என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டொனால்டு டிரம்ப்"

    • இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.
    • 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாயத் தயாரிப்புகளை இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    பிரதமர் மோடியுடன் நேற்று தொலைபேசியில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா - அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் எட்டப்பட்டதாக அறிவித்தார்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதாக பிரதமர் மோடி உறுதி அளித்ததால், இந்திய பொருட்களுக்கு விதிக்கப்பட்ட 25 பரஸ்பர வரியை 18 சதவீதமாக குறைப்பதாக அறிவித்த டிரம்ப், இந்தியா, அமெரிக்கா மீதான வரிகளையும் தளர்த்தும் என்று தெரிவித்தார்.

    அதேநேரம், அமெரிக்காவிடமிருந்து 500 பில்லியன் டாலர் மதிப்பிலான எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் விவசாய  பொருட்களை  இந்தியா வாங்கும் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

    மேலும் இந்தியாவுடனான ஒப்பந்தம் அமெரிக்க விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் என அமெரிக்க விவசாயத்துறை செயலாளர் தெரிவித்தார். இது இந்திய விவசாயிகளைப் பாதிக்குமோ என்ற கவலை எழுந்தது.

    இந்நிலையில் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள் இந்திய விவசாயிகளின் நலன்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    அதாவது, அமெரிக்காவிலிருந்து பெரும்பாலும் பருத்தி, பாதாம், மற்றும் வால்நட்ஸ் போன்ற இந்தியாவில் தேவை அதிகமாக உள்ள பொருட்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்படும், அரிசி அல்லது கோதுமை போன்ற இந்திய விவசாயிகள் அதிகம் உற்பத்தி செய்யும் பொருட்களுக்குப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.   

    • அமெரிக்காவின் விவசாய பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
    • இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், அமெரிக்க விவசாயிகளுக்காக மீண்டும் ஒரு சிறப்புமிக்க ஒப்பந்தத்தை அதிபர் ட்ரம்ப் கொடுத்துள்ளதாக அமெரிக்க விவசாயத் துறை செயலாளர் புரூக் ரோலின்ஸ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வழியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் மிகப்பெரிய சந்தைக்கு அதிகப்படியான அமெரிக்க விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்ய வழிவகை செய்யும். இதன் மூலம் அமெரிக்காவின் கிராமப்புற பொருளாதாரம் பெரும் வளர்ச்சியடையும்.

    2024 ஆம் ஆண்டில், இந்தியாவுடனான அமெரிக்காவின் விவசாய வர்த்தக பற்றாக்குறை 1.3 பில்லியன் டாலராக இருந்தது. இந்தியாவின் வளர்ந்து வரும் மக்கள்தொகை அமெரிக்க விவசாய பொருட்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும், மேலும் இன்றைய ஒப்பந்தம் இந்தப் பற்றாக்குறை சரி செய்யப்படும்" என்று தெரிவித்தார். 

    • வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
    • இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.

    புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்கா-இந்தியா வர்த்தக ஒப்பந்தம் குறித்து காங்கிரஸ் கட்சி கவலை தெரிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் முழு விவரங்களையும் வெளியிட வேண்டும் என்றும், இது இந்திய விவசாயிகள், வர்த்தகர்கள் மற்றும் தொழில்துறையை எவ்வாறு பாதிக்கும் என்பதை விரிவாக விளக்க வேண்டும் என்றும் அக்கட்சி வலியுறுத்தியுள்ளது.

    இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ x தளப் பதிவில், "போர் நிறுத்தத்தை போல, இந்த வர்த்தக ஒப்பந்தம் குறித்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் தான் வெளியிட்டார். இந்த வர்த்தக ஒப்பந்தம் 'மோடியின் கோரிக்கையின் பேரில்' செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

    • அமெரிக்காவிற்கு எதிரான சுங்க வரி மற்றும் சுங்க வரி அல்லாத தடைகளை இந்தியா 'பூஜ்ஜியமாகக்' குறைக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். அமெரிக்காவிற்காக நமது சந்தையை முழுமையாக திறக்க இந்தியா ஒப்புக்கொண்டதாகத் தெரிகிறது. இது இந்திய தொழில், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகளை பாதிக்கும்.

    • அந்த அறிக்கையில் விவசாய துறையை அமெரிக்காவிற்காக திறப்பது குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் உண்மையில் என்ன? நமது விவசாயிகளின் பாதுகாப்பும் நலன்களும் எவ்வாறு உறுதி செய்யப்பட்டுள்ளன?

    • மோடி அரசாங்கம் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்காமல், அதற்கு பதிலாக அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து வாங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த நிபந்தனைக்கு மோடி அரசாங்கம் ஒப்புக்கொண்டதா?

