என் மலர்
உலகம்
- ஆவேசத்துடன் கண்மூடித்தனமாக அவருடைய இருக்கையை தொடர்ந்து உதைத்தார்.
- 30 வினாடிகள் கொண்ட அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அமெரிக்காவின் ஆஸ்டின் நகரில் இருந்து லாஸ் ஏஞ்சல்சுக்கு யுனைடட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று புறப்பட்டது. நடுவானில் அந்த விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் பயணித்த வாலிபர் ஒருவர் திடீரென தனது இருக்கை மீது ஏறினார்.
பின்னர் தனது இருக்கையை பின்பக்கமாக எட்டி உதைத்தார். ஆவேசத்துடன் கண்மூடித்தனமாக அவருடைய இருக்கையை தொடர்ந்து உதைத்தார். 30 வினாடிகள் கொண்ட அந்த காட்சி இணையத்தில் வெளியாகி வலைத்தளவாசிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
'இவரை விமானத்தில் ஏற்றியது யார்?' உள்ளிட்ட கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
Video captures bizarre moment a passenger repeatedly kicks a seat on a United Airlines flight from Austin to Los Angeles on November 16.
— Breaking Aviation News & Videos (@aviationbrk) November 26, 2024
The reasons for why the man was acting in such a manner remain unclear. He was later restrained and tied up by three other passengers.… pic.twitter.com/kXHh4VMZTm
- டிரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மிரட்டல்.
- அமெரிக்கா பாதுகாப்புத்துறை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துரித நடவடிக்கை.
அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் அடுத்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார்.
இதற்கிடையே தன்னுடைய கேபினட்டில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் டொனால்டு டிரம்பால் நியமிக்கப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுக்கு வன்முறை மற்றும் உயிருக்கு ஆபத்து போன்ற மிரட்டல் வந்துள்ளது. அவர்களுடன் வசிப்பவர்களுக்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது என டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition- ஆட்சி அதிகாரம் மாறுதல்) செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
வெடிகுண்டு மிரட்டல்களில் இருந்து புரளி வரை இருந்தது. இதனைத் தொடர்ந்து சட்ட அமலாக்க மற்றும் பிற அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவாக செயல்பட்டனர். டிரம்ப் மற்றும் நியமிக்கப்பட்டவர்களும் அவர்களின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கின்றனர். எனவும் தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எலிஸ் ஸ்டெபானிக் உள்ளிட்டோருக்கு மிரட்டல் வந்துள்ளது. இவர் ஐ.நா.வின் அடுத்த தூதராக செயல்பட இருக்கிறார்.
- இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
- இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
வாஷிங்டன்:
வங்கதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ண தாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது உள்பட தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்த கோர்ட், 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.
அப்போது அவரை விடுதலை செய்யக்கோரி கோர்ட் முன் ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் ஏராளமானோர் காயமடைந்த நிலையில் அரசு வக்கீல் சைபுல் இஸ்லாம் ஆரிப் அடித்துக் கொல்லப்பட்டார். அதற்கான காரணம் வெளியாகவில்லை. இக்கொலையை கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், ஆப்பிரிக்கா- அமெரிக்க நடிகை மற்றும் பாடகியான மேரி மில்பென் இந்து துறவி கைது செய்யப்பட்டது குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மேரி பில்பென் கூறுகையில், சின்மோய் கிருஷ்ண தாஸின் சிறைவாசம் மற்றும் வங்கதேசத்தில் தீவிரவாதிகளால் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான தொடர்ச்சியான தாக்குதல்கள் உலகத் தலைவர்களால் இப்போது கவனிக்கப்பட வேண்டும். மத சுதந்திரத்தையும், உலகளவில் உள்ள அனைத்து விசுவாசிகளின் பாதுகாப்பையும் நாம் பாதுகாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
- இலங்கையில் கனமழை பெய்து வருகிறது.
- இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 4 பேர் உயிரிழந்தனர்.
கொழும்பு:
தென்மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் கனமழை பெய்து வருகிறது.
கனமழையால் பல்வேறு ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக அந்நாட்டின் கிழக்கு கடலோர பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இதனால் 2.30 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் பாதுகாப்பான இடங்களில், நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், இலங்கையில் பெய்துவரும் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 2 குழந்தைகளும் அடக்கம்.
மேலும், மழை வெள்ளத்தில் சிக்கி பலர் மாயமாகியுள்ளனர். அவர்களை தேடும் பணிகள் நடைபெற்று வருகிறது. ராணுவமும், கடற்படையும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.
- இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கினார்.
- அவர் ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரராகி உள்ளார்.
லண்டன்:
லாட்டரி எடுக்கும் எல்லோருக்குமே அதிர்ஷ்டம் கிடைப்பதில்லை. ஒரு சிலருக்கு மட்டுமே எதிர்பாராத பம்பர் பரிசுகள் கிடைக்கும்.
