என் மலர்
இத்தாலி
- கை துண்டிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை வழங்காமல் அப்படியே சாலையோரத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்
- வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா மாகாணத்தில் உள்ள விவசாய நிலங்களில் முதலாளிகளால் கொத்தடிமைகளாக நடந்தப்பட்ட 33 இந்திய விவசாயப் பணியாளர்களை அங்கிருந்து இத்தாலிய அதிகாரிகள் விடுவித்துள்ளனர்.
கடந்த ஜூன் மாதம் அந்த பகுதியில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் வேலை பார்த்து வந்த இந்தியாவைச் சேர்ந்த 31 வயதான சத்தன் சிங் எனபரின் கை பணியின்போது இயந்திரத்தில் சிக்கி துண்டானது. அவர்க்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலையோரம் ரத்த வெள்ளத்தில் முதலாளிகள் விட்டுச் சென்றனர்.

இதனைத்தொடர்ந்து அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இத்தாலிய பண்ணைகளில் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது வெளிச்சத்துக்கு வந்தது. வாரத்தில் 7 நாட்கள் தினமும் 10 முதல் 12 நேரம் வரை அவர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இந்திய மதிப்பில் ஒரு மணி நேரத்துக்கு ரூ.360 கூலியாக வழங்கப்பட்டு வந்துள்ளது.
ரூ.15 லட்சம் கட்டினால் இத்தாலியில் சிறப்பான எதிர்காலத்தை ஏற்படுத்தித்தருவதாக 2 இந்திய ஏஜெண்டுகள் இவர்களை ஏமாற்றி சீசனல் ஒர்க்கர் பெர்மிட்டில் அங்கு அழைத்துச்சென்று வேலைக்கு சேர்த்துள்ளனர்.
இந்த ரூ.15 லட்சம் தொகையை முழுமையாக கழிக்கும் வரை அவர்களுக்கு சம்பளம் கிடையாது. மேலும் கூடுதலாக ரூ.12 லட்சம் செலுத்தினால் நிரந்தர பெர்மிட் வாங்கித்தருவதாகவும் இவர்களை ஏஜெண்டுகள் ஏமாற்றியுள்ளனர். தற்போது அப்படி ஏமாற்றப்பட்டு கொத்தடிமைகளாக 33 இந்தியர்களை மீட்ட இத்தாலிய அதிகாரிகள் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு, வேலை வாய்ப்பு மற்றும் குடியிருப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளனர்.

- மெசினா ஜலசந்தியை கயிற்றில் நடந்து கடந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
- கயிற்றில் பிடிகள் எதுவும் இல்லாமல் முந்தைய சாதனையான 2.7 கிலோமீட்டர் தூரத்தை கடந்து முறியடித்தார்.
இத்தாலியில் உள்ள மெசினா ஜலசந்தி கடலில் இருந்து சிசிலி வரை சுமார் 3.6 கிலோமீட்டர் தூரத்திற்கு, ஸ்லாக்லைன் எனும் கயிற்றுப்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. சர்க்கஸ் வீரர்கள் போல பயிற்சி பெற்ற சாகச வீரர்கள் மட்டுமே நடக்க முடியும் ஒற்றைக் கயிறு நடைபாலம் இது. இதில் ஒரு சில வீரர்கள் மட்டுமே நடந்து சாதனை பயணம் மேற்கொள்கிறார்கள்.
தற்போது இந்த கயிற்றுப் பாலத்தில் எஸ்டோனியா நாட்டை சேர்ந்த தடகள வீரர் ஜான் ரூஸ், நீண்ட தூரம் நடந்து புதிய சாதனை படைத்திருக்கிறார். மெசினா ஜலசந்தியை கயிற்றில் நடந்து கடந்தவர் என்ற புதிய சாதனைக்கு சொந்தக்காரராகி இருக்கிறார்.
இவர் கயிற்றில் நடக்கும்போது வீடியோ பதிவிலும் பேசி இருக்கிறார். அவர் கயிற்றில் பிடிகள் எதுவும் இல்லாமல் முந்தைய சாதனையான 2.7 கிலோமீட்டர் தூரத்தை கடந்து முறியடித்தார். இருந்தபோதிலும் கயிற்றுப்பாலத்தின் 3 ஆயிரத்து 566 மீட்டரை கடந்த அவர், எஞ்சிய 80 மீட்டரை கடப்பதற்குள் சமநிலையை தவறவிட்டு, கீழிறங்கியதால் முழுமையான புதிய சாதனையை தவறவிட்டார். அவர் கடலுக்கு மேலே நடந்தபோது 100 மீட்டர் உயரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2.57 மணி நேரத்தில் இந்த தூரத்தை அவர் கடந்தார். அதுபற்றிய வீடியோ காட்சிகள் வலைத்தளங்களில் பரவுகிறது.
