என் மலர்
அமெரிக்கா
- லண்டனில் தற்காலிகமாக குடியேற ஷேக் ஹசீனா அனுமதி கேட்டுள்ளார்.
- இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.
வங்காளதேசத்தில் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் தீவிரம் அடைந்ததால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா டாக்காவில் இருந்து வெளியேறினார். அவர் தற்போது இந்தியாவில் உள்ளார்.
லண்டனில் தற்காலிகமாக குடியேற அனுமதி கேட்டுள்ளதாக தெரிகிறது. அனுமதி கிடைத்தால் லண்டனில் அடைக்கலம் புகுவார்.
ஆனால் இங்கிலாந்தின் குடியேற்ற சட்டத்தின்படி தனிநபர் இங்கிலாந்துக்கு பயணம் செய்து அடைக்கலம் அல்லது தற்காலிக தஞ்சம் கோர முடியாது. ஆனாலும் முறையாக அடைக்கலம் கோரிக்கை குறித்து இங்கிலாந்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் விசாவை அமெரிக்கா ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- ஆசிப்மெர்ச்சன்ட்டுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.
- முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பாகிஸ்தானை சேர்ந்த ஈரான் உளவாளி ஆசிப் மெர்ச்சன்ட் (வயது 46) என்பவரை உளவுத்துறையினர் சமீபத்தில் கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் உள்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை கொல்ல சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது. ஆசிப்மெர்ச்சன்ட்டுக்கு ஈரானுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு ஆசிப் மெர்ச்சன்ட் ஈரான் சென்று வந்ததாகவும், அமெரிக்காவில் அரசியல் கொலைகளை செய்வதற்காக சதித்திட்டத்துடன் அவர் ஈரானில் இருந்து வந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்காவில் தனது சதித்திட்டத்தை நிறைவேற்ற சிலரை அணுகியுள்ளார். ஆனால் அந்த நபர்கள் போலீஸ் அதிகாரிகள் ஆவார்கள். கூலிப்படை போல் நடித்த அதிகாரிகளி டம் ஆசிப் மெர்ச்சன்ட் தனது திட்டத்தை தெரிவித்துள்ளார்.
ஆவணங்களைத் திருடுதல், அரசியல் பேரணிகளில் போராட்டங்களை ஏற்பாடு செய்தல், ஒரு அரசியல் நபரை கொல்வது ஆகிய மூன்று திட்டங்களை அவர் தெரிவித்துள்ளார். மேலும் முன்பணமாக 5 ஆயிரம் அமெரிக்க டாலர்களை கொடுத்துள்ளார்.
அதன்பின் அமெரிக்காவில் இருந்து புறப்பட முயன்றபோது ஆசிப் மெர்ச்சன்ட்டை கைது செய்தனர். இதுதொடர்பாக போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் டொனால்ட் டிரம்பை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டினார் என்று நேரடியாக தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் சில முக்கிய ஆதாரங்களின்படி டிரம்பை கொலை செய்யும் திட்டமும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி ஈராக் சென்றபோது அவரை அமெரிக்கா கொலை செய்தது. இதற்கு பதிலடியாக முன்னாள் அதிபர் டிரம்பை பழி வாங்குவோம் என்று ஈரான் தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் ஈரான் உளவாளி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
- குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார்.
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
முதலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அவரது உடல் மற்றும் மன நிலையில் உள்ள தடுமாற்றம் விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார்.
இதனை தொடர்ந்து ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் வேட்பாளராக டிம் வால்ஸ்டை பிரதமர் வேட்பாளர் கமலா ஹாரீஸ் அறிவித்தார்.
அமெரிக்காவின் மின்னெசோட்டா மாகாண ஆளுநராக டிம் வால்ஸ் (60) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பதிவு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.
- பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
அமெரிக்காவின் விர்ஜினியா பகுதியை சேர்ந்தவர் ஜெர்மி. இவர் சம்பவத்தன்று அங்குள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்றார். அப்போது தனக்கு பிடித்த சலுபா உணவு வகைகளை ஆர்டர் செய்து சாப்பிட்டார்.
