என் மலர்
தலைப்புச்செய்திகள்
- செபி அமைப்பின் புதிய தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார்
- அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
அதானி குழுமம் பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி தலைவர் மாதபி பூரி புச்-க்கு தொடர்பு இருப்பதாக அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டி இருந்தது.
இந்த விவகாரத்தில் மாதபி பூரி புச் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில் தொடர்ச்சியாக வலியுறத்தப்பட்டு வந்தது.
இதனிடையே இந்திய பங்கு பரிவர்த்தனை அமைப்பின் (செபி) தலைவராக துஹின் காந்தா பாண்டே நியமனம் செய்யப்பட்டார் இவர் இப்பதவியில் 3 ஆண்டுகள் இருப்பார். இதற்கான உத்தரவை மத்திய அரசு நியமனக்குழு பிறப்பித்தது.
இந்நிலையில், செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மும்பை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செபி முன்னாள் தலைவர் மாதபி புரி புச் மற்றும் 5 பேர் மீது மீது பங்குச் சந்தை மோசடி மற்றும் ஒழுங்குமுறை மீறல்கள் தொடர்பாக விசாரிக்க வேண்டுமென பத்திரிகையாளர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் பேரில் நீதிபதி சஷிகாந்த் ஏக்நாத்ராவ் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
- இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.
- தண்டேல் திரைப்படம் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.
திரைப்படம் உலகளவில் இதுவரை 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி நெபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமாக உள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ?
- பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் தனது மகளை இளைஞர்கள் சிலர் ஈவ்டீசிங் செய்ததாக மத்திய அமைச்சர் ரக்ஷா கட்சே காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
தனது மகள் அவரது நண்பர்கள் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது இளைஞர்கள் சிலரால் ஈவ்டீசிங் செய்யப்பட்டதாக மத்திய அமைச்சர் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து கூறிய மத்திய அமைச்சர்,"எனது மகளுக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் மற்றவர்களின் நிலை என்னவாகும் ? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. பல ணெ்பகள் முன்வர தயங்குகிறார்கள், ஆனால் நாம் அமைதியாக இருக்கக்கூடாது என்று அவர் குறிப்பிட்டார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின
- இப்போட்டியில் பவர்பிளேவிற்குள்ளே 3விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது. எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பங்கேற்ற இந்த தொடரில் களமிறங்கின. இதில் ஏ பிரிவில் இந்தியா ம்றும் நியூசிலாந்து அணிகளும், பி பிரிவில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
ஏ பிரிவில் இடம்பெற்ற பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகளும் பி பிரிவில் இடம்பெற்று இருந்த இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேற்றப்பட்டன.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் - கில் ஜோடி சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். தனது 300 ஆவது ஒருநாள் போட்டியில் விளையாடிய விராட் கோலி 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹென்றி பந்துவீச்சில் கிளென் பிலிப்சின் அட்டகாசமான கேட்சில் கோலி தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதனால் பவர்பிளேவிற்குள்ளே 3விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது. அடுத்ததாக ஷ்ரேயாஸ் - அக்சர் ஜோடி இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டு ரன்களை சேர்த்தனர். கிட்டத்தட்ட 100 ரன்கள் பாட்னர்ஷிப்பை நெருங்கிய நிலையில், அக்சர் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி அரைசதம் கடந்த ஷ்ரேயாஸ் 79 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 23 ரன்னிலும் ஜடேஜா 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 45 ரன்கள் அடித்து அவுட்டானார். இதன்மூலம் 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு இந்தியா 249 ரன்கள் எடுத்தது.
- Court: State vs. A Nobody, என்ற தெலுங்கு திரைப்படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ளார்.
- ஹர்ஷ் ரோஷன் மற்றூம் ஸ்ரீதேவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்
Court: State vs. A Nobody, என்ற தெலுங்கு திரைப்படத்தை ராம் ஜெகதீஷ் இயக்கியுள்ளார். இப்படத்தை நடிகர் நானியின் வால் போஸ்டர் சினிமா மற்றும் பிரஷாந்தி திபிர்னேனி இணைந்து தயாரித்துள்ளனர்.
