search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப் ஸ்டோர்"

    • கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்தனர்.
    • இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்தது.

    ஆப்பிள் நிறுவனம் இந்திய சந்தைக்கான ஆப் ஸ்டோரில் இருந்து தீங்கு விளைவிக்கும் கடன் செயலிகளை நீக்குவதற்கான நடவடிக்கையை எடுத்துள்ளது. இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.

    இந்த முறை பாக்கெட் கேஷ், வைட் கேஷ், கோல்டன் கேஷ் மற்றும் ஒகே ருபீ உள்ளிட்ட செயலிகள் அடங்கும். இந்த செயலிகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து தேவையற்ற கட்டணங்களை வசூலித்து வந்ததாக, ஏராளமான பயனர்கள் ரிவ்யூ அளித்துள்ளனர். மேலும் கொடுத்த கடனை திரும்பி வசூலிக்க சட்ட விரோதமாக செயல்பட்டு வந்துள்ளது.

     

    கடந்த சில வாரங்களாக இந்தியாவில் பயனர்களுக்கு அதிவேகமாக கடன் கொடுக்கும் செயலிகள் கணிசமான அளவில் அதிகரித்து பிரபலம் அடைந்து வருகின்றன. இதன் கரணமாக நிதி சார்ந்த முன்னணி செயலிகள் பட்டியலில் டாப் 20 இடத்தை அடைந்தது. பல்வேறு பயனர்கள், கடன் செயலிகள் அனுப்பும் குறுந்தகவல்களில் தனிப்பட்ட படங்கள் இடம்பெற்று இருந்ததாக தெரிவித்து உள்ளனர்.

    மேலும் கடன் செலுத்த தவறும் பட்சத்தில் அவர்கள் பெற்ற கடன் விவரங்களை, அவர்களது காண்டாக்ட்களுக்கு அனுப்பி விடுவதாக கடன் செயலிகள் மிரட்டியதாகவும், குற்றம்சாட்டியுள்ளனர். இது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து அதிகரித்து வந்ததை அடுத்து, ஆப்பிள் டெவலப்பர் திட்ட ஒப்பந்தத்தை இந்த கடன் செயலிகள் மீறியது கண்டுபிடிக்கப்பட்டது.

    அந்த வகையில், போலி விளம்பரங்கள் மூலம் கடன் கொடுத்து, பிறகு வாடிக்கையாளர்களை மிரட்டும் செயலில் ஈடுபட்டு வந்த கடன் செயலிகள் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து முடக்கப்பட்டன.

    ×