அப்போது அவர் கூர்மையான ஒன்றை கடித்ததால் அதிர்ச்சியடைந்தார். உடனே தான் சாப்பிட்ட உணவை வெளியே எடுத்து பார்த்த போது அதில் மூக்கு வளையம் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் நடந்த சம்பவத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அவரின் இந்த பதிவு 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றது.
இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது.
- மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் தெரிவித்திருந்தது.
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து நியூயார்க் நோக்கி சென்று கொண்டிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண்ணின் தலையில் பேன்கள் இருப்பதாக சக பயணிகள் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் 15ம் தேதி இச்சம்பவம் நடந்துள்ளது. ஆனால் மருத்துவ காரணங்களுக்காக விமானம் தரையிறக்கப்பட்டதாக அந்நிறுவனம் அப்போது தெரிவித்திருந்தது.
இந்நிலையில், விமான நிறுவனம் கூறிய காரணம் உண்மையில்லை என விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ 1 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
இந்த பேன் பிரச்னைக்கு பிறகு அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம் 12 மணி நேரம் கழித்து மீண்டும் இயக்கப்பட்டுள்ளது.
- செய்தியாளர் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.
- இது அவர்களை அசௌகரிய சூழலுக்கு ஆளாக்கியது.
மைக்ரோசாப்ட் நிறுவனம் இளம் இன்டர்ன்கள் (பயிற்சி பெறுபவர்) பில் கேட்ஸ்-ஐ தனிமையில் சந்திப்பதை தடை செய்திருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய தகவல்கள் நியூ யார்க் டைம்ஸ் செய்தியாளர் எழுதிய புத்தகத்தில் இடம்பெற்று இருக்கிறது.
"நிறுவனத்தின் தலைவர் என்ற போதிலும், இளம் பெண்களிடம் பேசிக் கொண்டே இருப்பது, அவர்களை இரவு உணவுக்கு அழைத்து செல்வது போன்ற செயல்களை செய்ய பில் கேட்ஸ் ஒருபோதும் தவறியதே இல்லை," என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

மைமக்ரோசாப்ட் மட்டுமின்றி இதே போக்கு மெலிண்டா கேட்ஸ் பவுன்டேஷனிலும் தொடர்ந்தது என்று கூறப்படுகிறது. பவுன்டேஷனுக்கு வரும் இளம் இன்டர்ன்களிடம் பில் கேட்ஸ் தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார், இது அவர்களை அசௌகரிய சூழலுக்கு ஆளாக்கியது.
கிட்டத்தட்ட இரண்டாவது மற்றும் மூன்றாம் கைக் கதைகள் மற்றும் அநாமதேய ஆதாரங்களை மட்டுமே நம்பியிருக்கும் இந்த புத்தகத்தில், பல சந்தர்ப்பங்களில் எங்கள் அலுவலகம் ஆசிரியருக்கு வழங்கிய உண்மையான ஆவணப்படுத்தப்பட்ட உண்மைகளைப் புறக்கணிக்கும் மிகவும் பரபரப்பான குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியது.
இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பதில் அளித்த பில் கேட்ஸ் செய்தி தொடர்பாளர், "இந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பரபரப்பு குற்றச்சாட்டுகள் மற்றும் அப்பட்டமான பொய்களை உள்ளடக்கியுள்ளது. இவை பெரும்பாலும் கிட்டத்தட்ட இரண்டாம்கட்ட மற்றும் மூன்றாம்கட்ட பெயர் அறியப்படாத ஆதாரங்களையே சார்ந்து இருக்கிறது," என்று தெரிவித்தார்.
- ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராவது உறுதியாகிவிட்டது.
- விவாதம் நடத்த பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்தோடு ஒப்புக்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் வருகிற நவம்பர் மாதம் 5-ந்தேதி நடக்க உள்ளது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் (வயது 78) போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. அவரை எதிர்த்து ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் ஜோ பைடன் (வயது 81) போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், தேர்தல் விவாத நிகழ்ச்சியில் டிரம்ப்-ன் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் ஜோ பைடன் திணறினார். வேட்பாளரை மாற்ற கட்சியில் பல தலைவர்கள் போர்க்கொடி துாக்கினர். இதையடுத்து அதிபர் பதவிக்கான போட்டியில் இருந்து விலகுவதாக ஜோ பைடன் அறிவித்தார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸை (வயது 59) ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக பரிந்துரை செய்தார். அவர் மட்டுமே ஜனநாயக கட்சியில் வேட்பாளராக உள்ளதால் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கான ஆதரவை பெற்றுள்ளார். விரைவில் வேட்புமனு தாக்கல் செய்து கட்சி பொதுக்கூட்டத்தில் டிரம்ப்-ஐ எதிர்த்து போட்டியிடும் வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.
ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸ் போட்டியிடுவது ஏறக்குறைய உறுதியான நிலையில், பாக்ஸ் நியூஸ் செய்தி நிறுவனத்துடன் கமலா ஹாரிஸ் உடன் நேரடி விவாதத்தில் பங்கேற்க ஒப்புக்கொண்டுள்ளார். செப்டம்பர் 4-ந்தேதி நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் டிரம்ப் விவாதம் நடத்த ஒப்புக் கொண்ட நிலையில் கமலா ஹாரிஸ் ஒப்புக்கொண்டாரா? என்பது தெரியவில்லை.
முன்னதாக கமலா ஹாரிஸை எளிதில் வெற்றி கொள்வேன் என டிரம்ப் கூறி வருகிறார். மேலும் இவ்வளவு காலம் இந்தியர் என்று கூறி வந்தவர், இப்போது கருப்பர் என தன்னை அடையாளப்படுத்துகிறார் என விமர்சனம் செய்துள்ளார்.
- பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே முக்கிய காரணம் ஆகும்.
- பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு 24 மணி நேரமாக மாறி இருக்கிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் நிலவை பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள். இதில் நிலவு பூமியை விட்டு மெதுவாக விலகி செல்வது சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பூமியில் இருந்து நிலவு ஆண்டுக்கு சுமார் 3.8 சென்டிமீட்டர் வீதம் விலகி செல்கிறது என்றும், இது பூமியில் நாட்களின் நீளத்தில் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
தற்போது பூமியில் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் இருக்கும் நிலையில், நிலவு விலகி செல்வதால் அது 25 மணி நேரமாக அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால் இந்த மாற்றம் சுமார் 20 கோடி ஆண்டுகளுக்கு பிறகே நடக்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
140 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, பூமியில் ஒரு நாள் வெறும் 18 மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது பல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு 24 மணி நேரமாக மாறி இருக்கிறது. இந்த மாற்றத்திற்கு பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான ஈர்ப்பு விசையே முக்கிய காரணம் ஆகும்.
இது தொடர்பாக விஸ்கான்சின்-மாடிசன் பல்கலைக்கழகத்தின் புவி அறிவியல் பேராசிரியர் ஸ்டீபன் மேயர்ஸ் கூறும்போது, நிலவு நமது பூமியில் இருந்து விலகிச் செல்லும் போது, பூமி சுழலும் வேகமும் வெகுவாக குறையும்.
நிலவு விலகிச் செல்ல செல்ல பூமியின் வேகம் குறைவதால் பகல் நேரம் என்பது அதிகரிக்கும். அடுத்த கட்டமாகப் பல பில்லியன் ஆண்டுகள் பழமையான பாறைகளை ஆய்வு செய்ய விரும்புகிறோம் என்றார்.
- வெளியில் சென்ற தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது.
- குழந்தையை விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்திருக்கிறார்
நவீனமயமான உலகத்தில் பெற்றோரின் கவனமின்மையால் குழந்தைகள் பாதிக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக தாய் மற்றும் தந்தை ஸ்மார்ட் போன் உள்ளிட்ட சாதனங்களின் மீது கொண்ட மோகத்தால் குழந்தைகள் தங்களுக்கு கிடைக்க வேண்டிய சரியான கவனம் கிடைக்காமல் வளர்கின்றன.
இதற்கு ஒரு படி மேலாக தந்தையின் வீடியோ கேம் அடிமைத்தனத்தால் 2 வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில், வெளியில் சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது.
குழந்தைக்கு சி.பி.ஆர் உள்ளிட்ட முதலுதவிகளைச் செய்து பார்த்தும் பயனில்லை. சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் குழந்தை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பிரேத பரிசோதனையின்படி , குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால் உயிரிழந்ததாகத் தெரியவந்தது.

