என் மலர்
தொழில்நுட்பம்
- புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது.
- டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் WWDC 2024 நிகழ்ச்சி நாளை ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிகழ்வில் iOS 18, ஐ- பாட் OS 18, மாக் OS 15, வாட்ச் OS 11, டிவி OS 18 மற்றும் விஷன் OS 2 ஆகியவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இந்த வருட நிகழ்வில் ஆப்பிள் செயலிகளிலிலும், சேவைகளிலும் ஆக்கபூர்வமான வகையில் ஏ.ஐ தொழிநுட்பத்தை பயணவபடுத்துவது குறித்தும், பயனர்களின் தனியுரிமையையும் , பாதுகாப்பையும் உறுதி செய்வதிலும் ஆப்பிள் கவனம் செலுத்த உள்ளதாக தெரிகிறது.
இந்த நிகழ்வில் ஐ-போன், ஐ- பட மற்றும் மாக் ஆகிய சாதனங்களில் புதியதாக ஒருங்கிணைந்த ஏஐ தொழில்நுட்பத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பத்துக்கு ஆப்பிள் இன்டலிஜென்ஸ் [ஏ.ஐ] என பெயரிடப்பட்டுள்ளது. இது ஓபன் ஏஐ, சாட் ஜிபிடி செய்யும் வேலைகள் அனைத்தையும் செய்யும்.

ஆப்பிளின் புதிய தொழில்நுட்பமான ஏ.ஐ யில் பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. பயனர்களின் தினசரி பயன்பாட்டை எளிமைப்படுத்தும் வகையில் ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளில் இந்த ஏஐ தொழில்நுட்பம் ஒருங்கிணைந்து அறிமுகப்படுத்தப்படும். ஆப்ட் இன் மற்றும் பீட்டா மென்பொருள் கொண்ட சாதனங்களிலும் இந்த புதிய ஏஐ தொழில்நுட்பத்தின் பயன்களை அடையலாம்.
ஆப்பிள் ஏஐ தொழில்நுட்பத்தில் ஓபன் ஏ ஐ கருவிகள் ஆகியவற்றை கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் ப்ராசஸிங்கில் செய்ய பயன்படுத்தலாம். மேம்படுதிகப்பட்ட இந்த ஏஐ தொழிநுட்பத்தின் மூலம் பயனர்களின் தனியுரிமைகளும், பாதுகாப்பும் உறுதி செய்யப்படும்.
குறுஞ்செய்திகள், நோட்டிபிகேஷன்கள், இணையதள பக்கங்கள் ஆகியவற்றின் சுருக்கங்களை இந்த புதிய ஏஐ பயனர்களின் பார்வைக்கு வழங்கும். இதன்மூலம் எளிதில் அனைத்தையும் குறித்த சுருக்கங்களை விரைவில் அறிய முடியும்.
மின்னஞ்சல்கள் மற்றும் குறுஞ்செய்திகளுக்கு எவ்வாறு பதிலளிப்பது என்று பயனர்களுக்கு அறிவுறுத்தும் வசதியில் ஏஐ தொழில்நுட்பத்தில் அறிமுகமாகிறது.
ஆப்பிள் சாதனங்களில் உள்ள செயலிகளின் பயன்பாட்டை எளிதாக்கும் வகையில் டிஜிட்டல் அசிஸ்டண்டாக செயல்ப்படும் 'சிரி' ஏஐ மூலம் மேம்படுத்தபடும். முக்கியமாக ஒரே நேரத்தில் பல்வேறு செயல்களை செய்யும் வகையில் அடுத்த வருடத்துக்குள் சிரி தயாராகிவிடும் என்ற கூடுதல் தகவலையும் ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஜிமெயிலில் இருப்பதைப் போல இமெயிலிலும் மெயில்களை தானாக வகைப்படுத்தும் அம்சம் சேர்க்கப்பட உள்ளது. மெசேஜ்கள் மற்றும் சாட் - களில் டைப் செய்த வார்த்தைகளுக்கு ஏற்றபடி புதிய எமோஜிகளை உருவாக்கும் வகையில் ஏஐ தொழிநுட்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாய்ஸ் மெமோ அனுப்புவது, புகைப்பட செயலிகளில் எடிட்டிங்கை எளிமையாக்குவது உள்ளிட்ட அம்சங்களும் ஏஐ யில் அடங்கும்.
