் டபுள்யூ 10, டபுள்யூ30 மற்றும் டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. மூன்று புதிய எல்.ஜி. ஸ்மார்ட்போன்களிலும் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன்கள், நாட்ச் டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 9.0 பை, பின்புற கைரேகை சென்சார், 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.
எல்.ஜி. டபுள்யூ 10 மற்றும் டபுள்யூ 30 ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர், 3 ஜி.பி. ரேம் கொண்டிருக்கிறது. எல்.ஜி. டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர் மற்றும் 4 ஜி.பி. ரேம் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஸ்டீரியோபல்ஸ் சவுண்ட் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.
எல்.ஜி. டபுள்யூ 30 மற்றும் டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் மூன்று கேமரா யூனிட்: லோ லைட் கேமரா, டெப்த் மற்றும் வைடு ஆங்கிள் கேமரா வழங்கப்பட்டுள்ளன. கேமரா தவிர இந்த ஸ்மார்ட்போன்களில் பல்வேறு கேமரா மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இரு ஸ்மார்ட்போன்களிலும் 16 எம்.பி. செல்ஃபி கேமராவும் எல்.ஜி. டபுள்யூ 10 ஸ்மார்ட்போனில் 8 எம்.பி. கேமரா வழங்கப்பட்டுள்ள.

எல்.ஜி. டபுள்யூ 10 சிறப்பம்சங்கள்
- 6.19 இன்ச் 1512x720 பிக்சல் 18.9:9 ஹெச்.டி. பிளஸ் நாட்ச் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், PDAF
- 5 எம்.பி. இரண்டாவது கேமரா
- 8 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

எல்.ஜி. டபுள்யூ 30 சிறப்பம்சங்கள்
- 6.26 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ஐ.பி.எஸ். டாட் ஃபுல் விஷன் டிஸ்ப்ளே
- 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 பிராசஸர்
- 650 மெகாஹெர்ட்ஸ் IMG பவர் வி.ஆர். GE8320 GPU
- 3 ஜி.பி. ரேம்
- 32 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- டூயல் சிம் ஸ்லாட்
- 12 எம்.பி. பிரைமரி கேமரா, சோனி IMX486 சென்சார், எல்.இ.டி. ஃபிளாஷ்
- 13 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 2 எம்.பி. டெப்த் சென்சார்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி

எல்.ஜி. டபுள்யூ 30 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.217 இன்ச் 1520x720 பிக்சல் 19:9 ஹெச்.டி. பிளஸ் புல் விஷன் வி நாட்ச் டிஸ்ப்ளே
- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 632 பிராசஸர்
- அட்ரினோ 506 GPU
- 4 ஜி.பி. ரேம்
- 64 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 (பை)
- ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
- 13 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 8 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா
- 5 எம்.பி. டெப்த் சென்சார்
- 16 எம்.பி. செல்ஃபி கேமரா, ஏ.ஐ. ஃபேஸ் அன்லாக்
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக்
- டூயல் 4ஜி வோல்ட்இ, டூயல் பேண்ட் வைபை, ப்ளூடூத்
- 4000 எம்.ஏ.ஹெச். பேட்டரி
- ஃபாஸ்ட் சார்ஜிங்
எல்.ஜி. டபுள்யூ 10 ஸ்மார்ட்போன் துலிப் பர்ப்பிள் மற்றும் ஸ்மோக் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 8,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எல்.ஜி. டபுள்யூ 30 ஸ்மார்ட்போன் டபுள் புளு, பிளாட்டினம் கிரே மற்றும் அரோரா கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 9,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இரு ஸ்மார்ட்போன்களும் அமேசான் தளத்தில் ஜூலை 3 ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகிறது. எல்.ஜி. டபுள்யூ 30 ப்ரோ ஸ்மார்ட்போன் விற்பனை பின்னர் துவங்குகிறது.
செல்போன்களை அதிகம் பயன்படுத்தினால் மண்டைக்குள் கொம்பு முளைப்பது விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் செல்போன்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எல்லா வேலைகளையும் செல்போன் மூலமே செய்துவிடும் அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது. செல்போன்களின் பயன்பாட்டில் எவ்வளவு நன்மை இருக்கிறதோ, அதே அளவுக்கு உடல் நலத்துக்கு தீங்கும் ஏற்படுகிறது.
செல்போன்களால் கதிர்வீச்சு ஏற்பட்டு உடல்நலம் பாதிக்கப்படுவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆஸ்திரேலிய நாட்டின் குயின்ஸ்லாந்தில் உள்ள சன்ஷைன் கடற்கரை பல்கலைக்கழக விஞ்ஞானிகள், செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்துவதால் உடலமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.
உயில் விசையியல் (பயோ மெக்கானிக்ஸ்) அடிப்படையில் உடலியக்கத்தை தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் செல்போன்களை அதிக நேரம் பயன்படுத்தும் இளைஞர்களின் தலையின் பின்புறம் மண்டைக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு வளர்வதை கண்டறிந்ததுள்ளனர்.

