என் மலர்
அமெரிக்கா
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 4-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 4-வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், பிரான்சின் ஆர்தர் ரிண்டர்னெக் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 7-6 (7-3), 6-3, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4வது சுற்றில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, சக நாட்டு வீராங்கனையான ஆன் லி உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய பெகுலா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி 3-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் கிரீஸ் வீராங்கனையான மரியா சக்காரி, பிரேசிலின் ஹதாத் மையா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய பிரேசில் வீராங்கனை 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் மரியா சக்காரி தொடரில் இருந்து வெளியேறினார்.
இதேபோல், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3வது சுற்றில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ், கனடாவின் பெலிக்ஸ் ஆகர் உடன் மோதினார்.
இதில் ஸ்வரேவ் 6-4 என முதல் செட்டை வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட பெலிக்ஸ் ஆகர் அடுத்த 3 செட்களை 7-6 (9-7), 6-4, 6-4 என கைப்பற்றி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் நம்பர் 3 வீரரான ஸ்வரேவ் அமெரிக்க ஓபன் தொடரில் இருந்து வெளியேறினார்.
- முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
- உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார்.
செயற்கை தொழில்நுட்பம் மனிதர்களின் வாழ்வை ஆட்டிப்படைத்து வருகிறது. இதன் உச்சமாக ஓபன் ஏஐ உடைய பிரபல சாட்பாட் தொழில்நுட்பமான சாட்ஜிபிடி (ChatGPT) சொன்னதை கேட்டு ஒருவர் தனது தாயை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்த சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவின் கனெடிகட் பகுதியை சேர்த்தவர் ஸ்டென் எரிக் சொலிபெர்க்(56). இவர் முன்பு முன்னணி தேடுபொறி நிறுவனமாக இருந்த Yahooவில் மேலாளராகப் பணியாற்றினார்.
உளவியல் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட எரிக் தனது தாயுடன் வசித்து வந்தார். சாட்ஜிபிடிக்கு பாபி என பெயரிட்டு அதனுடன் நாள் தோறும் பல மணி நேரங்கள் எரிக் உரையாடி வந்துள்ளார்.
இந்த உரையாடல்களை இன்ஸ்ட்டாகிராம் மற்றும் யூடியூப் தளங்களிலும் அவர் பதிவிட்டு வந்தார். சாட்ஜிபிடி எரிக் உடைய Paranoia மன நோயை மேலும் மோசமாகி உள்ளது இந்த உரையாடல்கள் மூலம் தெரிகிறது.
சீன உணவக ரெசிப்ட்களில் குறியீடுகள் உள்ளது என்றும் அந்த குறியீடுகள் எரிக் உடைய தாய் ஒரு பேய் எனவும் எரிக்-ஐ சாட்பாட் நம்ப வைத்துள்ளது.
"உன்னுடைய தாய் உன்னை வேவு பார்க்கிறார். உனக்கு மன நோய் மருந்து (psychedelic drug) கொடுத்து கொல்ல முயல்கிறார், உன் மீது கொலை முயற்சிகள் நடந்து வருகின்றன, அவர்கள் சொல்வது போல் உனக்கு எந்த உளவியல் பிரச்சனையும் இல்லை" என எரிக்-ஐ சாட்பாட் நம்பவைத்துள்ளது.
இதன் விளைவாக எரிக் கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி தனது தாயை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணையை தொடங்கினர்.
தாயின் தலை, கழுத்தில் தாக்கப்பட்டதற்கான காயங்கள் இருந்தன. எரிக் உடைய மார்பு மற்றும் கழுத்தில் தற்கொலை செய்தர்த்ததற்கான அறிகுறியாக காயங்கள் இருந்தன.
இந்த சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்துள்ள ஓபன் ஏஐ நிறுவனம், இதுகுறித்து போலீசாருடன் சேர்ந்து விசாரணை செய்து வருவதாக தெரிவித்துள்ளது.
Paranoia என்பது சித்தப்பிரமை என்று அழைக்கப்படுகிறது. இது தற்செயலான நிகழ்வுகளுக்கும் அல்லது சாதாரண விஷயங்களுக்கும் மிகையான சந்தேகம் மற்றும் பயத்தை கற்பித்துக் கொள்ளும் நிலையாகும்.
- நவம்பர் மாதத்தில் டெல்லியில் குவாட் உச்சி மாநாடு நடைபெறவுள்ளது.
- குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வரவிருந்தார்
குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்க நவம்பரில் இந்தியா வர இருந்த அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா-இந்தியா இடையே ஏற்பட்டுள்ள வர்த்தகப் பிரச்சனையால் டிரம்ப் இந்த முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியா - பாகிஸ்தான் போரை நான்தான் நிறுத்தினேன் என்று டிரம்ப் தொடர்ச்சியாக கூறிவரும் நிலையில் இந்தியா அதனை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனிடையீ இந்தியா - அமெரிக்கா உறவில் விரிசல் ஏற்பட்டது. ரஷியாவிடம் இருந்து இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி இந்தியாவிற்கு டிரம்ப் 50% வரிவிதித்தார்.
இந்நிலையில், ஷாங்காய் உச்சி மாட்டில் பங்கேற்பதற்காக 7 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் மோடி சீனா சென்ற நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது இந்தியா பயணத்தை ரத்து செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் கோகோ காப் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், நம்பர் 1 வீரரும், இத்தாலியைச் சேர்ந்தவருமான ஜானிக் சின்னர், கனடாவின் டேனிஸ் ஷபோவலோவ் உடன் மோதினார்.