அதன்படி, இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அங்குள்ள நேஷனல் லாட்டரியில் பரிசுச்சீட்டு வாங்கியுள்ளார்.
இந்நிலையில், லாட்டரி மூலம் அவருக்கு ஒரே நாளில் 177 மில்லியன் பவுண்டு (1800 கோடி ரூபாய்) பரிசு கிடைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் இதற்கு முன் ஒரு முறை 195 மில்லியன் பவுண்டுகளும், ஒருமுறை 184 மில்லியன் பவுண்டுகளும் பரிசாகக் கிடைத்துள்ளன.
பிரபல இசையமைப்பாளர் ஹாரி ஸ்டைல்சை விட அதிக சொத்து மதிப்பு கொண்டவராக மாறியுள்ளார்.
இதன்மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒரே நாளில் லாட்டரி மூலம் கோடீஸ்வரராகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- குறிப்பிடத்தக்க டிரெண்ட் எதுவும் உருவாகவில்லை.
- டிக்ஷனரி தளத்தில் 200 மடங்கு அதிக தேடல் பெற்றது.
ஆன்லைன் அகராதி வலைதளமான டிக்ஷனரி (Dictionary.com) 2024 ஆண்டின் வார்த்தையாக 'demure' (டெமூர்) தேர்வு செய்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரையிலான காலக்கட்டத்தில் டெமூர் என்ற வார்த்தை பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க டிரெண்ட் எதுவும் உருவாகவில்லை.
எனினும், ஆகஸ்ட் 18 ஆம் தேதி இந்த வார்த்தையை 14 மடங்கு அதிகளவு ஆர்வம் இருந்தது. ஆகஸ்ட் மாதத்திற்கு முந்தைய தேதிகளில் இருந்ததை விட டெமூர் வார்த்தைக்கு டிக்ஷனரி தளத்தில் 200 மடங்கு அதிக தேடல்களை பெற்றுள்ளது.
அதிக தேடல் காரணமாக ப்ரைன்ராட், ப்ராட், தீவிர வானிலை, மிட்வெஸ்ட் நைஸ் போன்ற பிரபல வார்த்தைகளை முறியடித்து நியூமெரோ யூனோ (அதாவது மற்றவைகளை விட அதிக பிரபலமானது) என்ற நிலையை எட்டியது.
கடந்த ஆகஸ்ட் மாத துவக்கத்தில் சிகாகோவை சேர்ந்த லெப்ரான் என்ற பெண் சிறு வீடியோவை வெளியிட்டார். வீடியோவில் தனது மேக்அப்-ஐ அவரே ரசித்து வர்ணிக்கும் ஆடியோ இடம்பெற்று இருந்தது. தன்னை வர்ணிக்கும் போது லெப்ரான் மற்ற வார்த்தைகள் இடையே "டெமூர்" என்ற வார்த்தையை பயன்படுத்தினார்.
இந்த ஆடியோ உலகளவில் வைரல் ஆக, பல்வேறு பிரபலங்களும் டெமூர் வார்த்தையை பயன்படுத்தினர். உலகளவில் வைரலான டெமூர் வார்த்தை இந்த ஆண்டிற்கான வார்த்தையாக தேர்வு செய்யப்பட்டது சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.
- 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர்.
- யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்துவிடும்.
ஜப்பானில் சுமார் 1000 வீடுகள் வரை அத்துமீறி நுழைந்த குற்றவாளி ஒருவர் அதற்காகக் கூறியுள்ள காரணம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள Dazaifu என்ற நகரில் மற்றவர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகச் சந்தேகத்தின் பேரில் 37 வயதுடைய நபரை காவல்துறை கடந்த திங்கள்கிழமை அன்று காவலில் எடுத்ததாக விசாரித்துள்ளனர்.
விசாரணையில் தான் 1000 வீடுகளுக்குக்கள் இதுவரை அத்துமீறிப் புகுந்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார். அவ்வாறு மற்றவர் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது தனது மன அழுத்தத்தைக் குறைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

"மற்றவர்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைவது என்னுடைய ஒரு பொழுதுபோக்காகும், நான் அதை 1,000 தடவைகளுக்கு மேல் செய்துள்ளேன், யாராவது என்னைக் கண்டுபிடிப்பார்களா இல்லையா என்று யோசிக்கும்போது என் உள்ளங்கைகள் வியர்த்துவிடும்.
அந்த உணர்வினால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், இது என் மன அழுத்தத்தைக் குறைக்கிறது" என்று அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
அந்நாட்டின் மைனிச்சி ஷிம்பன் [Mainichi Shimbun] செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டது. இதைத்தொடர்ந்து இணையத்திலும் இது பேசுபொருளாகி வருகிறது.
- போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
- இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது.
