என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Afghanistan"

    • ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஷ்மத்துலா ஷகிடி தொடருகிறார்.
    • ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது.

    காபூல்:

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு முறை சூப்பர் ஓவரில் போராடி தோற்றது கவனிக்கத்தக்க ஒரு ஆட்டமாக இருந்தது.

    இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக ரஷித் கானை கேப்டன் பதவியில் இருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக தொடக்க வரிசை பேட்ஸ்மேன் இப்ராகிம் ஜட்ரன் 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒரு வீரராக ரஷித் கான் அணியில் நீடிக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஷ்மத்துலா ஷகிடி தொடருகிறார்.

    ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. ஆப்கானிஸ்தான்- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 13-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடக்கிறது. ஆனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால் இந்த தொடர் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளது.

    • ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    • கல்வி விசாவில் வந்த 95 சதவீத ஆப்கானியர்கள் அங்கேயே தஞ்சம் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    லண்டன்:

    இங்கிலாந்துக்கு சட்டவிரோதமாக குடியேறுபவர்களைத் தடுக்க அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, கல்வி விசா பெற்று இங்கிலாந்துக்குள் நுழைந்துவிட்டு, பின்னர் அங்கேயே தஞ்சம் கோருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகப் புகார் எழுந்தது.

    இதையடுத்து ஆப்கானிஸ்தான், கேமரூன், மியான்மர் மற்றும் சூடான் ஆகிய 4 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி விசா வழங்குவதை நிறுத்துவதாக அந்நாட்டு உள்துறை மந்திரி ஷபானா மஹ்மூத் அறிவித்துள்ளார்.

    குறிப்பாக, ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு வேலை விசாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்வி விசாவில் வந்த 95 சதவீத ஆப்கானியர்கள் அங்கேயே தஞ்சம் கோரியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான புதிய சட்டத்திருத்தம் நேற்று தாக்கல் செய்யப்பட்டது.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
    • ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.

    இதனால் ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார்.

    இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு பதிலாக இப்ராஹிம் சர்ட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    • டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.
    • டெஸ்ட் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது.

    சர்வதேச கிரிக்கெட்டில் வேகமாக முன்னேறி வரும் ஆசிய நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான். நடப்பு டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று அசத்தியது. மேலும், பலம் வாய்ந்த தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு சூப்பர் ஓவர்களில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி போராடி தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி வெளியேறிய போதிலும், இந்தத் தொடரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்த தவறவில்லை. இந்த நிலையில், வருகிற ஜூன் மாத வாக்கில் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

     


    தற்போது ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா அணிகள் இடையிலான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடருக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இரு அணிகள் மோதும் ஒற்றை டெஸ்ட் போட்டி ஜூன் 6-ஆம் தேதி தொடங்கி ஜூன் 10-ஆம் தேதி வர நடைபெறுகிறது. இந்தப் போட்டி நியூ சண்டிகரில் நடைபெறுகிறது.

    இதைத் தொடர்ந்து இரு அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி ஜூன் 14-ஆம் தேதி தரம்சாலாவில் நடைபெறுகிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி ஜூன் 17-ஆம் தேதி லக்னோவிலும், மூன்றாவது ஒருநாள் போட்டி ஜூன் 20-ஆம் தேதி சென்னையிலும் நடைபெறுகிறது. ஒருநாள் போட்டிகள் அனைத்தும் பகல்-இரவு ஆட்டமாக நடைபெறுகிறது. 

    • பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு.
    • 290 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது.

    பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே ஏற்பட்டுள்ள முழு அளவிளான மோதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.

    செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், "பாகிஸ்தானுடன் நான் மிக மிக நன்றாகப் பழகுகிறேன். அவர்களுக்கு ஒரு சிறந்த பிரதமர் (ஷெபாஸ் ஷெரீப்) மற்றும் ஒரு சிறந்த ராணுவத் தளபதி (ஜெனரல் அசிம் முனீர்) உள்ளனர். நான் மிகவும் மதிக்கும் இருவர் அவர்கள்.

    பாகிஸ்தான் தற்போது மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதாக நான் கருதுகிறேன்" என்று கூறி இந்த மோதலில் இப்போதைக்கு தலையிடப்போவதில்லை என தெரிவித்தார்.

