என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர்.
    • பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது.

    இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி அரசியல் தலைவர்கள் தத்தமது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணியின் மகாராஷ்டிர அரசின் நீர் வழங்கல் துறை அமைச்சர் குலாப்ராவ் பாட்டீல் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். இவர் பாஜக கூட்டணியில் இடம்பெற்ற ஷிண்டே பிரிவு சிவசேனாவின் முக்கிய தலைவர் ஆவார்.

    ஜல்கான் நகராட்சியில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் பேசிய குலாப்ராவ் பாட்டீல், மறைந்த சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே பெண்கள் பாதுகாப்பு குறித்து கூறிய வழிமுறைகளை எடுத்துரைத்தார்.

    குலாப்ராவ் பாட்டீல் கூறியதாவது, பெண்கள் தங்கள் பர்சில் மிளகாய்ப் பொடி மற்றும் கத்தியை வைத்திருக்க வேண்டும் என்று வணக்கத்திற்குரிய பாலாசாகேப் தாக்கரே அறிவுறுத்தினார். இதற்காக எதிர்க்கட்சியினர் அப்போது அவரை விமர்சித்தனர். ஆனால், தற்போது பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பாலாசாகேப் கூறியதை பெண்கள் செய்ய வேண்டிய நேரம் இது.

    இன்று பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்து வரும்சூழலில், பெண்கள் புலிகளாக மாற வேண்டும். இன்றைய பெண்கள் பலவீனமாக இருக்கக்கூடாது. மாறாக வலிமையுடன் திகழ வேண்டும்.

    பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுகிறார்கள். அவ்வாறு செய்வோரை நிறுத்த வேண்டும். பெண்கள் மத்தியில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளது. பெண்கள் தற்கொலை செய்து கொள்ளாமல் தங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று தெரிவித்தார்.

    கடந்த மாத இறுதியில் மக்கள் நடமாட்டம் மிகுந்த புனே பேருந்து நிலையத்தில் போலீஸ் சோதனைச் சாவடிக்கு வெறும் 100 மீட்டர் தொலைவில் நின்றுகொண்டுருந்த அரசு சொகுசு பஸ்ஸுக்குள் வைத்து 26 வயது இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அம்மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.
    • பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில், அதீத வெப்பத்தால் மின்தடை ஏற்படுவதை தடுக்க மின்சார வாரியத்துறை அதிகாரிகளுக்கு வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

    அதன்படி, மின்மாற்றிகள் பழுது, மின்மாற்றிகளில் தீப்பிடிக்கும் போன்ற சூழலை தடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    மாவட்ட வாரியாக புதிய மின் மாற்றிகளை கையிருப்பில் வைக்க மின்வாரிய தலைவர் உத்தரவிடப்பட்டுள்ளது.

    பொது மக்களிடம் மின்தடை குறித்த புகார் வந்தால் உடனடியாக சீர் செய்யும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    தகுந்த பணியாளர்களை தற்காலிகமாக நியமித்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கோடை காலத்தில் அதிகபட்ச மின் நுகர்வு நாள் ஒன்றுக்கு 22,000 மெகாவாட் வரை பதிவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    • பெண்களை ஊக்குவிப்பதும், அதிகாரமளித்தலும் பாஜக-வின் கொள்கையாகும்.
    • பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறோம்.

    பா.ஜ.க.வின் மகளிர் அணி சார்பில் உலக மகளிர் தின நிகழ்ச்சி டெல்லியில் உள்ள ஜே.எல்.என். மைதானத்தில் நடைபெற்றது. இதில் பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான ஜே.பி. நட்டா கலந்து கொண்டு பேசினார்.

    அப்போது ஜே.பி. நட்டா கூறியதாவது:-

    டெல்லியில் பாஜக அரசு அமைவதில் மிகப்பெரிய பங்கு வகித்த பெண்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வெற்றி அவர்களுடைய ஆதரவு மற்றும் ஆசி இல்லாமல் சாத்தியமல்ல.