டாக்கா:
வங்காளதேசத்தில் இந்து மத தலைவரான இஸ்கான் அமைப்பை சேர்ந்த சின்மோய் கிருஷ்ணதாசை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போராட்டங்களை தூண்டிவிட்டது, தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அவர் சிட்டகாங் நகரில் உள்ள மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு ஜாமீன் வழங்க கோர்ட்டு மறுத்தது. மேலும் 10 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டது.
அப்போது அவரை விடுதலை செய்யக் கோரி கோர்ட்டு முன்பு ஏராளமான இந்துக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் தடியடி, கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதனால் போராட்டக்காரர்கள்-போலீசார் இடையே மோதல் ஏற்பட்டது.
மேலும் இந்துக்கள் மீது ஒரு கும்பலும் தாக்குதல் நடத்தினர். இதில் ஏராளமானோர் காயம் அடைந்த நிலையில் அரசு வக்கீல் சைபுல் இஸ்லாம் ஆரிப் என்பவர் அடித்துக் கொல்லப்பட்டார். அவர் கொல்லப்பட்டதற்கான காரணம் குறித்து உறுதியான தகவல் வெளியாகவில்லை.
இக்கொலையை கண்டித்து வக்கீல்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய 24 மணிநேர கெடு விதித்தனர். மேலும் இன்று கோர்ட்டு நடவடிக்கைகளை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர்.
இதற்கிடையே சிட்டகாங்கில் போராட்டம் நடந்து வரும் நிலையில் இந்துக்களை குறிவைத்து தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
சிட்டகாங்கின் பிரங்கி பஜாரில் உள்ள லோகோநாத் கோவில், மான்சா மாதா கோவில்,ஹசாரி லேனில் உள்ள காளி மாதா கோவில் ஆகிய கோவில்களின் மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியது.
இதற்கிடையே தாக்கூர் கான் பகுதியில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய இந்துக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத் தியதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் நாடு முழுவதும் நடக்கும் போராட்டங்களில் இந்துக் கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டுள்ளது.
இதற்கிடையே வங்காள தேச இடைக்கால அரசின் தலைவர் முகமது யூனுஸ் கூறும்போது, மக்கள் அமைதி காக்க வேண்டும். எந்தவிதமான விரும்பத் தகாத செயல்களிலும் ஈடு படாமல் இருக்க வேண்டும். வங்காளதேசத்தில் எந்த விலையிலும் மத நல்லி ணக்கத்தை உறுதி செய்வ தற்கும் நிலைநிறுத்துவதற் கும் இடைக்கால அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்றார்.
- ஜே.பட்டாச்சார்யா 1968-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர்.
- அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சித்த இவர், டிரம்ப் பிரசார குழுவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள டிரம்ப், தனது நிர்வாகத்தில் பணியாற்ற உள்ள அதிகாரிகளை நியமித்து வருகிறார்.
இந்த நிலையில் அமெரிக்க சுகாதார மைய இயக்குநராக இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் ஜே. பட்டாச்சார்யாவை டிரம்ப் தேர்வு செய்துள்ளார்.
இதுகுறித்து ஜே.பட்டாச்சார்யா கூறும்போது, அதிபர் டிரம்ப் என்னை தேசிய சுகாதார நிறுவனங்களின் இயக்குநராக நியமித்ததன் மூலம் நான் பெருமையடைகிறேன். பணிவாக இருக்கிறேன். அமெரிக்க அறிவியல் நிறுவனங்களை நாங்கள் சீர்திருத்துவோம். அதனால் அவர்கள் மீண்டும் நம்பிக்கைக்கு தகுதியானவர்கள். அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற சிறந்த அறிவியலின் பலன்களைப் பயன்படுத்துவோம் என்றார்.
ஜே.பட்டாச்சார்யா 1968-ம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். 1997-ம் ஆண்டு ஸ்டான்போர்ட் பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் பட்டம் பெற்றார். 2000-ம் ஆண்டில் ஸ்டான்போர்டின் பொருளாதாரத் துறையிலிருந்து முனைவர் பட்டம் பெற்றார். ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தில் சுகாதாரக் கொள்கைப் பேராசிரியராக பணியாற்றினார். அமெரிக்க அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கையை விமர்சித்த இவர், டிரம்ப் பிரசார குழுவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனக்கு வேண்டிய உணவை தொலைபேசி அழைப்பு மூலமாக நிர்வாகத்துக்கு தெரிவித்தார்.
- சிறிது நேரத்தில் அவருடைய அறைக்கு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது.
ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஜோஷி. இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். சீனாவுக்கு சுற்றுலா சென்ற இவர் அங்குள்ள ஓட்டலில் தங்கியிருந்தார். அப்போது தனக்கு வேண்டிய உணவை தொலைபேசி அழைப்பு மூலமாக நிர்வாகத்துக்கு தெரிவித்தார்.
