search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கார் பந்தயம்"

    • மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதால் பெரும் விபத்து.
    • சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்.

    இலங்கையின் பதுளை மாவட்டத்தில் கார் பந்தய திடலில் இன்று கார் பந்தயப் போட்டி நடைபெற்றது.

    ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 21 பேர் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    காயம் அடைந்தவர்கள் தியத்தலாவ, பண்டாரவளை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கார் பந்தயத்தின்போது, கார் செல்வதற்கான பாதையைவிட்டு விலகி பார்வையாளர்கள் மீது மோதியுள்ளது. விபத்துக்குள்ளான காரை சூழ்ந்த மக்கள் மீது அடுத்தடுத்து வந்த கார்கள் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

    இதனால், உயிரிழப்புகளும், படுகாயங்களும் அதிகளவில் பதிவாகியுள்ளது. கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விபத்து நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது
    • மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * ஒருநாள் மழைக்கேசென்னை தத்தளிக்கும் சூழலை பார்த்தோம். மழையால் பல்வேறு பகுதிகளில் மக்கள் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர். முறையாக வடிகால் பணிகளை மேற்கொண்டிருந்தால் இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

    * கார் பந்தயத்திற்காக 42 கோடி ரூபாய் அரசு செலவு செய்வது கண்டித்தக்கது. சென்னை தீவுத்திடலை சுற்றி கார் பந்தயம் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. இருங்காட்டுக்கோட்டையில் கார் பந்தயம் நடத்த இடம் இருக்கும் போது சென்னையில் நடத்துவதா?

    * மழை பாதிப்புகளுக்கு இடையே சென்னையில் கார் பந்தயம் நடத்துவது ஏன்? சென்னையில் கார் பந்தயம் நடத்துவதால் யாருக்கு லாபம்?

    * கார் பந்தயம் நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் கிடையாது.

    * அம்மா உணவகத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது

    * மழை பாதிப்புகளை சரி செய்ய அரசு பணம் செலவிடப்பட்டால் அதை வரவேற்கலாம்.

    * கவர்னர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீர்ப்பே இறுதியானது.

    * தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு என்ன மெச்சூரிட்டி உள்ளது?

    * சபாநாயகர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சபை தலைவர் பொதுவாக பேசாமல் கட்சி தலைவர் போல் பேசுகிறார்.

    * பாராளுமன்ற தேர்தலுக்கான 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டு வீரருக்கான விருதை சென்னை இளம் வீரர் ராகுல் ரங்கசாமி பெற்றார்.
    இந்திய மோட்டார் வாகன பந்தய சங்கத்தின் ஆண்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த ஆண்டின் வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டு வீரர் விருதை சென்னையை சேர்ந்த இளம் வீரர் ராகுல் ரங்கசாமி பெற்றார். அவர் 4 தேசிய பட்டம், எம்.ஆர்.எப்.- எப்.எம்.எஸ்.சி.ஐ தேசிய பந்தயத்திலும் வென்றுள்ளார்.

    மோட்டார் வாகன பந்தய சங்க முன்னாள் தலைவர் ஜி.ஆர். கார்த்திகேயனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. கவுரவ்கில், அர்மான் இப்ராகீம், அமித் ரஜித் கோஷ், அஸ்வின் நாயக் ஆகிய வீரர்களும் மிரா எர்டா, ஸ்னேகா, ஷிரியா லோசியா ஆகிய வீராங்கனைகளும் விழாவில் கவுரவிக்கப்பட்டனர்.
    ×