    பெண்களை ஊக்குவிப்பதும், அதிகாரமளித்தலும் பாஜக-வின் கொள்கையாகும். பெண்கள் தலைமையிலான வளர்ச்சியை நோக்கி நடைபோட்டு கொண்டிருக்கிறோம். நாட்டின் பெண்களிடையே சுய-நம்பிக்கையை நாம் உருவாக்கும் வரை, தன்னிறைவு பெற்ற இந்தியா (Atmanirbhar Bharat) மற்றும் வளர்ச்சி அடைந்த இந்தியா (Viksit Bharat) பார்வை சாத்தியமற்றது.

    நிர்மலா சீதாராமன் நாட்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தால், ரேகா குப்தா டெல்லிக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய இருக்கிறார். பாஜக பெண் தலைவர்களை உயர் முடிவு எடுக்கும் பதவிக்கு உயர்த்துவதை உறுதிப்படுத்தும் பணிகளை செய்துள்ளது.

    இந்த குறிப்பிடத்தக்க முடிவை எடுக்க இவ்வளவு தைரியத்தை பாஜகவால் மட்டுமே காட்ட முடியும். பெண்களுக்கு இதைவிட பெரிய மரியாதை எதுவும் இருக்க முடியாது.

    இவ்வாறு ஜே.பி. நட்டா தெரிவித்தார்.

    இந்த கூட்டத்தில் டெல்லி பெண்களுக்கு மாதந்தோறும் 2500 ரூபாய் வழங்க 5100 கோடி ரூபாய் ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்ட செய்தியை ஜே.பி. நட்டா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

    • அவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள்.
    • ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டது.

    சிரியாவில் அரசுக்கு ஆதரவான படைகளுக்கும், முன்னாள் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆதரவாளர்களுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் மோதல் நடந்து வலுத்துள்ளது.

    கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் அமைப்பின் தலைமையிலான கிளர்ச்சிக் குழுக்களால் அசாத்தின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன.

    இந்நிலையில் நேற்று முன் தினம் முதல் மோதல் தீவிரமடைந்துள்ளது. சிரியாவின் கடலோர மாகாணமான லடாகியாவில் உள்ள ஜப்லே நகரில் நேற்று வன்முறை வெடித்தது. அங்குள்ள மூன்று கிராமங்களில் ஆயுதமேந்திய ஆசாத் ஆதரவு குழுவினரை அரசு ஆதரவு படைகள் வெளியேற்ற முயன்றனர். அப்போது நடந்த மோதலில் 70 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்பட்டது.

    இந்நிலையில் சிரிய அரசு ஆதரவு படையினரும் அதனுடன் தொடர்புடைய ஆயுதக் குழுக்களும் கடந்த இரண்டு நாட்களில் 340க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றனர் என்று பிரிட்டனை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

    அவர்களில் பெரும்பாலோர் அந்நாட்டில் உள்ள அலவைட் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்று சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பக அதிகாரி ராமி அப்துல் ரஹ்மான் இன்று (சனிக்கிழமை) ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.  

    • 2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும்.
    • மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும்.

    தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களின் மக்களவை தொகுதி இடங்கள் குறையும் என அச்சம் நிலவுகிறது. இது தொடர்பாக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்டத்தை நடத்தினார். மறுசீரமைப்பு குறித்த குழப்பம் நீடித்து வருகிறது. மத்திய அரசு இது தொடர்பாக தெளிவான விளக்கம் அளிக்கவில்லை என எதிர்க்கட்சிகள் தெரிவித்து வருகின்றன.

    இந்த நிலையில் இது தொடர்பாக மத்திய முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் கூறியதாவது:-

    2026-க்குப் பிறகு மக்களை தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டால், இது தொகுதி மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும். எங்களுடைய கணக்கிட்டின்படி, மாநிலங்களின் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் மறுபகிர்வு செய்யப்பட்டால், நம்முடைய தென்மாநிலங்களின் தற்போதைய 129 இடங்கள் 103 ஆக குறையும். தென்மாநிலங்கள் 26 இடங்களை இழக்கும். மக்கள் தொகை அதிகம் கொண்ட உத்தர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகியவை அதிக இடங்களை பெறும்.

    129 இடங்களுடன் நம்முடைய குரல்கள் பாராளுமன்றத்தில் கேட்கப்படவில்லை. 103 இடங்களுடன் நிலைமை மோசமாக இருக்கும்.

