search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    ஆப்பிள் லோகோ
    X
    ஆப்பிள் லோகோ

    சைன் இன் வித் ஆப்பிள் அத்தனை பாதுகாப்பானது கிடையாது - பீதியை கிளப்பும் ஆய்வு நிறுவனம்

    ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சைன் இன் வித் ஆப்பிள் சேவை அத்தனை பாதுகாப்பானது கிடையாது என ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.



    ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஒ.எஸ். 13, ஐபேட் ஒ.எஸ். மற்றும் மேக் ஒ.எஸ். கேட்டலினா உள்ளிட்ட இயங்குதளங்கள் கடந்த மாதம் நடைபெற்ற 2019 ஆப்பிள் சர்வதேச டெவலப்பர் நிகழ்வில் அறிமுகம் செய்யப்பட்டன. 

    ஆப்பிள் மென்பொருள்களில் புதிய அம்சங்கள் மற்றும் செயல்திறன் மேம்படுத்தப்பட்டதோடு ஆப்பிள் நிறுவனம் சைன் இன் வித் ஆப்பிள் (Sign In with Apple) எனும் பாதுகாப்பு சார்ந்த அம்சத்தை அறிமுகம் செய்தது. இந்த அம்சம் அதிக வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ஒபன் ஐ.டி. பவுன்டேஷன் இந்த அம்சம் செயல்படுத்தப்பட இருக்கும் வழிமுறையில் கேள்விகளை எழுப்பியுள்ளது.

    ஆப்பிள் நிறுவனம் புதிய சைன் இன் வித் ஆப்பிள் அம்சம் வழக்கமான சைன் இன் வித் ட்விட்டர், கூகுள் மற்றும் ஃபேஸ்புக் சேவைகளை கொண்டு சைன் இன் செய்வதை போன்றே அதற்கு மாற்றாக அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் பயனரின் தனிப்பட்ட விவரங்களை வலைதளம் அல்லது ஆப் டெவலப்பர்களுக்கு வழங்காது.

    லாப நோக்கமின்றி செயல்படும் தொண்டு நிறுவனமான ஒபன் ஐ.டி. பவுன்டேஷன் ஆப்பிளின் சைன் இன் வித் ஆப்பிள் அம்சம் மீது கேள்விகளை எழுப்பியுள்ளது. புதிய ஆப்பிள் அம்சம் பல்வேறு சைன்-இன் தளங்களில் இருப்பதை போன்ற பொதுவான வழிமுறையை தான் பயன்படுத்துகிறது.

    சைன் இன் வித் ஆப்பிள்

    இது பயனர்கள் தனித்தனி பாஸ்வேர்டுகள் இன்றி அவர்களை உறுதிப்படுத்த டெவலப்பர்களுக்கு அனுமதி வழங்குகிறது. எனினும், ஆப்பிள் புதிய அம்சத்திற்கும் ஒபன் ஐ.டி. கனெக்ட் அம்சத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கிறது. இவை பயனர் விவரங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை என கூறப்படுகிறது.

    தற்சமயம் ஒபன் ஐ.டி. கனெக்ட் மற்றும் சைன் இன் வித் ஆப்பிள் சேவைகளுக்கு இடையேயான வித்தியாசம், இது பயனர்கள் எங்கெங்கு சைன் இன் வித் ஆப்பிள் சேவையை பயன்படுத்துவர் என்பதில் மட்டும் வேறுபடுகிறது. இதனால் பயனர்களின் விவரங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

    இதுதவிர இந்த அம்சம் ஒபன் ஐ.டி. கனெக்ட் மற்றும் சைன் இன் வித் ஆப்பிள் டெவலப்பர்களுக்கு தேவையற்ற தொல்லையை ஏற்படுத்தி வருகிறது. ஒபன் ஐ.டி. பவுன்டேஷன் பிரச்சனைகளை உடனடியாக சரி செய்து, ஒபன் ஐ.டி. டெஸ்ட் சூட் பயன்படுத்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ஆப்பிளை கேட்டுக் கொண்டுள்ளது. 

    ஆப்பிள் நிறுவனம் மூன்றாம் தரப்பு ஐ.ஒ.எஸ். செயலிகள் சைன் இன் வித் ஆப்பிள் பட்டனில் எஸ்.எஸ்.ஒ. சேவைகளை ஒருங்கிணைக்க உத்தரவிட்டிருக்கிறது.
    Next Story
    ×