என் மலர்
உலகம்
- மியா லு ரூக்ஸ்-க்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது.
- சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார்.
ஜோகன்னஸ்பெர்க்:
தென் ஆப்பிரிக்காவில் 2024-ம் ஆண்டுக்கான அழகிப்போட்டி சமீபத்தில் நடைபெற்றன. இதில் அந்த நாட்டைச் சேர்ந்த ஏராளமான இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.
அப்போது அவர்களுக்கு பல்வேறு கட்ட தகுதித்தேர்வுகள் நடைபெற்றன. இதன் முடிவில் மியா லு ரூக்ஸ் (வயது 28) என்ற பெண் தென் ஆப்பிரிக்க அழகி என்ற பட்டத்தைத் தட்டிச் சென்றார்.
இதில் சுவாரசியம் என்னவென்றால் அவர் காது கேளாத மாற்றுத்திறனாளி ஆவார். அவருக்கு ஒரு வயது இருந்தபோதே காது கேட்க முடியாமல் போனது. பின்னர் `கொஹ்லியர் இம்பிளான்ட்' என்ற சிகிச்சையால் தான் ஒலிகளை உணர்கிறார். இதன் மூலம் அந்த நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக காது கேட்காத மாற்றுத்திறனாளி ஒருவர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், எனது கனவு இன்று நிஜமாகி விட்டது. இதேபோல் சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மற்ற மாற்றுத்திறனாளிகளின் கனவுகளை நனவாக்கவும் தான் விரும்புகிறேன். அவர்களுக்கு ஊக்கம் அளிப்பதற்காகவே தான் இந்த போட்டியில் கலந்து கொண்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையே சிடிம்மா அடெட்ஷினா இறுதிப்போட்டி வரை தேர்வானார். ஆனால் பெற்றோர் நைஜீரியா, மொசாம்பிக் நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவரது தாயகம் குறித்த சர்ச்சைகள் எழுந்தன.
இதனையடுத்து அவர் போட்டியில் இருந்து விலகினார். இவ்வாறு பல தடைகளைத் தாண்டியே தற்போது மாற்றுத்திறனாளியான மியா லு ரூக்ஸ் தென் ஆப்பிரிக்க அழகியாக தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
- இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது.
- வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார்.
சவுத்போர்ட் கொலைகள்
இங்கிலாந்தின் வட மேற்கு பகுதியில் உள்ள சவுத்போர்ட்[Southport] நகரில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி நடன வகுப்பை முடித்து வெளியே வந்த சிறுமிகள் மீது மர்ம நபர் கத்தியால் கண்மூடித்தனமாக தாக்கியதில் 3 சிறுமிகள் உயிரிழந்தனர். இறந்த சிறுமிகளுக்கு முறையே, 9, 7, மற்றும் 6 வயது இருக்கும். மேலும் 10 சிறுமிகள் கத்திக்குத்தில் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

வெறுப்பு - வன்முறை - வெறியாட்டம்
இதைத்தொடர்ந்து இங்கிலாந்தில் குடிபெயர்ந்த இஸ்லாமியர் ஒருவர் தான் இளம்பெண்களை கொன்றார் என்று பரவிய வதந்தியால் நாடு முழுவதும் வன்முறை வெடித்தது. இந்த வன்முறைகளை முன்னெடுத்துச் சென்ற அந்நாட்டின் தீவிர வலதுசாரி அமைப்புகள், நாட்டில் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கினர். ஆனால் சிறுமிகளை தாக்கிய 17 வயது இங்கிலாந்து சிறுவன் பிடிபட்ட நிலையில் அவன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டான். ஆனால் நாட்டில் நடந்து வந்த வன்முறையோ கையை மீறி சென்றுகொண்டிருந்தது.

இணையத்தில் இனவெறி
நாடு முழுக்க ஆசியர்கள் மற்றும் இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு சமூக வலைதளங்களின் மூலம் திட்டமிட்டு பரப்பப்பட்டது. இதனால் இந்தியர்கள் உட்பட அங்கு குடியேறியுள்ளவர்களுக்கு எதிரான இனவெறி கருத்துக்கள் பொதுவெளியில் உலா வந்தது. வதந்திகள் மூலம் வெறுப்பைப் பரப்பும் வலதுசாரி அமைப்புகளை பிரதமர் கெயர் ஸ்டார்மர் எச்சரித்தார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களாக நடந்து வந்த கலவரத்தை போலீஸ் ஓரளவு கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.