இப்படத்தில் ஹர்ஷ் ரோஷன் மற்றூம் ஸ்ரீதேவி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர் இவர்களுடன் சிவாஜி, சாய் குமார், ரோகினி மற்றும் ஹர்ஷவர்தன் நடித்துள்ளனர். ஹர்ஷ் ரோஷன் இதற்கு முன் நானியின் சரிபோதா சனிவாரம் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படம் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை மையப்படி கதைக்களம் அமைந்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 14 ஆம் தேதி வெளியாகவுள்ளது.படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதியை படக்குழு வீடியோ மூலம் தற்பொழுது அறிவித்துள்ளது. மார்ச் 7 ஆம் தேதி படத்தின் டிரெய்லர் வெளியாகவுள்ளது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.
- தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்.
தமிழ்நாட்டின் 12-ஆம் வகுப்பு மற்றும் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் முறையே 03.03.2025 மற்றும் 05.03.2025 அன்றும் தொடங்க இருக்கின்றன.
12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,21,057 மாணவ, மாணவியர்களும், 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை 8,23,261 மாணவ, மாணவியர்களும் தேர்வெழுதவுள்ளனர்.
இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாட்டில் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கேட்கப்படும் கேள்விகளுக்கு தெளிவாக பதில்களை எழுதுங்கள். எவ்வித பதட்டமும் வேண்டாம்.
படிக்கிற ஆர்வத்துடன் உங்கள் உடல்நலன் மீதும் கவனம் செலுத்துங்கள்.
தேர்வு காலம் முழுமையும் புத்துணர்ச்சியோடு நீங்கள் இருப்பது மிக முக்கியம்.
தேர்வில் நீங்கள் அனைவரும் வெற்றி பெறவும், சாதனை புரியவும் என் அன்பும், வாழ்த்தும்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- முதல் இன்னிங்சில் ஆடிய கேரளா 342 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் கேரளா அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.
அதன்படி களமிறங்கிய விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 379 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
அதன்பின் முதல் இன்னிங்சில் ஆடிய கேரளா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 342 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இதையடுத்து, 2 ஆவது இன்னிங்சில் ஆடிய விதர்பா அணி 5 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் முடிவிற்கு 375 ரன்கள் எடுத்துது.
இறுதிப் போட்டி டிரா ஆன நிலையில், முதல் இன்னிங்ஸில் கேரள அணியை விட கூடுதல் ரன்கள் எடுத்திருந்ததால் விதர்பா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதன்மூலம் 3வது முறையாக ரஞ்சி கோப்பையை வென்று விதர்பா அணி அசத்தியுள்ளது.
- இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'.
- ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்'. ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் புல் ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
திரைப்படம் வெளியாகி ஒரு வார ஆன நிலையில் டிராகன் திரைப்படம் இதுவரை 62 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் வரும் நாட்களில் 100 கோடி ரூபாயை திரைப்படம் வசூலிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தான் கதாநாயகனாக நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய இரண்டு திரைப்படங்களும் மாபெரும் வெற்றிப்பெற்றதால் பிரதீப் ரங்கநாதன் வளர்ந்து வரும் நாயகர்களில் முக்கிய பங்கை நிலைநாட்டியுள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன
- அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று அழைக்கப்படுகிறது.
ஆங்கிலத்தை அமெரிக்காவின் அதிகாரப்பூர்வ ஆட்சி மொழியாக நிர்ணயித்து அந்நாட்டு அதிபர் டிரம்ப் அரசாணையில் கையெழுத்திட்டார்.
ஃபெடரல் அரசு நிர்வாகம் மற்றும் அரசிடம் நிதி பெறும் அமைப்புகள், பிற மொழி பேசுபவர்களுக்கு உரிய மொழிபெயர்ப்பு உதவிகளை வழங்க வேண்டும் என 90களில் அதிபர் கிளிண்டன் பிறப்பித்த உத்தரவு இதன்மூலம் நீக்கப்பட்டுள்ளது. இனிமேல், மொழிபெயர்ப்பு உதவி வழங்குவது அந்தந்த அமைப்புகளின் முடிவுக்கு உட்பட்டது.
உலக அளவில் ஆங்கிலத்தை முதல் மொழியாகப் பேசுவோரில் 3-ல் 2 பங்கினர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் பரவலாகப் பேசப்படும் ஆங்கில மொழி அமெரிக்க ஆங்கிலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்திலும் அமெரிக்க குடியேற்றப் பகுதிகளிலும் ஆரம்ப காலகட்டத்தில் ஒரு மாதிரியான ஆங்கிலம் தான் பேசப்பட்டது. பின்னர் காலபோக்கில் ஆங்கில ஒலிப்பு முறை மற்றும் எழுத்தில் மாற்றம் ஏற்பட்டது.