அதுமட்டுமின்றி பல்வேறு மென்பொருள் அப்டேட்களும் நாளைய நிகழ்ச்சியில் அறிமுகமாக உள்ளது. அதன்படி iOS 18 ஹோம் ஸ்க்ரீன், கன்ட்ரோல் சென்டர், செட்டிங்ஸ் செயலி, மெசேஜிங் செயலி, பாஸ்வேர்டு நிர்வகிக்கும் செயலி, காலகுக்கேட்டார், காலெண்டர் ஆகிய செயலிகளும் மேம்படுத்தப்பட உள்ளது. மேலும் ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட் செட், ஆப்பிள் வாட்ச், மற்றும் ஆப்பிள் டிவி ஆகியவற்றில் புதிய மென்பொருளை அறிமுகப்படுத்தவும் ஆப்பிள் திட்டமிட்டுள்ளது.
- நோட் 40 ப்ரோபிளஸ் 100W wired பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
- ஸ்டேன்டர்டு வெர்சன் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெட்செட்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நிறுவனம் நோட் 40 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுள்ளது. நோட் 40, நோட் 40 5ஜி, நோட் 40 ப்ரோ, நோட் 40 ப்ரோ 5ஜி மற்றும் நோட் 40 பிரோ பிளஸ் 5ஜி ஆகிய புதிய டிசைன் கொண்ட செல்போன்களை வெளியிட்டுள்ளது.
இந்த போன்கள் பிஎம்டபிள்யூ குரூப் உடன் இணைந்து தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில்வர் பினிஷஸ், வெர்டிகிள் ரிட்ஜெஸ், ரெட் மற்றும் ப்ளூ கலருடன் வெளியாகி உள்ளது. இந்த செல்போன்கள் ஸ்டேன்டர்டு வெர்சன் செல்போன்களுக்கு பயன்படுத்தப்படும் ஹெட்செட்களை பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40 சுமார் 17,400 ரூபாய் அளவில் விற்பனையாகிறது. நோட் 40 5ஜி 21,600 ரூபாய்க்கும், நோட் 40 ப்ரோ (4ஜி) 23,300 ரூபாய்க்கும், நோட் 40 ப்ரோ (5ஜி) 25,800 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதில் இருக்கும் சிறப்பம்சம் என்னவென்றால் உலகளவில் தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் அனைத்து ஹெட்போன்களையும் இந்த புதிய டிசைன் செல்போன்களில் பயன்படுத்தலாம்.
நோட் 40 சீரிஸ் போன்கள் இந்த வருடம் தொடக்கத்தில் வெளியிடப்பட்ட போன்களில் இருந்து எந்த மாற்றமும் பெறவில்லை. அவற்றின் டிசைன் மட்டும் மாற்றப்பட்டுள்ளது. இது, விங் ஆஃப் ஸ்பீடு டிசைன் உடன் சில்வர் கலரை கொண்டுள்ளது.
இன்பினிக்ஸ் நோட் 40, நோட் 40 ப்ரோ MediaTek Helio G99 SoCs-ஐ கொண்டுள்ளது. நோட் 40 மற்றும் நோட் ப்ரோ போன்கள் 5,000mAh பேட்டரிகளை கொண்டுள்ளது. ப்ரோ பிளஸ் 4,600mAh பேட்டரியை கொண்டுள்ளது. நோட் 40 ப்ரோபிளஸ் 100W wired பாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் செய்யும்.
- பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு.
- உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.
உலக மக்களால் அதிகமாக பயன்படுத்தபடும் செயலியாக திகழ்கிறது எக்ஸ்.இதற்குமுன் டுவிட்டர் என்றழைக்கப்பட்ட செயலி எலான் மஸ்க் வாங்கியதற்கு பிறகு அதில் பல மாற்றங்களை அமைத்து, புது லோகோ, புது பிராண்டிங் செய்து 2023 ஆம் ஆண்டு எக்ஸ் என்று பெயரையும் மாற்றினார்.
பெரும்பாலான சமூக வலைத்தளங்களில் அவர்களுக்கு என சில விதிமுறைகளும், தனியுரிமை கொள்கைகளும் உண்டு. அதில் பல செயலிகள் அரை நிர்வாண புகைப்படங்களையும், நிர்வாண புகைப்படம் மற்றும் வீடியோக்களையும் பதிவு செய்ய அனுமதிப்படு கிடையாது. அதை மீறி நாம் அதுபோன்ற புகைப்படங்களை பதிவிட்டால் அந்த செயலியில் இருந்து நம்முடைய அக்கவுண்டை முடக்கிவிடுவர்.