    தற்போதைய மக்கள்தொகையின் அடிப்படையில் மறுசீரமைப்பை நாங்கள் முன்மொழிகிறோம். அரசியலமைப்பின்படி, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் இடங்கள் மறுவரை செய்யப்படு வேண்டும்.

    இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

    • சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்தார்.
    • 2022-ல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மாற்று வீரரான ஒப்பந்தம் செய்திருந்தது.

    ஐபிஎல் 2025-ஆம் ஆண்டு சீசன் வருகிற 22-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதில் விளையாடும் 10 அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த லிசாட் வில்லியம்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு தென்ஆப்பிரிக்கா வீரரான கார்பின் போஸ்ச்-ஐ மாற்று வீரராக ஒப்பந்தம் செய்துள்ளது.

    கார்பின் போஸ்ச் தென்ஆப்பிரிக்கா அணிக்காக ஒரேயொரு டெஸ்ட், இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், 86 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான தென்ஆப்பிரிக்கா அணியில் அன்ரிச் நோர்ஜே இடம் பிடித்திருந்தார். இவர் காயம் காரணமாக விலகியதால் போஸ்ச் அணியில் சேர்க்கப்பட்டிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான ராயல்ஸ் அணிக்கு நெட் பவுலராக செயல்பட்டிருந்தார். பின்னர் 2022-ஆம் சீசனில் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர் நாதன் கவுல்டர்-நைல் காயத்தால் விலகியபோது அந்த அணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் ஆடும் லெவன் அணியில் விளையாடவில்லை.

    • மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் உள்ளது.
    • பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன.

    கட்டாய மத மாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத்தை தனது அரசு கொண்டுவரும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

    இன்று சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், எங்கள் அப்பாவி மகள்களுக்கு எதிராக அட்டூழியங்களைச் செய்பவர்களுக்கு எதிராக எங்கள் அரசாங்கம் மிகவும் கண்டிப்புடன் இருக்கும்.

    அவர்களை கட்டாயப்படுத்துபவர்களை நாங்கள் விடமாட்டோம். அத்தகையவர்களை வாழ அனுமதிக்கக்கூடாது. மத சுதந்திரச் சட்டத்தின் மூலம், கட்டாய மதமாற்றம் செய்பவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும்  விதியை விரிவுபடுத்த நாங்கள் பாடுபடுகிறோம் என்று தெரிவித்தார்.

    இந்துப் பெண்களை திருமணம் செய்து கொண்டு , இஸ்லாத்திற்கு அவர்களை மாற்றி முஸ்லிம் ஆண்கள் "லவ் ஜிஹாத்" செய்கின்றனர் என பாஜக கூறி வருகிறது. எனவே இதுபோன்ற கட்டாய மதமாற்றங்களுக்கு எதிரான கடந்த 2021 மார்ச்சில் அன்று மத்தியப் பிரதேச சட்டமன்றத்தில் மத சுதந்திரச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    அதன்படி மத்தியப் பிரதேசத்தில் சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படும்.

    திருமண மூலம் மதமாற்றம் செய்தல், அச்சுறுத்தல், செல்வாக்கு மற்றும் வற்புறுத்தல் ஆகியவை மூலம் மதமாற்றம் செய்தல் ஆகியவை இந்த சட்டத்தின்கீழ் அடங்கும்.

    மதத்தை மறைத்து திருமணம் செய்தால், மீறுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் ரூ.50,000 அபராதம் விதிக்கப்படலாம். இந்நிலையில் இந்த சட்டத்தின்கீழ் கட்டாய மதமாற்றம் செய்வோருக்கு மரண தண்டனை விதிக்க வழிவகை செய்யப்படும் என மோகன் யாதவ் தற்போது கூறியுள்ளார்.

    பாஜக ஆளும் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க இதே போன்ற சட்டங்கள் உள்ளன. ஆனால் இந்த சட்டங்கள் மூலம் விரும்பி வேற்று மதத்தினரை திருமணம் செய்துகொள்பவர்கள், மதம் மாறுபவர்கள் குறிவைக்கப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர். 

    • ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'.
    • 'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது.

    ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் 'குட் பேட் அக்லி'. இந்தப் படத்தில் அஜித் மூன்று கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

    'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் டீசர் நேற்று வெளியானது.

