என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    அதிவேக வளர்ச்சி பெறும் ஃபேஸ்புக் வாட்ச் சேவை
    X

    அதிவேக வளர்ச்சி பெறும் ஃபேஸ்புக் வாட்ச் சேவை

    ஃபேஸ்புக் நிறுவனத்தின் வீடியோ ஸ்டிரீமிங் சேவையான வாட்ச் மிக வேகமாக அதிகளவு வளர்ச்சி பெற்று வருகிறது.



    ஃபேஸ்புக் நிறுவனம் தனது வாட்ச் வீடியோ சேவையின் பயனர்கள் எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பர் முதல் இருமடங்கு அதிகரித்து இருப்பதாக தெரிவித்துள்ளது. வாட்ச் சேவைக்கான வரவேற்பு அதிகரிக்கும் நிலையில், புதுப்புது தரவுகளை வழங்க சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களுடன் ஒப்பந்தமிட்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    தற்சமயம் ஃபேஸ்புக்கின் வாட்ச் சேவையை மாதாந்திர அடிப்படையில் சுமார் 72 கோடி பேரும், தினமும் சுமார் 14 கோடி பேரும் பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் தினமும் ஃபேஸ்புக்கில் கிட்டத்தட்ட ஒரு நிமிட வீடியோவினை பார்க்கின்றனர் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.



    ஃபேஸ்புக் வாட்ச் சேவையில் விளம்பரங்கள் மற்றும் ஐந்து புதிய மொழிகளை அந்நிறுவனம் சேர்த்திருக்கிறது. சர்வதேச சந்தையில் ஃபேஸ்புக் வாட்ச் சேவை கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமான ஃபேஸ்புக் வாட்ச் சேவையை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 7.5 கோடி பேர் பயன்படுத்தினர்.

    சர்வதேச நிறுவனங்களான தி வாய்ஸ் ஜெர்மனி, ஜெர்மனியின் நெக்ஸ்ட் டாப் மாடல் மற்றும் உலக கோப்பை கிரிகெட் போட்டிகள் தொடர்பான வீடியோக்களை வாட்ச் சேவையில் வழங்கி வருவதாக ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது. இத்துடன் வீடியோ சேவையில் சொந்தமாக தரவுகளை வெளியிட தனி முதலீடு செய்ய ஃபேஸ்புக் திட்டமிட்டுள்ளது.

    ஃபேஸ்புக் தனது தளத்தில் ஆட் பிரேக் மூலம் பணம் வழங்கும் திட்டத்தில் தரவுகளை எதன் அடிப்படையில் நிர்ணயம் செய்கிறது என கடந்த ஆண்டு கேள்வி எழுந்தது. ஆட் பிரேக் திட்டத்தில் பயன்பெற ஃபேஸ்புக் பக்கங்கள் சுமார் 30,000 ஒரு நிமிட வீடியோக்களை இரண்டு மாதங்களில் பதிவிட்டு இருப்பதோடு, 10,000-க்கும் அதிக ஃபேஸ்புக் ஃபாளோவர்களை பெற்றிருக்க வேண்டும்.
    Next Story
    ×