    • மேலும், அமெரிக்காவிடம் இருந்து அதிக பொருட்களை வாங்குவது குறித்தும் பேசப்படுகிறது. அப்படியானால், 'மேக் இன் இந்தியா' திட்டம் என்ன ஆனது?

    இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் விவரங்களை தெரிந்துகொள்ள இந்தியாவுக்கு உரிமை உண்டு.

    மோடி அரசாங்கம் பாராளுமன்றத்தையும் ஒட்டுமொத்த நாட்டையும் நம்பிக்கையில் எடுத்துக்கொண்டு, அனைத்து விவரங்களையும் பகிர வேண்டும்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும் என்று டிரம்ப் தெரிவித்தார்.
    • அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சிகள் முழக்கம் இட்டனர்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்" என்று தெரிவித்தார்.

    இன்று பாராளுமன்றம் தொடங்கிய நிலையில், அமெரிக்கா உடனான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளிக்கக் கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கம் இட்டனர்.

    அவையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்க்கட்சியினர் முழக்கமிட்ட நிலையில் இருக்கைக்கு செல்ல சபாநாயகர் அறிவுறுத்தினார்.

    இதையடுத்து எதிர்க்கட்சி எம்.பி.க்களின் கடும் அமளியால் மக்களவை மதியம் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

    • வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.
    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் நேற்று தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.

    Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது" என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற NDA நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அமெரிக்கா - இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்த உடன்படிக்கைக்காக பிரதமர் மோடிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி எம்.பி.க்கள் நன்றி தெரிவித்தனர். அப்போது பிரதமர் மோடிக்கு மாலை அணிவித்து எம்.பி.க்கள் மரியாதை செலுத்தினர்.

    • இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.
    • இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப் அவர்களுக்குப் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், " ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்தார்.

    இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்ட எக்ஸ் பதிவில், " "எனது இனிய நண்பர் அதிபர் டிரம்ப் உடன் பேசியது மகிழ்ச்சி.

    Made in India திட்டத்தின் கீழ் தயாராகும் பொருட்களுக்கான வரி 18%-ஆகக் குறைக்கப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது.

    இந்த அற்புதமான அறிவிப்பிற்காக 140 கோடி இந்திய மக்கள் சார்பாக அதிபர் டிரம்ப் அவர்களுக்குப் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளும், மிகப்பெரிய ஜனநாயக நாடுகளும் இணைந்து செயல்படும்போது, அது நமது மக்களுக்குப் பயனளிப்பதோடு, இருதரப்பு ஒத்துழைப்பிற்கான அபரிமிதமான வாய்ப்புகளையும் உருவாக்குகிறது.

    உலக அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழுமைக்கு அதிபர் டிரம்ப் அவர்களின் தலைமை மிகவும் அவசியமானது. அமைதிக்கான அவரது முயற்சிகளுக்கு இந்தியா தனது முழு ஆதரவை வழங்குகிறது.

    எங்களது கூட்டாண்மையை முன்னெப்போதும் இல்லாத உயரத்திற்குக் கொண்டு செல்ல அவருடன் இணைந்து பணியாற்ற ஆவலோடு காத்திருக்கிறேன்." என்று தெரிவித்துள்ளார். 

    • அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று டிரம்ப்-ஐ கடித்தபோது, அவர் அந்தச் சிறுமியைத் தாக்கினார்.
    • பிறந்த சிசு கொலை செய்யப்பட்டு வீசப்பட்டதை டிரம்ப் நேரில் பார்த்தார்.

    சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை கடத்தி பணக்காரர்களுக்கு போகப் பொருளாக விநியோகித்து வந்தவர் ஜெப்ரி எப்ஸ்டீன்.

    கடந்த 2019 இல் சிறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். அவர் மற்றும் அவரது வாடிக்கையாளர்கள் தொடர்புடைய வீடியோக்கள், ஆவணங்கள், புகைப்படங்கள் எப்ஸ்டீன் கோப்புகள் என்று அழைக்கப்படுகின்றன.

    நீதிமன்ற உத்தரவின்படி லட்சக்கணக்கான பக்கங்கள் கொண்ட இந்த கோப்புகள் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    கடந்த வாரம் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட புதிய எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்த திடுக்கிடும் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    ஆவணங்களின்படி, சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு நியூஜெர்சியில் வைத்து 13 வயது சிறுமியை டிரம்ப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக கூறப்பட்டுள்ளது.

