என் மலர்
உலகம்
- திவால் நடைமுறைக்கான ஆவணங்களை, இந்த வாரத்தில் டப்பர்வேர் நிறுவனம் தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
- கொரோனா பேரிடருக்கு பிறகு விற்பனையில் ஏற்பட்ட சரிவு, செலவினம் அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
பள்ளிக்கூடம், அலுவலகத்திற்கு மதிய சாப்பாட்டைக் கொண்டு செல்லும் லஞ்ச்பேக் தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த டப்பர்வேர் நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதால் திவாலானதாக அறிவிக்கக்கோரி அமெரிக்க நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. திவால் நடைமுறைக்கான ஆவணங்களை, இந்த வாரத்தில் டப்பர்வேர் நிறுவனம் தாக்கல் செய்யக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா பேரிடருக்கு பிறகு விற்பனையில் ஏற்பட்ட சரிவு, செலவினம் அதிகரிப்பு ஆகியவை முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில், 1946-ம் ஆண்டு எர்ல் டப்பர் என்பவரால் தொடங்கப்பட்ட டப்பர்வேர் நிறுவனம் தயாரித்த பொருட்கள், பெண் முகவர்களால் நேரடியாக உலகெங்கும் விற்பனை செய்யப்பட்டன. தற்போது, அவற்றின் தேவை குறைந்ததால், தொழிற்சாலையை மூடப்போவதாக கடந்த ஜூனில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
- அரசியலமைப்பை மாற்ற முயற்சிப்பதாக பாகிஸ்தான் அரசு மீது குற்றச்சாட்டு
பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான் கான் பலவேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். முக்கியமான வழக்குகளில் விடுதலை பெற்ற போதிலும் சிறையில் இருந்து வெளியே வர முடியாமல் இருக்கிறார்.
இந்த நிலையில் தன்னை தொடர்ந்து சிறையில் வைப்பதற்கான அரசியலமைப்பை மாற்ற அரசு முயற்சிக்கிறது என இம்ரான் கான் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில் இம்ரான் கானின் குற்றங்கள் சிறையில் அடைப்பதற்கான போதுமானது என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை மந்திரி கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022-ம் ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் இருந்து அவர் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இருந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இம்ரான் கான் குற்றச்சாட்டிற்கு பதில் அளித்த கவாஜா ஆசிஃப் "பிடிஐ கட்சி நிறுவனர் இம்ரான் கானின் குற்றங்களுக்கான நீண்ட பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பு மாற்றம் தேவைப்படதாது. சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதமர், அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்களுடன் மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் நடக்கும் அனைத்திலும் தன்னை இணைத்துக் கொள்ள விரும்புகிறார்" என்றார்.
இம்ரான் கான் கைதின்போது, அவரது ஆதரவாளர்கள் ராணுவ அமைப்புகளை தாக்கியது தொடர்பாக பல்வேறு வழக்குகள் அவருக்கு எதிராக போடப்பட்டது.
- 5,000 பேஜர்களை குழு ஆர்டர் செய்துள்ளதாக மூத்த லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தது.
- இதற்கான பதிலடியை இஸ்ரேல் உறுதியாக பெறும் என ஹிஸ்புல்லா சூளுரைத்துள்ளது.
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா அமைப்பினர் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.
ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் இதுவரை 3 ஆயிரம் பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர். 9 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இஸ்ரேலின் மொசாட் உளவு அமைப்பானது ஹிஸ்புல்லா ஆர்டர் கொடுத்து தைவானில் தயாரிக்கப்பட்ட 5,000 பேஜர்களுக்குள் சிறிய அளவிலான வெடிபொருட்களை (3 கிராம்) வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சதி திட்டம் பல மாதங்களாக தீட்டப்பட்டுள்ளது. தைவானை தளமாகக் கொண்ட கோல்ட் அப்பல்லோ தயாரித்த 5,000 பேஜர்களை குழு ஆர்டர் செய்துள்ளதாக மூத்த லெபனான் பாதுகாப்பு வட்டாரம் தெரிவித்தது, இது இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக பல ஆதாரங்கள் கூறுகின்றன.
