என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜி7 உச்சிமாநாடு"

    • இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.
    • மற்ற நாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டபோதும் இந்தியாவுக்கு எந்த அழைப்பும் வராததை காங்கிரஸ் விமர்சித்தது.

    இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெற உள்ளது.

    இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள்.

    இந்நிலையில் இந்த உச்சிமாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு போன் மூலம் கனடா பிரதமர் மார்க் கார்னியிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மார்க் கார்னியிடமிருந்து அழைப்பு வந்ததில் மகிழ்ச்சி. சமீபத்திய தேர்தல் வெற்றிக்கு அவரை வாழ்த்தினேன், மேலும் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் G7 உச்சி மாநாட்டிற்கு அழைக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்தேன்.

    மக்களுக்கு இடையிலான உறவுகளால் பிணைக்கப்பட்ட துடிப்பான ஜனநாயக நாடுகளாக, இந்தியாவும் கனடாவும் பரஸ்பர மரியாதை மற்றும் பகிரப்பட்ட ஆர்வங்களால் வழிநடத்தப்பட்டு புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன் இணைந்து செயல்படும். உச்சிமாநாட்டில் எங்கள் சந்திப்பை எதிர்நோக்குங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    முன்னதாக மற்ற நாட்டு தலைவர்கள் அழைக்கப்பட்டபோதும் இந்தியாவுக்கு எந்த அழைப்பும் வராததை காங்கிரஸ் விமர்சித்தது. இந்நிலையில் விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் மோடிக்கு தற்போது அழைப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

    • கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது இதுவே முதல் முறை.
    • இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய அனுமதித்ததற்கு அடுத்தபடியாக இது மற்றொரு இராஜதந்திர தோல்வி

    கனடா நடத்தும் இந்த வருட ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்க இந்தியாவுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது வெளியுறவு கொள்கை தோல்வி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

    இந்த மாதம் 15 முதல் 17 வரை கனடாவின் ஆல்பர்ட்டாவில் ஜி7 உச்சிமாநாடு நடைபெறும். இந்த உச்சிமாநாட்டில், உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மேற்கு ஆசியாவின் பதட்டமான சூழ்நிலை, ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே நடந்து வரும் போர் மற்றும் உலகம் எதிர்கொள்ளும் பிற முக்கிய சவால்கள் குறித்து விவாதிப்பார்கள்.

    இருப்பினும், இந்த முக்கியமான கூட்டத்தில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அழைப்பும் வரவில்லை.

    கடைசி நேரத்தில் அவருக்கு அழைப்பு வந்தாலும், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான தற்போதைய பதட்டமான உறவுகளின் பின்னணியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள விரும்பாமல் இருக்கலாம். இது நடந்தால், கடந்த ஆறு ஆண்டுகளில் பிரதமர் மோடி ஜி7 உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள முடியாதது  இதுவே முதல் முறை.

    இதுகுறித்து விமர்சித்த காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், ஆறு ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியப் பிரதமருக்கு அழைப்பு விடுக்கப்படாதது ஒரு இராஜதந்திர பின்னடைவு. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய அனுமதித்ததற்கு அடுத்தபடியாக இது மற்றொரு வெளியுறவுக் கொள்கை தோல்வி என்று அவர் விமர்சித்தார்

    இந்தியா ஜி7 இல் உறுப்பினராக இல்லாவிட்டாலும், இந்தியப் பிரதமர்கள் கடந்த காலங்களில் பல முறை இந்த உச்சிமாநாடுகளில் பங்கேற்றுள்ளனர். கடந்த ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்பி' பெரும் வரவேற்பை பெற்றது.
    • மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.

    50-வது ஜி7 உச்சிமாநாடு இத்தாலியின் அபுலியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்

    இந்த மாநாட்டின் போது பிரதமர் நரேந்திர மோடியுடன் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகியது.

    இந்நிலையில், மோடியுடன் எடுத்த செல்ஃபி வீடியோவை இத்தாலி பிரதமர் மெலோனி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், 'மெலோடி டீமிடம் இருந்து ஹலோ' ( Hello from the Melodi team ) என்று கூற பின்னால் பிரதமர் மோடி சிரித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

    இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலி பிரதமர் மெலோனியுடன், பிரதமர் மோடி எடுத்துக்கொண்ட, 'செல்ஃபி' பெரும் வரவேற்பை பெற்றது. அப்போது இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை மெலோனி பயன்படுத்தினார். அப்போது மெலோடி என்ற வார்த்தையும் ட்ரெண்டானது.

    • ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார்.
    • மெலோனி மோடியுடன் ‘செல்பி’ வீடியோ எடுத்தார்.

    இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். அப்போது மெலோனி மோடியுடன் 'செல்பி' வீடியோ எடுத்தார். பின்னர் அவர் அந்த வீடியோவை 'மெலோடி' என்ற தலைப்புடன் 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்தார். இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.

    அந்த வீடியோவில், 'மெலோடி குழுவில் இருந்து ஹலோ' என்று மெலோனி கூற அவருக்கு பின்னால் நிற்கும் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

    இதனிடையே மெலோனி பகிர்ந்த வீடியோவை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் மீண்டும் பகிர்ந்து 'இந்தியா-இத்தாலி நட்புறவு நீண்டநாள் நீடிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த வீடியோ வைரல் ஆனது.


    ×