என் மலர்

  நீங்கள் தேடியது "MacBook Pro"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனம் விரைவில் புத்தம் புதிய 6K டிஸ்ப்ளேவினை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple  ஆப்பிள் நிறுவனம் புதிதாக 6K டிஸ்ப்ளே ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது புரோபஷனல் கிரேடு தரத்தில் உருவாகி இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  புதிய டிஸ்ப்ளே 31.6 இன்ச் அளவில் இருக்கும் என்றும் இதில் வைடு கலர் கமுட் மற்றும் அதிக கான்டிராஸ்ட் இருக்கும் என்றும் தெரிகிறது. புதிய டிஸ்ப்ளேவினை கொண்டு ஆப்பிள் மினி-எல்.இ.டி. பேக்லிட் தொழில்நுட்பத்திற்கு மாறுவதை வெளிப்படுத்த பயன்படுத்திக் கொள்ளும் என கூறப்படுகிறது. 

  இதே தொழில்நுட்பம் எதிர்கால மேக்புக் மற்றும் ஐபேட்களிலும் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஆப்பிள் டிஸ்ப்ளேவில் குவாசி மினி எல்.இ.டி. பயன்படுத்தப்படலாம் என கூறப்படுகிறது. இது வழக்கமான மினி-எல்.இ.டி.க்களில் பயன்படுத்தப்படுவதை விட பெரியதாகும்.  ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட இந்த டிஸ்ப்ளேக்கள் முன்கூட்டியே அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் புதிய டிஸ்ப்ளேவினை ஆப்பிள் தனது WWDC 2019 நிகழ்வில் அறிமுகம் செய்யலாம். இந்நிகழ்வு இந்த ஆண்டு ஜூன் மாதம் 3 ஆம் தேதி துவங்குகிறது.

  புதிய ஐபேட் மற்றும் மேக்புக் ப்ரோ மாடல்களில் ஆப்பிள் மினி-எல்.இ.டி. தொழில்நுட்பத்தையே பயன்படுத்தலாம் என்றும் கூறப்படுகிறது. இவை முந்தைய ஆப்பிள் சாதனங்களில் இருந்ததை விட புதிய சாதனங்களின் டிஸ்ப்ளே தரத்தை அதிகளவு மேம்படுத்தும்.

  இதுமட்டுமின்றி புதிய வகை டிஸ்ப்ளே வழக்கமான எல்.இ.டி. டிஸ்ப்ளேக்களை விட சாதனத்தின் பேட்டரி செயல்திறனை மேம்படுத்தும் என கூறப்படுகிறது.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு மட்டும் சுமார் மூன்று புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. #Apple  ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட்கள், 16-இன்ச் மேக்புக் ப்ரோ, 31-இன்ச் 6K மாணிட்டர், இருபுறமும் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட ஐபோன்கள் உள்ளிட்டவை 2019 ஆண்டில் அறிமுகம் செய்யலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 2019 ஐபோன் மாடல்கள் ஐபோன் XS மற்றும் ஐபோன் XR மாடல்களின் அளவுகளை கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

  புதிய ஐபோன்களில் யு.எஸ்.பி. டைப்-சி கனெக்டிவிட்டி வழங்கப்படலாம் என கூறப்பட்ட நிலையில், தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய ஐபோன்கள் லைட்னிங் கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் அல்ட்ரா-வைடுபேண்ட் கனெக்டிவிட்டி தொழில்நுட்பம் வழங்கப்படும் என தெரிகிறது.

  இந்த தொழில்நுட்பத்துடன் இருபுறமும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, அதாவது ஐபோன்களை கொண்டு வயர்லெஸ் முறையில் மற்ற சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. புதிய ஆப்பிள் சாதனங்களில் மேம்படுத்தப்பட்ட ஃபேஸ் ஐ.டி. தொழில்நுட்பம் வழங்கப்படும் என்றும், பெரிய பேட்டரி மற்றும் மூன்று கேமரா அமைப்பு கொண்டிருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.  ஐபேட்களை பொருத்தவரை ஆப்பிள் நிறுவனம் இரண்டு புதிய ஐபேட் ப்ரோ மாடல்களை இந்த ஆண்டு அறிமுகம் செய்யலாம் என்றும் இவற்றில் மேம்பட்ட பிராசஸர்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. தற்போதைய 9.7 இன்ச் ஐபேட் முற்றிலும் புதிய வடிவமைப்பு கொண்டிருக்கும் என்றும் இதில் 10.2 இன்ச் அளவில் மிகமெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. புதிய ஐபேட் மினி மாடலில் மேம்பட்ட பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

  இத்துடன் ஆப்பிள் நிறுவனம் 16 மற்றும் 16.5 இன்ச் அளவுகளில் மேக்புக் ப்ரோவினை புதிய வடிவமைப்பில் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது. டேப்லெட் மற்றும் லேப்டாப்களை தொடர்ந்து டிஸ்ப்ளே சந்தையில் ஆப்பிள் புதிய சாதனத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

  இந்த ஆண்டு ஆப்பிள் நிறுவனம் 31.6 இன்ச் அளவில் 6K3K மாணிட்டர் ஒன்றை அறிமுகம் செய்யலாம். இந்த டிஸ்ப்ளேவில் மினி எல்.இ.டி. போன்ற பேக்லிட் வடிவமைப்பு கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. வன்பொருள் சாதனங்களை தவிர ஆப்பிள் நிறுவனம் தனது மென்பொருள் சேவைகளை இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகம் செய்யலாம் என தெரிகிறது.
  ×