என் மலர்
தொழில்நுட்பம்
- 8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் விலை 19499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
- ஒரு TB வரை ஸ்டோரேஜ்-ஐ நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது.
ஸ்மார்ட்போன் விற்பனையில் விவோ நிறுவனம் முன்னணியாக திகழ்ந்து வருகிறது. விவோவின் புதுவகை ஒய் சீரிஸ் போன் விரைவில் இந்தியாவிற்கு வருவதாக இணைய தளங்களில் செய்திகள் வெளியானது. இந்த நிலையில் விவோ ஒய்58 5ஜி செல்போன் நாளை விற்பனைக்கு வருகிறது.
இந்த போன் 8GB RAM உடன் Snapdragon 4 Gen 2 SoC கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 6,000mAh பேட்டரியும், 44W பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்வதாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
8GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்ட போன் விலை 19499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட இருக்கிறது.
6.72-inch LCD full-HD+ டிஸ்பிளே உடன் 120Hz and 1,024nits peak brightness கொண்டதாக இருக்கும். ஒரு டிபி வரை ஸ்டோரேஜ்-ஐ நீட்டித்துக் கொள்ளும் வசதியும் உள்ளது. 50 மெகா பிக்சல் கொண்ட கேமரா மற்றும் 2 egapixel shooter கேமராவில் அடங்கியுள்ளது. 7.99மி.மீ. தடிமன், 199 கிராம் எடை கொண்டதாக இருக்கும்.
- ஐபோன் 15 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது.
- iPhone 15 கேமரா 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் மூலம் குறிப்பிடத்தக்க மேம்படுத்தலைக் கொண்டுள்ளது.
ப்ளிப்கார்ட்டின் மெகா ஜூன் பொனான்சா விற்பனையில் ஐபோன் 15 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் வொண்டர்லஸ்ட் நிகழ்ச்சியின்போது ஆப்பிள் தனது ஐபோன் 15 சீரிஸை வெளியிட்டது. இந்த ஐபோன் அறிமுகத்தின்போது, 128ஜிபி ஐபோன் 15 ரூ.79,900 ஆகவும், 256 ஜிபி மற்றும் 512 ஜிபி வகைகளின் விலை முறையே ரூ. 89,900 மற்றும் ரூ. 1,09,900 ஆகவும் இருந்தது.
ஐபோன் 15 மெகா ஜூன் பொனான்சா விற்பனையானது ஸ்மார்ட்போனிற்கு கணிசமான தள்ளுபடிகளை வழங்குகிறது. விற்பனை இன்று (ஜூன் 19) முடிவடையும் நிலையில் ஐபோன் 15-ஐ குறைந்த விலையில் பெற ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது.
பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 15 128ஜிபி வேரியண்ட் விலையில் 14 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் விலை ரூ.67,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்டில் ஆக்ஸிஸ் வங்கி கார்டை பயன்படுத்தி பழைய ஸ்மார்ட்போன் வர்த்தகம் செய்வதால் மேலும் விலை குறையும். வர்த்தக மதிப்பு உங்கள் பழைய தொலைபேசியின் நிலையைப் பொறுத்தது. அதன் நிலை சிறப்பாக இருந்தால், அதிக தள்ளுபடி கிடைக்கும். இது தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டு EMI அல்லாத பரிவர்த்தனைகளுக்கு ரூ. 1000 கூடுதல் வங்கி சலுகை உள்ளது.
ஐபோன் 15 ஆனது 6.1 இன்ச் டிஸ்ப்ளே கொண்டுள்ளது. இளஞ்சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் கருப்பு ஆகிய ஐந்து வண்ணங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் ஐபோன் 14 மற்றும் முந்தைய மாடல்களின் வடிவமைப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
ஆனால் கடந்த ஆண்டு ஐபோன் 14 ப்ரோ மாடல்களில் இருந்து பிரபலமான அம்சமான டைனமிக் ஐலேண்ட் நாட்ச் புதிய ஐபோன் 15 சீரிஸில் வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க ஐபோன் 15-இல் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது.