அதன்பின்னரே விசாரணையில், குழந்தையின் தந்தை, வீட்டின் முன் ஹோண்டா SUV காரை பார்க் செய்து அதில் குழந்தையை விட்டுவிட்டு வீட்டுக்குள் பிளே ஸ்டேஷனில் வீடியோ கேமில் மூழ்கியிருந்திருக்கிறார் என்றும் வாகனத்துக்குள் ஏசி ஓடாத நிலையில் சுமார் 3 மணி நேரமாக வெப்பத்தில் துடிதுடித்து குழந்தை உயிரிழந்துள்ளது என்றும் தெரியவந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து கொலை மற்றும் குழந்தைகள் வன்கொடுமை பிரிவின் கீழ் தந்தை கைது செய்யப்பட்டார்.
- சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.
- வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும்
அமெரிக்காவின் அடுத்த அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் நவம்பர் 5 ஆம் தேதி நடக்க உள்ளது. குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்ப் வேட்பாளராகக் களமிறங்குகிறார். ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.
முதலில் அதிபர் ஜோ பைடன் போட்டியிடுவதாக இருந்த நிலையில் அவரது உடல் மற்றும் மன நிலையில் உள்ள தடுமாற்றம் விமர்சனத்துக்குள்ளானதால் கடந்த மாதம் அதிபர் ரேஸில் இருந்து விலகினார். தொடர்ந்து கமலா ஹாரிஸை ஜனாதிபதி வேட்பாளராக பைடன் முன்மொழிந்தார்.

இந்நிலையில் ஜனநாயக கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படத் தேவையான அளவு வாக்குகளைக் கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார். அமெரிக்காவில் ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் உட்கட்சி தேர்தல் மூலமாகவே தேர்வு செய்யப்படுவார்கள். முதலில் நடந்த தேர்தலில் பைடன் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அவர் விலகியதை அடுத்து தற்போது மீண்டும் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது.
சுமார் 4,000 ஜனநாயக கட்சி பிரதிநிதிகளின் வாக்களிக்கும் இந்த உட்கட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் கமலா ஹாரிஸ் மட்டுமே வேட்பாளராக இருந்த நிலையில், அவர் அதிபர் வேட்பாளராகத் தேவையான வாக்குகளைப் பெற்றார். வரும் ஆகஸ்ட் 19 முதல் 22 வரை சிகாகோவில் ஜனநாயக கட்சி மாநாடு நடைபெறும் நிலையில், அதில் கமலா ஹாரிஸ் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்பட இருக்கிறார்.

ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக இருப்பதில் தான் பெருமை கொள்வதாகக் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். மேலும் அடுத்த வாரம் வேட்புமனுவை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.
- கமலா எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தார். பின்னர் திடீரென்று கருப்பினத்தவராகிவிட்டார்.
- கமலா ஹாரிஸின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸ், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்கள். இருவரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சிகாகோவில் நடந்த கருப்பின பத்திரிக்கையாளர்கள் தேசிய சங்கத்தின் மாநாட்டில் பங்கேற்ற டிரம்ப், இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரீஸ் மீது இனவெறி கருத்தை தெரிவித்துள்ளார்.
அப்போது அவர் அளித்த பேட்டியில்," கமலா ஹாரிஸ் எப்போதும் இந்திய பாரம்பரியத்தை உடையவர். அவர் இந்திய பாரம்பரியத்தை மட்டுமே ஊக்குவித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு முன்பு அவர் கருப்பினத்தவராக மாறும் வரை அவர் கருப்பினத்தவர் என்று எனக்குத் தெரியாது. கமலா ஹாரிஸ் தற்போது கருப்பினத்தவராக அறியப்பட விரும்புகிறார்.
இதனால் அவர் இந்தியரா அல்லது கருப்பினத்தவரா? என்பது எனக்கு தெரியவில்லை. நான் அனைவரையும் மதிக்கிறேன். ஆனால் அவர் வெளிப்படையாக இல்லை. ஏனென்றால் அவர் எல்லா வழிகளிலும் இந்தியராக இருந்தார். பின்னர் திடீரென்று கருப்பினத்தவராகி விட்டார்.