மேலும் புதிய பேஜர்களில் மூன்று கிராம் வெடிபொருட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பல மாதங்களாக ஹெஸ்பொல்லாவால் கண்டுபிடிக்கப்படாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கான பதிலடியை இஸ்ரேல் உறுதியாக பெறும் என ஹிஸ்புல்லா சூளுரைத்துள்ளது.
- அவரது மார்பு மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.
- தொலைக்காட்சியில் விவாதத்தை நடத்திய நடுவர் விவாதத்தை நிறுத்தி விளம்பரங்களை ஒளிப்பரப்பு செய்தார்.
பிரேசிலில் மேயர் பதவிக்கான விவாதம் தொலைக்காட்சியில் நேரலை நடைபெற்றுக்கொண்டிருந்த போது வேட்பாளர்களில் ஒருவர் போட்டியாளரை உலோகத்தால் செய்யப்ப்டட நாற்காலியைக் கொண்டு தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றதுள்ளது. 16 வினாடிகளே ஓடும் வீடியோவில், வேட்பாளரான பாப்லோ மார்கல் தனது உரையை ஆற்றிக் கொண்டிருந்தபோது, ஜோஸ் லூயிஸ் டேடெனா என்பவர் திடீரென நாற்காலியால் தாக்குகிறார். இதனை சற்றும் எதிர்பாராத பாப்லோ மார்கலுக்கு விலா எலும்பு முறிவு மற்றும் மூச்சு விடுவதில் சிரமத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது மார்பு மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை கூறியுள்ளது.
இதனிடையே தொலைக்காட்சியில் விவாதத்தை நடத்திய நடுவர் விவாதத்தை நிறுத்தி விளம்பரங்களை ஒளிப்பரப்பு செய்தார். பின்னர் பாப்லோ மார்கல் இல்லாமலே விவாதம் தொடர்ந்தது.
??????
??? ??? ???? ??????? ??During the debate for the São Paulo mayoral race in Brazil,
socialist candidate José Luiz Datena threw a chair at libertarian candidate Pablo Marçal.
I'd pay more attention to the debates in my country if they were like this.
href="https://t.co/zvKKXardrD">pic.twitter.com/zvKKXardrD
— Ara Americanhref="https://twitter.com/realaraamerican/status/1836025771858522457?ref_src=twsrc
- ரியான் வெஸ்லி ரூத் கோல்ப் மைதானத்தில் இருந்து தப்பி ஓடும்போது ஒரு டிஜிட்டல் கேமரா, கைத்துப்பாக்கி உள்ளிட்டவை அடங்கிய பையை விட்டு சென்றார்.
- ரியான் வெஸ்லி ரூத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், அவருடைய கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் நவம்பர் மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக களம் இறங்கியுள்ள முன்னாள் ஜனாதிபதி டிரம்ப், கடந்த ஞாயிற்றுக்கிழமை புளோரிடாவின் வெஸ்ட் பாம் கடற்கரை பகுதியில் உள்ள கோல்ப் மைதானத்தில் கோல்ப் விளையாடிக்கொண்டு இருந்தார்.
அப்போது டிரம்ப் நின்றிருந்த இடத்தில் இருந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் மர்ம நபர் ஒருவர் ஏ.கே.47 துப்பாக்கியால் டிரம்பை நோக்கி வேலி வழியாக குறிபார்த்துக்கொண்டு இருந்தார்.
இதை கண்ட டிரம்பின் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதையடுத்து அந்த மர்ம நபர் அங்கிருந்து காரில் தப்பி சென்றார். எனினும் சற்று நேரத்துக்குள்ளாக போலீசார் அவரை கைது செய்தனர்.
விசாரணையில் அவர் ஹவாய் மாகாணத்தை சேர்ந்த ரியான் வெஸ்லி ரூத் (வயது 58) என்பதும், அவர் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் என்பதும் தெரிய வந்தது.