செல்போன்களை பயன்படுத்தும் போது அதன் தொடு திரையைப் பார்க்க நீண்ட நேரம் தலையை குனிந்து கொள்ள வேண்டி உள்ளது. இதனால் தலையின் முழு எடையும் முதுகெலும்பில் இருந்து தலையின் பின்புறம் உள்ள தசைகளுக்கு மாற்றுகிறது. இதனால் எலும்பு தசை நாண்கள், தசை நார்கள் வளர்ந்து மண்டை ஓட்டுக்குப் பின்புறத்தில் உள்பகுதியில் கொம்பு போன்ற தூண்டுதல் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
இதை உறுதி செய்வதற்கு ஆயரத்துக்கும் மேற்பட்ட எக்ஸ்-ரேக்களை எடுத்து ஆய்வு செய்தனர். இதில், இளைஞர்களின் மண்டைக்குள் பின்புறம் கூர்மையான எலும்பு வளர்வதை உறுதி செய்துள்ளனர். செல்போன் அதிக நேரம் பயன்படுத்தும் வாலிபர்கள், தங்கள் தலையின் பின்புறம் கையை வைத்து கவனமாக ஆய்வு செய்தால் உள்ளுக்குள் கொம்பு போன்ற கூர்மையான எலும்பு துருத்திக்கொண்டு வளர்வதை உணர முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆப்பிள் நிறுவனம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான 15-இன்ச் மேக்புக் ப்ரோ யூனிட்களை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
ஆப்பிள் உற்பத்தி செய்த சில 15 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்களின் பேட்டரி அதிக சூடாகி தீப்பிடித்து எரியும் அபாயம் இருப்பதால் அவற்றை திரும்பப் பெறுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த மாடல்கள் செப்டம்பர் 2015 முதல் பிப்ரவரி 2017 வரையிலான காலக்கட்டத்தில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். அபாயம் உள்ள லேப்டாப்கள் சீரியல் நம்பர் மூலம் கண்டறிந்து கொள்ளலாம் என ஆப்பிள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் மேக்புக் ப்ரோ வைத்திருப்போர் தங்களது சாதனம் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிய, திரையின் இடதுபுறம் மேல்பக்கமாக இருக்கும் ஆப்பிள் மெனுவை க்ளிக் செய்ய வேண்டும். மேக்புக் ப்ரோ (ரெட்டினா, 15 இன்ச் ) மாடல்களை வைத்திருப்பவர்கள் தங்களது சீரியல் நம்பரை அதற்கென வழங்கப்பட்டு இருக்கும் பகுதியில் பதிவிட வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலம் நீங்கள் பேட்டரியை மாற்றிக் கொள்ள முடியுமா என தெரிந்து கொள்ளலாம். பாதிக்கப்பட்ட மேக்புக் ப்ரோ யூனிட்களை பயன்படுத்த வேண்டாம் என ஆப்பிள் தனது வாடிக்கையாளர்களிடம் கேட்டுக் கொண்டிருக்கிறது. மேலே குறிப்பிடப்பட்ட மாடல்களை தவிர திரும்பப் பெறும் வகையில் எந்த யூனிட்களும் பாதிக்கப்படவில்லை.
முன்னதாக சாம்சங் தனது கேலக்ஸி நோட் 7 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை திரும்பப் பெற்றது. இவற்றின் பேட்டரியில் ஏற்பட்ட பிழை காரணமாக ஸ்மார்ட்போன்கள் வெடித்துச் சிதறியதால் அவை முழுமையாக திரும்பப் பெறப்பட்டன.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் அறிமுக தேதி பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போனினை ஆகஸ்டு 7 ஆம் தேதி நியூ யார்க் நகரில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனிற்கான கேலக்ஸி அன்பேக்டு விழா புரூக்லின் நகரில் உள்ள பார்கிளேஸ் மையத்தில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் சாம்சங் தனது கேலக்ஸி நோட் 9 ஸ்மார்ட்போனினை இதே அரங்கில் அறிமுகம் செய்தது. புதிய கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றி சாம்சங் இதுவரை எவ்வித தகவலும் வழங்கவில்லை. எனினும், கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் தொடர்ந்து ஆன்லைனில் வெளியாகி வருகிறது.