- இந்திய பெண்கள் அணிந்திருந்த சேலையை போன்று தானும் சேலை அணிய வேண்டும் என ஒல்லியின் பாட்டி நோன்னிசிமா ஆசைப்பட்டுள்ளார்.
- நோன்னிசிமா மற்றும் குடும்பத்தினர் மீண்டும் இந்தியா வர முடிவு செய்துள்ளனர்.
இத்தாலியை சேர்ந்த பெண் ஒருவர் சேலை அணிய ஆசைப்பட்ட தனது பாட்டியின் கனவை நிறைவேற்றியது தொடர்பாக பகிர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒல்லி எஸ்ஸி என்ற இத்தாலிய இளம்பெண் சமூக ஊடகங்களில் பிரபலமானவராக திகழ்கிறார். இவர் தற்போது மும்பையில் வசித்து வருகிறார். இவரது பாட்டி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் மும்பைக்கு வந்திருந்தார். அப்போது ஒரு மாதம் இங்கு தங்கி இருந்த ஒல்லியின் பாட்டி மற்றும் குடும்பத்தினர் இந்தியாவின் பல்வேறு இடங்களுக்கும் சென்றனர். அப்போது இந்திய பெண்கள் அணிந்திருந்த சேலையை போன்று தானும் சேலை அணிய வேண்டும் என ஒல்லியின் பாட்டி நோன்னிசிமா ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவரது கனவு நிறைவேறவில்லை.
இந்நிலையில் நோன்னிசிமா மற்றும் குடும்பத்தினர் மீண்டும் இந்தியா வர முடிவு செய்துள்ளனர். அப்போது நோன்னிசிமா தனது சேலை கட்டும் ஆசை பற்றி ஒல்லிஎஸ்ஸியிடம் கூறியுள்ளார். இதைக்கேட்ட அவர் ஆச்சரியப்பட்டார். பின்னர் தனது பாட்டியின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்து அவருக்காக ஒரு அழகான சேலை வாங்கியுள்ளார். அதன் படி ஒல்லி எஸ்ஸி தனது பாட்டிக்கு சேலை கட்டி விடும் காட்சிகளை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது.
- எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை.
- இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்.
சீனாவில் தயாரிக்கப்படும் கார்களை இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என பொய்யாக விளம்பரப்படுத்தியதால் டி.ஆர். ஆட்டோமொபைல்ஸ் கார் நிறுவனத்திற்கு இத்தாலி அரசு 53 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் கம்பெனி சீன கார் தயாரிப்பாளர்களான செரி, பி.ஏ.ஐ.சி. மற்றும் ஜே.ஏ.சி. தயாரித்த உதிரிபாகங்களை அசெம்பிள் செய்து கார்களை தயாரிக்கிறது.
ஆனால், டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தனது நிறுவனத்தின் கார்கள் இத்தாலியில் தயாரிக்கப்பட்டதாக விளம்பரப்படுத்தி விற்பனை செய்கிறது. அவற்றின் அசெம்ப்ளி மற்றும் இறுதிப் பணிகள் மட்டுமே இத்தாலியில் மேற்கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், "எங்களது நிறுவனத்தின் அனைத்து கார்களும் இத்தாலியில் தயாரிக்கப்பட்டது என்று நாங்கள் விளம்பரப்படுத்தவில்லை. ஆதலால் இந்த அபராதத்திற்கு எதிராக மேல்முறையீடு செய்ய இருக்கிறோம்" என்று டி.ஆர் ஆட்டோமொபைல்ஸ் தெரிவித்துள்ளது.
- இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.
ரோம்:
இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், ஸ்பெயின் வீரர் மிராலிஸ் உடன் மோதினார்.
இதில் சுமித் நாகல் 7-6 (7-2), 1-6, 6-2 என்ற நேர் செட்களில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தினார்.
- டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.
- இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட ஜி7 கூட்டமைப்பின் 50வது உச்சி மாநாட்டை இந்த வருடம் இத்தாலி தலைமையேற்று நடத்தியது. கடந்த ஜூன் 13 முதல் 15 வரை நடந்த இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் உக்ரைன் ரஷ்ய போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. குறிப்பாக இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா வழித்தடத்தை மேம்படுத்துவதற்கான முடிவு எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த ஜி-20 மாநாட்டில் இந்த வழித்தடத்தை உருவாக்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில் அதை செயல்படுத்துவதற்கான பணிகளில் தொய்வு ஏற்பட்டது.

இந்த திட்டத்தில் இந்தியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகியவை அடங்கும். இது இந்தியா - மத்திய கிழக்கு - ஐரோப்பா நாடுகளில் ரயில் மற்றும் கப்பல் வழித்தடத்தை ஏற்படுத்தி பொருளாதார பயன்பாட்டிற்காக இணைக்கும் திட்டமாகும்.
இந்தியாவின் மேற்கு கரையில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள் கப்பல் வழியாக எமிரேட்ஸுக்கு சென்று அங்கிருந்து ரயில் வழியாக ஐரோப்பாவிற்கு செல்லும். இந்நிலையில்தான் தற்போது ஜி7 நாடுகள் கூட்டத்தில் எமிரேட்ஸில் ரயில் தடத்தை மேம்படுத்தி இந்த திட்டத்தை செயல்படுத்துவது என்ற முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஜி 7 நாடுகள் இந்த திட்டதை செயல்படுத்த ஆர்வம் காட்டுவதற்கு முக்கிய காரணம் சீனாவின் பெல்ட் அண்ட் ரோடு திட்டத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இது அமையும் என்பதே ஆகும். எது எப்படியாக இருந்தாலும் இந்த திட்டத்தால் இந்தியாவில் பொருளாதார உறவுகள் மேம்படும் என்பது உறுதி.
- இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்பி' பெரும் வரவேற்பை பெற்றது.
- மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.
50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்
இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.
இந்நிலையில், மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், 'மெலோடி டீமிடம் இருந்து ஹலோ' ( Hello from the Melodi team ) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்ஃபி' பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை மெலோனி பயன்படுத்தினார். அப்போது மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.
- இத்தாலியில் சேலஞ்சர் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சுமித் நாகல் வென்றார்.
ரோம்:
இத்தாலியில் நடக்கும் பெருகியா சேலஞ்சர் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய வீரர் சுமித் நாகல், போலந்தின் மாக்ஸ் கஸ்னிகோவ்ஸ்கி உடன் மோதினார்.
இதில் சுமித் நாகல் 6-4, 7-5 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறி அசத்தினார்.
- ஜி7 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.
- அங்கு பிரதமர் மோடி உலகத் தலைவர்களை சந்தித்தார்.
ரோம்:
ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இரு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்குக்கும் இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஜி7 உச்சி மாநாட்டின் இடையே பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர், பிரிட்டன் பிரதமர் மற்றும் உக்ரைன் அதிபர் உள்ளிட்ட உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
இந்நிலையில், மாநாட்டின் இடையே வாடிகன் தலைவரான போப் பிரான்சிசை சந்தித்த பிரதமர் மோடி, அவரை கட்டி அணைத்து உரையாடினார்.
இந்த மாநாட்டில் ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் குறித்து போப் பிரான்சிஸ் உரையாற்ற உள்ளார்.
#WATCH | Prime Minister Narendra Modi meets Pope Francis at Outreach Session of G7 Summit in Italy. The Prime Minister also strikes up a conversation with British PM Rishi Sunak. pic.twitter.com/BNIpfK6lIN
— ANI (@ANI) June 14, 2024
- இத்தாலியில் உள்ள அபுலியாவில் ஜி7 மாநாடு நடைபெறுகிறது.
- இதில் பங்கேற்க பிரதமர் மோடி இத்தாலி சென்றுள்ளார்.
ரோம்:
ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாடு இத்தாலியில் இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்கா, பிரான்ஸ், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்குக்கும் இத்தாலி பிரதமர் அழைப்பு விடுத்திருந்தார். அதையேற்று இத்தாலி சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜி7 மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்தார். இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்நிலையில், உக்ரைன் அதிபருடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியுடனான சந்திப்பு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உக்ரைனுடன் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா ஆர்வமாக உள்ளது. பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரம் மூலமே அமைதி திரும்புவதற்கான வழி என இந்தியா நம்புகிறது என பதிவிட்டுள்ளார்.
