search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குடிசை"

    • விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர்.
    • அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது. இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர்.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த கொளத்தூர் சத்யா நகரில் விவசாயி வீரப்பன் (62) என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று மாலை மிளகாய் அறுவடை செய்யும் பணியில் 12 பெண்கள் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்தது.

    குடிசை சரிந்து விழுந்தது

    இதையடுத்து விவசாய தோட்டத்தில் பணியில் ஈடுபட்டிருந்த 12 பேரும் அருகில் இருந்த ஒரு குடிசை வீட்டில் ஒதுங்கினர். அப்போது பலத்த காற்று வீசியதால் குடிசையின் தூண் உடைந்து திடீரென சரிந்து விழுந்தது.

    இதில் மழைக்கு ஒதுங்கிய வர்கள் சிக்கிக் கொண்டனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து அவர்களை மீட்டனர்.

    பெண் பலி

    இந்த விபத்தில் சுமதி (55) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் மாதம்மாள் (65), லட்சுமி (55), ராணி (50), கலா, மணி (39), சாலம்மாள் (55) ஆகிய 6 பேரும் படுகாயம் அடைந்த னர். அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கொளத்தூர் போலீசார் இறந்த சுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சை

    படுகாயம் அடைந்த வர்களில் மாதம்மாள் என்ப வர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மற்றவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து தொடர்பாக கொளத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • காங்கயம் அருகே அய்யாசாமி நகா் காலனி பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • கட்டடம் கட்டத் தேவைப்படும் பொருட்களை வைப்பதற்காக தகரத்தால் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.

    காங்கயம்:

    காங்கயம் அருகே அய்யாசாமி நகா் காலனி பகுதியில் புதிய வீடு கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அதன் அருகே கட்டடம் கட்டத் தேவைப்படும் பொருட்களை வைப்பதற்காக தகரத்தால் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சனிக்கிழமை மதியம் அந்த கொட்டகையில் திடீரெனெ தீப் பிடித்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு நிலைய வீரா்கள் தீயை அணைத்தனா்.இது குறித்து காங்கயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனா்.

    • அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
    • இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தை அடுத்த முட்டை கடை பகுதியில் மாதேஸ்வரன் என்பவரின் குடிசை வீடு உள்ளது. இந்த வீட்டில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி உடனடியாக செவ்வாய்பேட்டை தீயணைப்புத் துறையின ருக்கு தகவல் தெரிவித்து தீயணைப்புத்துறை விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் வீடு மற்றும் வீட்டிலிருந்த பொருட்கள் முழுவதும் எரிந்து நாசமடைந்தது வீட்டிலிருந்த சிலிண்டரை உடனடியாக அப்புறப்படுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டில் வைக்கப்பட்டுள்ள ரூ.50 ஆயிரம் மற்றும் குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் கார்டு உள்ளிட்ட பொருட்களும் தீயில் எரிந்து நாசம் ஆயின. இதை குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • குடிசை பகுதியில் உள்ள குடும்பங்களை கணக்கெடுத்து விவரங்கள் சேகரிப்பு.
    • வாழ தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்கள் கணக்கெடுப்பு.

    நாகப்பட்டினம்:

    தமிழகத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தில் வீடுகளற்ற மற்றும் குடிசைகளில் வாழும் குடும்பங்கள் கணக்கெடுக்கப்பட்டு தகுதியான குடும்பங்களின் விவரங்கள் சேகரிக்கப்ப டுகிறது.

    சமூக பொருளாதார கணக்கெடுப்பு, கலைஞா் வீடு வழங்கும் திட்டம், புதிய குடிசைகள் கணக்கெடுப்பு போன்ற வற்றின் வழியே விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் குடிசையில் வாழும் குடும்பங்கள் மட்டுமல்லாது நிலைத்த தன்மையற்ற வீடு,வாழத் தகுதியற்ற வீட்டில் வசிக்கும் குடும்பங்களின் விவரங்களையும் தமிழக அரசு கணக்கெடுப்பு செய்ய உள்ளது.

    அதன்படி திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி கருப்பூரில் வீடுகள் கணக்கெடுக்கும் பணியில் ஊராட்சி மன்ற தலைவர் ஹாஜா நிஜாமுதீன் தலைமையில் ஊராட்சி செயலர் முருகானந்தம், கிராம நிர்வாக அலுவலர் சிவகாம சுந்தரி, ஊராட்சி மன்ற துணைத் தலைவர் இறையன்பு மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

    • 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் விபத்தில் சிக்கிய பெண் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது
    • தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    வடக்கு தாமரை குளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சங்கரநாராயணன். இவரது மனைவி ஷீலா (வயது 64). இவர்களது மகன் ஹரிகரன் (30). ஷீலாவும் அவரது மகன் ஹரிகரனும் குடிசை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் சாப்பிட்டுவிட்டு தூங்கினார்கள்.அப்போது வீட்டில் விளக்கை பற்ற வைத்திருந்தனர். நள்ளிரவு திடீரென விளக்கு சரிந்து எதிர்பாராத விதமாக குடிசை வீட்டில் தீப்பிடித்தது.

    தீவிபத்தில் குடிசை வீடு முழுவதும் எரிந்தது.அப்போது வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த ஹரிகரன் கண் விழித்தார். தீ எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டை விட்டு வெளியே ஓடினார். அதற்குள் வீடு முழுவதும் எரிந்து நாசமானது.

    இந்த விபத்தில் அவரது தாயார் ஷீலா சிக்கி உடல் கருகினார். அவரை மீட்டு சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட ஷீலாவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    ஷீலாவின் உடல் 100 சதவீதம் கருகி உள்ள நிலையில் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகிறார்கள் . இதுகுறித்து தென் தாமரைகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக நிதி உதவி வழங்கினர்.
    • கலெக்டர் நேரில் சென்று புதிய வீட்டினை திறந்து வைத்து லதாவிடம் ஒப்படைத்தார்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் செருபாலக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் லதா (வயது40). இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு நிவேதா (16) என்ற மகளும், ஹரி (10) என்ற மகனும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் லதாவின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார்.

    தென்னந்தோப்பில் குடிசை வீட்டில் வசித்து வந்தார். லதா சொந்த வீடு இல்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். இதனை அறிந்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் வீடு கட்டுவதற்காக நிதி உதவி வழங்கினர்.இதனை கொண்டு புதிய வீடு கட்டப்பட்டது. நேற்று அசோக்குமார் எம்.எல்.ஏ. முன்னிலையில் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் நேரில் சென்று புதிய வீட்டினை திறந்து வைத்து லதாவிடம் ஒப்படைத்தார். முன்னதாக நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட தலைவர் பஹாத் முகமது வரவேற்று பேசினார்.

    இந்நிகழ்வில் சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் பிரபாகர், மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சாமிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் ருக்குமணி, ஒன்றிய கவுன்சிலர் ராஜலெட்சுமி மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க உறுப்பினர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்க ஒன்றிய செயலாளர் முரளி கிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×