ஐபோன் 15 மாடல் ஒருமுறை சார்ஜ் செய்தால் "நாள் முழுவதும் பேட்டரி ஆயுளை" வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. மேலும் அதன் பேட்டரி ஆயுள் ஆரம்பத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டதை விட இரட்டிப்பாகும் என்று சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.
ஐபோன் 15 ஆனது ஆப்பிளின் A16 பயோனிக் சிப் கொண்டிருக்கிறது, இது கடந்த ஆண்டு ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸில் பயன்படுத்தப்பட்ட A15 பயோனிக் சிப்செட்டிலிருந்து மேம்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு ப்ரோ மாடல்கள் A16 பிராசஸர் கொண்டிருந்தன.
ஐபோன் 15 இல் குறிப்பிடத்தக்க மாற்றமாக USB Type-C சார்ஜிங் அமைந்தது. இது ஆப்பிள் நிறுவனத்திற்கான லைட்னிங் போர்ட் சகாப்தத்தின் முடிவைக் குறித்தது. மேலும் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் USB Type-C தரநிலைக்கு மாறியுள்ளது.
- மோட்டோ எட்ஜ் 50 அல்ட்ரா மாடலில் 50MP பிரைமரி கேமரா உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் எட்ஜ் 50 அல்ட்ரா மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் 6.7 இன்ச் 1.5K 144Hz OLED ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 8s ஜென் 3 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் லென்ஸ், 64MP 3x போர்டிரெயிட் டெலிபோட்டோ லென்ஸ், 50MP ஆட்டோஃபோக்கஸ் செல்பி கேமரா உள்ளது. இத்துடன் மோட்டோ ஏ.ஐ. மூலம் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இந்த ஸ்மார்ட்போன் IP68 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி கொண்டுள்ளது. இதில் டால்பி அட்மோஸ் மற்றும் டால்பி ஹெட் டிராக்கிங் வசதி உள்ளது. இந்த வசதிகள் மோட்டோ பட்ஸ் பிளஸ் பயன்படுத்தும் போது ஆக்டிவேட் ஆகும்.
இந்த ஸ்மார்ட்போன் 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 125 வாட் டர்போ பவர் சார்ஜிங் மற்றும் 50 வாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்தியாவில் புதிய மோட்டோரோலா எட்ஜ் 50 அல்ட்ரா விலை ரூ. 59 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கார்டு பயன்படுத்தும் போது கூடுதலாக ரூ. 5 ஆயிரம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது.
- மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
முதன்மை சமூக வலைதளமான டிவிட்டரை விலைக்கு வாங்கி அதை எக்ஸ் என பெயர் மாற்றியது உட்பட பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார் ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்.

சமீபத்தில் ஆபாச சித்தரிப்புகளை யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் பதிவிடவும் பகிரவும் அனுமதி வழங்கும் முடிவை எக்ஸ் நிறுவனம் அறிவித்தது. சட்டவிரோதமான வகையில் உள்ள ஆபாச பதிவுகள் நீக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் அத்துமீறலை ஊக்குவித்தல், சுயநினைவில் இல்லாத நிலையில் இருக்கும்போது ஒருவரை ஆபாசமாக சித்தரித்து Non - consensual nudity புகைப்படத்தையோ வீடியோவையோ பதிவிடுதல் ஆகியவற்றில் ஈடுபட்ட 2,29,925 இந்திய கணக்குகளை எக்ஸ் தளம் அதிரடியாக தடை செய்துள்ளது.

மேலும் 967 கணக்குகள் நாட்டில் தீவிரவாதத்த்தை ஊக்குவித்த காரணத்தால் நீக்கப்பட்டுள்ளது. ஆக மொத்தம் 230,892 இந்திய கணக்குகள் எக்ஸ் தளத்தில் நீக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதிலும் இருந்து பெறப்பட்ட 17,580 புகார்கள் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரண்டு பேட்டரிகள் கொண்டதாக இருக்கும் எனத் தகவல் கசிந்துள்ளது.