எனினும் எதற்காக அவர் டிரம்பை கொலை செய்ய முயற்சித்தார் என்பது தெரியாத நிலையில் அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே ரியான் வெஸ்லி ரூத், டிரம்பை கொலை செய்வதற்காக சுமார் 12 மணி நேரம் கோல்ப் மைதானத்தில் காத்திருந்தது தெரியவந்துள்ளது. இதுப்பற்றி போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:-
ரியான் வெஸ்லி ரூத் கோல்ப் மைதானத்தில் இருந்து தப்பி ஓடும்போது ஒரு டிஜிட்டல் கேமரா, கைத்துப்பாக்கி உள்ளிட்டவை அடங்கிய பையை விட்டு சென்றார். அந்த பையில் சில உணவுகளும் இருந்தன. இதன் மூலம் அவர் வெகு நேரம் கோல்ப் மைதானத்தில் காத்திருந்தது தெரிந்தது. அந்த வகையில் அவர் கோல்ப் மைதானத்தில் உள்ள ஒரு மரத்துக்கு அடியில் கிட்டத்தட்ட 12 மணி நேரமாக காத்திருந்தது அவரது செல்போன் தரவுகள் மூலம் தெரியவந்தது.
டிரம்பின் வருகைக்காக காத்திருத்த ரியான் வெஸ்லி ரூத், அவர் தனது பார்வைக்கு நேராக வந்ததும் துப்பாக்கியால் சுடுவதற்கு தயாரானார். நல்வாய்ப்பாக பாதுகாப்பு படையினர் அவரது சதியை முறியடித்தனர்.
ரியான் வெஸ்லி ரூத்தின் குடும்பத்தினர், நண்பர்கள், அவருடைய கட்டுமான நிறுவனத்தின் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே போல் ரியான் வெஸ்லி ரூத்தின் சமூக வலைத்தள கணக்குகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதில் ரியான் வெஸ்லி ரூத் கடந்த காலங்களில் சமூக வலைத்தளத்தில் டிரம்பை கடுமையாக விமர்சித்து பதிவுகளை வெளியிட்டது தெரியவந்துள்ளது. கொலை முயற்சிக்கான காரணத்தை அறிய தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.
- அவர்களின் சந்திப்பு பற்றிய கூடுதல் விவரங்களை கூறவில்லை.
- குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிசும், டிரம்பும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே நேற்று மிச்சிகனில் பிரசாரத்தில் ஈடுபட்ட குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளர் டிரம்ப் பேசுகையில், அடுத்த வாரம் அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளதாக கூறினார். மேலும், பிரதமர் மோடி "அற்புதமானவர்" என்றும் அவரை அடுத்த வாரம் சந்திப்பேன் என்று கூறினார். ஆனால் அவர்களின் சந்திப்பு பற்றிய கூடுதல் விவரங்களை கூறவில்லை.
பிரதமர் மோடியும் டொனால்ட் டிரம்பும் கடைசியாக 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் அப்போதைய அமெரிக்க அதிபராக இந்தியா வந்தபோது சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் வில்மிங்டனில் 21-ம் தேதி நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடி இம்மாதம் 21-ம் தேதி அமெரிக்காவுக்குச் செல்கிறார். வரும் 21, 22, 23 ஆகிய 3 நாள்கள் அவர் அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார் என்று இந்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
- வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
- இன்றும் பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதித்தது என ஜப்பான் ராணுவம் தெரிவித்துள்ளது.
டோக்கியோ:
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
இந்நிலையில், வடகொரியா இன்று மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணையை பரிசோதனை செய்தது என ஜப்பான் நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.
அணு ஆயுதப் போருக்கு தயார் என வடகொரிய அதிபர் அறிவித்த சில தினங்களுக்கு பின்னர் தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
- டிரம்ப் மீது இதுவரை இரு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
- டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது இதுவரை இரு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.
அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
துப்பாக்கிச்சூடு முயற்சி முடிந்த இரண்டே நாட்களில் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபரான டிரம்பிடம் தொலைபேசியில் பேசினார் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப்புடன் தொலைபேசியில் உரையாடினார். அப்போது டிரம்ப் பாதுகாப்பாக இருப்பதை அறிந்து நன்றி தெரிவித்துக் கொண்டார். இது ஒரு சுமூகமான மற்றும் சுருக்கமான உரையாடலாக இருந்தது என தெரிவித்துள்ளது.
- யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது.
- யாகி புயல் இந்த ஆண்டின் மிக வலிமையான புயல்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டது.
நேபிடோவ்:
தென்சீனக் கடலில் உருவான யாகி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது.
இந்தப் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டி போட்டு சென்றது.
இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. 77 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை மெதுவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது. இதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.
- ஈரான் தூதுவர் மொஜிதபா அமானி -யும் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
- பேஜர்கள் வெடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லெபனானில் ஹிஸ்புல்லா கிளர்ச்சியாளர்கள் பயன்படுத்தி வந்த தகவல் பரிமாற்ற கருவிகளான பேஜர் கருவிகள் நூற்றுக்கணக்கில் அடுத்தடுத்து வெடித்ததில் 2,570 க்கும் மேற்பட்டோர் வரை படுயாகம் அடைந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்த வெடிவிபத்துகளில் லெபனானுக்கான ஈரான் தூதுவர் மொஜிதபா அமானி -யும் படுகாயமடைந்துள்ளதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
லெபனானின் தெற்கு பகுதியில் உள்ள தலைநகர் பெய்ரூட்டில் அல்-ஷஹ்ரா மருத்துவமனையில் பலரது பாக்கெட்டுகளில் இருந்த கையடக்க பேஜர்கள் முதலில் வெடித்துள்ளது. இதனைத்தொடர்ந்து பல்வேறு இடங்களிலும் ஹிஸ்புல்லா உறுப்பினர்கள் வைத்திருந்த பேஜர்கள் அடுத்தடுத்து வெடித்துள்ளன.
இதுவரை தாங்கள் சந்தித்த மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் இது என்றும் இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. பாலஸ்தீன போரில் காசா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக லெபனான் எல்லையிலிருந்து இஸ்ரேலிய பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ராக்கெட் மற்றும் டிரோன் தாக்குதல்கள் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஹிஸ்புல்லா உறுப்பினர்களின் பேஜர்கள் வெடிக்கும் வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படுகாயமடைந்தார்களின் நிலை குறித்த தகவல்கள் முழுமையாக வெளியாகவில்லை.
- பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- நட்புறவு, ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
குஜராத் மாநிலம் மெஹ்சானா மாவட்டத்தில் 1950-ம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் தேதி பிறந்த நரேந்திர தாமோதர்தாஸ் மோடி இன்று தனது 74வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். பிறந்தநாளை ஒட்டி பிரதமர் மோடிக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இத்தாலி நாட்டு பிரதமர் ஜார்ஜியா மெலோனி பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்."
"நமக்காக காத்திருக்கும் உலகளாவிய சவால்களை ஒன்றாக எதிர்கொள்ளவும், இத்தாலி மற்றும் இந்தியா இடையிலான நட்புறவு, ஒத்துழைப்பு ஆகியவற்றை தொடர்ந்து வலுப்படுத்துவோம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.
- கொலை முயற்சியில் துப்பாக்கி குண்டு டிரம்பின் காதை உரசி சென்றது.
- துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்டு டிரம்ப்-இன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மீது இதுவரை இரண்டு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முதல் முறை அரங்கேறிய கொலை முயற்சியில் துப்பாக்கி குண்டு டிரம்பின் காதை உரசி சென்றது.
அப்போது நூலிழையில் உயிர்தப்பிய டிரம்ப் அதன் பிறகு தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டினார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் மர்ம நபர் துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்டு டிரம்ப்-இன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனால் டிரம்ப் மீது நடத்தப்பட இருந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் தோல்வியில் முடிந்தது. அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும், துப்பாக்கி சூடு முயற்சி முடிந்த இரண்டே நாட்களில் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது. இரண்டாவது முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட இருந்தது பற்றி பேசிய டிரம்ப், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நான் நாட்டை காப்பாற்றி விடுவேன் என்று எண்ணி என்னை சுட்டுத் தள்ள முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.