    டீசர் காட்சிகள் அட்டகாசமாக அமைந்துள்ளது. அஜித்தை இதுவரை நாம் பார்த்திராத லுக்கில் நடித்துள்ளார். படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.

    குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி 24 மணி நேரத்தில் 32 மில்லியன் பார்வைகளை பெற்றது. இந்நிலையில் திரைப்படம் வெளியாக இன்னும் 1 மாத காலம் மட்டுமே இருப்பதால் இந்த மாத இறுதியில் படத்தின் முன்பதிவு ஆரம்பிக்கப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

    இதைத் தொடர்ந்து விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என ஜி.வி பிரகாஷ் குமார் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் " ஃபர்ஸ்ட் சிங்கிள் சூன் மாமே, சுட சுட ரெடி பண்ணிட்டு இருக்கோம்" என கூறியுள்ளார். இதனால் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    • பெண் பிள்ளைகள் வீட்டிற்கு காலதாமதாக வரும்போது, பெற்றோர்கள் அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள்.
    • ஆனால், ஆண் பிள்ளைகள் வீட்டிற்கு வரும்போது, பெற்றோர்கள் அதேபோன்று செய்வதில்லை.

    சர்வதேச மகளிர் தினமான இன்று குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தின் வான்சி போர்சி கிராமத்தில் மிகப்பெரிய அளவில் கூடியிருந்த மக்களிடையே பிரதமர் மோடி உரையாற்றினார்.

    அப்போது பிரதமர் மோடி பேசியதாவது:-

    பாஜக தலைமையிலான எங்கள் அரசு பெண்களுகளுடைய பாதுகாப்பிற்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கிறது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கற்பழிப்பு போன்ற கொடூர குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

    காலனித்துவ கால குற்றவியல் சட்டத்திற்கு (இந்திய தண்டனைச் சட்டம்- Indian Penal Code) பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது, இது பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக வழங்கப்படும் சட்ட நடைமுறைகளை வலுப்படுத்துகுிறத. எளிதான புகார் அளிக்கலாம். விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்.

    பெண் பிள்ளைகள் வீட்டிற்கு காலதாமதாக வரும்போது, பெற்றோர்கள் அவர்களிடம் கேள்வி கேட்கிறார்கள். ஆனால், ஆண் பிள்ளைகள் வீட்டிற்கு வரும்போது, பெற்றோர்கள் அதேபோன்று செய்வதில்லை. அவர்கள் ஆண்களிடமும் கேள்வி கேட்க வேண்டும்.

    நான் உலகின் மிகப்பெரிய செல்வந்தன். என்னுடைய கூற்று கேட்பவர்களில் சிலருக்கு ஒருவித கேள்வியை ஏற்படுத்தலாம். ஆனால் நான் மீண்டும் கூறுவேன் நான் உலகின் மிகப்பெரிய செல்வந்தன் என்று. பணத்தின் அடிப்படையில் அல்ல. மாறாக கோடிக்கணக்கான தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களின் ஆசீர்வாதங்களால். இந்த ஆசீர்வாதங்கள்தான் எனது மிகப்பெரிய பலம், மூலதனம் மற்றும் பாதுகாப்பு கேடயம்.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    • மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
    • பெண்களுக்கு உதவித்தொகை வழங்க டெல்லி பட்ஜெட்டில் ரூ.5,100 கோடி ஒதுக்கீடு.

    டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது, பிரதமர் மோடி பாஜக ஆட்சி அமைத்ததும் மார்ச் 8-ந்தேதி பெண்கள் வங்கி கணக்கில் 2500 ரூபாய் வரவு வைக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார்.

    அத்துடன் முதல் அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் வழங்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். ஆனால் முதல் அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்படவில்லை.

    மகளிர் தினமான இன்று டெல்லி பெண்கள் தங்களுடைய வங்கிக் கணக்கில் 2500 ரூபாய் செலுத்தப்பட்டதற்கான மெசேஜ் வருகிறதா? என பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என அதிஷி கிண்டல் செய்துள்ளார்.

    இந்நிலையில், சர்வதேச மகளிர் தினமான இன்றைய தினத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.2500 வழங்கும் மகிளா சம்ரிதி யோஜனா திட்டத்திற்கு டெல்லி அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

    பெண்களுக்கு உதவித்தொகை வழங்க டெல்லி பட்ஜெட்டில் ரூ.5,100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் ரேகா குப்தா தெரிவித்துள்ளார்.

