search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆப்பிள் மியூசிக்"

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ஆப்பிள் மியூசிக் சேவையின இந்திய கட்டணத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. #AppleMusic



    ஆப்பிள் மியூசிக் ஸ்டிரீமிங் சேவை அமெரிக்காவில் ஸ்பாடிஃபையை முந்தியிருக்கும் நிலையில், ஆப்பிள் மியூசிக் சேவையின் இந்திய கட்டணத்தை குறைக்க ஆப்பிள் முடிவு செய்துள்ளது. 

    அந்த வகையில் ஆப்பிள் மியூசிக் சேவைக்கான மாத கட்டணம் தற்சமயம் ரூ.99 ஆகும். முன்னதாக இந்த விலை ரூ.120 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இத்துடன் ஆப்பிள் மியூசிக் மாணவர்களுக்கான சந்தா மாதம் ரூ.49 ஆக மாற்றப்பட்டுள்ளது. முன்னதாக மாணர்களுக்கு மட்டும் ஆப்பிள் மியூசிக் சேவை மாதம் ரூ.60 என விலை நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    ஆப்பிள் மியூசிக் குடும்ப சந்தா மாதம் ரூ.149 ஆகும். முன்னதாக இந்த கட்டணம் ரூ.190 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
    புதிய கட்டணம் ஆப்பிள் மியூசிக் சேவையை பயன்படுத்துவோர் மற்றும் புதிய சந்தாதாரர்களுக்கும் பொருந்தும் என்றே தெரிகிறது. ஸ்டிரீமிங் சேவைகளுக்கு இந்தியா மிகப்பெரும் சந்தையாக பார்க்கப்படுகிறது. 



    மார்ச் மாதத்தில் யூடியூப் மியூசிக் மற்றும் யூடியூப் பிரீமியம் சேவைகள் இந்தியாவில் துவங்கப்பட்டது. ஏற்கனவே அமேசான் மற்றும் கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்களது மியூசிக் சேவைகளை இந்தியாவில் வழங்கி வருகின்றன. இவற்றுடன் ஸ்பாடிஃபை சேவையும் இந்த ஆண்டு இந்தியாவில் களமிறங்கியிருக்கிறது.

    சமீபத்தில் ஜியோசாவன் மற்றும் கானா போன்ற சேவைகளின் கட்டணத்தில் சுமார் 70 சதவிகிதம் வரை குறைக்கப்பட்டது. யூடியூப், ஸ்பாடிஃபை மற்றும் ஆப்பிள் நிறுவன சேவைகளுக்கு போட்டியை ஏற்படுத்தும் வகையில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
    ×