தற்பொழுது எக்ஸ் தளத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் நாம் இனிமேல் ஆபாச தரவுகளையும் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யலாம். 18 வயதிற்கு கீழ் செயலியை பயன்படுத்துவோர் இந்த ஆபாசங்களை பார்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
ஒருவரை துன்புறுத்தும் காட்சிகளோ, மைனர் வயதுடையவரின் பாலியல் சீண்டுதல்களோ, அனுமதியின்றி வற்புறுத்தும் காட்சிகளோ இடம் பெறாது என தெரிவித்துள்ளனர். ஆபாசமான புகைப்படங்களை நீங்கள் ப்ரொஃபைல் பிக்-ஆக வைக்கமுடியாது எனவும் கூறியுள்ளனர்.
இந்த அறிக்கை பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. இந்த அறிக்கை மற்ற சமூக வலைத்தளங்களான இன்ஸ்டாகிராம், யூடியூப், ஃபேஸ்புக், டிக்டாக் போன்றவற்றில் இருந்து மாறுப்பட்டவையாக இருக்கிறது.
எக்ஸ் தளத்தின் இந்த அறிக்கையினால் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை ஆபாச திரைப்படங்களை எளிதில் பார்க்க கூடியதாக அமையும் என நெட்டிசன்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
- பயனர்களின் கருத்துகளை வாட்ஸ்ஆப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது.
- விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்அப்ஸ் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 71 லட்சம் இந்திய பயனர்களை தடை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. விதிமுறைகள் மற்றும் தனியுரிமை கொள்கைகள் ஆகியவற்றை மீறியதற்கான தடை விதித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பயனர்கள் பாதுகாப்பு சூழலை பராமரிக்கும் வகையில் விதிமுறைகளை மீறுவோர் மீது தொடர்ந்து இதுபோன்று நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளது.
வாட்ஸ்அப்-பின் தனியுரிமை கொள்கைகளை (privacy policies) மீறும் பயனர்கள் மீது நடவடிக்கை மேற்கொண்டு மாதந்தோறும் லட்சக்கணக்கான இந்திய பயனர்களை தடை செய்து வருகிறது.
அதனடிப்படையில் ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஏப்ரல் 30-ந்தேதி வரை 71 லட்சம் இந்திய பயனர்களை நீக்கியுள்ளது. இதில் 13 லட்சத்து 2 ஆயிரம் பயனர்களை, அவர்களுடைய எந்தவித ரிப்போர்ட் பெறாமல் தடை செய்துள்ளது.
வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பும் பயனர்களை நவீன் தொழில்நுட்பம் மூலம் தானாகவே கண்டறியும் வகையில் வாட்அஸ் ஏற்பாடு செய்துள்ளது.
பயனர்களின் கருத்துகளை வாட்ஸ்ஆப் தீவிரமாக எடுத்துக் கொள்கிறது. இது கணக்குகளை ஸ்கேன் செய்ய முக்கிய பங்கு வகிக்கிறது. பயனர்கள் ரிப்போர்ட் அல்லது கருத்துகனை பிளாக் செய்யும்போது, வாட்அப்பின் சிஸ்டம் அதை எடுத்துக் கொள்கிறது. அதன்மூலம் கூடுதல் விசாரணை செய்யப்பட்டு, கணக்குகள் தடை செய்ய அனுமதிக்கிறது.
- இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது.
- இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.
நமது தினசரி வாழ்க்கையில் நாம் செல்போனில் அதிக நேரத்தை செலவிட்டு வருகிறோம். இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி போடுவது, போஸ்ட் போடுவது மேலும் அதில் எத்தனை லைக்ஸ் மற்றும் கமெண்ட்ஸ் பெற்றது என்பதை பார்க்க நமக்கு வழக்கம் ஆகிவிட்டது.
இன்ஸ்டாகிராமில் நாளுக்கு நாள் இளைஞர்களின் ஈடுபாடு அதிகமாகிக்கொண்டே தான் இருக்கிறது. இன்ஸ்டாகிராமில் எந்த அளவு வணிக ரீதியாகவும், நண்பர்களுடன் பேசவும், பொழுது போக்கும் செயலியாக இருந்தாலும் அதில் சில ஆபத்துகளும் இருக்கிறது.
