என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தடுப்பூசி"

    • எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.
    • உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

    பிரேசில் அரசாங்கம் புதன்கிழமை உலகின் முதல் ஒற்றை டோஸ் டெங்கு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

    சாவ் பாலோவில் உள்ள புகழ்பெற்ற புட்டான்டன் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட 'புட்டான்டன்-டிவி' எனப்படும் இந்த தடுப்பூசி 12 முதல் 59 வயதுடையவர்களுக்கு செலுத்தப்பட தகுந்தது.

    தற்போது கிடைக்கக்கூடிய டெங்கு தடுப்பூசிக்கு மூன்று மாத இடைவெளியில் இரண்டு டோஸ்கள் தேவைப்பட்ட நிலையில், இந்த புதிய தடுப்பூசி ஒரு டோஸ் போதுமானது.

    பிரேசிலில் 16,000 தன்னார்வலர்களிடம் எட்டு ஆண்டுகள் நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில் கடுமையான டெங்குவுக்கு எதிராக இந்த தடுப்பூசி 91.6 சதவீதம் பயனுள்ளதாக இருந்தது.

    2024 ஆம் ஆண்டில் உலகளவில் 14.6 மில்லியன் பாதிப்புகளும் 12,000 இறப்புகளும் பதிவாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதில் பாதி பிரேசிலில் நிகழ்ந்தன. 

    • நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக தகவல்.
    • நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை உள்பட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், நாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்து வருகிறது.

    அதன்படி, சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் நாய்களை பிடித்து ரேபிஸ் தடுப்பூசிகளை செலுத்தி வருவதாக சென்னை மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது.

    இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி தனது எக்ஸ் தள பக்கத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    அந்த பதிவில்," நாய்களுக்கான ரேபிஸ் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இதுவரை மொத்தம் 28,250 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    தொடர்ந்து, நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • கனமழை காரணமாக சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது.
    • தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணத்தை மேற்கொண்டார்.

    சிம்லா:

    இமாசலபிரதேசம் மண்டி அருகே உள்ள சவுகார்காட் பகுதியில் சுந்தர் என்ற மலைக்கிராமம் உள்ளது. ஆஸ்பத்திரி எதுவும் இல்லாத அவலநிலை கொண்ட இந்த கிராம மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதற்காக பக்கத்து ஊரான டிகாரில் இருந்துதான் டாக்டர் அல்லது நர்சு வரவேண்டும். இந்தநிலையில் அக்கிராமத்தில் வசித்துவரும் இளம்பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்து 2 மாதங்களாகின.

    பச்சிளம் குழந்தைக்கு தடுப்பூசி போட வேண்டும் என்றநிலையில் மலைப்பகுதியில் அமைந்துள்ள அந்த கிராமத்தை கடந்த செல்ல சிற்றாறு ஒன்றை கடக்க வேண்டும். தற்போது அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக சிற்றாறில் வெள்ளம் பெருக்கெடுத்து காட்டாறாக ஓடியது. இதனால் தனது குழந்தைக்கு தடுப்பூசி செலுத்த முடியாமல் நோய்வாய்ப்பட்டுவிடுமோ என்று அதன் தாய் அஞ்சினார்.

    ஆனால் டிகாரில் அரசு நர்சாக பணிபுரிந்து வரும் கமலாவோ, குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தியே ஆகவேண்டும் என ஒற்றைக்காலில் நின்றார். அதற்காக தனது மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பையுடன் சாகச பயணத்தை மேற்கொண்டார். இடையே முட்டுக்கட்டையாக இருந்த காட்டாற்றை, உயிரை துச்சமாக எண்ணி கடந்து கடமையை நிறைவேற்றிவிட்டு திரும்பினார்.

    ஆர்ப்பரிக்கும் வெள்ளத்தோடு பாய்ந்தோடிய ஆற்றை கடக்க, அதனிடையே இருந்த பாறாங்கற்கள் மீது கமலாவின் கால்கள் துள்ளிக்குதிக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளின் நெஞ்சை உறைய செய்து 'வைரல்' ஆகி வருகிறது.

    நர்சு கமலாவின் மனதிடத்துடன் கூடிய சேவை மனப்பான்மையை பாராட்டி வாழ்த்துகள் குவிகின்றன.

    • நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
    • 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தெரு நாய்களுக்கு மெகா ரேபிஸ் தடுப்பூசி போடும் திட்டத்தை சென்னை மாநகராட்சி ஆகஸ்ட் 9ஆம் தேதி தொடங்குகிறது.

    சென்னை மாநகராட்சி முழுவதும் 50 நாட்களில் 1.5 லட்சம் நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    கால்நடை மருத்துவக்குழுக்கள் நேரடியாக தெருக்களுக்கே சென்று நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி செலுத்துவார்கள்.

