search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சீரியல் நடிகை"

    ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் ஒளிபரப்பான வரும் வம்சம் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சீரியல் நடிகை பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். #Priyanka
    தொலைக்காட்சி தொடரின் மூலம் பிரபலமான சீரியல் நடிகை பிரியங்கா அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த வம்சம் என்ற தொடரில் நெடுந்தொடரில் ஜோதிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் பிரியங்கா.

    திருமணமாகிய பிரியங்கா வளசரவாக்கத்தில் அவரது கணவருடன் வசித்து வந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. குடும்ப பிரச்சனை காரணமாக ஏற்பட்ட மனஅழுத்தத்தால் பிரியங்கா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. 

    பிரியங்காவின் உடலை மீட்ட வளசரவாக்கம் போலீசார் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #Priyanka

    மலையாள டைரக்டர் உண்ணி கிருஷ்ணன் மீது டி.வி. சீரியல் நடிகை நிஷா சாரங் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    திருவனந்தபுரம்:

    கேரள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்போர் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது.

    பிரபல நடிகையை காரில் கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரில் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். அதன்பிறகு பல்வேறு நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் தங்களுக்கும் இது போன்ற சம்பவங்கள் நடந்ததாக குற்றம் சாட்டினர்.

    இந்த நிலையில் மலையாள சின்னத்திரை வட்டாரத்திலும் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை நடப்பதாக பிரபல நடிகை நிஷா சாரங் பகிரங்க புகார் கூறினார்.

    நிஷா சாரங் மலையாள டெலிவி‌ஷன் நிகழ்ச்சிகளில் பிரபலமான உப்பும், மிளகும் என்ற மெகா தொடரில் நடித்து வருகிறார். 5 குழந்தைகளுக்கு தாயாக நடிக்கும் நிஷா சாரங் இது பற்றி மேலும் கூறியதாவது:-

    டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் படப்பிடிப்பில் பங்கேற்க நான் செல்லும் போது என் கையை பிடித்து இழுப்பது, உடலில் கிள்ளுவது போன்ற சேட்டைகளில் ஈடுபடுவார். பல முறை படுக்கைக்கும் அழைத்தார். நான் அவரை கண்டித்தேன்.

    இது பற்றி டெலிவி‌ஷன் நிறுவன அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். அவர்கள் டைரக்டரை கண்டிக்காமல் என்னை சமரசம் செய்தனர். இதை வெளியில் சொன்னால் வேறு வாய்ப்புகள் கிடைக்காமல் போகும் என்று மிரட்டினர்.

    இதனால் டைரக்டர் உண்ணிகிருஷ்ணன் சேட்டைகள் மேலும் அதிகமானது. ஒரு கட்டத்தில் என்னால் இதை தாங்கிக் கொள்ள முடியவில்லை. எனவே நான் இது பற்றி வெளியில் சொல்வேன் என்று கூறினேன். அதன் பிறகு என்னை தொடரில் இருந்து நீக்கி விட்டதாக டைரக்டர் தெரிவித்தார். இது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. இனி இந்த தொடரில் நடிக்க மாட்டேன். டெலிவி‌ஷன் நிர்வாகம் அழைத்தாலும், உண்ணிகிருஷ்ணன் டைரக்டராக இருந்தால் தொடரில் நடிக்க வரமாட்டேன் என்று கூறிவிட்டேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நடிகை நிஷா சாரங், சின்னத்திரை டைரக்டர் மீது கூறிய செக்ஸ் புகார் ஊடகங்களில் வெளியானதும் டெலிவி‌ஷன் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. டைரக்டர் உண்ணி கிருஷ்ணனுக்கு கண்டனமும், நடிகை நிஷாசாரங்கிற்கு ஆதரவும் தெரிவித்து பலர் கருத்து பதிவிட்டனர்.

    மலையாள நடிகைகள் கூட்டமைப்பும், நடிகை நிஷா சாரங்கிற்கு ஆதரவு தெரிவித்து பேஸ்புக்கில் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை எதிர்கொள்ள நிஷா சாரங்கிற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளதாக அவர்கள் கூறி உள்ளனர்.
    ×