- இதற்கு முன்னதாக 6000 mAh பேட்டரியுடன்தான் ஸ்மார்ட்போன்கள் வெளி வந்துள்ளன.
ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் நிறுவனம் விரைவில் 6100mAh திறன் கொண்ட பேட்டரியுடன் புதிய வகை போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன்மூலம் 6100mAh பேட்டரியுடன் அறிமுகம் ஆகும் முதல் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் முதல் நிறுவனம் என்ற பெருமைய பெறப் போகிறது.
சாம்சங், இன்பினிக்ஸ், மோட்டோரோலா, விவோ பொன்ற நிறுவனங்கள் 6000mAh திறன் கொண்டு பேட்டரியுடன் கூடிய செல்போன்களைதான் வெளியிட்டுள்ளது.
OnePlus Ace 3 Pro பெயருடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன் வெளியான OnePlus Ace 2 Pro-வை காட்டிலும் 10 சதம் பெரிய பேட்டரியாகும். 100W SuperVOOC பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் இருக்கும். இரண்டு 2,970mAh திறன் கொண்ட பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது. இரண்டு பேட்டரிகள் சேர்ந்து 6,100mAh கொண்டதாக இருக்கும்.
Qualcomm Snapdragon 8 Gen 3 processor கொண்டதாக வடிவமைக்கபட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இந்தியா மற்றும் உலகளாவிய சந்தைகளில் OnePlus 13R பெயரிடும் வெளியிடலாம் எனத் தெரிகிறது. இது அனைத்தும் தகவலாக வெளிவந்துள்ளது. செல்போன் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக ஏதும் தெரிவிக்கவில்லை.
- மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவிவந்தது
- திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.
மத்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான TRAI இனி மொபைல் எண்களுக்கு தனி கட்டணம் செலுத்தும் முறையை அமல் படுத்தபடும் என்ற செய்தி பரவி வந்தது
இந்த திட்டத்தின் மூலம் நாம் பயன்படுத்தும் மொபைல் மற்றும் லேண்ட்லைன் எண்களுக்கான கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளது. மேலும் இது ஒரு முறை அல்லது வருடாந்திர கட்டணமாகவும் அல்லது பிரீமியம் எண்களுக்கு ஏலம் விடுவது போன்ற முறைகளாகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டும், மேலும் இந்த திட்டமானது தொலைதொடர்பு நிறுவனங்கள் மூலம் வசூலிக்கபட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் பரவி வந்தது.
இந்நிலையில் வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் ட்ரை நிறுவனம் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது,
பல சிம்கள் மற்றும் தனி சிம்கள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு TRAI மூலம் கட்டணம் விதிக்கப்படும் என்ற செய்தி தவறானது. இத்தைய ஆதாரமற்ற மற்றும் பொதுமக்களை தவறாக வழிநடத்த மட்டுமே உதவுகிறது. இது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
The speculation that TRAI intends to impose charges on customers for holding multiple SIMs/ numbering resources is unequivocally false. Such claims are unfounded and serve only to mislead the public.
— TRAI (@TRAI) June 14, 2024
- குறைந்த பட்சம் ரூ. 199 விலை கொண்ட சலுகையை ரிசார்ஜ் செய்ய வேண்டும்.
- இந்த ஸ்மார்ட்போனில் 6000mAh பேட்டரி வழங்கப்பட்டு இருக்கிறது.
சாம்சங் நிறுவனம் இந்திய சந்தையில் தனது கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போனின் ஏர்டெல் எடிஷன் மாடலை அறிமுகம் செய்தது. புதிய ஏர்டெல் எடிஷன் மாடலில் பயனர்கள் ஏர்டெல் சிம் மட்டுமே பயன்படுத்த முடியும். புது ஸ்மார்ட்போனை குறிப்பிட்ட சிம் கார்டு மட்டும் பயன்படுத்துவதற்காக வாங்கும் போது அதன் விலை சற்றே குறைகிறது.
