search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "துணை நிலை ஆளுநர்"

    • துணை நிலை ஆளுநர் பல இடங்களுக்கு சென்று அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை.
    • சாலைகள் குண்டு குழியுமாக உள்ளதை படம் எடுத்து டுவிட்டரில் பக்கத்தில் வெளியீடு.

    டெல்லியில் ஆம் ஆத்மியின் மாநில ஆட்சி நடைபெற்று வருகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்து வருகிறார். நிர்வாகம், அதிகாரிகள் நியமனம் போன்ற விவகாரத்தில் மாநில அரசுக்கும் துணை நிலை ஆளுநருமான சக்சேனாவிற்கும், கெஜ்ரிவால் அரசுக்கும் இடையில் மோதல் இருந்து வருகிறது.

    இந்த நிலையில் டெல்லி துணை நிலை ஆளுநர் டெல்லி மாநகராட்சிக்கு உட்பட்ட பல காலணிகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பல சாலைகள் குண்டு குழியுமாக கிடப்பது, கழிவுநீர் பணிகள் முழுமை அடையாமல் இருப்பது, குப்பைகள் கொட்டப்பட்டிருப்பதை கண்டார். அவற்றை படங்கள் எடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். மேலும், இது தொடர்பாக ஆம் ஆத்மி அரசின் கீழ் உள்ள துறைகள் செயலற்று இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் "டெல்லியின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் அடிப்படை வசதி குறைபாடு காரணமாக தனது புகார்கள் வந்தது. நேற்று, ஒக்லாவில் உள்ள சஞ்சய் காலனியில் உள்ள ஜேஜே பகுதிக்கு சென்றிருந்தேன். அங்குள்ள கள நிலவரத்தை பார்த்தேன். மாநில அரசின் செயலற்ற தன்மைக்கு இதைவிட உதாரணங்களை பார்க்க முடியாது" என அரவிந்த் கெஜ்ரிவாலை டேக் செய்து பல படங்களை பகிர்ந்துள்ளார்.

    இதேபோல் முன்னதாக ஷாஹத்ராவில் உள்ள குவாலண்டர் காலனியில் இருந்து எடுத்த படங்களை பதிவிட்டிருந்தார்.

    இதற்கு அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். துணைநிலை ஆளுநர் செய்த வேலையை எதிர்க்கட்சியான பா.ஜனதா செய்திருக்க வேண்டும். அரசியலமைப்பு பதவியான துணை நிலை ஆளுநராக இருந்த போதிலும், எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டுயதை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளீர்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

    • சிறுமி கொலை குறித்து எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து டிஜிபி விளக்கம் அளித்தார்
    • வாட்ஸ்-அப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்

    முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த 9-வயது சிறுமி வன்கொடுமைக்கு ஆளாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இச்சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது போக்சோ (POCSO) உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், புதுச்சேரி காவல்துறை டிஜிபி சீனிவாஸ், புதுச்சேரி துணை நிலை ஆளுனர் தமிழிசை சவுந்தரராஜனை நேரில் சந்தித்தார்.

    இவ்வழக்கில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து துணை நிலை ஆளுநர், டிஜிபி-யிடம் கேட்டறிந்தார்.

    மேலும், இச்சம்பவம் தொடர்பாக வாட்ஸ்-அப் மூலம் வதந்திகள் பரவுவதை தடுக்கும் விதமாக நடவடிக்கைகள் எடுக்க டிஜிபி-யிடம் துணை நிலை ஆளுநர் வலியுறுத்தினார்.

    • ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர்.
    • ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது.

    ஜம்மு:

    ஜம்முவில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளதாவது: சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக பிரிவினைவாதம், ஊழலால் ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருந்தது. அது நமது சகோதர சகோதரிகளுக்கு உரிய உரிமைகளை மறுத்தது. பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தானால் அந்த பிரிவு பயன்படுத்தப்பட்டது.

    பிரதமர் மோடி 370வது பிரிவை ரத்து செய்து, இந்த பகுதியில் அமைதி, முன்னேற்றம் மூலம் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது. இங்குள்ள அதன் அனுதாபிகள் பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தை அழிக்க முயன்றனர். இருப்பினும் தற்போது நிலைமை மாறிவிட்டது.

    குடும்ப அடையாள எண் வழங்கும் நடவடிக்கை குறித்து யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது ஜம்மு காஷ்மீரில் சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும். ஜம்மு காஷ்மீரில் அரசுப் பணிகளில் பயங்கரவாதிகளின் உறவினர்கள் உள்ளனர். முந்தைய காலத்தில் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் எப்படி அரசுப் பணிகளில் சேர்க்கப்பட்டனர்? பிரிவினைவாதிகளுக்கு எப்படி அரசு வேலை வழங்கப்பட்டது?

    இப்போது நடக்கும் வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவர்கள், முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு பணிகளில் ஆள் தேர்வுகள் கேள்விக்குள்ளானபோது, நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பால் அது விசாரிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என்பதை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • புதுச்சேரியில் தணிக்கைத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
    • கணக்குகளை முறையாக பராமரிப்பது அவசியமானது.

    புதுச்சேரி அரசின் அலுவலக தலைமை அதிகாரிகள் மற்றும் நிதி கையாளும் அதிகாரிகளுக்கான கணக்குத் தணிக்கை நிகழ்ச்சியை துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் தொடங்கி வைத்தார்.

