என் மலர்
தலைப்புச்செய்திகள்
- இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவிப்பு.
- அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் ரோகித் 7 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி, ரோகித் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
301 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 331 சிக்ஸர்களை அடித்துள்ளார். 267 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் இதுவரை 337* சிக்ஸர்களை விளாசியுள்ளார். இப்பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும்.
- உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
கோயில்களில் ஆரத்தித் தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கையை அர்ச்சகர்கள் எடுக்க கூடாது என்று மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் செயல் அலுவலர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
மேலும், தட்டில் பக்தர்கள் செலுத்தும் பணத்தை வாங்கி கோயில் உண்டியலில் போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனை கோயிலை கண்காணிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும், உத்தரவை பின்பற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அர்ச்சகர்களுக்கு பொது மக்கள் கொடுப்பதை தட்டடில் போடுவதை பிடுங்கி எந்த அரசாங்கத்திற்கும் உரிமையில்லை.
மதுரை பாலதண்டாயுத சுவாமி கோயில் அறங்காவலர் சுற்றறிக்கையால் அர்ச்சகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்
- இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ராயன் திரைப்படத்தை தொடர்ந்து தனுஷ் `நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
மேலும், இந்தப் படத்தின் கோல்டன் ஸ்பேரோ மற்றும் யெடி பாடல்கள் வெளியிடப்பட்டன. இந்தப் பாடல்கள் வெளியானது முதலே நல்ல வரவேற்பை பெற்றன. இந்த நிலையில் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகவுள்ளதாக படக்குழு புது போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இதில் மாத்யூ தாம்ஸ் மற்றும் மற்றொரு நபரும் ஒரு கிச்சனில் செஃப் உடை அணிந்து கத்தியுடன் சமைக்கும் காட்சி அமைந்துள்ளது. இது எம்மாதிரியான கதைக்களத்துடன் இருக்கும் என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- கேன் வில்லியம்சன் கடந்த சில ஆண்டுகளில் அவர் ஐதராபாத், குஜராத் அணிக்காக ஆடியுள்ளார்.
- எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் வரும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார்.
நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பல ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வருகிறார். கடந்த சில ஆண்டுகளில் அவர் ஐதராபாத், குஜராத் அணிக்காக ஆடியுள்ளார். ஆனால் அண்மையில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் அவரை எந்த எந்த அணியும் ஏலத்தில் எடுக்காததால் வரும் ஐபிஎல் தொடரில் கேன் வில்லியம்சன் விளையாட மாட்டார்.
தற்போது கேன் வில்லியம்சன், பாகிஸ்தான் மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு எதிரான முத்தரப்பு தொடரில் விளையாடி வருகிறார்.
இந்நிலையில், உங்களுக்கு மிகவும் பிடித்த NICK NAME என்ன என்று தென்னாப்பிரிக்க வீரர் ஹெண்ட்ரிச் க்ளாஸன், கேன் வில்லியம்சனிடம் கேட்டுள்ளார்.
அதற்கு அவர், "இந்தியாவில் அனைவரும் என்னை 'கேன் மாமா' என அழைப்பார்கள். எனக்கு அது மிகவும் பிடிக்கும்" என்று தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
- விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன்.
அத்திகடவு - அவிநாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக கோவை அன்னூர் அருகே முன்னாள் முதல்வரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவிக்கும் விழா நடைபெற்று வருகிறது.
இந்த விழாவில் விவசாயிகள், அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
விழா மேடைக்கு எடப்பாடி பழனிசாமி மாட்டு வண்டியில் வருகை தந்தார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பிறகு மேடையில் பேசிய எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-
ஒரு விவசாயியாக தொடங்கி முதலமைச்சராக ஆவேன் என கனவிலும் நினைத்தது இல்லை. ஒரு விவசாயியாக நான் எனது பிறவிப்பயனை அடைந்து விட்டேன்.
