search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஜியோ ஜிகாஃபைபர் கட்டணம் இன்னும் குறைக்கப்படுவதாக தகவல்
    X

    ஜியோ ஜிகாஃபைபர் கட்டணம் இன்னும் குறைக்கப்படுவதாக தகவல்

    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவைக்கான ஆரம்ப கட்டணத்தை குறைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.



    ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் (ONT) சாதனத்தின் புதிய பதிப்பை ஜிகாஹப் ஹோம் கேட்வே என்ற பெயரில் அறிமுகம் செய்கிறது. இந்த பதிப்பில் பிராட்பேண்ட் சேவைக்கான ஆரம்ப கட்டணம் ரூ.2,500 என கூறப்படுகிறது. 

    முன்னதாக ஜியோ அறிமுகம் செய்த ஆப்டிக்கல் நெட்வொர்க் டெர்மினல் சேவைக்கு ரூ.4,500 ஆரம்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. புதிய ஜியோ ONT முந்தைய சாதனத்தை விட சிறிதளவு குறைந்த திறன் கொண்டதாகும். இது ஒற்றை பேண்ட் ரவுட்டர் ஆகும். புதிய சாதனத்தில் ஜியோ ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை தற்போதைய ஜிகாஹப் ஹோம் கேட்வே போன்றே காட்சியளிக்கிறது.



    ஜியோ ஜிகாஃபைபர் சேவை இந்தியா முழுக்க வழங்கப்பட இருக்கும் நிலையில், சென்னை மற்றும் மும்பையில் ரூ.2500 முன்பணம் செலுத்தி சேவையை பயன்படுத்தலாம். இந்த தொகையை பயனர்கள் திரும்பப் பெற்று கொள்ள முடியும். புதிய சாதனத்துடன் வரும் ரவுட்டர் ஒற்றை பேண்ட் வசதி கொண்டிருப்பதால், இதன் இணைய வேகம் 50Mbps ஆக குறைக்கப்படலாம் என தெரிகிறது.

    புதிய சேவையுடன் வாய்ஸ் சேவையும் வழங்கப்படலாம் என தெரிகிறது. புதிய ONT சாதனம் 2.4 ஜிகாஹெர்ட்ஸ் b/g/n வைபை வசதியை வழங்கும் என்றும் கூறப்படுகிறது. முந்தைய ஜிகாஃபைபர் சாதனம் 5 ஜிகாஹெர்ட்ஸ் வைபை வசதியை வழங்கும் திறன் கொண்டிருக்கிறது. புதிய சாதனத்தில் மூன்று RJ45, ஒரு RJ11 மற்றும் ஒரு யு.எஸ்.பி. 2.0 போர்ட் வழங்கப்படுகிறது.

    புதிய ஜிகாஹஃபைபர் சேவையுடன் பயனர்களுக்கு மாதம் 1100 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. புதிய சாதனத்தில் ஜியோ டி.வி. செயலியை பயன்படுத்துவதற்கான வசதியும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.
    Next Story
    ×