என் மலர்
நீங்கள் தேடியது "motorcycle robber arrested"
பல்லடம்:
கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்த விக்னேஷ்வரமூர்த்தி (36) என்பவன் நெகமம் பகுதியில் பழைய பூட்டுகளை சரி செய்யும் வேலை செய்து வந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் திருட்டு,கொள்ளை சம்பவங்களில் அவர் ஈடுபட்டு வந்துள்ளான். அவர் மீது நெகமம் போலீஸ் நிலையத்தில் கொலை,நகைப் பறிப்பு, வீட்டில் பூட்டு உடைத்து கொள்ளை போன்ற பல்வேறு குற்ற வழக்குக்கள் நிலுவையில் உள்ளது. போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், அவினாசிபாளையம் போலீஸ் நிலைய எல்லையில் வாகன திருட்டு வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்தார். பல்லடம் வடுகபாளையம் பகுதியில் பல்லடம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த விக்னேஷ்வர மூர்த்தியை நிறுத்தி விசாரித்தபோது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார்.போலீசாரின் தீவிர விசாரணையில் குற்றச் சம்பவங்களில் ஈடு பட்டதை ஒப்புக் கொண்டுள்ளான். அவரிடமிருந்து திருட்டு போன 4 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரை போலீசார் தேடி வருகின்றனர். டூ விலர் திருடனை பிடித்த பல்லடம் போலீஸ் நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், சட்டம் மற்றும் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சுப்புரத்தினம் ஆகியோரை பல்லடம் போலீஸ் டி.எஸ்.பி. முத்துசாமி பாராட்டினார்.