ப்ளிப்கார்ட் வலைதளத்தில் சாம்சங் கேலக்ஸி F15 5ஜி மாடலுக்கு ரூ. 750 தள்ளுபடி கூப்பன் வழங்கப்படுகிறது. பயனர்கள் இதனை ஸ்மார்ட்போன் வாங்கி, 50 ஜி.பி. இலவச டேட்டா பெறும் முன் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இத்துடன் குறைந்த பட்சம் ரூ. 199 விலை கொண்ட சலுகையை ரிசார்ஜ் செய்வது அவசியம் ஆகும்.
புது ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. மற்றும் ஹெச்.டி.எப்.சி. வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போசு ரூ. 1000 உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதை சேர்க்கும் போது கேலக்ஸி F15 5ஜி ஸ்மார்ட்போனை ரூ. 11 ஆயிரத்து 249 விலையில் வாங்கிட முடியும். இந்த ஸ்மார்ட்போனின் உண்மை விலை ரூ. 12 ஆயிரத்து 999 ஆகும்.
கேலக்ஸி F15 5ஜி மாடலில் ஏர்டெல் சிம் லாக் செய்யப்பட்டுள்ள போதிலும், பயனர்கள் 18 மாதங்களுக்கு பிறகு ஏர்டெல் தவிர்த்து இதர சேவைகளை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், சாதனத்தில் மாற்றம் செய்து கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனினும், இவ்வாறு செய்வதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும்.
இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ sAMOLED டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 6100+ பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி, ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஒன் யுஐ 6, 50MP பிரைமரி கேமரா, 13MP செல்பி கேமரா, 6000mAh பேட்டரி, 25 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
- ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவை அறிமுகம்.
- ஆப்பிள் நிறுவன அறிவிப்பை எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.
உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆப்பிள், சமீபத்தில் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாடு (WWDC) நிகழ்வில் அந்நிறுவனம் செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏ.ஐ. சார்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டது. அந்த வரிசையில், ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் என்ற பெயரில் மென்பொருள் சேவையை அறிமுகம் செய்தது.
இதோடு, தனது நிறுவன சாதனங்களில் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவைகள் படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட இருப்பதாகவும் அறிவித்தது. ஆப்பிள் நிறுவனத்தின் இந்த அறிவிப்பை உலகின் மிகப்பெரிய பணக்கராரரும், டெஸ்லா நிறுவன தலைமை செயல் அதிகாரியுமான எலான் மஸ்க் கடுமையாக சாடினார்.
இந்த நிலையில், ஆப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக ஸ்மார்ட்போன் துறையில் களமிறங்குவீர்களா என்ற எக்ஸ் பயனரின் கேள்விக்கு எலான் மஸ்க் பதில் அளித்தார். எக்ஸ் பயனர் ஒருவர் எலான் மஸ்க்-ஐ டேக் செய்து, "எக்ஸ் தளத்திற்கென ஆப்டிமைஸ் செய்யப்பட்ட செயலிகள், ஓபன் சோர்ஸ் ஓ.எஸ். மற்றும் ஸ்டார்லின்க் இண்டகிரேஷன் வசதி கொண்ட எக்ஸ் போனை சாம்சங் மூலம் உற்பத்தி செய்வீர்களா" என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த எலான் மஸ்க், "இது சம்பந்தமில்லாத கேள்வி ஒன்றும் கிடையாது," என பதில் அளித்துள்ளார். எலான் மஸ்க் அளித்திருக்கும் இந்த பதில் காரணமாக எதிர்காலத்தில் எக்ஸ் பிராண்டிங் கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தை கடுமையாக வசைபாடிய எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் ஹெச்.எம்.டி. நிறுவனத்தின் முதல் பீச்சர் போன் மாடல்கள்.
