என் மலர்
தொழில்நுட்பம்

ஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேமில் மணிப்பூர் இளைஞர்
மணிப்பூரில் வசிக்கும் பொறியாளர் வாட்ஸ்அப் செயலியில் பிழை கண்டறிந்து ஃஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் 2019 இல் இடம்பிடித்து இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் பயனர் தனியுரிமையை பாதிக்கும் பழையை பொறியாளர் ஒருவர் கண்டறிந்து தெரிவித்துள்ளார். இதனை மணிப்பூரில் வசிக்கும் 22 வயது சோனெல் சௌகைஜாம் என்ற இளைஞர் கண்டறிந்தார். பொறியாளரான அவருக்கு ஃஃபேஸ்புக் 5000 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.3,47,072.50) சன்மானம் வழங்குவதாக அறிவித்துள்ளது.
இத்துடன் ஃஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் 2019இல் இவரது பெயரை ஃஃபேஸ்புக் சேர்த்துள்ளது. ஃஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பட்டியலில் 94 பேர் பட்டியலில் சோனெல் 16 ஆவது இடத்தில் இருக்கிறார்.
வாட்ஸ்அப் செயலியில் வாய்ஸ் கால் மேற்கொள்ளும் போது அழைப்பை பெறுவோருக்கு தெரியாமலேயே வாய்ஸ் காலை வீடியோ காலாக மாற்றும் வசதியை வாட்ஸ்அப் வழங்கியிருக்கிறது. இதன் மூலம் மறுமுனையில் பேசுவோர் என்ன செய்கின்றனர் என்பதை பார்க்க முடியும். இது பயனர் தனியுரிமையை மீறும் வகையில் இருப்பதாக சோனெல் தெரிவித்தார்.

பழையை கண்டறிந்த சோனெல் உடனடியாக அதனை ஃஃபேஸ்புக்கின் பிழையை கண்டறியும் திட்டத்தில் தெரிவித்தார். பிழை சமர்பிக்கப்பட்ட மறுநாளே அங்கீகரிக்கப்பட்டு, அந்த பிழை சரியாக 15 முதல் 20 நாட்களில் சரிசெய்யப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
சன்மான விவரங்களை ஃஃபேஸ்புக் மின்னஞ்சல் மூலம் தெரிவித்ததாக சோனெல் தெரிவித்தார். மேலும் ஜூன் மாதத்திற்கான ஃஃபேஸ்புக் ஹால் ஆஃப் ஃபேம் பக்கத்தில் தனது பெயரை பார்த்ததாக சோ:னெல் தெரிவித்தார்.
ஃஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ்அப் நிறுவனத்தை 2014 பிப்ரவரியில் விலைக்கு வாங்கியது. வாட்ஸ்அப் நிறுவத்திற்கு ஃஃபேஸ்புக் 19 கோடி டாலர்களை வழங்கியது.
Next Story