    அந்தச் சிறுமி தன்னைத் தற்காத்துக்கொள்ள முயன்று டிரம்ப்-ஐ கடித்தபோது, அவர் அந்தச் சிறுமியைத் தாக்கியதாகவும், அதே சிறுமியை ஜெப்ரி எப்ஸ்டீனும் வன்கொடுமை செய்ததாகவும் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், 1984-ஆம் ஆண்டு மிச்சிகனில் உள்ள மோனா ஏரியில், பிறந்த குழந்தை சிசுக்ககொலை செய்யப்பட்டு  வீசப்பட்டதை டிரம்ப் அங்கிருந்து நேரில் பார்த்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    கொல்லப்பட்ட குழந்தை டிரம்ப் அல்லது பிறரின் பாலியல் உறவினால் உருவான குழந்தையாக இருக்கக்கூடும் என்றும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    ஆனால் அதிபர் டிரம்ப், எப்ஸ்டீனுடனான தனது பழைய தொடர்புகள் மற்றும் இந்த அனைத்துப் புகார்களையும் தொடர்ந்து மறுத்து வருகிறார். 

    • உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.
    • அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பிரதமர் மோடி இருவரும் தொலைபேசியில் பேசியுள்ளனர்.

    இதுகுறித்து டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிரதமர் மோடி எனது மிகச்சிறந்த நண்பர்களில் ஒருவர். அவருடன் பேசியதை பெருமையாக கருதுகிறேன்.

    வர்த்தகம் மற்றும் ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து நாங்கள் பேசினோம்.

    ரஷிய எண்ணெயை வாங்குவதை நிறுத்துவதற்கும், அமெரிக்கா மற்றும் சாத்தியமானால் வெனிசுலாவிடமிருந்து அதிக அளவில் வாங்குவதற்கும் அவர் ஒப்புக்கொண்டார்.

    இதன்மூலம் ஒவ்வொரு வாரமும் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து கொண்டிருக்கும் உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர உதவும்.

    பிரதமர் மோடி மீதான நட்பு மற்றும் மரியாதையாலும், அவரது வேண்டுகோளின் படியும், உடனடியாக அமலுக்கு வரும் வகையில் அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தத்திற்கு நாங்கள் ஒப்புக்கொண்டோம்.

    இதன்படி அமெரிக்கா விதிக்கும் பரஸ்பர வரி 25%-லிருந்து 18%-ஆகக் குறைக்கப்படும்.

    அதேபோல், அமெரிக்காவிற்கு எதிரான இந்தியாவின் வரிகள் மற்றும் வரி அல்லாத தடைகளையும் அவர்கள் பூஜ்ஜியம் என்ற நிலைக்குக் குறைப்பார்கள்.

    கூடுதலாக, 500 பில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள அமெரிக்காவின் எரிசக்தி, தொழில்நுட்பம், விவசாயம், நிலக்கரி மற்றும் பல பொருட்களை வாங்குவதாகவும் பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.

    இந்தியாவுடனான எங்களது அற்புதமான உறவு வரும் காலங்களில் இன்னும் வலுவாக இருக்கும். பிரதமர் மோடியும் நானும் காரியங்களைச் சாதிக்கும் மனிதர்கள்" என்று தெரிவித்துள்ளார். 

    • மலிவு விலையில் கிடைத்தால் வெனிசுலாவிடமிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்க வேண்டும்.
    • இதிலுள்ள ராஜதந்திர சிக்கல்கள் வெளியுறவுத் துறைக்கும் பிரதமருக்கேத் தெரியும்

    அமெரிக்காவின் மிரட்டலால் ரஷியாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது பெருமளவு குறைந்துள்ளதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    கூட்டத்தொடரின் பின் செய்தியாளர்களிடம் பேசிய ப.சிதம்பரம், "எந்த நாட்டிடமிருந்து மலிவான விலையில் எண்ணெய் கிடைக்கிறதோ, அவற்றிடமிருந்து எண்ணெய் வாங்குவது இந்தியாவின் உரிமை.

    ஆனால் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணிந்து ரஷியாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக்கொண்டுள்ளது" என்று கூறினார்.

    இரானுக்குப் பதிலாக வெனிசுலாவிடம் இந்தியா எண்ணெய் வாங்கும் என்று டிரம்ப் கூறியுள்ளது குறித்துக் கேட்டபோது, " நான் டிரம்ப்பின் செய்தி தொடர்பாளர் இல்லை. மலிவு விலையில் கிடைத்தால் வெனிசுலாவிடமிருந்தும் இந்தியா எண்ணெய் வாங்க வேண்டும்.

    ஆனால் இதிலுள்ள ராஜதந்திர சிக்கல்கள் வெளியுறவுத் துறைக்கும் பிரதமருக்கேத் தெரியும்" என்றார். 

    • ரஷியாவிடம் இருந்து வாங்கும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா குறைத்துக் கொள்ள இருக்கிறது.
    • வெனிசுலா எண்ணெய் வாங்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், இந்திய பிரதமர் மோடியிடம் டெலிபோன் மூலம் பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

    இந்தியா ரஷியாவிடம் இருந்து கொள்முதல் செய்யும் கச்சா எண்ணெய் அளவை குறைத்துக் கொள்ள இருக்கிறது. இதனால் வெனிசுலாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் வாங்கிக் கொள்ள முடியும் என்று அமெரிக்கா தெரிவித்திருந்தது.