    பாண்டிச்சேரி பல்கலைக்கழக ஆடிடோரியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், கணக்குகளை முறையாக பராமரிப்பதன் மூலம் தேவையற்ற செலவுகளை குறைக்க முடியும் என்று தெரிவித்தார்.

    முறையாக பராமரிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்திய அவர், வீட்டுச்செலவு கணக்குகளையும் பராமரிக்க வேண்டுமென்று கூறினார். புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தணிக்கைத் துறை பல்வேறு முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

    நிகழ்ச்சியில் புதுச்சேரி சட்டமன்ற பேரவைத் தலைவர் செல்வம், பொது கணக்குக் குழுத் தலைவர்கே.எஸ்.பி.ரமேஷ், தலைமைச் செயலாளர் ராஜீவ் வர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    டெல்லியில் நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என சுப்ரீம் கோர்ட் இன்று அளித்துள்ள தீர்ப்பு, மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். #DelhiPowerTussle
    புதுடெல்லி:

    டெல்லியில் ஆம் ஆத்மி அரசுக்கும் துணை நிலை ஆளுநருக்கும் நிலவிய அதிகார போட்டி தொடர்பான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில், நிர்வாக அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கே உண்டு, அமைச்சரவையின் ஆலோசனையின் பெயரில் துணை நிலை ஆளுநர் செயல்பட வேண்டும் என தீர்ப்பளிக்கப்பட்டது.

    மேலும், துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரம் எதுவும் கிடையாது எனவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டது. எனினும், யூனியன் பிரதேசங்களில் மத்திய மாநில அரசுகள் ஒன்றினைந்து பணியாற்ற வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு டெல்லி ஆம் ஆத்மி கட்சிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது.

    ‘டெல்லி மக்களுக்கும் ஜனநாயகத்துக்கும் கிடைத்த வெற்றி' என தீர்ப்பு தொடர்பாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். துணை முதல்வர் மனீஷ் சிசோடியா கூறுகையில், “இது வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு. இனி கோப்புகளை துணை நிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப தேவையில்லை. அவருக்கு தகவல் மட்டும் தெரிவித்தால் போதுமானது” என தெரிவித்துள்ளார்.
    டெல்லியில் அதிகாரம் யாருக்கு? என்ற வழக்கில், நிர்வாக அதிகாரங்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு என சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. #DelhiPowerTussle
    புதுடெல்லி:

    யூனியன் பிரதேசமான டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு இருந்தும், மத்திய அரசின் துணை நிலை ஆளுநர்தான் பெரும்பாலான நியமனங்கள், முடிவுகளை எடுத்து வந்தார். இதனால், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், துணை நிலை ஆளுருக்கும் இடையே கடும் மோதல் இருந்து வந்தது.

    அமைச்சரவை எடுக்கும் எந்த முடிவையும் டெல்லி துணை ஆளுநர் செயல்படுத்த விடுவதில்லை. ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறார் என்று ஆம் ஆத்மி அரசு குற்றம் சாட்டியது. இதனால், டெல்லியில் யாருக்கு உண்மையான அதிகாரம் இருக்கிறது என விளக்கக் கோரி டெல்லி ஐகோர்ட்டில் கடந்த 2016-ம் ஆண்டு ஆம் ஆத்மி அரசு வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட்4-ம் தேதி தீர்ப்பளித்தது. அதில் அரசியலமைப்புச் சட்டப்படி டெல்லியில் துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர். அமைச்சரவையின் பரிந்துரைப்படி, ஆலோசனைப்படி அவர் செயல்படலாம் எனத் தீர்ப்பளித்தது.

    இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட், அசோக்பூஷன் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து வந்த இந்த வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

    இவ்வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விபரங்கள் கீழ்வருமாறு:-

    மத்திய அரசும் மாநில அரசுகளும் கூட்டட்சி தத்துவப்படி செயல்பட வேண்டும். மக்களின் பிரதிநிதிகள் மக்களின் கேள்விக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள். அரசியல் சாசனத்தை மதிக்கும் வகையில் அனைவரின் செயல்பாடு இருக்க வேண்டும். மக்கள் நல திட்டங்கள் தாமதமானால் துணை நிலை ஆளுநர் மற்றும் டெல்லி அரசு என இருவருமே பொறுப்பு.

    மாநில அரசுகளின் சட்டமன்ற அதிகாரங்களில் மத்திய அரசு தலையிட கூடாது. சுப்ரீம் கோர்ட்டின் முந்தைய தீர்ப்புகள் படி டெல்லி அரசுக்கு மற்ற மாநிலங்களை போல அதிகாரம் கிடையாது. எனினும், மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசின் முடிவுகளுக்கு துணை நிலை ஆளுநர் மதிப்பளிக்க வேண்டும். 

    துணை நிலை ஆளுநருக்கென தனி அதிகாரங்கள் கிடையாது. எல்லா விஷயங்களுக்கும் அமைச்சரவைக்கு துணை நிலை ஆளுநரின் ஒப்புதல் அவசியமில்லை. நிர்வாக அதிகாரங்கள் அனைத்தும் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கே உண்டு. காவல், பொது அமைதி ஆகிய விவகாரங்கள் மட்டும் துணை நிலை ஆளுநரின் அதிகாரத்துக்கு உள்பட்டது.

    இவ்வாறு தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த வழக்கின் தீர்ப்பு புதுச்சேரியில் நிலவும் அதிகாரப்போட்டிக்கும் தீர்வாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×