search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஜய்"

    • நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.
    • படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன்.

    புதுச்சேரி:

    புதுவை கல்வித்துறை சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா மாணவர் தின விழாவாக கொண்டாடப்பட்டது.

    காமராஜர் கல்வி வளாகத்தில் நடந்த விழாவில் கவர்னர் தமிழிசை, முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் ஏம்பலம் செல்வம், கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசுகையில், நடிப்பவர்கள் கூட படிப்பை சொல்லி கொடுத்தால் தான் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என உணர்ந்து இருப்பது பாராட்டுக்குரியது என்றார்.

    விழா முடிவில் கவர்னர் தமிழிசையிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர். அப்போது கவர்னர் பதவியை ராஜினாமா செய்து அரசியல் செய்யுங்கள் என புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் கூறியுள்ளாரே? என கேட்டதற்கு, பேச்சு உரிமை என்பது அனைவருக்கும் உண்டு. நான் எவ்வளவு பேச வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. வைத்திலிங்கம் முடிவு செய்ய முடியாது.

    அவர் சொல்வதை அவரது கட்சிக்காரர்களே கேட்கமாட்டார்கள். நான் எனக்கு விருப்பமானதை சொல்வேன். கேட்டால் கேட்கட்டும். கேட்காமல் போகட்டும் என்றார்.

    மாணவர்களுக்கு நடிகர் விஜய் உதவி செய்கிறாரே. இதை அரசியலில் எப்படி பார்க்கிறீர்கள் என கேட்டதற்கு, இதை அரசியலாக பார்க்கவில்லை. படிப்பதற்கு யார் உதவி செய்தாலும் அதை நான் பாராட்டுவேன். நடிப்பவர்கள் கூட படிப்பவர்களுக்கு படிப்பை சொல்லிக் கொடுத்தால் சமுதாயத்தில் முக்கியத்துவம் பெற முடியும் என நினைக்கிறார்கள்.

    சமுதாயத்தில் குழந்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என்பதை அவர்கள் உணர்ந்திருப்பதை நான் பாராட்டுகிறேன். யாராக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் எதிர் கொள்கையில் உள்ளவர்களாக இருந்தாலும் படிப்புக்கு உதவி செய்தால் பாராட்டுவேன். அதில் உள்நோக்கம் இல்லை என்றார்.

    இயக்குனர் சிவா தனது அடுத்த படத்தை விஜய்யை வைத்து இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தெலுங்கில் பல படங்களை இயக்கியதை அடுத்து கார்த்திக் நடித்த சிறுத்தை படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு  அறிமுகமானவர் இயக்குனர் சிவா. இதை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் என நான்கு படங்களை இயக்கி ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார். இவர் கடைசியாக ரஜினி நடிப்பில் வெளியான அண்ணாத்த படத்தை இயக்கி இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. 

    சிவா - விஜய்
    சிவா - விஜய் 

    தற்போது, இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் தளபதி 66 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே இயக்குனர் சிறுத்தை சிவா, நடிகர் விஜய்யை சந்தித்ததாகவும் இந்த சந்திப்பின் போது தனக்கு ஒரு கதை தயார் செய்யுமாறு விஜய், சிவாவிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் விஜய்யின் 68-வது படத்தை சிவா இயக்குவது குறித்து அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது.
    தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல், நடிகர் விஜய்யுடன் இணைய தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளார்.
    இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'விக்ரம்'. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் இந்தப் படத்தில் காளிதாஸ் ஜெயராம், நரேன், காயத்ரி, ஸ்வஸ்திகா கிருஷ்ணன் சேம்பன் வினோத் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    விக்ரம் திரைப்படம் வருகிற ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எனவே படத்திற்கான புரமோஷன் வேலைகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புரமோஷனுக்காக உலகம் முழுவதும் கமல்ஹாசன் சுற்றி வருகிறார்.

    விஜய்
    விஜய்

    இந்த நிலையில் சமீபத்தில் மலேசியாவில் நடந்த புரமோஷன் விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்ட போது, செய்தியாளர் ஒருவர், 'விக்ரம்' படத்தின் மூன்றாவது பாகத்தில் தளபதி விஜய்யை எதிர்பார்க்கலாமா? என்று கேட்டார். இந்த கேள்விக்கு பதிலளித்த கமல்ஹாசன், 'விக்ரம் 3' படத்திற்காக ஏற்கெனவே ஒருவரை ஒப்பந்தம் செய்து வைத்துள்ளோம் என்று சூர்யாவை மறைமுகமாக கூறினார். அதே நேரத்தில் விஜய் ஒப்புக் கொண்டால் அவரை வைத்து படம் தயாரிக்க ராஜ்கமல் பிலிம்ஸ் தயாராக உள்ளது என்று கூறினார்.

    ஏற்கெனவே ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் விஜய் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்றதாக கூறப்படும் நிலையில் கமல்ஹாசனின் இந்த பதிலால் விரைவில் கமல்ஹாசன் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படம் குறித்த அறிவிப்பு வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    'தளபதி 66' படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டு படக்குழு ரசிகர்களை கவர்ந்துள்ளது.
    பீஸ்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து தோழா உள்ளிட்ட படங்களை இயக்கிய வம்சி பைடிப்பள்ளி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். விஜய் 66 என்று பெயரிடப்பட்டுள்ள இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தைப் பிரபல தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் நடிக்கிறார். இப்படம் விஜய்யின் ஆரம்பக் கட்டத்தில் வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை போன்ற குடும்ப பின்னணி படமாக உருவாகிறது. 

    தளபதி 66
    தளபதி 66

    இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தளபதி 66 படம் குறித்த புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. தளபதி 66 படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது என்றும் விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று குறிப்பிட்டு அதனுடன் புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்துள்ளது. 


    பீஸ்ட் படத்தை தொடர்ந்து விஜய் தற்போது நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பி உள்ளார்.
    நடிகர் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் நடித்து வரும் புதிய படம் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. விஜய்க்கு நீண்ட நாட்கள் கழித்து குடும்பக் கதையாக இப்படம் அமைந்திருக்கிறது. இதனால் குடும்பத்தினரோடு தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் வகையில் எடுத்து வருகிறார்கள். 

    விஜய்
    விஜய்

    நேற்று இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விஜய் ஐதராபாத்திலிருந்து சென்னை வந்தார். சிறிது ஓய்விற்கு பிறகு அடுத்த கட்ட படப்பிடிப்பு பெங்களூரில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று “தளபதி 66” படத்தில் கலந்து கொண்டதாக பிரகாஷ்ராஜ் விஜய்யுடன் தான் செல்பி எடுத்த புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். பிரகாஷ்ராஜ்க்கு இந்தப் படத்தில் முக்கிய வேடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. 
    ×