பெண்களுக்கு ஆபாசமான மெசேஞ்களும், தகாத வார்த்தையை பயன்படுத்தி திட்டுவதும், கேளி செய்வதும் , பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதும் என தினமும் நடந்துக்கொண்டுதான் இருக்கிறது.

இதற்கு தீர்வு காணும் வகையில் இன்ஸ்டாகிராம் லிமிட் மற்றும் ரெஸ்டிரிக்ட் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை கொண்டுவந்துள்ளனர். இந்த அம்சத்தின் மூலம் நமது போஸ்டை யார் காணலாம், யார் மெசேஜ், கமண்ட் , டேக் செய்வது என்பதை நாம் முடிவெடுக்கலாம். நாம் பார்க்க கூடாது என்று நினைக்கும் நபர் நமது புகைப்படத்திற்கு கமெண்ட், மெசேஜ்கள் செய்தாலும் அது நமக்கோ பிறர்கோ காண்பிக்காது. நிர்வாண புகைப்படங்களை தெரியாத நபருக்கு அனுப்பினால் அது இன்ஸ்டாகிராம் தானாகவே மறைத்துவிடும் என இந்த அம்சத்தை இளைஞர்களின் பாதுகாப்புகாக முன்னெடுத்து அறிமுகப்படுத்தியுள்ளனர்.
- மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போனிற்கு இதர சலுகைகளும் வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் மிட்ரேஞ்ச் ஸ்மார்ட்போன் பிரிவில் R சீரிஸ் மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஒன்பிளஸ் 11R. இந்த ஸ்மார்ட்போன் தற்போது இதுவரை இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அமேசான் இந்தியா வலைதளத்தில் ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனிற்கு ரூ. 2 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது. இதுதவிர இந்த ஸ்மார்ட்போனிற்கு இதர சலுகைகளும் வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட ஒன்பிளஸ் 11R ஸ்மார்ட்போனின் 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 39 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டது. தற்போது அமேசான் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என மாறி இருக்கிறது.
இத்துடன் வட்டியில்லா மாத தவணை முறை சலுகை, முதல் முறை அமேசான் பே ஐ.சி.ஐ.சி.ஐ. கார்டு பயன்படுத்துவோருக்கு அறிமுக சலுகை, கனரா வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 500 தள்ளுபடி வழங்கப்படுகிறது.
- புது லாவா ஸ்மார்ட்போன் யுனிசாக் பிராசஸர் கொண்டுள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கிறது.
லாவா நிறுவனத்தின் புதிய 5ஜி ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. லாவா யுவா 5ஜி என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி750 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. வரை விர்ச்சுவல் ரேம் வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 ஓ.எஸ். கொண்டிருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 14 அப்டேட் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு காலாண்டு அடிப்படையில் செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்குவதாக லாவா தெரிவித்துள்ளது.
கிளாஸ் பேக் டிசைன் கொண்டிருக்கும் லாவா யுவா 5ஜி மாடலில் 50MP பிரைமரி கேமரா, 2MP லென்ஸ் மற்றும் 5MP செல்ஃபி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இதன் பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.

கனெக்டிவிட்டிக்கு 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி, 3.5mm ஆடியோ ஜாக், எஃப்.எம். ரேடியோ உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் மிஸ்டிக் கிரீன் மற்றும் மிஸ்டிக் புளூ என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
புதிய லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போனின் 4 ஜி.பி. ரேம், 64 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 499 என்றும் 4 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 9 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
லாவா யுவா 5ஜி ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியா மற்றும் லாவா இ ஸ்டோர், லாவா ரிடெயில் ஸ்டோர்களில் ஜூன் 5 ஆம் தேதி விற்பனைக்கு வருகிறது.
- பயனர்களுக்கு நெட்ப்ளிக்ஸ் சந்தா வழங்கப்படுகிறது.
- புதிய சலுகைகளில் தினமும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் நெட்ப்ளிக்ஸ் உடன் இணைந்து புதிய பிரீபெயிட் சலுகைகளை வழங்குகிறது. முன்னதாக வி பிரீபெயிட் சலுகைகளில் வி மூவிஸ் & டி.வி., 13 ஓ.டி.டி. சந்தா, 400-க்கும் அதிக லைவ் டி.வி. சேனல்கள் உள்ளிட்டவைகளை பயன்படுத்தும் வசதியை வழங்கி வந்தது.