இதனையடுத்து சிறிது நேரத்தில் அவருடைய அறைக்கு தொலைபேசிக்கு அழைப்பு வந்தது. அதில் 'உங்களுடைய அறைக்கு நீங்கள் ஆா்டர் செய்த உணவுப்பொருட்கள் வந்துள்ளன' என்று கூறப்பட்டது.
அறையின் கதவுக்கு பின்னால் அவருக்கு ஆச்சரியம் காத்திருந்துள்ளது. கதவை திறந்து பார்த்தால் அட்டைபெட்டி வடிவில் இடுப்பளவு உயரம் கொண்ட ரோபோ ஒன்று நின்று கொண்டு உணவு டெலிவரி செய்தது.
'சீனாவில் எப்படி உணவு டெலிவரி செய்யப்படுகிறது' என்ற தலைப்புடன் சமூக வலைத்தளத்தில் வெளியான இந்த வீடியோ 1½ லட்சம் லைக்குகளை பெற்று வைரலாகி வருகிறது.
- ஒரு உணவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த பீட்சாவின் நடுவே பொரித்த தவளை உள்ளது.
- அவித்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட முட்டை, தவளையின் கண்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
வித்தியாசமான உணவு வகைகள் தயாரிப்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி அதிகளவில் பகிரப்படும். அவற்றில் சில உணவுகள் வரவேற்பும், சில உணவுகள் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகும்.
அந்த வகையில் சமூக வலைத்தளத்தில் பரவி வரும் வீடியோவில் சீன உணவகம் ஒன்றில் வறுத்த தவளை கறியுடன் கூடிய பீட்சா குறித்த காட்சிகள் உள்ளன. அங்குள்ள ஒரு உணவகத்தில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த பீட்சாவின் நடுவே பொரித்த தவளை உள்ளது. அதில் அவித்து இரண்டு துண்டுகளாக வெட்டப்பட்ட முட்டை, தவளையின் கண்களாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
'பீட்சாவுக்கு உரிய மரியாதையே போய்விட்டது' உள்ளிட்ட கருத்துகளுடன் இது தொடர்பான வீடியோ காட்சிகள் மற்றும் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- லெபனானில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து போர் நிறுத்த நாட்கள் நீடிப்பது அமையும்.
- நாங்கள் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம். எதாவது மீறல் நடைபெற்றால் பதிலடி கொடுப்போம்.
ஹிஸ்புல்லா அமைப்பினரை குறிவைத்து லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு எதிராக லெபனானில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் இஸ்ரேலின் வடக்குப் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேறினர். அவர்களை மீண்டும் அவர்களுடைய இடத்தில் குடியமர்த்துவதுதான் நோக்கம் என இஸ்ரேல் அறிவித்து கடந்த மாதம் 1-ந்தேதியில் இருந்து லெபனான் மீது தாக்குதல் நடத்தியது. தரைவழி தாக்குதலையும் தொடங்கியது.
இதனால் இஸ்ரேல்- ஹிஸ்புல்லா இடையிலான சண்டை அதிகமானது. அடிக்கடி இஸ்ரேல் தாக்குவதும், ஹிஸ்புல்லா பதில் தாக்குதல் நடத்துவதுமாக இருந்தது.
இந்த நிலையில்தான் இஸ்ரேல்- லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்பட அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், ஐ.நா. முயற்சி மேற்கொண்டன.
இதற்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது. இஸ்ரேல் அரசின் கீழ் இயங்கி வரும் அதிக அதிகாரம் படைத்த பாதுகாப்பு கேபினட் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் இன்று நள்ளிரவு முதல் போர் நிறுத்தம் அமல் படுத்தப்படுவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு கூறுகையில் "லெபனானில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்து போர் நிறுத்த நாட்கள் நீடிப்பது அமையும். நாங்கள் ஒப்பந்தத்தை அமல்படுத்துவோம். எதாவது மீறல் நடைபெற்றால் பதிலடி கொடுப்போம். பெற்றி பெறும் வரை நாங்கள் ஒன்றுபட்டு இருப்போம்.
ஹமாஸை அழித்தொழிக்கும் பணியை முடிப்போம், பணயக்கைதிகள் அனைவரையும் வீட்டிற்கு அழைத்து வருவோம், காசா இனி இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்வோம், மேலும் வடக்கில் வசிப்பவர்களை பாதுகாப்பாக வீடு திருப்புவோம்.
வடக்கில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவது உட்பட அதன் அனைத்து இலக்குகளையும் அடையும் வரை போர் முடிவுக்கு வராது. அது தெற்கில் நடந்தது போல் நடக்கும் என்பதை நான் உங்களுக்குச் சொல்கிறேன்" இவ்வாறு நேதன்யாகு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணி முதல் இஸ்ரேல்- லெபனான் போர் நிறுத்தம் தொடங்கியதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.