- வயர்லெஸ் எஃப்.எம்., டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது.
ஹெச்.எம்.டி. (HMD) குளோபல் நிறுவனத்தின் இரண்டு புதிய பீச்சர் போன் மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. முன்னதாக நோக்கியா 3210 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது ஹெச்.எம்.டி. 105 மற்றும் ஹெச்.எம்.டி. 110 மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை இந்திய சந்தையில் ஹெச்.எம்.டி. நிறுவனத்தின் முதல் பீச்சர் போன் மாடல்கள் ஆகும்.
அம்சங்களை பொருத்தவரை ஹெச்.எம்.டி. 105 மற்றும் ஹெச்.எம்.டி. 110 மாடல்களில் ஒரே மாதிரியான டிசைன், டெக்ஸ்ச்சர் ஃபினிஷ் செய்யப்பட்டு உள்ளது. இவற்றில் ஆட்டோ கால் ரெக்கார்டிங் வசதி, MP3 பிளேயர், வயர்டு மற்றும் வயர்லெஸ் எஃப்.எம். ரேடியோ மற்றும் டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ் வழங்கப்பட்டு இருக்கிறது.
இரு மாடல்களும் அதிகபட்சம் 9 மொழிகளில் இயக்கும் வசதி கொண்டுள்ளது. ஹெச்.எம்.டி. 110 மாடலில் ரியர் கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் உள்ள 1000 எம்.ஏ.ஹெச். பேட்டரி முழு சார்ஜ் செய்தால் 18 நாட்களுக்கு ஸ்டான்ட் பை வழங்குகிறது. இவற்றில் இண்டர்நெட் இல்லாமல் யு.பி.ஐ. பரிவர்த்தனைகள் செய்யும் வசதி உள்ளது.
ஹெச்.எம்.டி. 105 மாடல்- பிளாக், பர்பில் மற்றும் பர்பில் என மூன்று நிறங்களிலும், ஹெச்.எம்.டி. 110 மாடல் பிளாக் மற்றும் கிரீன் என இரண்டு நிறங்களிலும் கிடைக்கிறது. இந்திய சந்தையில் ஹெச்.எம்.டி. 105 விலை ரூ. 999 என்றும் ஹெச்.எம்.டி. 110 மாடல் விலை ரூ. 1199 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
- தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
- இது ஏற்றுக் கொள்ள முடியாத பாதுகாப்பு விதிமீறல்.
ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை தனது இயங்குதளங்கள் அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகத்திற்குள் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
இது குறித்த எக்ஸ் தள பதிவில் அவர், "ஒருவேளை ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏஐ தொழில்நுட்பத்தை ஓ.எஸ். அளவில் ஒருங்கிணைத்தால், எனது நிறுவன வளாகங்களில் ஆப்பிள் சாதனங்களுக்கு தடை விதிக்கப்படும். இது ஏற்றுக் கொள்ளவே முடியாத பாதுகாப்பு விதிமீறல். என் நிறுவனத்திற்குள் வருபவர்கள் தங்களது ஆப்பிள் சாதனங்களை வாசலிலேயே ஒப்படைக்க வேண்டும். அவை அங்கு பாதுகாப்பாக வைக்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளார்.
எலான் மஸ்க்-இன் இந்த கருத்து தொடர்பாக ஓபன்ஏஐ மற்றும் ஆப்பிள் நிறுவனங்கள் சார்பில் இதுவரை எந்த பதிலும் வழங்கப்படவில்லை.
