என் மலர்tooltip icon

    உலகம்

    • 1999-க்குப்பிறகு கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகள்தான் பிறந்துள்ளது.
    • தற்போது பெண்களுக்கு குழந்தைகள் பிறப்பது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.

    வேலை செய்யும் இடங்களில் சாப்பாடு இடைவேளை மற்றும் தேநீர் இடைவேளையை உடலுறவுக்கு பயன்படுத்திக்கொள்ளுமாறு ரஷிய மக்களுக்கு புதின் வலியுறுத்தியதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரஷியாவின் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து கொண்டே வருகிறது. உக்ரைனுக்கு எதிராக போர் நடத்தி வரும் ரஷியாவுக்கு இது மிகப்பெரிய கவலையை அளித்துள்ளது. இதனால் மக்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக் கொள்ள வேண்டும். நம்முடைய முன்னோர்கள் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகளை பெற்ற வரலாறு உண்டு என ரஷிய அதிபர் புதின் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தார்.

    இந்த நிலையில் பணிபுரியும் இடத்தில் இடைவேளையின்போது உடலுறவு கொள்ளுமாறு ரஷியர்களுக்கு புதின் வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    ரஷியாவில் தற்போதுள்ள மக்கள் தொகை அப்படியே நிலைத்திருக்க ஒரு பெண்ணுக்கு 2.1 என்ற சதவீதம் என்ற அளவில் குழந்தைகள் பிறக்க வேண்டும். ஆனால் தற்போது இது 1.5 சதவீதமாக குறைந்துள்ளது.

    1999-க்கும் பிறகு தற்போது ரஷியாவில் இதுவரை இல்லாத அளவிற்கு கடந்த ஜூன் மாதம் ஒரு லட்சத்திற்கும் குறைவான குழந்தைகள்தான் பிறந்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவிக்கின்றன.

    கடந்த ஆண்டு முதல் பாதியில் பிறந்த குழந்தைகளை விட தற்போது 2024 முதல் பாதியில் 16 ஆயிரம் குழந்தைகள் குறைவாக பிறந்துள்ளதாக ரஷியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவர நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதே காலக்கட்டத்தில் உக்ரைன் சண்டை உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் 49 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மக்கள் தொகை வீழ்ச்சி 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

    பெண்கள் குழந்தைகள் அதிக அளவில் பெற்றுக்கொள்வதற்காக பல்வேறு மருத்துவ சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன.

    செல்யாபின்ஸ்க் பிராந்தியம் 24 வயதிற்கு உட்பட்ட பெண் மாணவிகள் குழந்தை பெற்றுக் கொண்டால், முதல் குழந்தைக்கு 8500 டாலர் வழங்குவதாக அறிவித்துள்ளது. கருத்தடைக்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது. விவாகரத்துக்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    பாராளுமன்ற உறுப்பினர் தட்யான்யா புட்ஸ்கயா முதலாளிகள் அவர்களுடைய பெண் ஊழியர்களை குழந்தைகள் பெற்றுக்கொள்ள ஊக்குவிக்க வலியுறுத்தும் கொள்கைக்கு பரிந்துரை செய்துள்ளார்.

    அரசியல்வாதியான அன்னா குஸ்னெட்சோவா, பெண்கள் 19 அல்லது 20 வயதில் குழந்தைகள் பெற்றுக் கொள்ள வேண்டும். அப்போதுதான் குடும்பம் மூன்று அல்லது அதற்கு மேலான குழந்தைகளை பெற முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, "ரஷிய மக்களைப் பாதுகாப்பதே எங்கள் மிக உயர்ந்த தேசிய முன்னுரிமை. ரஷ்யாவின் தலைவிதி... நம்மில் எத்தனை பேர் இருப்போம் என்பதைப் பொறுத்தது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கேள்வி" புதின் கூறியிருந்தார்.

    உக்ரைன் உடனான போரால் ரஷியாவில் இருந்து சுமார் 10 லட்சம் பேர் நாட்டில் இருந்து வெளியேறிவிட்டதாக ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

    • சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர்.
    • சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க்கில் மெல்வில்லே பகுதியில் சுவாமிநாராயண் கோவில் உள்ளது. இக்கோவில், அமெரிக்காவில் மிகப்பெரிய இந்து கோவில் மற்றும் உலகின் 2-வது மிகப்பெரிய கோவில் என சிறப்பை பெற்றுள்ளது.

    இந்நிலையில் சுவாமிநாராயண் கோவிலில் மர்மநபர்கள் சிலர் புகுந்து சேதப்படுத்தி உள்ளனர். கோவிலுக்கு வெளியே உள்ள சாலைகள், பலகைகளில் எதிர்ப்பு வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன.