    இந்த நிலையில், டொனால்டு டிரம்ப் உடன் இந்திய பிரதமர் மோடி பேசியுள்ளார்.

    • சுமார் ரூ.100 கோடி வீதம் இந்த மெகா திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்கி வந்தது.
    • இந்தியா இத்திட்டத்திலிருந்து பின்வாங்கினால் சீனா இங்கு தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும்.

    2026-27 மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.

    ஈரானில் உள்ள சபஹார் துறைமுகத் திட்டத்திற்கு மத்திய அரசு இந்த ஆண்டு எந்த நிதியையும் ஒதுக்கவில்லை.

    பாகிஸ்தானைத் தவிர்த்துவிட்டு ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் வர்த்தகம் செய்ய சபஹார் துறைமுகம் இந்தியாவிற்கு ஒரு முக்கிய நுழைவு வாயிலாக இருந்து வந்தது.

    கடந்த  சில ஆண்டுகளாக ஆண்டுக்கு சுமார் ரூ.100 கோடி வீதம் இந்த மெகா திட்டத்திற்கு இந்தியா நிதி ஒதுக்கி வந்தது.

    ஆனால், இந்த ஆண்டு பட்ஜெட்டில் இதற்கான நிதி ஒதுக்கீடு முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது.

    சபஹார் துறைமுகத் திட்டத்திற்காக அமெரிக்கா வழங்கியிருந்த பொருளாதாரத் தடை விலக்கு வரும் ஏப்ரல் 26 உடன் முடிவடைகிறது.

    இதனால் இந்தியா இத்திட்டத்தில் தனது செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்ளக்கூடும் என்று தெரிகிறது.

    மேலும் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள கடுமையான பொருளாதாரத் தடைகள்,  அமெரிக்க அதிபர் டிரம்ப் விடுத்த தாக்குதல் மிரட்டல் ஆகியவை இதற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.

    இந்தியா இத்திட்டத்திலிருந்து பின்வாங்கினால் சீனா இங்கு தனது ஆதிக்கத்தை அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.   

    • அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு உள்ளிட்டோரின் பெயர்கள் உள்ளன.
    • பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் உண்மை.

    அமெரிக்காவில் சிறுமிகளை கடத்தி பணக்காரர்களுக்கு விருந்தாக்கும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 2019 இல் சிறையிலேயே தற்கொலை செய்துகொண்டவர் தொழிலதிபர் ஜெஃப்ரி எப்ஸ்டீன்

    இவர் தொடர்புடைய கோப்புகளில் பல முக்கிய புள்ளிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    இந்த சர்ச்சை கோப்புகள் நீதிமன்ற உத்தரவின் பேரில் பகுதி பகுதியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் அமெரிக்க நீதித்துறை நேற்று லட்சக்கணக்கான பக்கங்களைக் கொண்ட புதிய ஆவணங்கள், ஆயிரக்கணக்கான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டது.

    அதில் அதிபர் டொனால்டு டிரம்ப், தொழிலதிபர்கள் எலான் மஸ்க், பில் கேட்ஸ், பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு, நியூ யார்க் மேயர் மம்தானியின் தாயும் பிரபல எழுத்தாளருமான மீரா நாயர் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.

    ரஷிய பெண்களுடன் உறவு வைத்து பால்வினை நோயால் பில் கேட்ஸ் பாதிக்கப்பட்டு அதற்கு சிகிச்சை எடுத்துக்கொண்டார் என புதிய கோப்புகளில் கூறப்பட்டுள்ளது. பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரு

    அதேநேரம் தற்போது வெளியிடப்பட்டுள்ள எப்ஸ்டீன் கோப்புகளில் பிரதமர் மோடியின் பெயர் இடம்பெற்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கோப்பில் இடம்பெற்றுள்ள எப்ஸ்டீனின் மின்னஞ்சல் ஒன்றில், பிரதமர் மோடியின் பெயர் மற்றும் அவர் 2017 இல் மேற்கொண்ட இஸ்ரேல் பயணம் குறித்த குறிப்புகள் இடம்பெற்றுள்ளது.

    இந்நிலையில் இது குறித்து விளக்கம் அளித்த மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் "அந்த மின்னஞ்சலில் பிரதமர் மோடியின் 2017 ஜூலை மாத இஸ்ரேல் பயணம் குறித்த உண்மைத் தகவலைத் தவிர, மற்ற அனைத்தும் ஒரு குற்றவாளியின் தரம் குறைந்த கற்பனைகளே.

    இதற்கு எள்ளளவும் முக்கியத்துவம் அளிக்கத் தேவையில்லை; இதை மிகுந்த அருவருப்புடன் நிராகரிக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.   

    ×