மெலோனி 'செல்பி' வீடியோ- பிரதமர் மோடி பதில்

ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். மெலோனி மோடியுடன் ‘செல்பி’ வீடியோ எடுத்தார்.
மெலோனி 'செல்பி' வீடியோ- பிரதமர் மோடி பதில்
Published on

இத்தாலியில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டின் நடுவே இத்தாலியின் பிரதமர் ஜார்ஜியா மெலோனியை சந்தித்தார். அப்போது மெலோனி மோடியுடன் 'செல்பி' வீடியோ எடுத்தார். பின்னர் அவர் அந்த வீடியோவை 'மெலோடி' என்ற தலைப்புடன் 'எக்ஸ்' தளத்தில் பகிர்ந்தார். இருவரின் பெயரையும் குறிக்கும் வகையில், 'மெலோடி' என்ற வார்த்தையை அவர் பயன்படுத்தினார்.

அந்த வீடியோவில், 'மெலோடி குழுவில் இருந்து ஹலோ' என்று மெலோனி கூற அவருக்கு பின்னால் நிற்கும் பிரதமர் மோடி சத்தமாக சிரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.

இதனிடையே மெலோனி பகிர்ந்த வீடியோவை பிரதமர் மோடி எக்ஸ் தளத்தில் மீண்டும் பகிர்ந்து 'இந்தியா-இத்தாலி நட்புறவு நீண்டநாள் நீடிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரல் ஆனது.

X

Maalai Malar
www.maalaimalar.com