search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போக்சோ வழக்கு"

    • சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
    • டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    டேராடூன்:

    உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் பகுதியை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் அப்பகுதியை சேர்ந்த 16 வயதுடைய தனது உறவுக்கார சிறுவனுடன் பாலியல் தொடர்பில் இருந்துள்ளார்.

    இதனால் அந்த பெண் கர்ப்பம் அடைந்து ஒரு குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். இதை அறிந்த சிறுவனின் தாயார் அதிர்ச்சியடைந்தார்.

    இதுகுறித்து அந்த சிறுவனின் தாயார் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 5-ந்தேதி டேராடூனில் உள்ள வசந்த் விகார் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    அதன்பேரில் சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை கொடுத்ததாக அந்த பெண் மீது போக்சோ சட்டப் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அப்போது அந்த பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    மேலும் இது தொடர்பாக டேராடூனில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இந்த வழக்கில் நேற்று கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை அளித்த 30 வயது பெண்ணுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

    இந்த தண்டனை உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் முறையாகவும், அரிதான நிகழ்வாகவும் கருதப்படுகிறது.

    • அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எம்.எஸ். ஷா, பாஜக கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்
    • எம்.எஸ். ஷா மீது பள்ளி மாணவியின் தந்தை ஒருவர் மதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்

    மதுரை திருமங்கலத்தில் உள்ள அன்னை பாத்திமா கலை அறிவியல் கல்லூரி தாளாளர் எம்.எஸ். ஷா, பாஜக கட்சியின் மாநில பொருளாதார பிரிவு தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

    இந்நிலையில், எம்.எஸ். ஷா மீது பள்ளி மாணவியின் தந்தை ஒருவர் மதுரை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், 15 வயதான தனது மகளின் செல்போனுக்கு எம்.எஸ், ஷா ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும், தனது மகளை தனியார் சொகுசு விடுதிகளுக்கு அழைத்துச்சென்று தனிமையில் இருந்து வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தன்னுடன் வந்து தங்கினால் பைக் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி வெளி மாநிலங்களுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இதற்கு தனது மனைவியும் (சிறுமியின் தாய்) உடந்தையாக இருந்தாக புகார் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    இதன்பேரில் பாஜக நிர்வாகி எம்.எஸ். ஷா மற்றும் மாணவியின் தாய் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது.
    • கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குவாலியர்:

    மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி ஒருவர் கடந்த 21-ந் தேதி அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அந்த வழியாக காரில் இளைஞர்கள் சிலர் வந்துள்ளனர். அதில் ஒரு வாலிபர் அந்த சிறுமிக்கு பேஸ்புக் மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர் என கூறப்படுகிறது. அந்த வாலிபர் சிறுமியை காரில் ஏறுமாறு கூறியுள்ளார்.

    அதை நம்பி காரில் ஏறிய சிறுமியை ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு கடத்தி சென்று அந்த வாலிபரும், அவரது நண்பர்கள் 3 பேரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.

    பின்னர் சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

    அவர்கள் இதுபற்றி போலீசில் புகார் செய்துள்ளனர். அதன் பேரில் 4 வாலிபர்கள் மீதும் கற்பழிப்பு, போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.
    • இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (22), இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று 4 நாட்கள் அடைத்து வைத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்த மாணவியின் உறவினர்கள் நேற்று சேலம் டவுன் போலீஸ் நிலையம் முன்பு திரண்டு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து டவுன் அனைத்து மகளிர் போலீசார் ஹரிகரன் மீது போக்சோ வ ழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து அவரை தேடிய போது அவர் தலைமறைவாகி விட்டார். அவரை தொடர்ந்து தேடி வருகிறார்கள்.

    • பிளஸ்-2 மாணவி கர்ப்பமானார்.
    • வாலிபர் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 16 வயதுடைய மாணவி அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக மாணவிக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து குடும்பத்தினர் மாணவியை சிவகாசி இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவிக்கு பரிசோதனை நடத்தியதில் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதனால் அதிர்ச்சி யடைந்த மாணவியின் பெற்றோர் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்தனர். அங்கும் மாணவி கர்ப்பமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து மாணவியின் தாய் சிவகாசி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    சிவகாசி எம்.ஜி.ஆர். காலனியை சேர்ந்த சுடலைமணி என்பவரும், மாணவியும் கடந்த சில மாதங்களாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சுடலைமணி மாணவியிடம் நெருங்கி பழகி பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

    மேற்கண்டவை போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து சுடலைமணி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரண்டாவது முறையாக தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.
    • திரை மறைவில் ஒளிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது என நீதிபதி கருத்து.