    தாலிபான் தாக்குதல்களில் இருந்து தன்னைத் தற்காத்துக் கொள்ளப் பாகிஸ்தானுக்கு முழு உரிமை உண்டு என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது

    பாக்-ஆப்கான் மோதல்:

    பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி 6 இல் இஸ்லாமாபாத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குகளில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

    தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியதில் 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.

    இதற்கு பதிலடியாக நேற்று பாகிஸ்தான் எல்லைப் புறங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், பலர் கைது செய்யப்பட்டு முகாம்கள் கைப்பற்றப்பட்டதாகவும் ஆப்கானிஸ்தான் கூறியது.

    பதிலடியாக ஆப்கானிஸ்தானின் காபூல் மற்றும் கந்தஹார் நகரங்கள் மீது நடத்திய வான்வழித் தாக்குதலில் 27 தாலிபான் ராணுவ நிலைகள் அழிக்கப்பட்டதாகவும் 290 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. 

    • பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைகள் இடையே மோதல் இருந்து வந்தது.
    • பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் வெளிப்படையாக போர்ப் பிரகடனம் செய்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த எல்லை மோதலால இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது.

    தலிபான் ஆட்சியின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டது எனவும், இப்போது நேரடிப் போர் நடத்துவோம் எனவும் பாகிஸ்தான் பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் தெரிவித்தார்.

    இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் டிரோன் தாக்குதல்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது என பாகிஸ்தான் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய நெருங்கிய அண்டை நாடுகள்.
    • தற்போதைய மோதல் போக்கு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது.

    பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், நேற்று பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இதனால் பாகிஸ்தான் வெளிப்படையாக போர் பிரகடனம் செய்து ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் போர் அண்டை நாடான தங்களுக்கு கவலை அளிக்கிறது என சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மாயோ நிங் கூறியதாவது:-

    பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் எங்களுடைய நெருங்கிய அண்டை நாடுகள். மற்றும் சீனாவின் அண்டை நாடுகள். அண்டை நாடுகள் மற்றும் நண்பர்கள். தற்போதைய மோதல் போக்கு எங்களுக்கு மிகுந்த கவலை அளிக்கிறது. இந்த மோதல் காரணமாக ஏற்பட்டுள்ள உயிரிழப்பு மிகுந்த கவலை அளிக்கிறது.

    பயங்கரவாதத்திற்கு எதிராக சீனா எப்போதும் ஆதரவு அளிக்கிறது. இரண்டு நாடுகளும் அமைதியையும், நிதானத்தையும் கடைபிடிக்க வேண்டும். பேச்சுவார்த்தை மற்றும் ஆலோசனைகள் மூலம் அவர்களுடைய வேறுபாடு மற்றும் மோதல்களை முறையாக தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும், சேதங்களை தவிர்க்க போர் நிறுத்த உடன்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு மயோ நிங் தெரிவித்துள்ளார்.

    • 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.
    • 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் ஷியா மசூதியில் நடந்த தற்கொலைப்படை தாக்குகளில் 31 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

    தொடர்ந்து இந்த வார தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கியதில் 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது. ஆனால் கொல்லப்பட்டவர்கள் அப்பாவி மக்கள் என ஆப்கானிஸ்தான் கூறியது.

    இதற்கு பதிலடியாக நேற்று இரவு பாகிஸ்தான் எல்லைப் புறங்களில் உள்ள ராணுவ முகாம்கள் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

    பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையான டுராண்ட் கோட்டில் நடந்த எதிர் தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது.

    நான்கு மணி நேர நடவடிக்கையில் இரண்டு பாகிஸ்தான் இராணுவ தளங்களும் 19 இராணுவ சாவடிகளும் அழிக்கப்பட்டதாக ஆப்கானிஸ்தான் கூறியது.

    மேலும் பல ராணுவ முகாம்களை கைப்பற்றி, அதில் பாகிஸ்தான் வீரர்களை சிறை பிடித்துள்ளதாகவும் ஆப்கானிஸ்தான் தெரிவித்தது. ஆனால் முகாம்கள் கைப்பற்றப்பட்டதை பாகிஸ்தான் மறுத்தது.