அத்திக்கடவு அவிநாசி திட்டத்திற்கு எதுவும் செய்யாமலேயே வந்து திறந்து வைப்பவர்களும் உள்ளனர். விவசாயிகளின் பங்களிப்போது அத்திக்கடவு அவிநாசி திட்டம் நிறைவேற்றப்பட்டது. உழைப்பது விவசாயிகள், ஆனால் அனுபவிப்பது வேறு ஒருவர்.
விவசாயிகளின் கனவை நிறைவேற்ற மாநில அரசு நிதியில் இருந்தே திட்டத்தை நிறைவேற்ற உத்தரவிட்டேன். 3 மாவட்ட விவசாயிகளின் 60 ஆண்டு கால கனவு நிறைவேற்றப்பட்டுள்ளது.
என்னை யாரும் அடிமைப்படுத்த முடியாது. பணத்திற்கோ, புகழுக்கோ நான் மயங்கமாட்டேன்.
திறமையற்ற அரசு தான் தமிழகத்தில் தற்போது ஆட்சி செய்து வருகிறது. அதிமுக ஆட்சியில் அனைத்து ஏரிகளையும் நிரப்ப அவசியம் என இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது.
ஆட்சி மாற்றம் காரணமாக வெறும் 15 சதவீத பணிகளை முடிக்காமல் கிடப்பில் போடப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர்.
- இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
நாக சைதன்யா - சாய் பல்லவி நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'லவ் ஸ்டோரி' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் நேற்று வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.
இந்நிலையில் திரைப்படத்தின் இரண்டு நாள் வசூலை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி திரைப்படம் உலகளவில் 41.20 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இன்னும் வரும் நாட்களில் திரைப்படம் கூடுதல் வசூலைப்பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவிப்பு
- தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு136 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
இந்நிலையில், முதல் இன்னிங்சில் விராட் கோலி பீல்டிங் செய்துகொண்டிருக்கும்போது பவுண்டரி லைனுக்கு வெளியே இருந்த குட்டி ரசிகர் ஒருவருக்கு கை கொடுத்தார். பின்னர் அந்த குட்டி ரசிகர் கொடுத்த கியூட்டான ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- மக்கள், பத்திரிக்கையாளர்களை விஜய் சந்தித்து பேச வேண்டும் என்றார் பிரேமலதா விஜயகாந்த்.
- யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
மதுரை எல்லீஸ் நகர் பகுதியில் தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் முதல்முறையாக யாருடைய கூட்டணியும் இல்லாமல் தனித்துப் போட்டியிட்டு சாதனை செய்தது தேமுதிக மட்டும்தான்.
தமிழ்நாட்டில் தொடர்ந்து சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
விஜயை செந்தூரப்பாண்டி படம் மூலம் தமிழகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் கேப்டன் விஜயகாந்த். விஜய் எங்கள் வீட்டு பிள்ளை என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், சினிமா வேறு அரசியல் வேறு.
மக்களை சந்தித்து, பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினால் தான் அரசியலில் விஜய் நிலைத்து நிற்க முடியும். யாரோடு கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கப் போகிறார் என்பதை விஜய் தான் தெளிவுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எல் & டி மும்பை ஓபன் டென்னிஸ் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.
- 15 வயதான மாயா ராஜேஸ்வரன் ரேவதி காலிறுதி போட்டியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
எல் & டி மும்பை ஓபன் டென்னிஸ் போட்டிகள் மும்பையில் நடைபெற்று வருகிறது.
இந்த டென்னிஸ் தொடரில் கோவையை சேர்ந்த தமிழ்நாட்டு வீராங்கனை மாயா ராஜேஸ்வரன் ரேவதி, காலிறுதியில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருந்தார்.
இந்நிலையில், 15 வயதான மாயா ராஜேஸ்வரன் ரேவதி அரையிறுதி போட்டியில் ஜப்பான் வீராங்கனை மெய் யமகுச்சியை எதிர்கொண்டார். இப்போட்டியில் 3-6 , 1-6 செட்கணக்கில் மாயா ராஜேஸ்வரன் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.
- டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் நடித்துள்ளார்
- அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடித்துள்ளார்
தமிழ் திரையுலகின் முன்னணி நடன இயக்குனர் சதீஷ், இவர் முதல் முறையாக இயக்குனராக அறிமுகமாகிறார். டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் அயோத்தி பட நாயகி ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்க ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் தயாரித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு பணி சமீபத்தில் முடிவடைந்த நிலையில். படத்தின் டைட்டிலை நாளை மாலை 5 மணிக்கு வெளியிடப்போவதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. போஸ்டரில் கவின் ஸ்டைலிஷ் தோற்றத்தில் guitar- உடன் இருக்கிறார்.
இப்படத்திற்கு ஹரீஷ் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை ஆர்சி பிரனவ் கவனிக்கிறார். படத்தின் இசையை ஜென் மார்டின் மேற்கொள்கிறார். இப்படத்திற்கு கிஸ் என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் பரவி வருகின்றன. இத்திரைப்படம் ஒரு ரோம் - காம் கதையம்சத்தில் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மணிப்பூரில் முதல்வர் பைரன் சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது.
- மணிப்பூரில் இதுவரை பதவி வகித்த 12 முதல்வர்களில் 10 பேர் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள்.
மணிப்பூரில் முதல்வர் பைரன்சிங் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மணிப்பூர் முதல்வர் பைரன் சிங் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
தனது ராஜினாமா கடிதத்தை இம்பாலில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அஜய் குமார் பல்லாவிடம் பைரன் சிங் வழங்கியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 2023 இல் குக்கி மெய்தேய் இங்குளுக்குக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தால் 200 க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். பெண் ஒருவர் நிர்வாணமாக ஊர்வலம் அழைத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பெண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்தனர். இடையில் சற்று ஓய்ந்த கலவரம் ஆயுதமேந்திய போராட்ட குழுக்களால் கடந்த வருட இறுதியில் மீண்டும் தீவிரமடைந்தது.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கடத்தி கொல்லப்பட்டனர். வீடுகள் தீக்கிரையாகின. இந்நிலையில் மாநிலத்தில் நடந்த கலவரத்துக்கு ஆளும் பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக ஆடியோ பதிவுகள் வெளியாகின.
இவை சித்தரிக்கப்பட்டவை என ஆளும் பாஜக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. ஆனால் போராட்டக்குழுக்கள் இதை ஏற்க மறுத்ததால் கடந்த வருட இறுதியில் மீண்டும் கலவரம் மூண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
ஆடியோ பதிவுகளை முன்வைத்து சுதந்திரமான விசாரணை நடத்தக்கோரி குக்கி அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, குற்றம்சாட்டப்பட்ட முதல்வர் பைரன் சிங் உரையாடல் அடங்கிய ஆடியோ டேப்புகளை ஆய்வு செய்து அதுகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மத்திய தடயவியல் ஆய்வகததிற்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், வழக்கு விசாரணையை மார்ச் 24 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
மணிப்பூர் கலவரத்திற்கு பாஜக முதல்வர் பைரன் சிங்கிற்கு தொடர்பு உள்ளதாக ஆடியோ பதிவுகள் வெளியான நிலையில், தனது முதல்வர் பதவியை பைரன் சிங் ராஜினாமா செய்துள்ளார்.
- சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.
- கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் சுற்று பயணத்திற்கான முழு தரவுகளையும் ஆதவ் அர்ஜூனா தயார் செய்வதாக கூறப்படுகிறது.
தமிழகம் முழுவதும் மக்களை நேரடியாக சென்று சந்திக்க தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நேர்காணல்களை நடத்தி கட்சி மாவட்ட செயலாளர்களை தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நியமித்திருந்தார்.