இந்த நாட்டின் கருப்பின மக்களை நேசிக்கிறேன். கருப்பின மக்களுக்காக நான் பல நன்மைகள் செய்துள்ளேன். ஆபிரகாம் லிங்கனுக்குப் பிறகு கருப்பின மக்களுக்கான சிறந்த அதிபர் நான்தான் என்றார்.
கமலா ஹாரிஸ் மீதான டிரம்ப்-ன் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் கூறும்போது, ஒருவரை அவர்கள் யார், அவர்கள் எப்படி அடையாளம் காட்டுகிறார்கள் என்பதைச் சொல்ல யாருக்கும் எந்த உரிமையும் இல்லை. டிரம்ப் கருத்து வெறுக்கத்தக்கது மற்றும் அவமதிப்பு ஆகும்" என்றார்.
இந்நிலையில், இந்த சர்ச்சை கருத்துகளுக்கு இடையே, டிரம்ப், கமலா ஹாரிஸின் இந்திய பாரம்பரிய புகைப்படம் ஒன்றை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
மேலும், அந்த புகைப்படத்துடன், "பல வருடங்களுக்கு முன்பு நீங்கள் அனுப்பிய அருமையான புகைப்படத்திற்கு நன்றி கமலா. உங்களின் அரவணைப்பு.. இந்திய பாரம்பரியத்தின் மீதான உங்கள் அன்பு மிகவும் பாராட்டுக்குரியது" என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
கமலா ஹாரிஸின் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கமலா ஹாரிசின் தாய் இந்தியாவை சேர்ந்தவர். தந்தை ஜமைக்காவை சேர்ந்தவர். அமெரிக்க வரலாற்றில் முதல் கருப்பின மற்றும் முதல் ஆசிய-அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

- மதுரோ ஒரு சர்வாதிகாரி என மஸ்க் கூறிய நிலையில் இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
- குவாண்டானமோ விரிகுடாவில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய சிறையைக் குறிப்பதாகும்.
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நடந்த அதிபர் தேர்தலில் நிகோலஸ் மதுரோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன.
இதற்கிடையே வெனிசுலா அதிபர் தேர்தல் முடிவை உலக பணக்காரரான எலான் மஸ்க் விமர்சனம் செய்தார். மதுரோ ஒரு சர்வாதிகாரி, அங்கு நடந்த தேர்தல் ஒரு கேலிக்கூத்து என மஸ்க் கூறிய நிலையில் இருவருக்கும் இடையில் வார்த்தைப் போர் வெடித்துள்ளது.
மஸ்கின் குற்றச்சாட்டுக்கு அந்நாட்டு தேசிய தொலைக்காட்சியின் நடந்த விவாதத்தின்போது பதிலளித்த நிகோலஸ் மதுரோ, `வெனிசுலாவுடன் குழப்பம் விளைவிப்பவர் எலான் மஸ்க்.நீங்கள் சண்டையிட விரும்புகிறீர்களா? நான் தயார். நான் உங்களைக் கண்டு பயப்படவில்லை. சண்டைக்கு எந்த இடத்தையும் நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்று சவால் விடுத்தார்.
இதனால் ட்ரிகரான எலான் மஸ்க், சவாலை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் ஜெயித்தால் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும். நீங்கள் ஜெயித்தால் உங்களை செவ்வாய் கிரகத்துக்கு இலவசமாக அழைத்து செல்கிறேன் என்றார். மேலும், 'நான் உங்களிடம் வருகிறேன் [I'm coming for you], உங்களை கிட்மோவுக்கு கழுதையில் அமர்த்தி அழைத்துச் சொல்லப்போகிறேன் என்று காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
கிட்மோ [Gitmo] என்பது கரீபிய கடலில் கியூப பகுதியில் அமைந்துள்ள குவாண்டானமோ விரிகுடாவில் இயங்கும் அமெரிக்க கடற்படையின் மிகப்பெரிய சிறையைக் குறிப்பதாகும். முன்னதாக மெட்டா நிறுவனர் மார்க் ஸுகர்பார்கையும் மஸ்க் சண்டைக்கு அழைத்து குறிப்பிடத்தக்கது.