கேலக்ஸி அன்பேக்டு விழா நடைபெற இன்னும் அதிக நேரம் இருப்பதால், சாம்சங்கின் திட்டத்தில் எப்போது வேண்டுமானாலும் மாற்றங்கள் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. எனினும், கேலக்ஸி ஃபோல்டு ஸ்மார்ட்போனின் வெளியீடு தாமதமாகி இருப்பதால், நோட் 10 ஸ்மார்ட்போன் வெளியீடு முன்னதாக நடைபெறவும் வாய்ப்புகள் இருக்கின்றன.
இந்த ஆண்டு சாம்சங் நிறுவனம் கேலக்ஸி நோட் 10 மற்றும் கேலக்ஸி நோட் 10 ப்ரோ என இரண்டு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. ப்ரோ வேரியண்ட் ஸ்மார்ட்போனில் பல்வேறு கூடுதல் அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிகிறது. இவற்றில் பிரெஷர் சென்சிட்டிவ் எட்ஜ்கள் மற்றும் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்படலாம்.
ஃபேஸ்புக் வலைதளத்தில் அதுபோன்ற கருத்துக்களை இனி அனுமதிக்க மாட்டோம் என அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் அக்கவுண்ட் வைத்திருந்து மரணித்தவர்கள் பற்றி கேலி செய்யும் விதமாக பதிவு செய்யப்படும் போஸ்ட்களை நியூஸ் ஃபீடில் இருந்து நீக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. உயிரிழந்தவர்கள் பற்றி எழுதப்படும் தரக்குறைவான கருத்துக்களை நீக்கும் வகையில் ஃபேஸ்புக் தனது தள அமைப்பில் மாற்றங்களை செய்து இருக்கிறது.
மரணத்தை பாராட்டும் அல்லது ஊக்குவிக்கும் வகையிலான கருத்துக்கள் இனி ஃபேஸ்புக்கில் இடம்பெறாது. முன்னதாக இதுபோன்ற கருத்துக்கள் ஃபேஸ்புக் விதிகளை எதிரானதாக கருதப்படவில்லை. தற்சமயம் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றங்களில் இவ்வாறான பதிவுகள் முகநூல் விதிகளை மீறுவதாக அர்த்தமாகும்.
அந்த வகையில் உயிரிழந்தவர்கள் பற்றி ஃபேஸ்புக்கில் பதிவு செய்யப்படும் தரக்குறைவான கருத்துக்களை சம்மந்தப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர் ஃபேஸ்புக்கிடம் தெரிவிக்கலாம் என ஃபேஸ்புக் தரவுகளுக்கான மேலாளர் லாரா ஹெர்ணான்டஸ் தெரிவத்தார். முன்னதாக கேலி செய்யும் வகையில் இருக்கும் பதிவுகளை சம்மந்தப்பட்டவர்களே தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருந்தது.