    நாள் ஒன்றிற்கு 3,000 நாய்களுக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்தப்படும் நாய்களுக்கு அடையாள மை வைக்கப்படும்

    முன்னதாக தெரு நாய்களை பிடித்து கருத்தடை மையத்திற்குக்கொண்டு சென்று ரேபிஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்கள் மீதான தாக்குதல் புரிந்துகொள்ள முடியாதது.
    • போலியோ இன்னும் பரவலாகக் காணப்படும் உலகின் கடைசி இரண்டு நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.

    பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் இன்று, போலியோ தடுப்பூசி குழுவிற்கு பாதுகாப்பு அளித்து வந்த காவல்துறையினர் ஒருவரை அடையாளம் தெரியாத நபர்கள் சுட்டுக் கொன்றனர்.

    இந்த சம்பவத்தில் தடுப்பூசி போட வந்த குழுவினர் காயமடையவில்லை. உயிரிழந்தவர் பலுசிஸ்தானின் நுஷ்கியில் வசிக்கும் போலீஸ்காரர் அப்துல் வாஹீத் என்றும் அடையாளம் காணப்பட்டது.

    இந்த தாக்குதலை ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி கண்டித்துள்ளார். போலியோ அதிகாரிகளின் தைரியமும் தியாகமும் "நம் குழந்தைகளை இந்த ஊனமுற்ற நோயிலிருந்து காப்பாற்ற நம் அனைவரையும் ஊக்குவிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

    குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாப்பவர்கள் மீதான தாக்குதல் புரிந்துகொள்ள முடியாதது என்றும் அதை பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கூறினார்.

    இந்த சம்பவத்திற்கு இதுவரை எந்தக் குழுவும் பொறுப்பேற்கவில்லை. பலுசிஸ்தானில் தனி நாடு கோரும் பயங்கரவாதிகளின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    பாகிஸ்தான் போலியோ திட்டத்தின்படி, ஐந்து வயதுக்குட்பட்ட 45 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி மற்றும் வைட்டமின் ஏ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருகிறது ஆப்கானிஸ்தானைத் தவிர, போலியோ இன்னும் பரவலாகக் காணப்படும் உலகின் கடைசி இரண்டு நாடுகளில் பாகிஸ்தான் ஒன்றாகும்.  

    • ஒகாவா மற்றும் இனாபா ஆகியவை காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா இனமான விப்ரியோ காலரா O1 இன் இரண்டு செரோடைப்கள் ஆகும்.
    • காலராவால் ஆண்டுதோறும் 2.86 மில்லியன் பாதிப்புகள் மற்றும் 95,000 இறப்புகள் ஏற்படுகின்றன.

    பாரத் பயோடெக்கின் காலரா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைகள் வெற்றி கண்டுள்ளன.

    பாரத் பயோடெக் இன்டர்நேஷனல் லிமிடெட் தனது, வாய்வழி காலரா தடுப்பு மருந்து ஹில்ச்சோல் மூன்றாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

    ஓகாவா மற்றும் இனாபா செரோடைப்கள் இரண்டிற்கும் எதிரான தன்மைகளை இந்த தடுப்பு மருந்து கொண்டுள்ளதாகவும், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளிடம் செலுத்தும்போது Oral cholera vaccines (OCV) தன்மையை வெளிப்படுத்துகிறது என்றும் கூறப்பட்டுள்ளது.

    ஒகாவா மற்றும் இனாபா ஆகியவை காலராவை ஏற்படுத்தும் பாக்டீரியா இனமான விப்ரியோ காலரா O1 இன் இரண்டு செரோடைப்கள் ஆகும்.

    காலரா என்பது விப்ரியோ காலரா பாக்டீரியாவால் மாசுபட்ட உணவு அல்லது தண்ணீரை உட்கொள்வதால் ஏற்படும் கடுமையான வயிற்றுப்போக்கு தொற்று ஆகும். காலராவால் ஆண்டுதோறும் 2.86 மில்லியன் பாதிப்புகள் மற்றும் 95,000 இறப்புகள் ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இந்த சூழலில் OCV களுக்கான உலகளாவிய தேவை ஆண்டுக்கு 100 மில்லியன் டோஸ்களை நெருங்குகிறது. ஐதராபாத் மற்றும் புவனேஸ்வரில் உள்ள பாரத் பயோடெக்கின் கூடங்கள் 200 மில்லியன் டோஸ் ஹில்சோல் வரை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை என்று அந்நிறுவனம் கூறுகிறது. 

    • முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.
    • சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணைந்து மன்னார்குடி அருகே உள்ள காரிக்கோட்டை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாமை நடத்தியது.