- ஜி7 மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது.
- மாநாட்டில் பங்கேற்க வந்த உலக தலைவர்களை இத்தாலி பிரதமர் வரவேற்றார்.
ரோம்:
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து நாடுகளை கொண்ட கூட்டமைப்பு ஜி7. ஜி7 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டை இத்தாலி தலைமையேற்று நடத்துகிறது. இந்த மாநாடு இன்று மற்றும் நாளை என இரு தினங்கள் நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மேக்ரான், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்த உலக தலைவர்களை இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி வரவேற்றார்.
இதில் பங்கேற்க இந்திய பிரதமர் மோடிக்கு இத்தாலி பிரதமர் ஜார்ஜியா அழைப்பு விடுத்திருந்தார். இதையேற்று நேற்று இத்தாலி புறப்பட்ட இந்திய பிரதமர் மோடி அந்நாட்டின் பிரிண்டிசி விமான நிலையம் சென்றடைந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இரு நாள் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடி உலக தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார் என தகவல் வெளியானது.
இந்நிலையில், ஜி7 மாநாட்டின் ஒரு பகுதியாக பிரதமர் மோடி பிரான்ஸ் பிரதமர் இம்மானுவலைச் சந்தித்தார். அப்போது இருவரும் கட்டி அணைத்து, கைகுலுக்கிக் கொண்டனர். தொடர்ந்து இருதரப்புக்கு இடையிலான உறவுகள் மேம்படுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.
#WATCH | Italy: Prime Minister Narendra Modi holds a bilateral meeting with French President Emmanuel Macron in Apulia, on the sidelines of G7 Summit.
— ANI (@ANI) June 14, 2024
The two leaders share a hug as they meet. pic.twitter.com/oCEOD3XQhT
- இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.
- சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.
அமெரிக்கா, ஜப்பான், கனடா, ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய ஜி7 கூட்டமைப்பின் 50-வது உச்சி மாநாடு இன்று [ஜூன் 14] முதல் 15-ந்தேதி வரை இத்தாலியில் உள்ள அபுலியாவில் வைத்து நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் அவர் இத்தாலி சென்றுள்ளார்.
இத்தாலியில் குழுமத்தொடங்கியுள்ள உலகத் தலைவர்களை அந்நாட்டு பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி இந்திய முறையில் நமஸ்தே சொல்லி வரவேற்கும் வீடியோ வைரலானது.
இந்நிலையில் இந்த மாநாட்டில் பங்கேற்க இத்தாலி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்யும் செயல்கள் அனைவரையும் திரும்பிப்பார்க்க வைத்துள்ள்ளது.
ஜி7 நாடுகளின் சக தலைவர்களான கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இத்தாலி பிரதமர் மெலோனி, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக், பிரான்ஸ் பிரதமர் இமானுவேல் மேக்ரோன், ஆகியோருடன் நடந்து செல்லும்போது அவர்களை விட்டு தனியாக பிரிந்து கால் போன போக்கில் ஜோ பைடன் உலாவினார். பின்னர் அவரை இத்தாலி பிரதமர் மெலோனி மீண்டும் அனைவரும் இருக்கும் இடத்துக்கு அழைத்து வந்தார்.
முன்னதாக தன்னை வரவேற்ற மெலோனிக்கு பைடன் விநோதமான முறையில் வணக்கம் வைத்த வீடியோ வைரலாக நிலையில் தற்போது கால் போன போக்கில் பைடன் உலாவும் வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த செவ்வாய்க்கிழமை அமேரிக்காவில் வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் சுமார் 30 வினாடிகள் ஆடாமல் அசையாமல் ஜோ பைடன் நின்றுகொண்டிருந்தது அவர் விழித்துக்கொண்டே தூங்கிவிட்டாரோ என்று தோன்றும்படி இருந்தது.
ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் சிக்கி குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. தனது மகனை மன்னிக்க மாட்டேன் எனவும், சட்டப்படி என்ன நடந்தாலும் அதை ஏற்கிறேன் எனவும் பைடன் தெரிவித்திருந்தார். அமெரிக்க அதிபர் தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில் இஸ்ரேல் - பாலஸ்தீன போரை முடிவுக்குகொண்டுவர ஜோ பைடன் அழுத்தம் கொடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.