தற்போது நெட்ப்ளிக்ஸ் கூட்டணியை தொடர்ந்து வி பிரீபெயிட் பயனர்கள் தங்களது மொபைல், டி.வி. மற்றும் டேப்லெட் போன்ற சாதனங்களில் நெட்ப்ளிக்ஸ் பயன்படுத்தலாம். ரூ. 1000-க்கும் குறைந்த விலையில் நெட்ப்ளிக்ஸ் சந்தாவை வழங்கும் ஒரே டெலிகாம் நிறுவனமாக வி இருக்கிறது.

அந்த வகையில் வி ரூ. 998 மற்றும் ரூ. 1399 பிரீபெயிட் சலுகைகளில் நெட்ப்ளிக்ஸ் பேசிக் சந்தா வழங்கப்படுகிறது. இந்த சலுகைகளில் முறையே 70 நாட்கள் மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன. இவற்றில் முறையே தினமும் 1.5 ஜி.பி. மற்றும் 2.5 ஜி.பி. டேட்டா வழங்கப்படுகிறது.
இத்துடன் அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் வழங்கப்படுகிறது. மும்பை மற்றும் குஜராத்தில் வசிக்கும் பயனர்கள் 70 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையை ரூ. 1099 விலையில் வாங்க வேண்டும்.
- இந்த ஸ்மார்ட்போனில் 50MP கேமரா உள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி கொண்டுள்ளது.
மோட்டோரோலா நிறுவனத்தின் குறைந்த விலை G சீரிஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய மோட்டோ G04s ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் HD+ LCD ஸ்கிரீன், 90Hz ரிப்ரெஷ் ரேட், யுனிசாக் டி606 பிராசஸர், 4 ஜி.பி. ரேம், 4 ஜி.பி. விர்ச்சுவல் ரேம், 5MP செல்ஃபி கேமரா கொண்டிருக்கிறது.
ஆண்ட்ராய்டு 14 ஓ.எஸ். கொண்டிருக்கும் மோட்டோ G04s ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா, பக்கவாட்டில் கைரேகை சென்சார், 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி மற்றும் 15 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இத்துடன் 20 வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது.

கனெக்டிவிட்டிக்கு டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யு.எஸ்.பி. டைப் சி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் வாட்டர் ரெசிஸ்டண்ட் டிசைன், டூயல் சிம் ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.
புதிய மோட்டோ G04s ஸ்மார்ட்போன் சாடின் புளூ, கான்கார்ட் பிளாக், சீ கிரீன் மற்றும் சன்ரைஸ் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 6 ஆயிரத்து 999 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஜூன் 5 ஆம் தேதி ப்ளிப்கார்ட், மோட்டாரோலா இந்தியா வலைதளங்களில் நடைபெறுகிறது.
- போக்கோ F6 5ஜி மாடல் இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
- இந்த ஸ்மார்ட்போன் மூன்றுவித மெமரி ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
போக்கோ நிறுவனத்தின் முற்றிலும் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் F6 5ஜி இந்திய விற்பனை துவங்கியது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் நடைபெறும் சிறப்பு விற்பனையில், போக்கோ F6 5ஜி மாடலுக்கு ரூ. 4 ஆயிரம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இந்திய சந்தையில் போக்கோ F6 5ஜி மாடல் பிளாக் மற்றும் டைட்டானியம் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 31 ஆயிரத்து 999 என்றும் 12 ஜி.பி. ரேம், 512 ஜி.பி. மெமரி மாடல் விலை ரூ. 33 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் ஐ.சி.ஐ.சி.ஐ. கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இத்துடன் மாத தவணை முறை பரிவர்த்தனைகளுக்கு ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இதுதவிர எக்சேஞ்ச் சலுகையாக ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி வழஹ்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் மாதம் ரூ. 2 ஆயிரத்து 166 வீதம் வட்டியில்லா மாத தவணை முறை சலுகையையும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், ஸ்மார்ட்போனுக்கு ஒரு ஆண்டு கூடுதல் வாரண்டியும் வழங்கப்படுகிறது.
- மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
- ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம்.