உயிரிழந்தவர்கள் பயன்படுத்திய அக்கவுண்ட்களில் மரணித்தவர்களே குற்றச்சாட்டு எழுப்ப முடியாது என்பதால், தற்சமயம் குடும்ப உறுப்பினர்கள் உயிரிழந்தவர்கள் சார்பாக தரக்குறைவான பதிவுகளை ஃபேஸ்புக்கிடம் கொண்டு செல்லலாம். இதே முறையை பிரபலங்களுக்கும் ஃபேஸ்புக் பின்பற்ற இருக்கிறது.
ஒருவேளை மரணித்தவர்கள் தங்களது அக்கவுண்ட்டில் பப்ளிக் கமென்டிங் செய்ய அனுமதித்து இருந்தால், ப்ரோஃபைலில் அதிகப்படியான ஸ்பேம் மற்றும் கேலி செய்யும் கருத்துக்கள் பதிவு செய்யப்படும். இவ்வாறு நடக்கும் பட்சத்தில் இது சம்மந்தப்பட்டவரின் குடும்பத்தாருக்கு வருத்தத்தை ஏற்படுத்தும்.
ஃபேஸ்புக் அக்கவுண்ட் வைத்திருப்போர் உயிரிழக்கும் பட்சத்தில் அவர்களது அக்கவுண்ட்களை மெமோரலைஸ்டு பட்டியிலில் சேர்க்கும் வசதியை ஃபேஸ்புக் வழங்குகிறது. ஃபேஸ்புக்கில் மெமோரலைஸ்டு அக்கவுண்ட்களுக்கு பயனர்கள் அஞ்சலி செலுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது.
ஹூவாய் நிறுவன சாதனங்களில் கூகுளின் ஆண்டராய்டு இயங்குதளம் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஹூவாய் அடுத்தக்கட்ட பணிகளில் மும்முரம் காட்டி வருகிறது.
சீனாவின் ஹூவாய் நிறுவனம் தனது சொந்த மொபைல் இயங்குதளமான ஹாங்மெங்கிற்கு காப்புரிமை பெற கிட்டத்தட்ட உலகின் ஒன்பது நாடுகளில் விண்ணப்பித்துள்ளது.
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹூவாயுடன் வியாபாரம் செய்யக்கூடாது என டிரம்ப் நிர்வாகம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஹூவாய் ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக ஹூவாய் நிறுவனம் தனக்கென சொந்தமாக ஹாங்மெங் எனும் இயங்குதளத்தை உருவாக்கி அதனை பயன்படுத்த கம்போடியா, கனடா, தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஐ.நா.வின் சர்வதேச காப்புரிமை அலுவலகங்களில் காப்புரிமை கோரி விண்ணப்பித்துள்ளது.