நாடு முழுவதும் வன்முறைகளில் ஈடுபட்ட, இணையத்தில் இனவெறி கருத்துக்களையும் வெறுப்பையும் பரப்பிய, கலவரத்தோடு தொடர்புடைய சுமார் 1000 பேரை இங்கிலாந்து போலீஸ் கைது செய்துள்ளது. அவர்களில் சுமார் 575 ஓர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் விரைவில் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த உள்ளதாக நேற்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
- போராட்டக்காரர்கள் பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தினர்.
- முஜிபுர் ரஹ்மான் சிலையில் சிறுநீர் கழித்து அவமானம் செய்தனர்.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக ஷேக் ஹசீனா வேறு வழியின்றி தனது பதவியை ராஜினாமா செய்தார். பின்னர் ராணுவ உதவியுடன் இந்தியா வந்தடைந்தார்.
ஷேக் ஹசீனா மீண்டும் வங்கதேசம் செல்வாரா? இந்தியாவில் தொடர்ந்து தங்கியிருப்பாரா? இங்கிலாந்து அடைக்கலம் கொடுக்குமா? என்பதற்கு விடை கிடைக்காமல் உள்ளது.
இதற்கிடையே ஷேக் ஹசீனா கடந்த வாரம் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 5) தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் நடந்த வன்முறையில் 230-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இன்னும் வன்முறை முடிவுக்க வந்த பாடில்லை.
இந்த நிலையில் ஷேக் ஹசீனா இந்தியா வந்த பிறகு முதன்முறையாக வங்கதேச வன்முறை குறித்து கருத்து தெரிவித்துள்ளார். ஷேக் ஹசீனா வங்காளதேச வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும். வங்கதேசத்தின் தேசிய தந்தையான எனது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் சிலையை சேதப்படுத்தியதற்கு நீதி வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் ஷேக் ஹசீனா மீது கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- நியூசிலாந்து நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது.
- நியூசிலாந்தில் இருந்து பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
நியூசிலாந்து நாட்டில் இருந்து எண்ணற்ற மக்கள் வெளியேறி வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர்.
அந்நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.
கடந்த 1 வருடத்தில் மட்டும் நியூசிலாந்து நாட்டில் இருந்து ௧,31,200 மக்கள் வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமானதாகும்.
நாட்டை விட்டு வெளியேறிய மக்களின் மூன்றில் ஒருபங்கினர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர்.
- ஈட்டியெறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றார்.
- ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.
பாரீஸ் ஒலிம்பிக்ஸ் போட்டியில் நடந்த ஈட்டியெறிதல் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரத்திற்கு வீசி சாதனை படைத்ததோடு, தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார். இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 தூரத்திற்கு வீசி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.
இந்த வெற்றி மூலம் ஒலிம்பிக் வரலாற்றிலேயே தனிநபர் பிரிவில் முதல் தங்கப் பதக்கத்தை பெறும் பாகிஸ்தான் வீரர் என்ற பெருமையை அர்ஷத் நதீம் பெற்றுள்ளார்.
இந்த ஒரு தங்கப்பதக்கத்துடன் ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 62 ஆம் இடத்தை பாகிஸ்தான் பிடித்துள்ளது.
ஒலிம்பிக் சாதனையை முறியடித்து தங்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமுக்கு 10 கோடி ரொக்கப் பரிசு வழங்குவதாக பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸ் அறிவித்துள்ளார்.
இந்நிலையில், ஐநாவால் பயங்கரவாத அமைப்பு என அறிவிக்கப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி முகமது ஹாரிஸ் தாருடன் அர்ஷத் நதீம் இருக்கும் வீடியோ இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
மார்கசி முஸ்லீம் லீக்கின் செய்தித் தொடர்பாளர் தபிஷ் கயூம் மற்றும் அவர்களின் இளைஞர் பிரிவு தலைவர் முகமது ஹாரிஸ் தார் ஆகியோர் அர்ஷத் நதீமை அவரது இல்லத்தில் சந்தித்தனர். முகமது ஹாரிஸ் லஷ்கர்-இ-தொய்பாவின் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி செய்பவர் என்று சொல்லப்படுகிறது.
- மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ளது.
- இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
காசா:
மத்திய கிழக்கில் போர்ப் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் அபாய கட்டத்தை எட்டியுள்ளது.
கடந்த அக்டோபர் 7-ம் தேதி முதல் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 40,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இதையடுத்து, இஸ்ரேலுக்கு தக்க பாடம் கற்பிப்போம் என ஹமாஸ் தெரிவித்தது.
இந்நிலையில், இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி எம் 90 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளோம் என ஹமாஸ் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக இஸ்ரேல் ராணுவம் கூறுகையில், சிறிது நேரத்திற்கு முன் ஒரு ஏவுகணை காசா பகுதியின் எல்லையைக் கடந்து நாட்டின் மையத்தில் உள்ள கடல் பகுதியில் விழுந்தது கண்டறியப்பட்டது. இஸ்ரேலுக்குள் செல்லாத மற்றொரு ஏவுகணையும் கண்டறியப்பட்டது என தெரிவித்துள்ளது.
- நாம் அனைவரும் ஒரே உரிமை கொண்ட மக்கள். நமக்குள் எந்த வேறுபாட்டையும் காட்ட வேண்டாம்.
- பொறுமையை கடைப்பிடிக்கவும், எங்களால் என்ன செய்ய முடிந்தது மற்றும் செய்யவில்லை என்பது குறித்து பின்னர் தீர்ப்பளிக்கவும்.
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். இதனால் கடந்த 5-ந்தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து அரசு கவிழ்ந்தது.
அதன்பின் போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளை நாசப்படுத்த தொடங்கினர். ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி தலைவர்களுக்கு சொந்தமான இடங்களை தீவைத்து கொளுத்தினர். மைனாரிட்டி இந்துகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தினர். அவாமி கட்சிக்கு ஆதரவு தெரிவித்து வந்த இரண்டு தலைவர்கள் கொல்லப்பட்டனர்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பு கேட்டு இந்துக்களும் போராட்டத்தில் குதித்தனர். ஷேக் ஹசீனா பதவி விலகி ஒரு வாரத்திற்கும் மேலாகியும் வன்முறை முடிவுக்கு வரவில்லை. இதற்கிடையே நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அமைதி திரும்ப ஒத்துழைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிலையில் முகமது யூனுஸ் டாக்காவில் உள்ள புகழ் வாய்ந்த தாகேஷ்வரி கோவிலுக்கு சென்றார். பின்னர் "உரிமைகள் அனைவருக்கும் சமமானது. வங்காளதேசத்தில் உள்ள மைனாரிட்டிகளின் பாதுகாப்புக்கு உறுதி அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.
மேலும், நாம் அனைவரும் ஒரே உரிமை கொண்ட மக்கள். நமக்குள் எந்த வேறுபாட்டையும் காட்ட வேண்டாம். தயவுசெய்து எங்களுக்கு உதவுங்கள். பொறுமையை கடைப்பிடிக்கவும், எங்களால் என்ன செய்ய முடிந்தது மற்றும் செய்யவில்லை என்பது குறித்து பின்னர் தீர்ப்பளிக்கவும். தோல்வியடைந்தால், எங்களை விமர்சியுங்கள் எனத் தெரிவித்தார்.
- ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.
