என் மலர்
நீங்கள் தேடியது "Manoj Sinha"
- ஒரு காலத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் கல் வீசுதல் நடந்தது. ஆனால் இப்போது அது வரலாறாகிவிட்டது.
- ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டால், முழு பள்ளத்தாக்கும் மூடப்பட்டிருக்கும். அந்த நிலை முடிவுக்கு வந்துள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநில துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, இந்திய வர்த்தக சம்மேள உறுப்பினர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-
காஷ்மீர் பள்ளத்தாக்கில் அனந்த்நாக் மற்றும் புல்வாமா போன்ற மாவட்டங்களில் முதலீடுகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீநகரை விட புல்வாமாவில் அதிகமான தொழில்துறை யுனிட்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பயங்கிரவாதிகள் மற்றும் அவர்களுடைய சூழ்நிலைகள் குறித்த பயம் ஏறக்குறைய முடிவுக்கு வந்துள்ளது.
Har Ghar Tiranga பிரசாரத்தின்போது ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இந்தியக் கொடியுடன் வந்தனர், உலகமே அதைப் பார்த்தது. ஷோபியன் மற்றும் புல்வாமாவில் உள்ள பல கிராமங்களில் காவல்துறையினரோ அல்லது அரசு அதிகாரிகளோ செல்வதில்லை. இப்போது, அந்த கிராமங்களைச் சேர்ந்த மக்களும் பங்கேற்கின்றனர்.
உள்ளூர் பயங்கரவாத ஆட்சேர்ப்பு இல்லாத நிலையை எட்டுகிறது. இந்த வருடம் தற்போது வரை ஒரேயொரு சம்பவம் மட்டுமே நடைபெற்றுள்ளது. ஒரு காலத்தில் தினமும் ஏதாவது ஒரு இடத்தில் கல் வீசுதல் நடந்தது. ஆனால் இப்போது அது வரலாறாகிவிட்டது. ஒரு காலத்தில் ஒரு பயங்கரவாதி கொல்லப்பட்டால், முழு பள்ளத்தாக்கும் மூடப்பட்டிருக்கும். பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டிருக்கும். அந்த நிலை முடிவுக்கு வந்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் நடந்த ஒரு வாரத்திற்குப் பிறகு காஷ்மீர் மக்கள் பயங்கரவாதிகளுக்கும், பாகிஸ்தானுக்கும் எதிராக எப்படி நின்றார்கள் என்பதை, ஐந்து ஆண்டுகளில் நான் பார்த்ததில்லை. பெரும்பாலான பெரியோர்கள் இதுபோன்ற ஒன்றைப் பார்த்ததில்லை என்று சொன்னார்கள். ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன், அந்த மாற்றத்திற்கு பின்னால் முழு நாடும் உள்ளது.
இவ்வாறு துணைநிலை ஆளுநர் பேசினார்.
- மறுசீரமைப்பு சட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது.
- எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது
ஜம்மு காஷீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்து ஜம்மு காஷ்மீர் பகுதிகளை ஜம்மு காஷ்மீர் மற்றும் லாடாக் என இரண்டு தனித்தனி யூனியன் பிரதேசங்களாக கடந்த 2019 ஆம் ஆண்டு கடும் சர்ச்சைகளுக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு பிரித்தது. இதற்காக பிரத்தேயகமாக ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தை மத்திய பாஜக அரசு நிறைவேற்றியது.
இந்நிலையில் வரும் செப்டெம்பர் 30 ஆம் தேதிக்குள் ஜம்மு காஷ்மீர் சட்டமன்ற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இணங்க விரைவில் அங்கு சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டத்தில் அமித் ஷா தலைமையிலான மத்திய உள்துறை அமைச்சகம் துணை நிலை ஆளுநருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் முக்கிய திருத்தங்களை கொண்டுவந்து வந்துள்ளது சர்ச்சையாகியுள்ளது.

இதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில் தற்போது ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக உள்ள மனோஜ் சின்ஹாவுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி மாநிலத்தின் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் மற்றும் நீதித்துறை, காவல்துறை, அதிகாரிகளை நியமித்தல் மற்றும் இடம்மாற்றுதல் உள்ளிட்டவற்றில் துணைநிலை ஆளுநரின் அதிகாரங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள்ளன.
இந்த துறைகளில் அதிகாரிகளை நியமிப்பதற்கு ஆளுநரின் ஒப்புதல் தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இந்த விவகாரங்களில் வரையறுக்கப்பட்ட அதிகாரம் மட்டுமே எஞ்சியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அதிகாரிங்கள் ஜூலை 12 முதல் நடைப்முறைக்கு வந்துள்ளன.