முன்னதாக வெளியான தகவல்களில் ஹூவாய் தனது புதிய இயங்குதளத்தை சீனாவில் ஹாங்மெங் என்ற பெயரிலும், சர்வதேச சந்தையில் ஆர்க் ஒ.எஸ். என்ற பெயரில் அறிமுகம் செய்யலாம் என கூறப்பட்டது. இதற்கான விண்ணப்பங்களை ஹூவாய் நிறுவனம் மே 27 ஆம் தேதி சமர்பித்திருக்கிறது.
அமெரிக்க வர்த்தக தடை ஏற்படும் பட்சத்தில் பயன்படுத்த மாற்று இயங்குதளம் ஒன்றை ஹூவாய் உருவாக்கி வைத்திருப்பதாக ஹூவாய் நிறுவன நுகர்வோர் பிரிவு தலைமை செயல் அதிகாரி ரிச்சர்ட் யு தெரிவித்தார்.
சர்வதேச ஸ்மார்ட்போன் சந்தையில் இரண்டாவது இடத்தில் இருக்கும் ஹூவாய் தனது மொபைல் இயங்குதளம் பற்றி அதிகளவு விவரங்களை வழங்கவில்லை. காப்புரிமை விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் தகவல்களில் ஹாங்மெங் இயங்குதளத்தை ஸ்மார்ட்போன், போர்டபில் கம்ப்யூட்டர்கள், ரோபோட்கள் மற்றும் கார் டி.வி.க்களில் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வீடியோ ஸ்டிரீமிங் சேவையான வாட்ச் மிக வேகமாக அதிகளவு வளர்ச்சி பெற்று வருகிறது.
ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ச் வீடியோ சேவையின் பயனர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இருமடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. வாட்ச் சேவைக்கான வரவேற்பு அதிகரிக்கும் நிலையில், புதுப்புது தரவுகளை வழங்க சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்சமயம் ஃபேஸ்புக்கின் வாட்ச் சேவையை மாதாந்திர அடிப்படையில் சுமார் 72 கோடி பேரும், தினமும் சுமார் 14 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தினமும் ஃபேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஒரு நிமிட வீடியோவினை பார்க்கின்றனர் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் வாட்ச் சேவையில் விளம்பரங்கள் மற்றும் ஐந்து புதிய மொழிகளை அந்நிறுவனம் சேர்த்திருக்கிறது. சர்வதேச சந்தையில் ஃபேஸ்புக் வாட்ச் சேவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமான ஃபேஸ்புக் வாட்ச் சேவையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 7.5 கோடி பேர் பயன்படுத்தினர்.
சர்வதேச நிறுவனங்களான தி வாய்ஸ் ஜெர்மனி, ஜெர்மனியின் நெக்ஸ்ட் டாப் மாடல் மற்றும் உலக கோப்பை கிரிகெட் போட்டிகள் தொடர்பான வீடியோக்களை வாட்ச் சேவையில் வழங்கி வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இத்துடன் வீடியோ சேவையில் சொந்தமாக தரவுகளை வெளியிட தனி முதலீடு செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.
ஃபேஸ்புக் தனது தளத்தில் ஆட் பிரேக் மூலம் பணம் வழங்கும் திட்டத்தில் தரவுகளை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்கிறது என கடந்த ஆண்டு கேள்வி எழுந்தது. ஆட் பிரேக் திட்டத்தில் பயன்பெற ஃபேஸ்புக் பக்கங்கள் சுமார் 30,000 ஒரு நிமிட வீடியோக்களை இரண்டு மாதங்களில் பதிவிட்டு இருப்பதோடு, 10,000-க்கும் அதிக ஃபேஸ்புக் ஃபாளோவர்களை பெற்றிருக்க வேண்டும்.
மணிப்பூரில் வசிக்கும் பொறியாளர் வாட்ஸ்அப் செயலியில் பிழை கண்டறிந்து ஃஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் 2019 இல் இடம்பிடித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் பயனர் தனியுரிமையை பாதிக்கும் பழையை பொறியாளர் ஒருவர் கண்டறிந்து தெரிவித்துள்ளார். இதனை மணிப்பூரில் வசிக்கும் 22 வயது சோனெல் சௌகைஜாம் என்ற இளைஞர் கண்டறிந்தார். பொறியாளரான அவருக்கு ஃஃபேஸ்புக் 5000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,47,072.50) சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இத்துடன் ஃஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் 2019இல் இவரது பெயரை ஃஃபேஸ்புக் சேர்த்துள்ளது. ஃஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் 94 பேர் பட்டியலில் சோனெல் 16 ஆவது இடத்தில் இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் போது அழைப்பை பெறுவோருக்கு தெரியாமலேயே வாய்ஸ் காலை வீடியோ காலாக மாற்றும் வசதியை வாட்ஸ்அப் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் மறுமுனையில் பேசுவோர் என்ன செய்கின்றனர் என்பதை பார்க்க முடியும். இது பயனர் தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாக சோனெல் தெரிவித்தார்.

பழையை கண்டறிந்த சோனெல் உடனடியாக அதனை ஃஃபேஸ்புக்கின் பிழையை கண்டறியும் திட்டத்தில் தெரிவித்தார். பிழை சமர்பிக்கப்பட்ட மறுநாளே அங்கீகரிக்கப்பட்டு, அந்த பிழை சரியாக 15 முதல் 20 நாட்களில் சரிசெய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சன்மான விவரங்களை ஃஃபேஸ்புக் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக சோனெல் தெரிவித்தார். மேலும் ஜூன் மாதத்திற்கான ஃஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பக்கத்தில் தனது பெயரை பார்த்ததாக சோ:னெல் தெரிவித்தார்.
ஃஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை 2014 பிப்ரவரியில் விலைக்கு வாங்கியது. வாட்ஸ்அப் நிறுவத்திற்கு ஃஃபேஸ்புக் 19 கோடி டாலர்களை வழங்கியது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைக்கான ஆரம்ப கட்டணத்தை குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் (ONT) சாதனத்தின் புதிய பதிப்பை ஜிகாஹப் ஹோம் கேட்வே என்ற பெயரில் அறிமுகம் செய்கிறது. இந்த பதிப்பில் பிராட்பேண்ட் சேவைக்கான ஆரம்ப கட்டணம் ரூ.2,500 என கூறப்படுகிறது.
முன்னதாக ஜியோ அறிமுகம் செய்த ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்கு ரூ.4,500 ஆரம்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. புதிய ஜியோ ONT முந்தைய சாதனத்தை விட சிறிதளவு குறைந்த திறன் கொண்டதாகும். இது ஒற்றை பேண்ட் ரவுட்டர் ஆகும். புதிய சாதனத்தில் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை தற்போதைய ஜிகாஹப் ஹோம் கேட்வே போன்றே காட்சியளிக்கிறது.