- முகமது யூனுஸ் தலைமையில் வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
டாக்கா:
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசுக்கு எதிரான மாணவர்களின் போராட்டத்தில் பெரும் வன்முறை வெடித்தது. இதையடுத்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் வங்கதேசத்தில் வன்முறையும், கலவரமும் ஓயவில்லை. இந்த வன்முறைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 560 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், ஜூலை 19 அன்று டாக்காவின் முகமதுபூர் பகுதியில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மளிகைக் கடை உரிமையாளர் அபு சயீத் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த அமிர் ஹம்சா ஷாடில் டாக்கா பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், ஜூலை 19-ம் தேதி மாலை 4 மணிக்கு மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அபு சயீத் கொல்லப்பட்டார். இந்த கொலைக்கு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அவாமி லீக் பொதுச் செயலாளர் ஒபைதுல் குவாடர், உள்துறை மந்திரி அசதுஸ்மான் கான் கமல், முன்னாள் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன், முன்னாள் டிபி தலைவர் ஹருன் ஓர் ரஷீத், முன்னாள் டிஎம்பி கமிஷனர் ஹபிபுர் ரஹ்மான் மற்றும் முன்னாள் டிஎம்பி இணை கமிஷனர் பிப்லாப் குமார் சர்க்கர் உள்ளிட்ட 6 பேரும் காரணம் என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி ராஜேஷ் சவுத்ரி முன் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா தப்பிச்சென்ற பின் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக பதிவுசெய்யப்பட்ட முதல் வழக்கு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆராய்ச்சியில் அங்கு ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் இருப்பது தெரியவந்தது.
- நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
சூரிய குடும்பத்தில் உள்ள செவ்வாய் கிரகத்தில் என்ன இருக்கிறது என்பது பற்றி ஆராய்ச்சி பணிகளை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் மேற்கொண்டுள்ளது. இந்த ஆராய்ச்சியில் அங்கு ஏரி உள்ளிட்ட நீர் நிலைகள் இருப்பது தெரியவந்தது. தற்போது செவ்வாய்கிரகத்தில் திரவ நிலையில் நீர்த்தேக்கம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாசாவின் இன்சைட் லேண்டரால் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகி இருக்கிறது.
செவ்வாய்கிரகத்தில் மேற்பரப்புக்கு அடியில் ஆழமாக மறைந்து இருக்கும் திரவ நிலையிலான ஒரு பெரிய நீர்தேக்கம் உலகளாவிய கடலில் முழு கிரகத்தையும் உள்ளடக்கும் அளவுக்கு அமைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மேற்பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 7.2 முதல் 12.4 மைல்கள் ( 11.5 முதல் 20 கி.மீ) வரை அமைந்துள்ள இந்த நீர் உடைந்த பாறைகளுக்குள் இடையில் தேங்கி நிற்கிறது. இதில் நீர் உறைந்து இருக்கும் மேற்பரப்பை போல் இல்லாமல் திரவ நீரை தக்க வைக்கும் அளவுக்கு வெப்பநிலை இருக்கும் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது.
- துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மூக்கில் க்ளிப் மாட்டி உள்ளார்.
- இது எனக்கு வேலை செய்தது, என் தோல் உதிர்வதை நிறுத்திவிட்டது என்று டிபோரா பெய்க்ஸோடா தெரிவித்துள்ளார்.
பிரேசிலை சேர்ந்த இன்ஸ்டா பிரபலம் டிபோரா பெய்க்ஸோடா. இவர் வயதாவதை தடுப்பதற்கான சரும பராமரிப்பு (Skin care) எனக்கூறி தனது மலத்தை முகத்தில் பூசிக்கொண்டு வீடியோ பதிவிட்டுள்ளது பேசு பொருளாகி உள்ளது.
அந்த வீடியோவில் அவர் தனது மலத்தை முகத்தில் எவ்வாறு பயன்படுத்துகிறார் என்பதை காட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இன்ஸ்டாகிராமில் 6.58 லட்சத்திற்கும் அதிக ஃபாலோவர்களைக் கொண்ட பெய்க்ஸோடா, தனது மலத்தை வழக்கமான ஃபேஸ் மாஸ்க் போல முகத்தில் தடவிக் கொள்கிறார்.
துர்நாற்றத்தை கட்டுப்படுத்த மூக்கில் க்ளிப் மாட்டி உள்ளார். பின்னர் இந்த ஃபேஸ் மாஸ்க்கை கழுவுகிறார். அதன் பின்னர் அவர் சருமத்தை காட்டுவது போல் இந்த வீடியோ முடிகிறது. இது எனக்கு வேலை செய்தது, என் தோல் உதிர்வதை நிறுத்திவிட்டது என்று டிபோரா பெய்க்ஸோடா தெரிவித்துள்ளார்.
