யாகி புயல் பாதிப்பு: மியான்மரில் பலி எண்ணிக்கை 226 ஆக அதிகரிப்பு

யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது. யாகி புயல் இந்த ஆண்டின் மிக வலிமையான புயல்களில் ஒன்று என தெரிவிக்கப்பட்டது.
யாகி புயல் பாதிப்பு: மியான்மரில் பலி எண்ணிக்கை 226 ஆக அதிகரிப்பு
Published on

நேபிடோவ்:

தென்சீனக் கடலில் உருவான யாகி புயல் பிலிப்பைன்ஸ், தெற்கு சீனா, வியட்நாம், லாவோஸ் மற்றும் மியான்மர் நாடுகளை கடுமையாக தாக்கியது.

இந்தப் புயலை தொடர்ந்து ஏற்பட்ட கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஆகியவை ஏற்பட்டது. இதனால் மக்களின் வாழ்க்கையை சூறாவளி புரட்டி போட்டு சென்றது.

இந்நிலையில், மியான்மரில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 226 ஆக உயர்ந்துள்ளது. 77 பேர் காணாமல் போயுள்ளதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மியான்மர் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளுடனான தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக, உயிரிழப்பு எண்ணிக்கை மெதுவாக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

யாகி புயல் முன்னதாக வியட்நாம், வடக்கு தாய்லாந்து மற்றும் லாவோசைத் தாக்கியது. இதில் வியட்நாமில் கிட்டத்தட்ட 300 பேரும், தாய்லாந்தில் 42 பேரும், லாவோசில் 4 பேரும் உயிரிழந்ததாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் ஒருங்கிணைப்பு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com