ஜியோ ஜிகாஃபைபர் சேவை இந்தியா முழுக்க வழங்கப்பட இருக்கும் நிலையில், சென்னை மற்றும் மும்பையில் ரூ.2500 முன்பணம் செலுத்தி சேவையை பயன்படுத்தலாம். இந்த தொகையை பயனர்கள் திரும்பப் பெற்று கொள்ள முடியும். புதிய சாதனத்துடன் வரும் ரவுட்டர் ஒற்றை பேண்ட் வசதி கொண்டிருப்பதால், இதன் இணைய வேகம் 50Mbps ஆக குறைக்கப்படலாம் என தெரிகிறது.
புதிய சேவையுடன் வாய்ஸ் சேவையும் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய ONT சாதனம் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் b/g/n வைபை வசதியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. முந்தைய ஜிகாஃபைபர் சாதனம் 5 ஜிகாஹெர்ட்ஸ் வைபை வசதியை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. புதிய சாதனத்தில் மூன்று RJ45, ஒரு RJ11 மற்றும் ஒரு யு.எஸ்.பி. 2.0 போர்ட் வழங்கப்படுகிறது.
புதிய ஜிகாஹஃபைபர் சேவையுடன் பயனர்களுக்கு மாதம் 1100 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சாதனத்தில் ஜியோ டி.வி. செயலியை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
சியோமி நிறுவனம் தனது இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா அமைப்பு எவ்வாறு இயங்கும் என்பதை தெளிவுப்படுத்தி இருக்கிறது.
சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி நாட்ச் மற்றும் பாப்-அப் கேமராவுக்கு மாற்றாக டிஸ்ப்ளேவினுள் கேமராவை பொருத்தும் வழிமுறைகளில் ஈடுபட்டுள்ளது. பெரும்பாலான ஸ்மார்ட்போன் நிறுவனங்களும் இதுபோன்ற தொழில்நுட்பத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
அந்த வகையில் சியோமி நிறுவனம் இன்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் இயங்கும் படியான ப்ரோடோடைப் டீசரை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவைத் தொடர்ந்து ஒப்போ நிறுவனமும் இன்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பத்தை உருவாக்குவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தது.
இருநிறுவனங்கள் ஒரே மாதிரியான தொழில்நுட்பத்தை உருவாக்கி வருவது தொழில்நுட்ப சந்தையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை சியோமி மற்றும் ஒப்போ என இரண்டு நிறுவனங்களில் யார் முதலில் அறிமுகம் செய்வார்கள் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.

