search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாரதி ஏர்டெல்"

    இந்திய டெலிகாம் சந்தையின் போக்கு பற்றி சமீபத்தில் வெளியாகி இருக்கும் அறிக்கைகளில் ரிலையன்ஸ் ஜியோ விரைவில் நாட்டின் முன்னணி நிறுவனமாக உருவெடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #RelianceJio



    முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விரைவில் நாட்டின் முதல் டெலிகாம் நிறுவனமாக உருவெடுக்கும் என பென்ஸ்டெயின் மற்றும் கிரெடிட் சூசி வெளியிட்டிருக்கும் அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய டெலிகாம் சந்தையில் 2016 ஆம் ஆண்டு கால்பதித்த ரிலையன்ஸ் ஜியோ இலவச அழைப்புகள் மற்றும் மலிவு விலை டேட்டா வழங்கி, குறுகிய காலத்தில் பிரபல நிறுவனமாக மாறியிருக்கிறது. இதற்கென ஜியோ செய்த முதலீடுகளை கடந்து, தற்சமயம் லாபம் ஈட்டி வருவதாக பென்ஸ்டெயின் தெரிவித்திருக்கிறது.

    முதலீடுகளின் மீதான லாபத்திற்கு நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகள் மற்றும் ஜியோபோன்களில் இருந்து கிடைக்கும் வருவாய் உள்ளிட்டவை காரணமாக கூறப்படுகிறது. ஜியோ நிலையற்ற நீண்ட கால முதலீடு முறைகளை பின்பற்றி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியானது.



    நீண்ட கால முதலீடுகளில் லாபத்தை ஈட்ட ரிலையன்ஸ் ஜியோ ஒரு பயனரிடம் இருந்து பெறும் வருவாயினை அதிகப்படுத்த வேண்டியிருக்கும் என பெயின்ஸ்டெயின் தெரிவித்துள்ளது. வரவிருக்கும் 12 மாதங்களில் ஜியோ வாடிக்கையாளர் எண்ணிக்கை மற்றும் சேவைகளுக்கான வருவாய் உள்ளிட்டவற்றில் முதலிடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கலாம்.

    தற்போதைய நிதியாண்டின் படி மூன்றாவது காலாண்டின் இறுதியில் வோடபோன் ஐடியா வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 38.7 கோடியாகவும், பாரதி ஏர்டெல் 28.4 கோடியாக இருக்கிறது. இதே காலக்கட்டத்தில் ரிலையன்ஸ் ஜியோ சுமார் 28 கோடி வாடிக்கையாளர்களை கொண்டிருக்கிறது.
    வோடபோன் நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இச்சலுகையில் பயனர்களுக்கு தினமும் 1.6 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது. #Vodafone #offers



    இந்திய டெலிகாம் சந்தையில் தற்சமயம் நீண்ட நாள் வேலிடிட்டி வழங்கும் சலுகைகளுக்கான போட்டி ஏற்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ மற்றும் வோடபோன் நிறுவனங்கள் துவங்கிய இந்த போட்டியில் ரூ.1,699 சலுகையில் ஒரு வருடத்திற்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது.

    இருநிறுவனங்களை தொடர்ந்து ஏர்டெல் ரூ.1,699 விலையில் புதிய சலுகையை 360 நாட்கள் வேலிடிட்டியுடன் அறிவித்தது. இத்துடன் ரூ.998 மற்றும் ரூ.597 விலையில் இரண்டு புதிய சலுகைகளை ஏர்டெல் நேற்று அறிவித்தது. இந்நிலையில், வோடபோன் தன்பங்கிற்கு புதிய சலுகையை அறிவித்துள்ளது.

    வோடபோன் அறிவித்திருக்கும் ரூ.479 சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 1.6 ஜி.பி. டேட்டா, 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் முழு வேலிடிட்டி காலத்தில் வோடபோன் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 134.4 ஜி.பி. டேட்டா கிடைக்கும்.



    இத்துடன் புதிய சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் உள்ளூர், வெளியூர் மற்றும் ரோமிங் அழைப்புகள் நாடு முழுக்க வழங்கப்படுகிறது. இதுதவிர தினமும் 100 எஸ்.எம்.எஸ். 84 நாட்களுக்கும், இலவச லைவ் டி.வி., திரைப்படங்கள் மற்றும் பல்வேறு பலன்களை வோடபோன் ஆப் மூலம் வழங்குகிறது. 