வழக்கத்திற்கு மாறான இந்த அழகு சிகிச்சையை விமர்சித்த மருத்துவ நிபுணர்கள், இவ்வாறு செய்வதால் நன்மைகளை விட, உடல்நல அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்று எச்சரித்தனர்.
லண்டனில் உள்ள கடோகன் கிளினிக்கின் ஆலோசகரும், சரும மருத்துவரான டாக்டர். சோஃபி மோமன் கூறுகையில், "அனைத்து தோல் பராமரிப்பு போக்குகளிலும், இது நான் கண்ட விசித்திரமான ஒன்றாகும். மலத்தை ஃபேஸ் மாஸ்க்காக பயன்படுத்துவது சருமத்திற்கு நன்மை பயக்கும் என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை," என்று தெரிவித்தார்.
டிபோரா பெய்க்ஸோடா ஏற்கனவே தனது மாதவிடாய் ரத்தத்தை சரும பராமரிப்புக்கு பயன்படுத்தி இருந்தார். தற்போது புதுவித யோசனையுடன் வந்துள்ள இவர் இதனால் தனது சருமத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
- இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.
- எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் தெரிவித்துள்ளார்
ஈரானில் வைத்து ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்ட சம்பவம் இஸ்ரேலுக்கும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் இடையில் போர் மூலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு, ஏமன் நாட்டில் இயங்கி வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் என இஸ்ரேலின் பாலஸ்தீன தாக்குதலுக்குப் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஈரானின் புதிய அதிபராகத் தேர்வான சீர்திருத்தக் கட்சியைச் சேர்ந்த மசூத் பெசஸ்க்கியானின் பதவியேற்பு நிகழ்ச்சிக்காக ஈரான் வந்த இஸ்மாயில் ஹனியே அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்று ஈரான் குற்றம்சாட்டியது. இதனால் இஸ்ரேல் மீது ஈரான் எந்த நேரமும் தாக்குதல் நடத்தக்கூடும் என்று தெரிகிறது. நேரடித் தாக்குதலுக்கு அதிபர் மசூத் மற்றும் ஈரான் புரட்சிகர படையினர் இடையில் கருத்து வேறுபாடு இருந்தாலும், இஸ்ரேலுக்கு பதிலடி கொடுப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது.


இதை உறுதிப்படுத்தும் வகையில் இந்த வாரத்தில் ஈரான், இஸ்ரேல் மீதான தாக்குதலை முன்னெடுக்கும் என்று அமெரிக்க வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது. எனவே இஸ்ரேலை பாதுகாக்க நீர்மூழ்கிகளையும், ஏர்கிராப்ட்களையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பி வைத்துள்ளது.


மேலும் அமெரிக்காவுடன் சேர்ந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பிரிட்டன் ஆகிய மேற்கு நாடுகள் இணைந்து ஈரானை எச்சரித்துள்ளது. இஸ்ரேல் மீதான ராணுவ நடவடிக்கை, கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், பிராந்தியங்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் எனவும் மேற்கூறிய நாடுகளின் தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டும், தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு பேசியும் வலியுறுத்தியுள்ளனர். ஆனால் எங்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பது எங்களின் உரிமை என்று ஈரான் அதிபர் மசூத் பேசஸ்கியான் உறுதிபட தெரிவித்துள்ளார்.

- சிரியாவின் மத்திய நகர் ஹமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
- சிரியாவில் நில அதிர்வை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
சிரியாவில் உள்ள ஹமா என்ற நகரில் இருந்து கிழக்கே 28 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.5 ஆக பதிவாகி இருக்கிறது. இது 3.9 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக சிரியா நாட்டின் தேசிய நிலநடுக்க மையம் தெரிவித்துள்ளது.
ஹமா மட்டுமின்றி சிரியாவின் பல மாகாணங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11:56 மணியளவில் நலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு தான் 3.7 ரிக்டர் அளவில் லேசான நில அதிர்வு ஏற்பட்டது.
நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை. எனினும், சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படுவதற்கான முன்னோடியாக இது இருக்கலாம் என்றும், மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.






