search icon
என் மலர்tooltip icon

    உலகம்

    டொனால்டு டிரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்காவில் பரபரப்பு
    X

    டொனால்டு டிரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: அமெரிக்காவில் பரபரப்பு

    • டிரம்ப் நியமித்த அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் மிரட்டல்.
    • அமெரிக்கா பாதுகாப்புத்துறை அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் துரித நடவடிக்கை.

    அமெரிக்காவில் இந்த மாதம் தொடக்கத்தில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் அமோக வெற்றி பெற்றார். இவர் அடுத்த மாதம் 20-ந்தேதி அதிபராக பதவி ஏற்க உள்ளார்.

    இதற்கிடையே தன்னுடைய கேபினட்டில் இடம் பெறக்கூடிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை நியமித்து வருகிறார். எலான் மஸ்க், விவேக் ராமசாமி ஆகியோருக்கு முக்கிய பொறுப்பு வழங்கியுள்ளார்.

    இந்த நிலையில் டொனால்டு டிரம்பால் நியமிக்கப்பட்ட மந்திரிகள், அதிகாரிகளுக்கு வன்முறை மற்றும் உயிருக்கு ஆபத்து போன்ற மிரட்டல் வந்துள்ளது. அவர்களுடன் வசிப்பவர்களுக்கும் இந்த மிரட்டல் வந்துள்ளது என டிரம்ப் மாறுதலுக்கான (Trump transition- ஆட்சி அதிகாரம் மாறுதல்) செய்தி தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

    வெடிகுண்டு மிரட்டல்களில் இருந்து புரளி வரை இருந்தது. இதனைத் தொடர்ந்து சட்ட அமலாக்க மற்றும் பிற அதிகாரிகள் இலக்கு வைக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய விரைவாக செயல்பட்டனர். டிரம்ப் மற்றும் நியமிக்கப்பட்டவர்களும் அவர்களின் விரைவான நடவடிக்கைக்கு நன்றி தெரிவிக்கின்றனர். எனவும் தெரிவித்துள்ளார்.

    நியூயார்க்கில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எலிஸ் ஸ்டெபானிக் உள்ளிட்டோருக்கு மிரட்டல் வந்துள்ளது. இவர் ஐ.நா.வின் அடுத்த தூதராக செயல்பட இருக்கிறார்.

    Next Story
    ×