search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் மியூசிக்
    X
    ஆப்பிள் மியூசிக்

    புதிய உச்சத்தை தொட்ட ஆப்பிள் மியூசிக் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை

    ஆப்பிள் நிறுவனத்தின் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை புதிய உச்சத்தை கடந்திருக்கிறது.



    ஆப்பிள் ஐடியூன்ஸ் தலைவர் எடி கியூ ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை ஆறு கோடியை கடந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

    இத்துடன் ஆப்பிளின் 'பீட்ஸ் 1' ரேடியோ ஸ்டேஷனை சுமார் ஒரு கோடி பேர் கேட்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் எண்ணிக்கை 5.6 கோடியாக இருந்தது. பல்வேறு சாதனங்கள் மற்றும் பிளாட்ஃபார்மில் இயங்கும் வகையில் ஆப்பிள் மியூசிக் சேவையை தொடர்ந்து மேம்படுத்த இருப்பதாக கியூ தெரிவித்துள்ளார்.

    தற்சமயம் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்தி வரும் மொத்த வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையை அவர் வெளியிடவில்லை. எனினும், ஆப்பிள் தளத்தில் ஆப்பிள் மியூசிக் சேவை தான் முன்னணியில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.

    ஆப்பிள் மியூசிக்

    முன்னதாக ஸ்பாடிஃபை சேவையில் சுமார் பத்து கோடி பிரீமியம் வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி வருவதாக அறிவிக்கப்பட்டது. இந்த மைல்கல்லை ஸ்பாடிஃபை ஏப்ரல் மாதத்தில் கடந்தது. அமெரிக்காவில் ஸ்பாடிஃபை பிரீமியம் சந்தாதாரர்கள் எண்ணிக்கையை ஆப்பிள் மியூசிக் இந்த ஆண்டு கடந்தது.

    தற்சமயம் ஆப்பிள் மியூசிக் கட்டண சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.8 கோடியாக இருக்கிறது. ஸ்பாடிஃபை சேவையில் கட்டண சந்தாதாரர்கள் எண்ணிக்கை 2.6 கோடி ஆகும்.
    Next Story
    ×