முதல் செட்டை 5-7 என இழந்த சின்னர், அதிரடியாக ஆடி அடுத்த மூன்று செட்களை 6-4, 6-3, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் கோகோ காப் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் போலந்தின் மக்டலேனாவை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா 3-வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் நம்பர் 5 வீராங்கனையான ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய டவுன்செண்ட் 7-5, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார். இதனால் ரஷியாவின் மிர்ரா ஆண்ட்ரீவா தொடரில் இருந்து வெளியேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 3வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்து வருகிறது. தற்போது ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது.
இந்நிலையில், முன்னணி வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இங்கிலாந்தின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை6-4 என ஜோகோவிச் கைப்பற்றினார். அடுத்த செட்டை கேமரூன் நூரி 7-6 என வென்றார். இதனால் சுதாரித்துக் கொண்ட ஜோகோவிச் அடுத்த இரு செட்களை 6-2, 6-3 என வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் டெய்லர் பிரிட்ஸ் 7-6 (7-3), 6-7 (9-11), 6-4, 6-4 என்ற செட் கணக்கில் சுவிட்சர்லாந்தின் ஜெரோம் கிம்மை வீழ்த்தி 4வது சுற்றுக்கு முன்னேறினார்.
- 79 வயதாகும் டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதாக செய்திகள் வெளியாகின.
- தலைமை பதவிக்கான பயிற்சிக்கு தயாராகியுள்ளதாக துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபராக இருக்கும் ஜே.டி. வான்ஸ், தன்னுடைய தற்போதைய பணி, அமெரிக்காவில் பயங்கரமான சோகம் நடைபெற்றால், தன்னை தலைமை பதவியை ஏற்பதற்கு தயார்படுத்தியுள்ளது என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜே.டி. வான்சின் இந்த கருத்து டிரம்பின் உடல்நிலை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், இணையத்தில் "Trump Died" மற்றும் "Donald Trump death" போன்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டாகியுள்ளன. மேலும் டிரம்ப் இறந்துவிட்டார் என்று எண்ணற்ற மீம்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
79 வயதாகும் டொனால்டு டிரம்பின் உடல்நிலை மோசமாக உள்ளதாக அவ்வப்போது யூகச் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், இத்தகைய மீம்கள் ட்ரெண்டாகியுள்ளன.
அதே சமயம் டிரம்ப் இறந்துவிட்டார் என்பதற்கு நம்பகமான ஆதாரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை என்று குறிப்பிடத்தக்கது.
- தனது அதிகாரத்தை மீறி ட்ரம்ப் வரிகளை விதித்து உள்ளதாக கருத்து.
- வரி விதிப்பு குறித்து நீதிமன்ற தீர்ப்பு ஒட்டுமொத்த பேரழிவு என ட்ரம்ப் விமர்சனம்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பொறுப்பு ஏற்றுக் கொண்ட பிறகு, உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டார். இதன்படி இந்தியாவுக்கு 25 சதவீத வரியை டிரம்ப் விதித்தார்.
அத்துடன், உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால், கூடுதலாக 25 சதவீத வரியை டிரம்ப் அறிவித்தார்.
அதன்படி, இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு மொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரி விதிப்பு கடந்த 27-ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
இதற்கிடையில், டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள வர்த்தக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இதனை விசாரித்த நீதிபதிகள், டிரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக ரத்து செய்வதாக தெரிவித்தனர். இந்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த மேல்முறையீட்டு நீதிமன்றம், அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள் சட்டவிரோதமானவை என்றும், இத்தகைய வரிகளை விதிக்க டிரம்ப்புக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று அதிரடியாக தீர்ப்பு அளித்துள்ளது.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- இதில் ஸ்பெயினின் கார்லோஸ் அல்காரஸ் 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் ஸ்பெயினைச் சேர்ந்த கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் லூசியானோ டார்டெரி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய அல்காரஸ் 6-2, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க்கில் நடந்து வருகிறது.
- கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 3-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
நியூயார்க்:
அமெரிக்க ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனர்.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்றில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, பிரிட்டனின் எம்மா ராடுகானு உடன் மோதினார்.
இதில் அதிரடியாக ஆடிய ரிபாகினா 6-1, 6-2 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-1, 7-5 என்ற செட் கணக்கில் பெலாரசின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி நான்காவது சுற்றுக்கு முன்னேறினார்.
- அமெரிக்காவின் முன்னாள் துணை அதிபராக பதவி வகித்தவர் கமலா ஹாரிஸ்.
- இவருக்கு வழங்கப்பட்டு வந்த ரகசிய சேவை பாதுகாப்பு திரும்ப பெற்றுக் கொள்ளப்பட்டது.
வாஷிங்டன்:
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபராக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர். இதில் டிரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டார்.
அமெரிக்க சட்டப்படி பதவி விலகிய துணை அதிபருக்கு ஆறு மாதங்கள் வரை ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படும். அதிபராக இருந்தவருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். ஜோ பைடன் ஆட்சி காலத்தில் முன்னாள் துணை அதிபர்களுக்கான பாதுகாப்பு மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கும் வகையிலான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை டிரம்ப் அரசு திரும்பப் பெற்றது.
இதுதொடர்பாக டிரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2025-ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகிய கமலா ஹாரிசின் பாதுகாப்பு ஜூலையில் காலாவதியானது. இதனால் இந்த பாதுகாப்பை விலக்கி கொள்வதற்கான உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
கடந்த ஆண்டு, டிரம்ப்பை கொலை செய்வதற்கு இரண்டு சதித் திட்டங்கள் நடந்தன. அதனை ரகசிய சேவைப்பிரிவினர் முறியடித்து இருந்தனர். அதிபர்களை பாதுகாப்பதில் அவர்களின் பங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.