    இதற்கிடையே தாலிபான்களின் தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் மற்றும் முக்கிய நகரமான காந்தஹார் மீது பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.

    அதிகாலை 1:50 மணிக்கு காபூலில் வான்வழித் தாக்குதல் நடந்ததாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாவது வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில் 133 தலிபான் போராளிகள் கொல்லப்பட்டதாகவும் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. மேலும், 27 தாலிபான் ராணுவ நிலைகள் அளிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. 

    கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையை உறுதிப்படுத்தாத தாலிபான் அரசு, பாகிஸ்தானின் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட பொதுமக்களே என தெரிவிதுள்ளது. 

    இதுகுறித்து பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தான் ராணுவம் எந்த தாக்குதலையும் முறியடிக்கும் திறன் கொண்டது. ஆப்கானிஸ்தானின் தாக்குதலே எங்களை பதில் தாக்குதல் நடத்த தூண்டியது" என்று தெரிவித்தார்.

    தாலிபான் ஆட்சியின் நடவடிக்கைகளால் பாகிஸ்தான் பொறுமை இழந்துவிட்டதாகவும், இப்போது நேரடிப் போர் நடத்துவோம் என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் கூறினார்.  

    • காபூல், கந்தஹார் ஆகிய நகரங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.
    • இது பாகிஸ்தான் மீதான இந்தியாவின் மறைமுக போர் எனவும் ஆசிப் குற்றம்சாட்டினார்.

    பாகிஸ்தான் மற்றும் தாலிபான் அரசு ஆளும் ஆப்கானிஸ்தான் இடையே நீண்ட காலமாக மோதல் போக்கு நிலவி வருகிறது. பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலை நடத்துவோர் தாலிபான் ஆதரவு பெற்றவர்கள் என பாகிஸ்தான் குற்றம்சாட்டி வருகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இரு நாடுகளிடையே வெடித்த மோதல் பேச்சுவார்த்தைக்கு பின் முடிவுக்கு வந்தது.

    இதற்கிடையே கடந்த 6 ஆம் தேதி இஸ்லாமாபாத் ஷியா பிரிவினர் மசூதியில் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதலில் 31 பேர் வரை கொல்லப்பட்டனர். இதற்கு ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

    எனவே பதிலடியாக இந்த வாரத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து 20 பயங்கரவாதிகளை கொன்றதாக பாகிஸ்தான் தெரிவித்தது. ஆனால் பெண்கள் குழந்தைகள் உட்பட 20 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது.

    இந்த சூழலில் நேற்று இரவு பாகிஸ்தான் மீது ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. ராணுவ முகாம்கள் உட்பட பல்வேறு இடங்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 55 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும், எல்லைப்பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவத்திற்கு சொந்தமான பல முகாம்களை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதாகவும் பாக் வீரர்கள் பலர் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இதற்கிடையே பதிலடி தாக்குதலை தொடங்கியுள்ள பாகிஸ்தான், போரை வெளிப்படையாக அறிவித்துள்ளது.

    ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், கந்தஹார் ஆகிய நகரங்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.

    காபூலில் குறைந்தது மூன்று இடங்களலும், கந்தஹார் மற்றும் தென்கிழக்கு மாகாணமான பக்தியாவிலும் பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை நடத்தியதாக தாலிபான் அரசு செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்திருந்தார்.

    இதனால் இரு நாடுகளுக்கு இடையில் முழு அளவிலான போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தங்கள் நாட்டின் மீது நடந்த தாக்குதல்களுக்கு பதிலடியாகவே இந்த தாக்குதல் என்று கூறிய பாகிஸ்தான், தங்கள் ராணுவ முகாம்களை ஆப்கானிஸ்தான் கைப்பற்றியதாக கூறப்படும் தகவலை நிராகரித்தது.

    பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் பேசுகையில், "எங்களின் பொறுமைக்கு ஒரு எல்லை உள்ளது. இப்பொது வெளிப்படையாக போர் தொடங்கிவிட்டது" என்று தெரிவித்தார். மேலும் இது பாகிஸ்தான் மீதான இந்தியாவின் மறைமுக போர் எனவும் ஆசிப் குற்றம்சாட்டினார்.