முன்னதாக ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் நிகழ்வில் (WWDC 2024) ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. இதில் ஆப்பிள் நிறுவன சேவைகள் மற்றும் சாதனங்களில் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் புகுத்தப்படும் என்றும் ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவை தனது சாதனங்களில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
ஆப்பிள் அறிவிப்புகளுக்கு கண்டனம் தெரிவித்த எலான் மஸ்க், "தங்களுக்கென சொந்தமாக ஏ.ஐ. உருவாக்க முடியாத ஆப்பிள் நிறுவனம், ஓபன்ஏஐ மூலம் உங்களது பாதுகாப்பு மற்றும் தனியுரிமையை உறுதிப்படுத்தி விடும் என்பது அபத்தமாக இருக்கிறது. உங்களின் தரவுகளை ஓபன்ஏ.ஐ.-இடம் கொடுத்துவிட்டால் அதற்கு என்னவாகும் என்பது பற்றி ஆப்பிள் நிறுவனத்துக்கு எந்த அக்கறையும் இல்லை. அவர்கள் உங்களை விற்கிறார்கள்," என்று தெரிவித்துள்ளார்.
- கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.
- ஆன்-டிவைஸ் இன்டெலிஜென்ஸ் வழங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் வருடாந்திர டெவலப்பர்கள் மாநாடு, WWDC நேற்றிரவு நடைபெற்றது. இதை துவக்கி வைத்து உரையாற்றிய ஆப்பிள் தலைமை செயல் அதிகாரி டிம் குக், ஆப்பிள் சேவைகளில் அறிமுகம் செய்யப்பட இருக்கும் புதிய அம்சங்கள் குறித்து பேசினார்.
இத்துடன் ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் பிராண்டிங்கில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், WWDC 2024 நிகழ்வில் ஆப்பிள் அறிவித்த புதிய சேவைகள் குறித்து தொடர்ந்து பார்ப்போம்.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்:
சக்திவாய்ந்த, ஒருங்கிணைந்த, உள்ளுணர்வு கொண்ட, தனிப்பட்ட மற்றும் தனியுரிமை என ஐந்து மிக முக்கிய விஷயங்களை அடிப்படையாக கொண்டு ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த சேவையின் கீழ் தரவுகளை எழுதுவது, பல்வேறு செயலிகளில் தரவுகளை மறு உருவாக்கம் செய்வது போன்ற வசதிகளை கொண்டிருக்கிறது.

இத்துடன் மெசேஞ்சஸ், கீநோட், ஃபிரீஃபார்ம் மற்றும் பேஜஸ் போன்ற செயலிகளில் படங்களை உருவாக்கும் வசதி வழங்கப்படுகிறது. பயனர்கள் கிட்டத்தட்ட உண்மைக்கு நிகராக காட்சியளிக்கும் படங்களை பல்வேறு விதங்களில் உருவாக்க முடியும். இந்த படங்கள் பயனர்களின் கேலரியில் உள்ள புகைப்படங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும்.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-இன் தனியுரிமையை பாதுகாக்கும் வகையில், ஆன்-டிவைஸ் இன்டெலிஜென்ஸ் வழங்குவதாக ஆப்பிள் தெரிவித்துள்ளது. இது ஏ.ஐ. சேவையை சாதனத்தில் உள்ள சிப்செட் சார்ந்து வழங்கும்.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சார்ந்த சிரி:
ஏற்கனவே வெளியான தகவல்களை உறுதிப்படுத்தும் வகையில், சிரி சேவையில் ஏ.ஐ. வசதி சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக சிரி மொழிகளை முன்பை விட அதிக நேர்த்தியாத புரிந்து கொள்ளும் திறன் பெற்றிருக்கிறது. கூடுதலாக சிரி சேவையை மற்ற ஆப்பிள் நிறுவன செயலிகளுடன் ஒருங்கிணைக்கவும் முடியும். இதனால் சிரியிடம் ஒரு புகைப்படத்தில் பிரைட்னசை அதிகப்படுத்த வாய்ஸ் கமாண்ட் கொடுத்தாலே போதுமானது.