    • 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.
    • வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் ஷீட்டில் அவர்களின் தோற்றத்துக்கு மதிப்பெண் கொடுத்து வந்தார்.

    ஆஸ்திரேலியாவில் 5 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த இந்து மதத் தலைவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலியாவில் இந்திய சமூகத் தலைவராக அறியப்பட்டவர் பாலேஷ் தன்கர் (43). ஆஸ்திரேலியாவின் இந்து மத ஆணையத்தின் செய்தி தொடர்பாளராக செயல்பட்ட பாலேஷ் தன்கர், பாஜக கட்சியின் அந்நாட்டு குழு ஒன்றையும் உருவாக்கி நிர்வகித்து வந்தார்.

    இதற்கிடையே போலி வேலைவாய்ப்பு விளம்பரங்களை வெளியிட்டு, வேலை தேடி வந்த பெண்களை, சிட்னியில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று போதை மருந்து கொடுத்து அவர்களை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.

    பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் 21 முதல் 27 வயதுக்குட்பட்ட கொரியா நாட்டினர். அவர்களை வன்கொடுமை செய்வதை வீடியோ பதிவு செய்ததுடன், எக்ஸெல் சீட் ஒன்றை உருவாக்கி அதில் அப்பெண்களின் விவரங்கள், அவர்களின் அறிவு, தோற்றம் குறித்து மதிப்பெண் அளித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. குற்றத்தின்போது அவர்கள் அனைவரும் மயக்க நிலையில் இருந்தனர்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு சிட்னியிலுள்ள அவரது வியாபார மையத்தில் போலீசார் சோதனை மேற்கொண்டபோது மயக்க மருந்துகள் மற்றும் கடிகாரத்தினுள் மறைத்து வைக்கப்பட்ட கேமரா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    2023 ஆம் ஆண்டு நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அவர் 13 பாலியல் வன்கொடுமைகள் உட்பட 39 குற்றங்களில் குற்றவாளி என அந்நாட்டு நீதிமன்றம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் நேற்று (மார்ச் 07) டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றம், பாலேஷ் தன்கருக்கு 40 வருட சிறை தண்டனை விதித்துள்ளது. 2053 வரை 30 ஆண்டுகளுக்கு அவருக்கு பரோல் வழங்கப்படாது என்றும் அவரது 83 வது வயதில் அவர் விடுதலை செய்யப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • நடிகர் விவேக் பிரசன்னா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமானார்.
    • தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    நடிகர் விவேக் பிரசன்னா குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடித்து மக்களுக்கு பரீட்சயமானார். இவர் நடித்த சேதுபதி, இறைவி, மாநகரம் போன்ற திரைப்படங்கள் வெற்றியடைந்தது.

    மேயாத மான் திரைப்படத்தின் மூலம் பலரின் பாராட்டுகளை பெற்றார் விவேக் பிரசன்னா

    இவர் கடந்த ஆண்டு இங்க நான் தான் கிங்கு, தோனிமா, லால் சலாம், ஹிட்லர், பேட்ட ராப், பிளாக், ஆலன், ஃபேமிலி படம் ஆகிய திரைப்படங்களில் நடித்து இருந்தார்.

    இந்நிலையில் அடுத்ததாக டர்ம் புரொடக்ஷன் ஹவுஸ் பேனரில் எஸ் உமா மகேஸ்வரி தயாரிப்பில் தம்பிதுரை மாரியப்பன் இயக்கத்தில் விவேக் பிரசன்னா ட்ராமா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை தம்பிதுரை மாரியப்பன் இயக்கியுள்ளார். படத்தின் இசையை ராஜ் பிரதாப் மேற்கொள்ள

    இவருடன் பூர்ணிமா ரவி, ஆனந்த் நாக், சாந்தினி தமிழரசன் இணைந்து நடித்துள்ளனர். இப்படம் ஒரு மெடிக்கல் கிரைம் திரில்லாராக உருவாகியுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில மாதங்களுக்கு முன் வெளியானது தற்பொழுது படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படம் வரும் மார்ச் 21 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×