search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் வாகன சோதனை"

    • நாகூர் முதல் கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.
    • விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் 55 லிட்டர் சாராயம், 700 மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டத்திற்கு மதுகடத்தலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது புதிதாக பொறுப்பேற்ற போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

    இந்த நிலையில் நாகூர் முதல் கங்களாஞ்சேரி சாலையில் நாகூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் நிற்காமல் சென்றனர்.

    இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர்கள் மோட்டார் சைக்கிளில் 55 லிட்டர் சாராயம், 700 மது பாட்டில்களை கடத்தி செல்வது தெரிய வந்தது.

    இதைத் தொடர்ந்து மது பானங்களை கடத்தி சென்ற காரைக்காலை சேர்ந்த சரவணன் (37), நாகை அடுத்த ஓரத்தூர் பகுதியை சேர்ந்த தாஸ் (19) ஆகியோரை கைது செய்தனர்.

    புதுச்சேரி மாநிலத்தில் இருந்து தமிழக பகுதிகளுக்கு சாராய கடத்தலில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும்,, சாராய வியாபாரிகளுக்கு மது விற்பனையில்ஈடுபடும் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த பார் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க ப்படும் என்று நாகை போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • குலசேகரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது கஞ்சா பாக்கெட்டுகள் வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    கன்னியாகுமரி:


    குலசேகரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடு பட்ட போது அதிவேகமாக 2 இருசக்கர வாகணத்தில் 3 பேர் வந்தனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்யும் போது முன்னுக்கு பின் முரணாக பேசினர்.

    இதனால் வாகனத்தை சோதனை செய்த போது 1 கிலோ 100 கிராம் கஞ்சா பாக்கெட்டுகள் இருந்தன. அதனை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் குலசேகரம் நாகக்கோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (வயது 20), பிரவின் (23),வெண்டலிகோடு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (20) என தெரிய வந்தது.

    இதில் ஆகாஷ், பிரவின் மீது ஏற்கனவே தக்கலை காவல் நிலையத்தில் 2 கஞ்சா வழக்குகள் உள்ளன. எங்கு இருந்து கஞ்சா வருகிறது? யார் மூலம் சப்ளை செய்து வருகிறார்கள்? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×