search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திருவள்ளூரில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது
    X

    திருவள்ளூரில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபர் கைது

    திருவள்ளூரில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

    திருவள்ளூர்:

    தமிழகத்தில் குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் தடையை மீறி புகையிலை பொருட்கள் விற்கப்படுகின்றன.

    திருவள்ளூர் மாவட்டத்திலும் குட்கா தாராளமாக விற்கப்படுகிறது. வட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் புகையிலை பொருட்கள் குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு சப்ளை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி.சக்கரவர்த்தி போலீசாருக்கு உத்தரவிட்டார். போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஈஸ்வரன் மற்றும் தலைமை காவலர் கோபிநாத் ஆகியோர் ஈக்காடு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர் திருவள்ளூர் சத்தியமூர்த்தி தெருவை சேர்ந்த லக்காராம் என்பதும், மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்ததும் தெரிந்தது.

    போலீசார் விசாரணை நடத்திய போது திடீரென லக்காராம் மறைத்து வைத்திருந்த கத்தியால் சப்- இன்ஸ்பெக்டர் ஈஸ்வரனை தாக்க முயன்றார். உடனே அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ. 20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. லக்காராமுக்கு குட்கா எப்படி கிடைத்தது என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×