சியோமி நிறுவனம் தனது ரெட்மி பேட் ப்ரோ 5ஜி வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக ரெட்மி பேட் ப்ரோ வைபை வெர்ஷன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டு, அதன்பிறகு மே மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த வரிசையில், புதிய டேப்லெட்-இன் 5ஜி மாடல் அறிமுகமாக இருக்கிறது. புதிய வெர்ஷன் வெளியீடு குறித்து சியோமி தலைமை செயல் அதிகாரி லெய் ஜூன் அறிவித்தார். இதோடு, புதிய டேப்லெட் கொண்டு சியோமி மற்றும் ரெட்மி போன் பயன்படுத்துவோர் அவற்றின் ஹாட்ஸ்பாட் மூலம் ஒரே க்ளிக்-இல் கனெக்ட் செய்து கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர்களில் ஸ்டைலஸ் மற்றும் கீபோர்டு உடன் பாதுகாப்பு கேஸ் ஒன்றும் வழங்கப்படுகிறது. 5ஜி சப்போர்ட் தவிர இந்த டேப்லெட்-இன் டிசைன், இதர அம்சங்களில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என்றே தெரிகிறது.
ரெட்மி பேட் ப்ரோ 5ஜி மாடல் ஜூன் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த டேப்லெட் ரெட்மி K70 அல்ட்ரா மாடலுடன் அறிமுகமாகும் என்று கூறப்படுகிறது.
- 5ஜி, 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனர்கள் பயன்பெற முடியும்.
- 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும்.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது சந்தாதாரர்களுக்கு இலவச டேட்டா வழங்கி வருகிறது. குறுகிய காலக்கட்டத்திற்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் புதிய சலுகையில் 5ஜி அல்லது 4ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பிரீபெயிட் பயனர்கள் பயன்பெற முடியும்.
இந்த திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு 13 முறை 10 ஜி.பி. வரை இலவச டேட்டா வழங்கப்படுகிறது. எனினும், இந்த சலுகையின் முழு பயன்களை பெற பயனர்கள் பிரீபெயிடில் இருந்து போஸ்ட்பெயிடுக்கோ அல்லது நம்பரை செயலிழக்க செய்யவோ, ஏற்கனவே உள்ள ரீசார்ஜ் சலுகையை மாற்றவோ வேண்டாம் என வி தெரிவித்துள்ளது.

வி கியாரண்டி திட்டத்தின் கீழ் பயனர்களுக்கு அதிகபட்சம் 130 ஜி.பி. வரை இலவச டேட்டா கூடுதலாக வழங்கப்படும். இந்த சலுகையை பெறும் பட்சத்தில் பயனர்களுக்கு கூடுதல் டேட்டா 10 ஜி.பி. வீதம் 13 தவணைகளில் வழங்கப்படும். இதற்கான வேலிடிட்டி 28 நாட்கள் ஆகும்.
இந்த சலுகையை பெற பயனர்கள் குறைந்தபட்சம் ரூ. 239 துவங்கி அதிகபட்சம் ரூ. 3 ஆயிரத்து 199 விலையில் உள்ள பிரீபெயிட் சலுகையை பயன்படுத்த வேண்டும். மேலும், பயனர்கள் இதே சலுகையை தொடர்ச்சியாக ரிசார்ஜ் செய்ய வேண்டும். இந்த சலுகை மே 25 ஆம் தேதி துவங்கிய நிலையில், ஜூன் 14 ஆம் தேதி வரை வழங்கப்படும்.
சலுகையில் பயன்பெறுவது எப்படி?
- பயனர்கள் வி நெட்வொர்க்கில் 4ஜி அல்லது 5ஜி ஸ்மார்ட்போன் பயன்படுத்த வேண்டும்.
- ஆந்திர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம், அசாம், வடகிழக்கு மற்றும் ஒரிசா டெலிகாம் வட்டாரங்களை சேர்ந்த பயனர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது.
- பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போனில் இருந்து 121199 அல்லது 199199# என்ற எண்ணிற்கு அழைக்க வேண்டும்.
- முந்தைய ஆப்ஷனில் குறிப்பிடப்பட்டு இருக்கும் யு.எஸ்.எஸ்.டி. எண்களை தொடர்ந்து வரும் வழிமுறைகளை கவனமாக பின்பற்ற வேண்டும்.
- இவ்வாறு செய்த பிறகு, சலுகை வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் குறுந்தகவல் வரும்.
- கூடுதல் டேட்டா வழங்கப்பட்டுள்ளதா என்பதை பயனர்கள் *199# என்ற யு.எஸ்.எஸ்.டி. குறியீட்டை கொண்டு சரிபார்க்க முடியும்.