சியோமியின் டீசரை அந்நிறுவன மூத்த துணை தலைவர் வாங் சியாங் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இத்துடன் இன்-ஸ்கிரீன் கேமரா தொழில்நுட்பம் எவ்வாறு இயங்கும் என்பதை விளக்கும் நான்கு புகைப்படங்களையும் அவர் இணைத்திருந்தார்.
புதிய தொழில்நுட்பத்தை சாத்தியப்படுத்த சியோமி நிறுவனம் கஸ்டம் டிஸ்ப்ளே ஒன்றை உருவாக்கி இருக்கிறது. இந்த டிஸ்ப்ளேவின் சிறிய பகுதியில் டிரான்ஸ்பேரண்ட் அமைப்பு இடம்பெற்றிருக்கிறது. இந்த அமைப்பு விசேஷ குறைந்த பிராகசமுள்ள கண்ணாடியால் உருவாக்கப்பட்டுள்ளது.
Xiaomi's Under-Display Camera Technology could be the ultimate solution for a Full Screen Display coexisting with a front camera! RT if you love it. #InnovationForEveryonepic.twitter.com/8e7EdEBn8J
— Wang Xiang (@XiangW_) June 3, 2019
ஸ்மார்ட்போன் கேமரா மோடில் இல்லாத போது, டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளே வழக்கமான டிஸ்ப்ளே போன்று இயங்கும். கேமராவிற்கு தேவையான வெளிச்சத்தை வழங்க டிரான்ஸ்பேரண்ட் டிஸ்ப்ளேவில் ஆர்கானிக் லுமினிசன்ட்டை சுற்றி டிரான்ஸ்பேரண்ட் கேத்தோடு மற்றும் டிரான்ஸ்பேரண்ட் அனோட் பயன்படுத்தப்படுகிறது.
டிஸ்ப்ளேவினுள் 20 எம்.பி. கேமரா சென்சார் பொருத்துவதற்கான பணிகளில் சியோமி ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. சென்சார் போதுமான வெளிச்சத்தை பெற ஏதுவாக, அந்நிறுவனம் டிஸ்ப்ளே-எம்பெட்டெட் கேமரா அமைப்பை உருவாக்கி இருக்கிறது. இது வழக்கமான கேமரா லென்ஸ் போன்றே இயங்கும்.
கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் பேருந்து மற்றும் ரெயில் விவரங்களை வழங்கும் படி அப்டேட் செய்யப்பட்டுள்ளது.
கூகுள் நிறுவனம் தனது மேப்ஸ் சேவையில் புதிய அம்சங்களை அவ்வப்போது சேர்த்து வருகிறது. முன்னதாக ஏ.ஆர். நேவிகேஷன், ஸ்பீட் லிமிட்கள், ஸ்பீட் டிராப் போன்ற வசதிகளை கூகுள் தனது மேப்ஸ் சேவையில் சேர்த்தது.
அந்த வரிசையில் தற்சமயம் பேருந்து, நேரலை போக்குவரத்து மற்றும் இந்திய ரயில்வேயின் ரெயில் நேரங்கள் மற்றும் பல்வேறு போக்குவரத்து விவரங்களை வழங்கும் வசதிகளை மேப்ஸ் சேவையில் கூகுள் வழங்கி இருக்கிறது.

நேரலை போக்குவரத்து சார்ந்த பேருந்து விவரங்கள்
அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இயக்கப்படும் பேருந்து சார்ந்த விவரங்களை நேரடி போக்குவரத்து சார்ந்து வழங்குகிறது. இதை கொண்டு பயனர்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே சிறப்பாக திட்டமிட முடியும். இந்த அம்சம் ஒரு இடத்தில் இருந்து பயனர் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல எத்தனை மணி நேரம் ஆகும் என்பதை துல்லியமாக காண்பிக்கிறது.
புதிய அம்சத்தை இயக்க பயனர்கள் தங்களது கூகுள் மேப்ஸ் செயலியில் பயணிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு பின் டிரான்சிட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் பேருந்து மற்றும் நேரலை போக்குவரத்து நெரிசல் விவரங்களை மேப்ஸ் செயலி வழங்கும்.
முதற்கட்டமாக இந்த வசதி சென்னை, கோயம்புத்தூர், பெங்களூரு, மைசூர், ஐதராபாத், மும்பை, பூனே, லக்னோ, டெல்லி மற்றும் சூரத் போன்ற நகரங்களில் வழங்கப்படுகிறது.

நேரலை ரெயில் விவரங்கள்
இந்திய ரெயில்வேயின் ரெயில் விவரங்களை வழங்க ஏற்கனவே பல்வேறு செயலிகள் கிடைக்கின்றன. அந்த வகையில் கூகுள் நிறுவனம் வேர் இஸ் மை டிரெயின் எனும் செயலியுடன் இணைந்து கூகுள் மேப்ஸ் செயலியில் ரெயில் நேரங்களை நேரலையில் துல்லியமாக வழங்குகிறது.
இந்த அம்சத்தை பயன்படுத்த பயனர்கள் பயணிக்க வேண்டிய இடத்தை குறிப்பிட்டு தேட வேண்டும். பின் ரெயில் விவரங்கள் பட்டியலிடப்படும். இதில் தாமதமாகி இருக்கும் ரெயில் விவரங்களையும் கூகுள் மேப்ஸ் வழங்குகிறது.