    சென்னை:

    கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியின் மகள் தந்தையின் அரவணைப்பில் இருக்கும் நிலையில், தாய் வீட்டில் உள்ள தனது உடமைகளை எடுக்க சென்ற போது, தாய் மாமாவால் பாலியல் சீண்டலுக்கு ஆளானதாக போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதில் பதிவான போக்சோ வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை ஐகோர்ட்டில் சிறுமியின் தாய் மாமா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

    இரண்டாவது முறையாக தாக்கல் செய்த முன்ஜாமின் மனு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

    அவர் பிறப்பித்துள்ள உத்தரவில், வழக்கின் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைத்ததாக மனுதாரர் தரப்பில் கூறினாலும், இறுதி அறிக்கை இன்னும் தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் அவர் போலீஸ் விசாரணைக்கு தேவைப்படுகிறார்.

    திரை மறைவில் ஒளிந்து கொண்டு தாம் ஒரு அப்பாவி என மனுதாரர் கூற முடியாது.

    இதுபோன்ற போக்சோ வழக்குகளில் தாய், தந்தை, உறவினர்களின் நலனை விட பாதிக்கப்பட்ட குழந்தையின் நலனும், அந்த குழந்தையின் கண்ணீர் துடைக்கப்பட வேண்டியதும் தான் முக்கியம். அதனால் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்கிறேன்" என்று உத்தரவிட்டு உள்ளார்.

    இந்த நிலையில் முன் ஜாமின் மறுக்கப்பட்ட குற்றம் சாட்டப்பட்ட நபர் சமீபத்தில் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார்.

    • நீதிமன்ற தொடக்க விழாவிற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார்.
    • நீதிபதிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் தடங்கம் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இங்கு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் முதல் அனைத்தும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளகத்திலே செயல்பட்டு வருகிறது.

    தற்போது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக பல்வேறு சட்ட முன்னெடுப்பு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக சென்னை உயர்நீதி மன்றத்தின் பரிந்துரையின் பேரில், தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் போக்சோ வழக்குகளை விசா ரிப்பதற்காக தனி நீதிமன்றம் தொடங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து தருமபுரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் சிறப்பு போக்சோ நீதிமன்றம் தொடங்கப்பட்டுள்ளது.

    முன்னதாக இந்த போக்சோ சிறப்பு நீதிமன்ற தொடக்க விழாவிற்கு தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்து கொண்டார். முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி சிறப்பு நீதிமன்றத்தினை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உள்ளிட்டோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.சையத் பர்கத்துல்லா போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

    போக்சோ வழக்கு களுக்கான சிறப்பு நீதிமன்ற தொடக்க விழாவில் குடும்ப நல நீதிபதி, மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாய சிறப்பு நீதிபதி, தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள அனைத்து நீதிபதிகள், வழக்கறிஞர் சங்க தலைவர், செய லாளர், வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • சாக்லெட் வாங்கி தருவதாக கூறி வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார்.
    • சிறுமிக்கு பாலியல் தொந்த–ரவு கொடுத்துள்ளார்.

    தருமபுரி,

    தருமபுரி பஸ் நிலையம் அருகே சத்திரம்தெருவில் பாலசுப்பிரமணி (75) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

    இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த 5-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சாக்லெட் வாங்கி தருவதாக கூறி பாலசுப்பிரமணி தனது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமிக்கு பாலியல் தொந்த–ரவு கொடுத்துள்ளார். உடனே நடந்த சம்பவம் குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

    புகாரின் போலீசார் பாலசுப்பிரமணி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    தருமபுரி நகரில் 10 வயது சிறுமிக்கு 75 வயது முதி யவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.
    • ஒரு நாளைக்கு சராசரியாக 10 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த சில வருடங்களாக சிறுவர்-சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவது கவலைப்படும் விஷயமாக உள்ளது. ஆண்டுக்கு ஆண்டு இந்த குற்றங்களுக்கான வழக்குகள் அதிகரித்தே வருகிறது.

    கடந்த 7 மாதங்களில் மட்டும் இதுவரை 2ஆயிரத்து 234 போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதில் 833 சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ள வழக்குகளும் அடங்கும். மேலும் 8 சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஒரு நாளைக்கு சராசரியாக 10 போக்சோ வழக்குகள் பதிவாகின்றன.

    கடந்த 5 ஆண்டுகளில் 16 ஆயிரத்து 944 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.
    • கைது செய்யப்பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி அருகே மகாராஜபுரம் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்த மாணவி ஒருவருக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறினார்.

    இந்த நிலையில் நேற்று மாணவியின் பெற்றோர் பள்ளிக்கு வந்தனர். பள்ளியை முற்றுகையிட்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது பற்றி தகவல் தெரிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.