இன்-ஆப் இன்டெலிஜென்ஸ் அம்சங்கள்:
போட்டோஸ் ஆப்-இன் மெமரிஸ் அம்சம் தற்போது ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் மூலம் மேம்படுத்தப்பட்டு இருக்கிறது. ஏ.ஐ. மூலம் செயலியில் உள்ள சிறந்த படங்கள் மற்றும் வீடியோக்கள் தானாக தேர்வு செய்யப்படுகிறது. மேலும், புகைப்படங்களில் தேவையற்ற பொருட்களை நீக்குவதற்கு புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது.
இதே போன்ற வசதி கூகுள் பிக்சல் மற்றும் கேலக்ஸி ஏ.ஐ. உள்ளிட்டவைகளில் ஏற்கனே கிடைக்கிறது. இதுதவிர மெயில் ஆப், மெசேஜஸ் ஆப் உள்ளிட்டவைகளிலும் ஏ.ஐ. வசதி புகுத்தப்பட்டுள்ளது.
ஆப்பிள் சாதனங்களில் சாட்ஜிபிடி:
தனது சாதனங்களில் ஏ.ஐ. வசதிகளை அதிகப்படுத்தும் நோக்கில், ஆப்பிள் நிறுவனம் ஓபன்ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்ஜிபிடி சேவையை ஒருங்கிணைப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் சாட்ஜிபிடி சேவையை லாகின் செய்யாமல் பயன்படுத்த முடியும். இந்த வசதி பல்வேறு இதர ஆப்பிள் சாதனங்களிலும் வழங்கப்பட இருக்கிறது.
ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் சேவை ஆப்பிள் சிலிகான், நயூரல் எஞ்சின் உள்ளிட்டவைகளில் இயங்கும். இந்த ஏ.ஐ. அம்சங்கள் ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ், ஐபேட், M1 மற்றும் அதன்பின் வெளியான சிப்செட் கொண்ட மேக் சாதனங்களில் பீட்டா வடிவில் வழங்கப்படுகிறது.
- பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் போகோ (Poco), அதன் மலிவு விலை மொபைலான M6 Pro 5G-ன் புதிய வேரியன்ட்டை கடந்த ஆண்டு வெளியிட்டது.
- இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்ட் போகோ M6 மாடலை தற்போது அறிமுகம் செய்துள்ளது.
பிரபல ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் போகோ (Poco), அதன் மலிவு விலை மொபைலான M6 Pro 5G-ன் புதிய வேரியன்ட்டை கடந்த ஆண்டு வெளியிட்டது. இந்த ஸ்மார்ட்போனிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
இந்த நிலையில், இந்த ஸ்மார்ட்போனின் மற்றொரு வேரியண்ட் போகோ M6 மாடலை தற்போது அறிமுகம் செய்தது. புதிய M6 மாடலில் உள்ள அம்சங்கள் ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ரெட்மி 13 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இது ரெட்மி 13 ஸ்மார்ட்போனின் ரிபிராண்டு செய்யப்ட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.

போகோ M6 அம்சங்கள்:
6.79 இன்ச் Full HD+ LCD ஸ்கிரீன்
13 MP செல்ஃபி கேமரா
108 MP பிரைமரி கேமரா
2MP மேக்ரோ கேமரா f/2.4 aperture LED ஃபிளாஷ்
மீடியாடெக் ஹீலியோ ஜி91- அல்ட்ரா பிராசஸர்
ஹைபிரிட் டூயல் சிம்
ஆண்ட்ராய்டு 14 சார்ந்த சியோமி ஹைப்பர் ஓ.எஸ்.
ஹைப்ரிட் டூயல் சிம் (நானோ + நானோ / மைக்ரோ எஸ்டி)
பக்கவாட்டில் கைரேகை சென்சார்
5030 mAh பேட்டரி
33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
3.5mm ஆடியோ ஜாக், FM ரேடியோ
டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 ac (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.4, GPS + GLONASS
யு.எஸ்.பி. டைப் சி, NFC
போகோ M6 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் விலை ரூ. 10 ஆயிரம் என்றும், 8 ஜிபி +256 ஜிபி மாடல் ரூ. 12 ஆயிரம் என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.