அமெரிக்காவில் 350க்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன, ஆனாலும் வெள்ளை மாளிகை ஆவணங்களில் எப்போதும் ஆங்கிலம் மட்டுமே இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- லண்டன் இசை நிகழ்ச்சியையொட்டி இளையராஜாவுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
- Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இளைஞானி இளையராஜாவை நேரில் சந்தித்தார்.
அப்போது, லண்டன் இசை நிகழ்ச்சியையொட்டி இளையராஜாவுக்கு முதலமைச்சர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில்," இசைஞானி இளையராஜாவுடன் இன்றைய காலைப் பொழுது...
ஆசியாவிலேயே யாரும் செய்யாத சாதனையாக, வரும் மார்ச் 8 அன்று இலண்டன் மாநகரில் சிம்பொனி அரங்கேற்றத்தை நிகழ்த்தவுள்ளார் நம் மனதிற்கினிய ராஜா அவர்கள். தமிழ்நாட்டின் பெருமிதமான இசைஞானியின் இச்சாதனை முயற்சியை வாழ்த்துவதற்காக இன்று நேரில் சென்றேன்.
அப்போது, தாம் கைப்பட எழுதிய Valiant symphony இசைக்குறிப்புகளை உற்சாகத்துடன் என்னிடம் காட்டி மகிழ்ந்தார்.
உலகத் தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த இசைமூச்சான இளையராஜா அவர்களின் கணக்கற்ற சாதனைகளில் இந்தச் சாதனை ஒரு மணிமகுடமெனத் திகழ வாழ்த்துகிறேன்" என்று கூறினார்.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இசைஞானி இளையராஜா நன்றி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இளையராஜா தனது எக்ஸ் தள பக்கத்தில் குறிப்பிடுகையில், " முதல்வர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் தங்கள் நிறைந்த பணிச்சூழலில் நேரம் ஒதுக்கி நேரில் வந்து வாழ்த்தியதிலும், இசைக்கு அளித்த பேராசியும் என்னை மகிழ்ச்சியில் மூழ்கச் செய்தன! மிக்க நன்றி!" என குறிப்பிட்டிருந்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் உலக கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா டாஸ் தோல்வியை தொடங்கியது.
- ரோகித் 10 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்று வருகிறது.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரின் கடைசி லீக் போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்நிலையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணி தொடர்ச்சியாக 13 முறை டாஸில் தோற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் அதிக முறை டாசில் தோற்ற நெதர்லாந்து அணியின் சாதனையை இந்தியா முறியடித்துள்ளது.
2023ல் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக கோப்பை இறுதிப்போட்டி முதல் இன்று வரை நடந்த அனைத்து ஒருநாள் போட்டிகளிலும் இந்திய அணி டாசில் தொற்றுள்ளது. இதில் ரோகித் 10 முறையும், கே.எல்.ராகுல் 3 முறையும் டாசில் தோற்றுள்ளனர்.
தொடர்ச்சியாக அதிக முறை டாசில் தோற்ற கேப்டன்கள்:
வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் பிரையன் லாரா - 12 (அக். 1998 - மே 1999)
நெதர்லாந்து கேப்டன் பீட்டர் போரன் - 11 (மார்ச் 2011 - ஆகஸ்ட் 2013)
இந்தியா கேப்டன் ரோஹித் சர்மா - 10 (நவம்பர் 2023 - மார்ச் 2025)
- ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.
- ஹீரோ எலெக்ட்ரிக் கடந்த நிதியாண்டில் 11,500 மின்சார பைக்குகளை மட்டுமே விற்பனை செய்தது.
இந்தியாவின் முதல் இ- ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ எலெக்ட்ரிக், ரூ.301 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திவாலானது.
கடந்த டிசம்பர் மாதம் திவால் நடவடிக்கை தொடங்கிய நிலையில், அந்நிறுவனத்தில் முதலீடு செய்ய விரும்புவோர் ஏலத் தொகையை பதிவு செய்வதற்கான கால அவகாசம் மார்ச் 14ம் தேதி நிறைவடைகிறது.
பாங்க் ஆஃப் பரோடா, கோடக் மஹிந்திரா வங்கி, சவுத் இந்தியன் வங்கி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி உள்ளிட்ட வங்கிகளிடம் மட்டும் ஹீரோ எலெக்ட்ரிக் ரூ.82 கோடி கடன் வாங்கியுள்ளது.
ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் 2023 நிதியாண்டில் 1,00,000 மின்சார இரு சக்கர வாகனங்களை விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த நிதியாண்டில் வெறும் 11,500 மின்சார இரு சக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.