    இதற்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து தூதரகம் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'இது போன்ற செயலை ஏற்றுக்கொள்ள முடியாது.

    தாக்குதல் நடத்தியவர்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க அமெரிக்க அதிகாரிகளிடம் வலியுறுத்தி உள்ளோம். சமீப காலமாக இந்து கோவில்கள் மீது நடந்து வரும் தாக்குதல் குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

    • பிரணீத் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றார்.
    • பிரணீத் உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரணீத்தின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    தெலுங்கானாவின் ரங்காரெட்டி மாவட்டத்தின் மீர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பிரணீத். இவர் கனடா நாட்டில் தங்கி சமீபத்தில் முதுநிலை பட்டப்படிப்பை முடித்திருந்தார்.

    இந்த நிலையில் பிரணீத் தனது அண்ணனின் பிறந்தநாளை கொண்டாட நண்பர்களுடன் டொரண்டோ நகரில் உள்ள ஏரி ஒன்றிற்கு சென்றார். பிரணீத், அவரது அண்ணன் உள்ளிட்ட அனைவரும் ஏரியில் குதித்தனர். ஆனால் பிரணீத்தை தவிர மற்ற அனைவரும் கரை வந்து சேர்ந்தனர். பிரணீத்தை மட்டும் காணவில்லை.

    இதையடுத்து மீட்புக்குழுவினர் அங்கு வந்தனர். அவர்கள் ஏரியில் இருந்து பிரணீத்தின் உடலை மீட்டனர். அவரது உடலை இந்தியாவுக்கு திரும்பி கொண்டு வர உதவிடும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கு பிரணீத்தின் தந்தை வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதி வெள்ளக்காடாக மாறின.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    பீஜிங்:

    சீனாவில் உருவான பெபின்கா புயல் காரணமாக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி ஷாங்காய் நகரில் புயல் சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் கரையை கடந்தது.

    அப்போது பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால் அந்த பகுதி வெள்ளக்காடாக மாறின. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷாங்காய் நகரில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

    இதற்கிடையே புயல் காரணமாக அங்கு மோசமான வானிலை நிலவியது. இதனால் சுமார் 100 விமானங்கள் அங்கு ரத்து செய்யப்பட்டன. புயல் கரையை கடக்கும்வரை மேலும் 500 விமானங்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக விமான போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

    • இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது.
    • மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    இந்தியாவில் முஸ்லிம்கள் பாதிக்கப்படுவதாகக் கூறிய ஈரானின் சுப்ரீம் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் கருத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

    இந்தியா, காசா, மியான்மர் உள்ளிட்ட எந்த ஒரு இடத்திலும் ஒரு முஸ்லிம் அனுபவிக்கும் துன்பங்களை நாம் கவனிக்காமல் இருந்தால் நம்மை முஸ்லிம்களாக கருத முடியாது என்று நபிகள் நாயகத்தின் பிறந்தநாளில் ஈரானிய தலைவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

    இதற்கு இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சகம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது. கமேனி கூறிய கருத்துக்களை நிராகரித்து, தவறான தகவலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளது.

    சிறுபான்மையினர் குறித்து விமர்சனக் கருத்துக்களை வெளியிடும் நாடுகள், இதனை சொல்வதற்கு முன் தங்கள் சொந்த மனித உரிமைகள் பதிவுகளை முதலில் ஆராயுமாறு அமைச்சகம் மேலும் அறிவுறுத்தியது.

    இந்தியாவும் ஈரானும் வலுவான இருதரப்பு உறவுகளை கொண்டுள்ளது. சமீப காலங்களில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் எதுவும் இல்லை.

    முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் உத்தியோகபூர்வ விழாவில் கலந்து கொள்வதற்காக மே மாதம் துணை ஜனாதிபதி ஜக்தீப் தங்கர் ஈரானுக்கு பயணம் செய்தார்.

    ஜூலை மாதம் கூட, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, தெஹ்ரானில் நடைபெற்ற ஈரானின் புதிய ஜனாதிபதி மசூத் பெஜேஷ்கியானின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார்.

    • ஹிஸ்புல்லா தாக்குதல் நடத்தி வருவதால் இஸ்ரேல் எல்லையில் உள்ள மக்கள் வெளியேற்றம்.
    • வெளியேறிய மக்களை அவர்களது வீட்டிற்கு பாதுகாப்பாக திரும்ப வைப்பது இலக்கு என இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

    இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் மாத் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாதிகள் கொடூர தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக ஹமாஸ் அமைப்புக்கு எதிராக போர் பிரகடனம் செய்த இஸ்ரேல், பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தியது.

    எதிர்காலத்தில் ஹமாஸ் அமைப்பினரால் இஸ்ரேல் நாட்டு மக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்பதை உறுதி செய்வதுதான் எங்களது இலக்கு என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்திருந்தார்.

    பாலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் ஆதரவு பெற்ற லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.

    இஸ்ரேல்- ஹிஸ்புல்லா தினந்தோறும் பரஸ்பர தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால் இஸ்ரேல் நாட்டின் வடக்கு பகுதி எல்லையில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளை காலி செய்து பாதுகாப்பான இடத்தில் வசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தங்களுடைய போர் இலக்கு புதுப்பிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நேதன்யாகு தெரிவித்துள்ளார்.

    பெஞ்சமின் நேதன்யாகு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "அரசியல்- பாதுகாப்பு மந்திரிசபை தங்களது போர் இலக்கை புதுப்பித்துள்ளது. நாட்டின் வடக்குப் பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவது என்பதை போர் இலக்கில் சேர்க்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளது.

     இதனால் லெபனானில் உள்ள ஹிஸ்புல்லாவிற்கு எதிராக தாக்குதலை இஸ்ரேல் அதிகரிப்பதுடன் லெபனான்- இஸ்ரேல் எல்லையில் பாதுகாப்பை உறுதி செய்ய தீர்க்கமான நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பாலஸ்தீன நட்பு நாடுகளுக்கு தங்களது ஆதரவு எனத் தெரிவித்த ஹிஸ்புல்லா, லெபனானின் தெற்கில் உள்ள எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகளை தொடர்ந்து அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் வலியுறுத்தும் அதே வேளையில், காசா போர் நிறுத்தம் ஏற்பட்டால் எங்களது தாக்குதல் முடிவுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

    • இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி என்ற பூனை தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது.
    • 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இன்று உயிரிழந்தது.

    உலகின் மிக வயதான பூனை என அறியப்பட்ட இங்கிலாந்தைச் சேர்ந்த ரோஸி (33) என்ற பூனை இன்று உயிரிழந்தது

    இந்தாண்டு ஜூன் 1 ஆம் தேதி ரோஸி தனது 33 ஆவது பிறந்தநாளை கொண்டாடியது. 1991ல் பிறந்த ரோஸி வயது மூப்பு காரணமாக இங்கிலாந்தில் உள்ள நார்விச் நகரில் உள்ள அவரது உரிமையாளரின் வீட்டில் உயிரிழந்தது.

    33 ஆண்டுகள் வாழ்ந்த ரோஸியின் வாழ்நாளை மனித வாழ்நாளோடு ஒப்பிட்டால் இது 152 ஆண்டுகள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை.
    • பிரச்சாரம் தடைக்கான காரணம் குறித்து தலிபான் தகரப்பில் இருந்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

    ஆப்கானிஸ்தானில் போலியோ தடுப்பூசி பிரச்சாரத்தை தலிபான்கள் நிறுத்தி வைத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

    ஆபத்தான மற்றும் முடக்குவாத நோயான போலியோ பரவுதலை தடுக்க முடியாத இரண்டு நாடுகளில் ஒன்று ஆப்கானிஸ்தான் மற்றொன்று பாகிஸ்தான் ஆகும்.

    செப்டம்பர் மாதத்திற்கான நோய்த்தடுப்பு பிரச்சாரம் தொடங்குவதற்கு முன்பே தடைப் பற்றிய செய்தி ஐ.நா. அமைப்புகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தடைக்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்றும், மேலும் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள அரசாங்கத்திலிருந்து யாரும் கருத்து தெரிவிக்கவில்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

    அண்டை நாடான பாகிஸ்தானில் போலியோ எதிர்ப்பு பிரச்சாரங்கள் தொடர்ந்து வன்முறைகளால் அழிக்கப்படுகின்றன.

    பயங்கரவாதிகள் தடுப்பூசி குழுக்கள் மற்றும் அவர்களைப் பாதுகாக்க நியமிக்கப்பட்ட காவல்துறையினரை குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

    ஆனால், அதுப்போன்ற பிரச்சாரங்கள் குழந்தைகளை கருத்தடை செய்வதற்கான மேற்கத்திய சதி என்று பொய்யாகக் கூறப்படுகிறது.

    • நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.
    • பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    போர்ட் மெக்நீல்:

    கனடாவின் போர்ட் மெக்நீல் பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.

    பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நிலநடுக்கம் காரணமாக பல்வேறு இடங்களில் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.

    இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை.

    • பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கொள் பூமியை சுற்றும்.
    • நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளது.

    பூமிக்கு இந்த வருடத்தில் தற்காலிகமாக மற்றொரு நிலவு கிடைக்கப்போகிறது என்ற தகவலை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 7 ஆம் தேதி கண்டுபிடிக்கப்பட்ட 10 மீட்டர்கள் [33 அடி] உள்ள சிறு கோள் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு Asteroid 2024 PT5 என்று பெயரிடப்பட்டது. இந்த சிறு கோள் ஆனது 2024 செப்டம்பர் 29 முதல் 2024 நவம்பர் 25 வரை பூமிக்கு சிறு நிலவாக [mini-moon] செயல்பட உள்ளது.