    இந்த முகாமுக்கு மிட்டவுன் ரோட்டரி சங்கம் தலைவர் டி.ரெங்கையன் தலைமை தாங்கினார். காரிக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் பி.பன்னீர்செல்வம் வரவேற்றார்.

    திருவாரூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை ( பொறுப்பு ) டாக்டர் டி.ராமலிங்கம் விளக்க உரையாற்றினார்.

    ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம்கள் தலைவர் டாக்டர் வி‌.பாலகிருஷ்ணன், மன்னார்குடி பேங்க் ஆப் பரோடா மேலாளர் சுவேந்து சாட்டர்ஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினர்களாக கால்நடை பராமரிப்பு துறை கூடுதல் இயக்குனர் ( ஓய்வு ) டாக்டர் டி. தமிழ்ச்செல்வன், பேங்க் ஆப் பரோடா விவசாயி அலுவலர் ஆர். மோனிகா, மிட்டவுன் ரோட்டரி சங்கம் செயலாளர் வி. கோபாலகிருஷ்ணன், மிட்டவுன் ரோட்டரி சங்கம் உடனடி முன்னாள் தலைவர் டாக்டர் சி.குருசாமி, மிட்டவுன் ரோட்டரி சங்கம் பொருளாளர் டி.அன்பழகன், முன்னாள் தலைவர் சாந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த முகாமில் ஆடு, மாடு, கோழிகள் என 760 கால்நடைகளுக்கு தடுப்பூசி, சிகிச்சை அளிக்கப்பட்டன.

    அம்மை நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்க மருந்து, சினை ஊசிகள், சினை பார்த்தல், காளைகளுக்கு ஆண்மை நீக்கம் உள்ளிட்ட பல்வேறு வகையான சிகிச்சைகள், தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.

    இதையடுத்து சிறந்த 10 கால்நடைகளின் கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து பான் செக்கர்ஸ் கல்லூரி ரோட்ராக்ட் சங்கத்தின் உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பாளர் லலிதா தேவி, ஜோஸ்லின், சோபியா மற்றும் ஆகியோருக்கு கால்நடை பராமரிப்பு குறித்து ரோட்டரி மாவட்ட கால்நடை மருத்துவ முகாம் தலைவர் டாக்டர் வி‌. பாலகிருஷ்ணன் விளக்கி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் மருத்துவக் குழு டாக்டர்கள் கார்த்திக், வெற்றிவேல், ராகவி, கால்நடை ஆய்வாளர்கள் குருநாதன், ராணி எலிசபெத், செங்குட்டுவன், கால்நடை பராமரிப்புத்துறை உதவியாளர்கள் பாரதி, நடராஜன், அமுதா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பேங்க் ஆப் பரோடா அலுவலர் ராஜ்குமார் நன்றி கூறினார்.

    • கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.
    • சிறந்த கால்நடைகளின் உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நாகப்பட்டினம்:

    திருமருகல் ஒன்றியம் போலகம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குனர் சஞ்சீவ்ராஜ் அறிவுரையின் பேரிலும், உதவி இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரிலும் நடைப்பெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் பவுஜியாபேகம் அபுசாலி தலைமை தாங்கினார். கால்நடை உதவி டாக்டர் முத்துக்குமார் முன்னிலை வகித்தார்.இந்த முகாமில் கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

    இந்த முகாமில் 100-க்கும் மேற்பட்ட கால்நடைகள் பயன் பெற்றன. இதில் சிறந்த கால்நடை உரிமையளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.மேலும் விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் கால்நடை ஆய்வாளர் தனசேகரன், கால்நடை பராமரிப்பு உதவியாளர் சிவராஜவள்ளி, செயற்கை முறை கருவூட்டாளர் ஸ்ரீகுமார், தம்பிராஜா மற்றும் கால் நடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    • உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் ஆவர்.
    • 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும்.

    புதுடெல்லி:

    உலக அளவில் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெண்களில் நான்கில் ஒரு பங்கு பேர் இந்திய பெண்கள் ஆவர். இந்நோயால் ஏற்படும் மரணங்களில் மூன்றில் ஒரு பங்கு மரணங்கள், இந்தியாவில் நடக்கின்றன. இருப்பினும், இதை தடுப்பதற்கான தடுப்பூசியை வெளிநாட்டு நிறுவனங்கள்தான் தயாரித்து வருகின்றன. அதன் விலை ஒரு டோசுக்கு ரூ.4 ஆயிரம் ஆகும்.

    இந்தநிலையில், முற்றிலும் உள்நாட்டிலேயே 'செர்வாவேக்' என்ற தடுப்பூசி தயாரிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம், சீரம் நிறுவனம் இத்தடுப்பூசியை அறிமுகப்படுத்துகிறது. மிகவும் மலிவான விலையில் இது கிடைக்கும். 9 வயது முதல் 14 வயது வரையிலான சிறுமிகளுக்கு இந்த தடுப்பூசி, தேசிய தடுப்பூசி திட்டத்தின்கீழ் போடப்படும் என்று தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனை குழு தலைவர் அரோரா தெரிவித்தார்.

    • கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • சுகாதார செவிலியர் காந்திமதி மற்றும் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    மதுக்கூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் ஒன்றியத்திற்குட்பட்ட மதுக்கூர் வடக்கு மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கொரோனா விழிப்புணர்வு தடுப்பு பேரணி நடைபெற்றது.

    மதுக்கூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் தஞ்சாவூர் சுகாதாரத் துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் யுஎஸ்எய்ட் மொமன்டம் சார்பில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு பேரணி மற்றும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    இந்நிகழ்வில் தலைமை ஆசிரியை தமிழ்ச்செல்வி தலைமையேற்று நடத்தினார். ஊராட்சி மன்ற தலைவர் நாராயணன், உதவி தலைமை ஆசிரியர் மாணிக்கம், வட்டார மருத்துவ அலுவலர் மகேஷ் குமார், மருத்துவர் புவனி, பகுதி சுகாதார செவிலியர் காந்திமதி மற்றும் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சாத்தி தொண்டு நிறுவன மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், நித்தேஷ், ரேவதி அன்னலட்சுமி, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    பேரணியானது மதுக்கூர் வடக்கு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி மெயின் ரோடு வழியாக முக்கிய வீதிகள் வழியாக பெரமையா கோயில் வரை சென்று திரும்ப பள்ளியை வந்து அடைந்தது.

    • தஞ்சை மண்டலத்தில் 12 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம்.
    • அதிராம்பட்டினத்தில் ஜனவரி 24-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம், ராஷ்டிரிய கிருஷி விகாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வெறிநோயினை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தஞ்சை மண்டலத்தில் 12 இடங்களில் வெறிநோய் தடுப்பூசி முகாம் மற்றும் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறுகிறது.

    அதன்படி தஞ்சையை அடுத்த மாதாக்கோட்டையில் உள்ள கபிரியேல் மக்கள் மன்றத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் முகாமை நான் தலைமை தாங்கி தொடங்கி வைக்கிறேன்.

    மேலும் தஞ்சை கோட்டத்தில் உள்ள ஒரத்தநாடு புதூரில் இந்த முகாம் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந்தேதியும், திருவையாறு அடுத்த கண்டியூரில் 12-ந்தேதியும், மேலத்திருப்பந்துருத்தியில் ஜனவரி 20-ந்தேதியும் நடைபெறுகிறது.

    கும்பகோணம் கோட்டத்தில் கும்பகோணத்தை அடுத்த கீழக்கோட்டையூரில் வருகிற 26-ந்தேதியும், திருவிடைமருதூர் அருகே உள்ள ஆடுதுறை கீழ மருத்துவக்குடியில் ஜனவரி 6-ந்தேதியும், பாபநாசம் ஒன்றியம் ராஜகிரியில் 10-ந் தேதியும், திருப்பனந்தாள் ஒன்றியம் பட்டம் பகுதியில் ஜனவரி 5-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    பட்டுக்கோட்டை கோட்டத்தில் மதுக்கூர் ஒன்றியத்தில் திருச்சிற்றம்பலத்தில் வருகிற 28-ந் தேதியும், பேராவூரணி ஒன்றியம் ஆலத்தூரில் 31-ந் தேதியும், சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பையில் ஜனவரி 4-ந் தேதியும், பட்டுக்கோட்டை ஒன்றியம் அதிராம்பட்டினத்தில் ஜனவரி 24-ந் தேதியும் முகாம் நடைபெறுகிறது.

    எனவே பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் செல்ல பிராணிகளுக்கு முகாம் நடைபெறும் இடங்களை அணுகி இலவசமாக வெறிநோய் தடுப்பூசி செலுத்தி கொடியநோயில் இருந்து பாதுகாத்திடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாட்டம்மை நோய் பரவலை தடுக்க இலவச தடுப்பூசி போடப்பட்டது.
    • கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்டத்தில் மாட்டம்மை நோய் பரவலை தடுக்க 1 லட்சம் மாடுகளுக்கு இலவச தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் உள்ள 37 கால்நடை மருந்தகங்கள் மற்றும் 5 கிளை மருந்தகங்கள் மூலம் மாட்டம்மை நோய் தடுப்பூசி இலவசமாக மாடுகளுக்கு செலுத்தப்படவுள்ளது. எனவே கால்நடை வளர்ப்போர் அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களை அணுகி தங்களது மாடுகளுக்கு மாட்டம்மை நோய் தடுப்பு இலவச தடுப்பூசியை செலுத்தி பாதுகாத்து கொள்ளலாம் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தெரிவித்துள்ளார்

    ×