    வோடபோன் அறிவித்திருக்கும் புதிய சலுகை ஜியோவின் ரூ.399 சலுகைக்கு போட்டியாக அமைந்துள்ளது. ஜியோ வழங்கும் ரூ.399 சலுகையில் தினமும் 1.5 ஜி.பி. டேட்டா 84 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்குகிறது.
    இந்தியாவில் ரூ.3399 விலையில் 4ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. #Airtel
    புதுடெல்லி:

    பாரதி ஏர்டெல் மற்றும் அமேசான் இந்தியா இணைந்து 4ஜி ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க இருக்கின்றன. புதிய அறிவிப்பின் படி வாடிக்கையாளர்களுக்கு ரூ.2600 வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

    அமேசான் இந்தியா தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் சுமார் 65-க்கும் அதிகமான 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு சிறப்பு கேஷ்பேக் வழங்கப்படுகிறது. இருநிறுவனங்களும் நாடு முழுக்க ஸ்மார்ட்போன் பயன்பாட்டை அதிகரிக்க செய்ய இந்த தி்ட்டம் அறிவிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதல் முறை ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மேம்படுத்தப்பட்ட 4ஜி ஸ்மார்ட்போனிற்கு அப்கிரேடு செய்யும் போது ஸ்மார்ட்போனுக்கு ரூ.3399 விலையில் வாங்க முடியும். ஏர்டெல் இந்தியா சார்பில் 35 மாதங்களுக்கு ரூ.2000 கேஷ்பேக் வழங்கப்படுகிறது. 

    ரூ.600 கூடுதல் கேஷ்பேக் ஏர்டெல் சேவையில் ரூ.169-க்கு ரீசார்ஜ் செய்து பெற முடியும். 



    ஏர்டெல் மற்றும் அமேசான் வழங்கும் ரூ.2600 கேஷ்பேக் பெறுவது எப்படி?

    - அமேசான் வலைத்தளத்தில் பிரத்யேகமாக கிடைக்கும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றை வாடிக்கையாளர்கள் முன்பணம் செலுத்தி வாங்க வேண்டும். இவற்றில் சாம்சங், ஒன்பிளஸ், சியோமி, ஹானர், எல்ஜி, லெனோவோ, மோட்டோ மற்றும் பல்வேறு இதர மாடல்களின் ஸ்மார்ட்போன்கள் இடம்பெற்றிருக்கின்றன.

    - ஸ்மார்ட்போனினை வாங்கிய முதல் 18 மாதங்களுக்குள் வாடிக்கையாளர்கள் ரூ.3500 மதிப்புடைய ரீசார்ஜ்களை ஏர்டெலில் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்ததும் ரூ.500 திரும்ப பெற முடியும்.

    - இனி அடுத்த 18 மாதங்களில் ரூ.3500 மதிப்புள்ள ரீசார்ஜ் செய்து ரூ.1500 திரும்ப பெற முடியும். அந்த வகையில் ஏர்டெல் சார்பில் ரூ.2000 பெற முடியும்.

    - அடுத்து அமேசான் சார்பில் வழங்கப்படும் ரூ.600 கூடுதல் கேஷ்பேக் தொகையை பெற ரூ.169 மதிப்புடைய ஏர்டெல் ரீசார்ஜ்களை செய்ய வேண்டும். இதற்கு https://www.amazon.in/hfc/mobileRecharge - முகவரியை பயன்படுத்த வேண்டும். இனி ரூ.25 மதிப்புள்ள கேஷ்பேக் தொகை 24 மாதங்களில் வழங்கப்படும். கேஷ்பேக் தொகை அமேசான் பே கணக்கில் சேர்க்கப்படும்.

    ஏர்டெல் வழங்கும் ரூ.169 ரீசார்ஜ் சலுகையில் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 1 ஜிபி டேட்டா சுமார் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. முன்னதாக சில 4ஜி ஸ்மார்ட்போன்களுக்கு ஏர்டெல் இதுபோன்ற சலுகையை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×