    விசாரணையில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது நெல்லை மாவட்டம் கூடங்குளம் மாடித்தோட்டம் பகுதியை சேர்ந்த பச்சப்பூராஜா (41) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். மாணவிகள் மற்றும் பெற்றோர் போராட்டம் நடத்துவதை அறிந்த ஆசிரியர் பள்ளிக்கு வராமல் தலைமறைவானார்.

    இதையடுத்து போலீசார் அவரை பிடித்தனர். பிடிபட்ட அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையில் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மேலும் 7 மாணவிகள் புகார் அளித்தனர். இது போலீசாருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. புகாரில் ஆசிரியர் வகுப்பறையில் தங்களிடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியிருந்தனர்.

    ஆசிரியர் பச்சப்பூராஜா மீது அடுக்கடுக்கான புகார்களை மாணவிகள் தெரிவித்ததையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பச்சப்பூராஜா மீது கன்னியாகுமரி மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    பின்னர் ஆசிரியர் பச்சப்பூராஜாவை ஆசாரி பள்ளம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மருத்துவ பரிசோதனைக்கு அனுமதித்தனர். இதைத்தொடர்ந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப் பட்ட அவர் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    அரசு பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டதையடுத்து அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து ஆசிரியர் பச்சப்பூராஜாவை சஸ்பெண்டு செய்து கல்வி அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது.
    • மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை.

    நெல்லை:

    தமிழகத்தில் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டத்தை வலுவாக நடைமுறைப்படுத்துவதற்கு சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமையில், மண்டல அளவிலான பயிற்சி பட்டறை நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். பயிற்சி கூட்டத்தில் சென்னை, சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர் அமர்குஷ்வாஹா கலந்து கொண்டு அறிமுக உரையாற்றினார்.

    கூட்டத்துக்கு பின்னர் அமைச்சர் கீதா ஜீவன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட 2,127 பேருக்கு ரூ.35 கோடி இடைக்கால மற்றும் இறுதி நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது.

    நிவாரணம் வழங்கும் திட்டம் 2012-ல் கொண்டுவரப்பட்டாலும் தி.மு.க ஆட்சி அமைந்த பின்னர் தமிழக முதலமைச்சர் உத்தரவுபடி 2021 மே மாதத்திற்கு பிறகு இந்த நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் பாதுகாப்பு இல்லங்களில் இருக்கிற போதே 2 நாட்களுக்குள் மருத்துவ பரிசோதனை, போலீஸ் விசாரணை உள்ளிட்ட அனைத்து விசாரணைகளையும் முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    குழந்தை திருமணங்களை தடுப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.போக்சோ வழக்குகள் மீது நீதிமன்ற தண்டனைகள் பெறுவதற்கு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் குழந்தை திருமணம் அதிகரிக்கவில்லை. குழந்தைகள் திருமணம் தொடர்பான தகவல்கள் வந்த உடன் அந்த திருமணம் நடப்பது நிறுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் குழந்தைகள் திருமணத்தை விட சிறார்கள் காதலித்து நடைபெறும் திருமணங்கள் அதிகமாக உள்ளது. இந்த திருமணங்கள் குறித்த புள்ளி விபரங்கள் சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. இருவரும் விரும்பி திருமணம் நடைபெறுவதால் போக்சோ வழக்குகளில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது. மகளிர் நீதிமன்ற வழிகாட்டுதல்படி சிறார் திருமண வழக்குகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.

    மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. ஒரே நேரத்தில் அனைவரும் விண்ணப்பிப்பதால் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக விண்ணப்பங்கள் ஆப்லைன் முறையில் பெறப்பட்டு அவர்களுக்கான விண்ணப்பங்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்பட்டவுடன் அதற்கான குறுந்தகவல்கள் பதிவு செய்தவர்களுக்கு அனுப்பப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார்
    • பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி தலைமை தாங்கி, பொதுமக்க ளிடமிருந்து மொத்தம் 24 மனுக்களை பெற்று கொண்டு, மனுக்கள் மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    பின்னர் நடைபெற்ற மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டத்தில் போக்சோ வழக்கில் சிறப்பாக விசாரணை செய்து, குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை பெற்று தர நடவடிக்கை மேற்கொண்ட ஆற்காடு, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலைய போலீஸ் இன்ஸ்பெ க்டர்கள் விநாயகமூர்த்தி, ஆனந்தன், ஷாகீன், வாசுகிபோலீஸ் ஏட்டுகள் முத்துராணி, பிரேமா ஆகியோரை பாராட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி சான்றிதழ்களை வழங்கினார்.

    இதில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் விஸ்வேஸ்வரய்யா, குமார், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு உள்பட போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

    ×