    இந்த குறுகிய காலக்கட்டத்திற்கு  மட்டும் பூமியின் புவியீர்ப்பு விசையினால் ஈர்க்கப்பட்டு இந்த சிறு கொள் பூமியை சுற்றும். ஆனால் ஒரு முறை முழு சுற்றை நிறைவு செய்யும் முன்னரே [அதாவது நவம்பர் 25க்கு பின்னர்] பூமியின் புவியீர்ப்பு விசையில்  இருந்து விடுபட்டு சூரியனை சுற்றத் துவங்கும்.

    மிகவும் சிறிய அளவில் உள்ளதால் பூமியைச் சுற்றும் காலகட்டத்தில் இதை வெறும் கண்களால் பார்ப்பது சிரமம். ஆனால் இந்த காலகட்டத்தில் பூமிக்கும் பூமிக்கு அருகில் இருக்கும் பொருட்களுமான உறவை ஆய்வு செய்து புரிந்துகொள்ள உதவும் என்றும் என்றும் புவியீர்ப்பு அழுத்தங்கள் மற்றும் விசையினால் பூமிக்கு வெளியில் உள்ளவை எவ்வாறாக ரியாக்ட் செய்கிறது என்பதை அறிந்து கொள்ளவும் இந்த நிகழ்வு உதவும் என அமெரிக்கன் ஆஸ்ட்ரோனாமிகள் சொசைட்டி விஞ்ஞானிகள் தெரிவிகிண்டனர். முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு NX1 என்ற சிறு நிலவு பூமியை சுற்றியது, குறிப்பிடத்தக்கது. 

    • போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
    • கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

    கார்கிவ்:

    உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்த தொடங்கி 2½ ஆண்டுகளை கடந்து விட்டது. இந்த போரில் குழந்தைகள் பெண்கள் உள்பட 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை வழங்கி வருவதால் போர் தொடர்ந்து நீண்டு கொண்டே வருகிறது.

    இந்த நிலையில் வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகரில் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தியது. இதில் அங்குள்ள பல மாடி குடியிருப்பு கட்டிடத்தில் வெடிகுண்டுகளை வீசியது. இதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் குழந்தைகள் உட்பட 40 பேர் படுகாயமடைந்தனர்.

    அந்த கட்டிடத்தின் 9 மற்றும் 12 வது தளங்களுக்கு இடையில் தீ கொழுந்து விட்டு எரிகிறது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கட்டிடத்தில் பலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ரஷியாவின் ராணுவ விமான தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்க உலக நாடுகள் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஜனநாயக் ஜனத கட்சியில் முக்கிய தலைவராக இருந்தவர் அனூக் தனக்.
    • பாஜக-அரசில் அங்கம் வகித்தபோது மந்திரியாக இருந்தார்.

    அரியானா மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜக-வுக்கு இடையில் நேரடி போட்டி என்றாலும், மாநில கட்சியான துஷ்யந்த் சவுதாலாவின் ஜனநாயக் ஜனதா கட்சி (JJP) செல்வாக்கு பெற்ற கட்சியாகும்.

    அரியானாவில் ஜேஜேபி ஆதரவுடன்தான் முதலில் பாஜக ஆட்சி அமைத்திருந்தது. மக்களவை தேர்தலின்போது இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

    கூட்டணி ஆட்சியின்போது துஷ்யந்த் சவுதாலா துணை முதல்வராக இருந்தார். அந்த கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த அனூப் தனக் மந்திரியாக இருந்தார்.

    தற்போதைய தேர்தலையொட்டு ஜேஜேபி கட்சியில் இருந்து அனூப் தனக் விலகி, பாஜக-வில் இணைந்துள்ளார். இந்த ஜேஜேபி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது.

    இந்த நிலையில்தான் துஷ்யந்த் சவுதாலாவின் தாயார் நைனா சவுதாலா, அனூப் தனக் கருநாகம் என விமர்சித்துள்ளார்.

    இது தொடர்பாக நைனா சவுதாலா கூறுகையில் "நாங்கள் அனூப் தனக்கிற்கு மரியாதை கொடுத்தும். ஆனால், அவரைவிட இரண்டு முகங்கள் கொண்டு பாம்பு சிறந்தது. குறைந்த பட்சம் ஒரு பாம்பு எந்த வழியில் கடிக்கும் என்பது தெரியும். அனூப் தனக்கிற்கு கடவுள் கருநாகம் முகத்தை கொடுத்துள்ளார்.

    ×