search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "arrested young man"

    இளம்பெண் நிறுத்தியிருந்த சைக்கிளை திருடிச்சென்ற வாலிபர் சில தினங்களுக்கு பின்னர் அதனை ஓட்டிச்சென்றபோது கைது செய்யப்பட்டார். பறிகொடுத்த பெண்ணே அவரை மடக்கினார்.
    சிவகாசி:

    சிவகாசியில் நடந்துள்ள இந்த ருசிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

    திருத்தங்கல்– பள்ளப்பட்டி ரோட்டை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். இவரது மனைவி இனியவள் (வயது 26). இவர் தனது சைக்கிளை கடந்த 12–ந்தேதி அங்குள்ள மாரியம்மன்கோவில் அருகில் நிறுத்தி விட்டு சென்று இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது சைக்கிளை காணவில்லை. யாரோ அதனை திடுடிச்சென்று விட்டனர்.

    இது குறித்து சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சிவகாசி காமராஜர் சிலை அருகில் இனியவள் நின்று கொண்டிருந்த போது வாலிபர் ஒருவர் சைக்கிளில் வந்தார். இதைப்பார்த்த இனியவள் அது தனது சைக்கிள் என்பதை கண்டுகொண்டார். சுதாரித்துக்கொண்ட அவர் துரிதமாக செயல்பட்டு அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.

    அவர்களது உதவியுடன் அந்த நபரை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவரிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் முருகன் காலனியை சேர்ந்த மாரியப்பன் என்பவரது மகன் மாடசாமி (28) என தெரியவந்தது. சைக்கிளை திருடியதாக அவரை போலீசார் கைது செய்து சைக்கிளை மீட்டனர். திருடுபோன சில தினங்களிலேயே சைக்கிள் கிடைத்ததால் இனியவள் மகிழ்ச்சி அடைந்தார்.
    மனைவியை தவிக்க விட்டு மைத்துனியுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

    தாடிக்கொம்பு:

    கரூர் மாவட்டம் தரகம்பட்டி அருகே உள்ள செம்மணக் கோன்பட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் அன்பரசன் (வயது 23). இவருக்கும் திண்டுக்கல் சென்னமநாயக்கன் பட்டியைச் சேர்ந்த கிருஷ்ண மூர்த்தியின் மகளுக்கும் கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு திருமணம் நடந்தது.

    கரூரில் வட்டி கடையில் வேலை பார்த்த அன்பரசன் அந்த வேலையை விட்டு விட்டு மாமனார் வீட்டுக்கே வந்து விட்டார். அங்கு டிரைவர் வேலை பார்த்து வந்தார்.

    அவரது மனைவியின் தங்கை திண்டுக்கல்லில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது அன்பரசனுக்கு மனைவியின் மீது இருந்த மோகம் அவரது தங்கையின் மீது திரும்பியது.

    இதனால் அவரிடம் ஆசை வார்த்தை பேசி பழகி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரை கடத்திச் சென்று உல்லாசமாக இருந்தார். தனது கணவரும் தங்கையும் மாயமானதைக் கண்டு அன்பரசனின் மனைவி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து தாடிக்கொம்பு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

    சப்-இன்ஸ்பெக்டர் முத்தமிழ்செல்வி தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து அவர்களை தேடி வந்தனர். மதுரை மாவட்டம் கப்பலூரில் அவர்கள் பதுங்கி இருப்பது தெரிய வரவே அங்கு சென்ற போலீசார் இருவரையும் பிடித்து வந்தனர். அன்பரசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே முன்விரோத தகராறில் தந்தை-மகனை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    மீன்சுருட்டி, 

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள ரெட்டிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் தவசாமி (வயது 49). கூலி தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் தனது மகன் தினேஷ்குமாருடன் வீட்டின் முன்பு பேசிக்கொண்டு இருந்தார். 

    அப்போது அதே தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஜவகர்(24) முன்விரோதம் காரணமாக தவசாமியையும், தினேஷ்குமாரையும் திட்டி தாக்கியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் வசந்த் வழக்குப்பதிந்து ஜவகரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் தடை செய்யப்பட்ட குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஆந்திராவில் இருந்து ஊத்துக்கோட்டை வழியாக சிலர் தடைசெய்யப்பட்ட குட்கா பெருட்களை கடத்து வதாக துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசனுக்கு தகவல் கிடைத்தது.

    அவரது உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் நித்தியானந்தம் நகர எல்லையில் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது மோட்டார் சைக்கிளில் வடநாட்டு வாலிபர் ஒருவர் வேகமாக வந்தார். அவரை நிறுத்தி சீட்டின் பின்புறம் இருந்த மூட்டையில் சோதனை செய்தபோது ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா இருந்தது. மோட்டார் சைக்கிளுடன் குட்காவை பறிமுதல் செய்தனர்.

    மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த வாலிபர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சர்தாராம் (வயது 22) என்று தெரியவந்தது.

    ஊத்துக்கோட்டை நேரு பஜாரில் கடை ஒன்றை வாடகைக்கு எடுத்து ஆந்திராவிருந்து கடத்தி வரப்படும் குட்கா பொருட்களை சேமித்து வைத்து சென்னை கொண்டு சென்று விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அவரை கைது செய்து ஊத்துக்கோட்டை கோர்டில் ஆஜர்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர்.

    காவேரிபட்டணம் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி லாரியில் மணல் கடத்தி வந்த வாலிபரை கைது செய்தனர்.
    காவேரிபட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிபட்டணம் பகுதியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபால் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

    அப்போது சந்தாபுரம் தென்பெண்ணை ஆற்றில் இருந்து மணல் கடத்தி ஏற்றி வந்த லாரியை பிடித்தனர். லாரியில் 2 யூனிட் மணல் கடத்தி வந்த பழைய தருமபுரி குண்டலபட்டி பகுதியை சேர்ந்த மணிகண்டன் (வயது29) என்பவரை போலீசார் கைது செய்தனர். 

    மணல் கடத்திய லாரியை பறிமுதல் செய்தனர். சேலம் மாவட்டம், ஓமலூரை சேர்ந்த லாரி உரிமையாளர் சுமதி என்பவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    இரும்பு வேலியை சேதப்படுத்தியதை கண்டித்தால் விவசாயிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள கொமந்தான்நகரை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் (வயது 58) விவசாயி. இவருக்கு சொந்தமான நிலம் நாசரேத் அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தில் உள்ளது. இவர் அடிக்கடி அங்கு சென்று வருவார். 

     இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி ஆறுமுகநயினார் சுப்பிரமணியபுரத்தில் உள்ள தனது இடத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த ஜெபராஜ் (20) என்பவர் ஆறுமுகநயினார் இடத்தை சுற்றி அமைக்கப்பட்ட இரும்பு வேலியை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.  

    இதனை ஆறுமுகநயினார் கண்டித்தார். இதனால் ஆத்திரமடைந்த ஜெபராஜ், ஆறுமுகநயினாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஆறுமுகநயினார் நாசரேத் போலீசில் புகார் செய்தார். போலீசார் வாலிபரை கைது செய்தனர்.
    திருவள்ளூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்திலும் குட்கா தாராளமாக விற்கப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் புகையிலை பொருட்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி.சக்கரவர்த்தி போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் தலைமை காவலர் கோபிநாத் ஆகியோர் ஈக்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த லக்காராம் என்பதும், மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்ததும் தெரிந்தது.

    போலீசார் விசாரணை நடத்திய போது திடீரென லக்காராம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப்- இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனை தாக்க முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. லக்காராமுக்கு குட்கா எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×