    தாலிபானுக்கு எதிராக 'ஆப்ரேஷன் கசாப் லில்-ஹக்' என்ற நடவடிக்கையை தொடங்குவதாகவும் பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

    • இறந்தவர்கள் பயங்கரவாதிகள் என பாகிஸ்தான் தரப்பு தெரிவித்துள்ளது.
    • பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்தது.

    ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் பன்னு மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் சமீபத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

    இந்நிலையில் இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட பல அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆப்கானிஸ்தான் தெரிவித்துள்ளது.

    மேலும், ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சர்வதேச சட்டங்களை மீறி எல்லை தாண்டி நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலுக்கு மிகச்சரியான மற்றும் தகுந்த பதிலடி கொடுக்கப்படும்.

    தனது நாட்டின் உள்நாட்டுச் சவால்கள் மற்றும் பாதுகாப்புத் தோல்விகளை மறைக்கவே பாகிஸ்தான் இத்தகைய தாக்குதல்களை நடத்துகிறது.

    ஆனால், இத்தகைய வான்வழித் தாக்குதல்களால் பாகிஸ்தானின் உள்நாட்டுக் குறைகளை ஒருபோதும் மறைக்க முடியாது.

    நாட்டின் நிலப்பரப்பையும் மக்களின் பாதுகாப்பையும் காப்பது எங்களின் சட்டப்பூர்வமான மற்றும் தேசியப் பொறுப்பு" என்று தெரிவித்துள்ளது. 

    • இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
    • தனது நாட்டில் நிலவும் உள்நாட்டுத் தோல்விகளையும் குறைகளையும் மறைக்கவே தாக்கியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் எல்லை பகுதிகளான நங்கர்ஹார், பக்திகா மாகாணங்களில் பாகிஸ்தான் இன்று வான்வழித் தாக்குதல் நடத்தியது. இதில் 20 பேர் கொல்லப்பட்டனர்.

    தடை செய்யப்பட்ட தெஹ்ரிக்-இ-தாலிபான் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளின் 7 மறைவிடங்களை இலக்காகக் கொண்டு துல்லியமான தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் இறந்த 20 பேரும் பயங்கரவாதிகள் என்றும் பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

    பாகிஸ்தானின் பன்னு மற்றும் இஸ்லாமாபாத் பகுதிகளில் சமீபத்தில் நடந்த தற்கொலை படைத் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது.

    ஆனால் கொல்லப்பட்டவர்கள் பெண்கள், குழந்தைகள் உட்பட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர் என்றும் இதற்கு தக்க பதிலடி கொடுப்போம் என்றும் ஆப்கானிஸ்தானில் ஆளும் தாலிபான் அரசு தெரிவித்துள்ளது.

    இந்நிலையில் இந்த தாக்குதலை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

    மத்திய வெளியுறவு செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் வெளியிட்ட அறிக்கையில், பாகிஸ்தான் தனது நாட்டில் நிலவும் உள்நாட்டுத் தோல்விகளையும் குறைகளையும் மறைக்கவே, அண்டை நாடான ஆப்கானிஸ்தான் மீது இத்தகைய தாக்குதல்களை நடத்தி திசைதிருப்பும் வேலையை செய்கிறது.

    புனித ரமலான் மாதத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.

    ஆப்கானிஸ்தானின் இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் சுதந்திரத்திற்கு என்றும் இந்தியா முழுமையான ஆதரவை வழங்கும்" என்று தெரிவித்துள்ளார். 

    • பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
    • இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.

    பாகிஸ்தான் ராணுவம் இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் வான்வழித் தாக்குதலை நடத்தியது.

    பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய வான்வழி தாக்குதலில் ஆப்கான் பயங்கரவாதிகள் 20 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கரவாதிகள் தங்குமிடத்தை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பயங்கரவாதிகளின் மறைவிடங்களைக் குறிவைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகப் பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

    தற்போது நடத்தப்பட்டுள்ள இந்த வான்வழித் தாக்குதல் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும்.

    சமீபகாலமாக பாகிஸ்தானுக்குள் நடந்த தற்கொலைப் படைத் தாக்குதல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    ×