`தண்டேல்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு

இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார்.தண்டேல் திரைப்படம் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
`தண்டேல்' படத்தின் ஓடிடி ரிலீஸ் அறிவிப்பு
Published on

சந்தூ மொண்டேடி இயக்கத்தில் 'தண்டேல்' படத்தில் சாய் பல்லவி மற்றும் நாக சைதன்யா இருவரும் மீண்டும் இணைந்துள்ளனர். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். திரைப்படம் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

படத்தில் மீனவராக நடிக்கும் நாக சைதன்யா பாகிஸ்தான் ராணுவத்தால் சிறை பிடிக்கப்படுகிறார். அவருக்கும், சாய் பல்லவிக்குமான காதல் மற்றும் அதைச்சுற்றிய பல்வேறு விஷயங்களை பற்றி இப்படம் பேசியுள்ளது.

திரைப்படம் உலகளவில் இதுவரை 100 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. இந்நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸை படக்குழு அறிவித்துள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 7 ஆம் தேதி நெபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்டிரீமாக உள்ளது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

X

Maalai Malar
www.maalaimalar.com