பல்வித போக்குவரத்து பரிந்துரைகள்
கூகுள் மேப்ஸ் பொது போக்குவரத்து அம்சம் பல்வேறு போக்குவரத்துகளை பட்டியலிடும். இதில் பொது போக்குவரத்து மற்றும் ஆட்டோ ரிக்ஷா போன்றவற்றை பரிந்துரைக்கும். புதிய அம்சம் பயனர்கள் பயணிக்க பல்வேறு வழிகளில் விரும்பியவற்றை தேர்வு செய்யும் வசதியை வழங்குகிறது. இந்த அம்சம் முதற்கட்டமாக பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட நகரங்களில் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற பகுதிகளுக்கும் வழங்கப்படும் என தெரிகிறது.
ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வாட்ச் ஒ.எஸ். 6 இயங்குதளத்தை 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்தது.
ஆப்பிள் நிறுவனத்தின் வாட்ச் ஒ.எஸ். 6 நேற்று (ஜூன் 3) துவங்கிய 2019 டெவலப்பர்கள் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய வாட்ச் ஒ.எஸ். தளத்தில் அதிகளவு மாற்றங்கள் செய்யப்படாமல், புதிய வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. புதிய இயங்குதளத்தின் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தை ஐபோனுக்கான கூடுதல் உபகரணமாக இல்லாமல், தனித்துவம் வாய்ந்த சாதனமாக மாற்ற ஆப்பிள் முடிவு செய்திருக்கிறது.
வாட்ச் ஒ.எஸ். 6 தளத்தில் புதிய வாட்ச் ஃபேஸ்கள், உடல் ஆரோக்கியம் சார்ந்த புதிய அம்சங்கள், ஆன்-டிவைஸ் ஆப் ஸ்டோர் மற்றும் பல்வேறு வசதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆப்பிள் வாட்ச் ஒ.எஸ். 6 தளம் டெவலப்பர்களுக்கு மட்டும் வெளியிடப்பட்டுள்ள நிலையில், வரும் வாரங்களில் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

புதிய ஆப்பிள் வாட்ச் இயங்குதளத்தில் பல்வேறு வாட்ச் ஃபேஸ் (தீம்கள்) வழங்கப்படுகின்றன. இவை புதிய வடிவமைப்புகளை கொண்டிருப்பதோடு முந்தைய ஃபேஸ்களில் இருந்ததை விட அதிகளவு விவரங்களை வழங்குகின்றன. இத்துடன் கால்குலேட்டர், வாய்ஸ் மெயில் மற்றும் ஆடியோபுக் போன்ற புதிய செயலிகளும் ஆப்பிள் வாட்ச் ஒ.எஸ். 6 தளத்தில் வழங்கப்படுகின்றன.
வாட்ச் ஒ.எஸ். 6 தளத்தில் செயலிகள் தனித்துவமாக இயங்கும் என்றும் இதற்கென ஐபோனுடன் இணைக்கப்பட்ட செயலி எதுவும் தேவைப்படாது என ஆப்பிள் அறிவித்துள்ளது. இவ்வாறு செய்வதன் மூலம் ஆப்பிள் வாட்ச் சாதனத்தை பயன்படுத்துவோருக்கு புதிய அனுபவங்களை வழங்க முடியும் என ஆப்பிள் நம்புகிறது.

இவற்றுடன் வாட்ச் ஒ.எஸ். 6 தளத்தில் ஆன்-டிவைஸ் ஆப் ஸ்டோர் வழங்கப்படுகிறது. புதிய இயங்குதளத்தில் ஆப் ஸ்டோர் வழங்கப்படுவதால், பயனர்கள் ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் இருந்தே செயலிகளை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும். செயலிகளை மிக எளிமையாக கண்டறிய ஆப்பிள் வாட்ச்-இல் வழங்கப்படும் ஆப் ஸ்டோர் செயலிகளை மிக நேர்த்தியாக பட்டியலிடும். ஆப்பிள் வாட்ச் சாதனத்தில் மென்பொருள் அப்டேட்களை ஐபோன் உதவியின்றி இன்ஸ்டால் செய்து கொள்ளும் வசதியும் வழங்கப்படுகிறது.
வாட்ச் ஒ.எஸ். 6 தளம் ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1, ஐபோன் 6எஸ் மற்றும் ஐ.ஒ.எஸ். 13 இயங்குதளம் கொண்ட சாதனங்களுடன் இணைந்து வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.






