நியூசிலாந்தை விட்டு வெளியேறி வேறு நாடுகளுக்கு குடிபெயரும் மக்கள் - ஏன் தெரியுமா?

நியூசிலாந்து நாட்டில் வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. நியூசிலாந்தில் இருந்து பெரும்பாலானோர் ஆஸ்திரேலியாவிற்கு குடிபெயர்ந்து வருகின்றனர்.
New Zealand
Published on

நியூசிலாந்து நாட்டில் இருந்து எண்ணற்ற மக்கள் வெளியேறி வேறு நாடுகளுக்கு குடி பெயர்ந்து வருகின்றனர்.

அந்நாட்டில் அதிகரித்துள்ள வேலைவாய்ப்பின்மை பிரச்சனை, பொருளாதார மந்தநிலை மற்றும் வட்டி விகிதங்கள் உயர்வால் மக்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

கடந்த 1 வருடத்தில் மட்டும் நியூசிலாந்து நாட்டில் இருந்து ௧,31,200 மக்கள் வெளியேறியுள்ளனர். இந்த எண்ணிக்கை வேறு எப்போதும் இல்லாத அளவிற்கு மிக அதிகமானதாகும்.

நாட்டை விட்டு வெளியேறிய மக்களின் மூன்றில் ஒருபங்கினர் ஆஸ்திரேலியா நாட்டிற்கு குடிபெயர்ந்துள்ளனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com