என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது.
- ஒரு கிராம் வெள்ளி 306 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை காலை, மாலை என இருவேளைகளில் உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தில் விற்பனையாகிறது. இதனால் சுபநிகழ்ச்சிகளுக்காக தங்கம் வாங்க நினைப்போருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.13,230-க்கும் சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

தங்கத்துக்கு போட்டியாக உயர்ந்து வரும் வெள்ளி விலை இன்று சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 306 ரூபாய்க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
15-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,320
14-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,240
13-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,05,360
12-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,04,960
11-1-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,03,200
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
15-1-2026- ஒரு கிராம் ரூ.310
14-1-2026- ஒரு கிராம் ரூ.307
13-1-2026- ஒரு கிராம் ரூ.292
12-1-2026- ஒரு கிராம் ரூ.287
11-1-2026- ஒரு கிராம் ரூ.275
- பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்.
- தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை வெ.இறையன்புக்கு வழங்கினார்.
திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அவரைத்தொடர்ந்து திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மற்றும் சென்னை மேயர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் திருவள்ளுவர் திருநாள் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
* பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கினார்.
* தந்தை பெரியார் விருதை வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கினார்.
* திருவள்ளுவர் விருதை மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கு வழங்கினார்.
* அம்பேத்கர் விருதை சிந்தனைச்செல்வனுக்கு வழங்கினார்.
* காமராஜர் விருதை எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு வழங்கினார்.
* பாரதியார் விருதை கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு வழங்கினார்.
* பாவேந்தர் பாரதிதாசன் விருதை கவிஞர் யுகபாரதிக்கு வழங்கினார்.
* தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை வெ.இறையன்புக்கு வழங்கினார்.
* முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை சு.செல்லப்பாவுக்கு வழங்கினார்.
* இலக்கிய மாமணி விருது (மரபுத்தமிழ்) த.இராமலிங்கத்திற்கு வழங்கினார்.
* இலக்கிய மாமணி விருது (ஆய்வுத்தமிழ்) சி.மகேந்திரனுக்கு வழங்கினார்.
* இலக்கிய மாமணி விருது (படைப்புத்தமிழ்) இரா.நரேந்திரகுமாருக்கு வழங்கினார்.
விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
- தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
- ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது
அதே போல் பொங்கல் பண்டிகையையொட்டி உலக புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நாளை நடைபெறுகிறது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று தொடங்கி வைக்க உள்ளார்.
இந்நிலையில் பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
இதையடுத்து பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. முதலில் கோவில் காளை அவிழ்த்து விடப்பட்டது. தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- தமிழக அரசியல், பொது நிகழ்வுகள்...
- சினிமா, விளையாட்டு செய்திகளை ஒரு சில வரிகளில் பெறுங்கள்.
தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
- தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் நடப்பதாக இருந்த ஆலோசனை கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
- தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை உள்ளிட்ட தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன் காங்கிரஸ் தேசிய தலைமை நாளை ஆலோசனை நடத்த உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகளுடன் நாளை மறுநாள் நடப்பதாக இருந்த ஆலோசனை கூட்டம் நாளைக்கு மாற்றப்பட்டுள்ளது.
வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து காங்கிரஸ் நாளை ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் மல்லிகார்ஜூனா கார்கே, ராகுல்காந்தி உள்ளிட்டோர் டெல்லியில் நாளை ஆலோசனை நடத்துகின்றனர்.
ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
- ஏராளமான வட மாநில பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக தமிழ் கற்பதை காண முடிந்தது.
- தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல உலக அரங்கில் பாரத தேசத்திற்கே பெருமை...!
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
"வையம் உள்ளவரை வள்ளுவன் புகழ் வாழும்"
என்று தொடங்கி...
நம் பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தான் சென்ற நாடுகளிலெல்லாம் தமிழையும் தமிழ் மொழியின் தொன்மையையும் போற்றுவதோடு, தமிழ் மொழி நம் பாரத தேசத்தின் முதன்மையான மொழி என்பதில் ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்ள வேண்டும் என்று, வரலாற்றில் முன்பு யாரும் செய்யாத அளப்பரிய காரியங்களை தமிழ் மொழிக்காக செய்து வருபவர்.
"உலகப் பொதுமறையாம் திருக்குறளை" மேலும் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்த்ததோடு நின்றுவிடாமல், வடமாநில பள்ளி, கல்லூரி மாணவர்கள் தமிழ் மொழி கற்பதின் அவசியத்தை உணர்த்தியவர். இதற்குச் சான்றாக தனது சொந்த சட்டமன்றத் தொகுதியான வாரணாசியில் "காசி தமிழ் சங்கமம்" நிகழ்வில் ஏராளமான வட மாநில பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வமாக தமிழ் கற்பதை காண முடிந்தது.
தமிழால் வள்ளுவருக்கு பெருமை, தமிழாலும் வள்ளுவராலும் தமிழருக்கு மட்டுமல்ல உலக அரங்கில் பாரத தேசத்திற்கே பெருமை...!
திருவள்ளுவர் தினத்தில் அய்யனின் புகழைப் போற்றி வணங்குவோம் என்று கூறியுள்ளார்.
- பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை.
பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தை இரண்டாம் நாளான இன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. நேற்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்ற நிலையில் இன்று பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது
ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. காளைகளுக்கு காயம், நோய், உடல்நலக்குறைவு உள்ளதா என மருத்துவ குழு பரிசோதனை நடத்தியது. மருத்துவ பரிசோதனையில் தேர்ச்சி பெறும் காளைகள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும்.
இதேபோல் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.
- இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.
- தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.
சென்னை:
வான்புகழ் வள்ளுவரைப் போற்றும் இந்தத் திருவள்ளுவர் நாள்-இல், தமிழ்நாட்டு மக்களுக்கு நான் நான்கு முக்கிய வாக்குறுதிகளை அளிக்கிறேன்! என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்,
அஞ்சாமை மனிதநேயம் அறிவாற்றல் ஊக்கமளித்தல் - வள்ளுவன் சொன்ன இவை நான்கும் நமது ஆட்சியின் அடிநாதம்!
அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும்
எஞ்சாமை வேந்தர்க் கியல்பு
- திருவள்ளுவர்
சமூக அநீதி மற்றும் மதவாத சக்திகளுக்கு எதிராகப் போராடும் துணிச்சல்.
வறியோர் எளியோர் வாழ்வுயர மனிதநேயத் திட்டங்கள்.
இளைய சமூகத்தின் அறிவாற்றலை வளர்க்கும் முன்னெடுப்புகள்.
தொழில் வளர்ச்சிக்கும், மகளிர் மேம்பாட்டிற்கும் ஊக்கமளிக்கும் ஆக்கப் பணிகள்.
இவை நான்கும் தமிழ்நாட்டில் தொடரும் என்பது இந்த திருவள்ளுவர் தினத்தில் உங்களுக்கு நான் தரும் வாக்குறுதி! என்று கூறியுள்ளார்.
- பாலமுருகன் 22 காளைகளை அடக்கி முதல் பரிசு வென்றார்.
- சிறந்த காளையின் உரிமையாளருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது.
தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் மாடுகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் பொங்கல் பண்டிகையைத் தொடர்ந்து நடத்தப்படும். இதில் அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றது.
இவற்றில் பொங்கல் தினமான இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் காளைகள் அடக்கும் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் வலையாங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் 22 காளைகளை அடக்கி காரை பரிசாக வென்றார்.
17 காளைகள் அடக்கிய அவனியாபுரம் கார்த்திக்கிற்கு 2-வது பரிசாக பைக் வழங்கப்பட்டது. 16 காளைகள் அடக்கிய ரஞ்சித் என்பவருக்கு 3-வது பரிசு வழங்கப்பட்டது.
மந்தை முத்துக்கருப்பன் காளையின் உரிமையாளர் விருமாண்டி சகோதரருக்கு டிராக்டர் பரிசாக வழங்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது. 12 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் 1000 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 600 -க்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் மாடுகளை பிடிக்க களம் இறங்கினர்.
நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும். நாளைமறுதினம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறும்.
- அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில் கூலிப்படை Network, போதைப்பொருள் Network, தற்போது துப்பாக்கி Network
- துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று.
அதிமுக வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:-
திருநெல்வேலியில் வீட்டில் பதுக்கி வைத்து கைத்துப்பாக்கி விற்பனை செய்ததாக திமுக பொறியாளர் அணி நிர்வாகி ரத்தினம் பாலா உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
அதுவும், இவர்கள் இன்ஸ்டாகிராம் வாயிலாக துப்பாக்கி விற்பனை செய்ததாக செய்திகள் வருகின்றன.
அமைதிப் பூங்காவாக இருந்த தமிழ்நாட்டில்,
கூலிப்படை Network,
போதைப்பொருள் Network,
தற்போது துப்பாக்கி Network
என இவை அனைத்தையும் வளர விட்டிருப்பது யார்? இன்றைய Failure Model திமுக முதல்வர் தானே?
துப்பாக்கி கலாச்சாரம் என்பதெல்லாம் தமிழ்நாடு இதுவரை கேள்விப்பட்டிராத ஒன்று. அதுவும், இன்ஸ்டாகிராம் வாயிலாக ஏதோ புடவை விற்பது போல Assault-ஆக துப்பாக்கி விற்கும் அளவிற்கு எங்கிருந்து இவர்களுக்கு தைரியம் வருகிறது?
இதுபோன்ற செய்திகள் எல்லாம், இந்த திமுக ஆட்சியில் மக்கள் எப்படி நிம்மதியாக நடமாட முடியும்? என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது.
"உலக நாடுகளுடன் தான் நமக்கு இனிமேல் போட்டி" என்று ஒரு திமுக அமைச்சர் சொன்னாரே- எதில்? Crime Nexus, Gun Network, Drug Mafia... இதில் தானே?
அதிலும் சகல நெட்வர்க்கிலும் உச்சியில் நின்று ஆட்டிப் படைப்பது திமுக-வினர்தான் என்பதுதான் இதில் Highlight...!!
மக்களின் உயிரைப் பற்றி, அவர்களின் பாதுகாப்பு பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாமல், துப்பாக்கி கலாச்சாரத்தை வளர வைத்துள்ள ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கடும் கண்டனம்.
கைது செய்யப்பட்டுள்ள திமுக நிர்வாகி உட்பட, குற்றத்தில் தொடர்புள்ள அனைவர் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடியா திமுக அரசை வலியுறுத்துகிறோம்.
இன்னும் 3 மாதங்களில் அமையவுள்ள அதிமுக ஆட்சியின் முதல் பணியாக, சட்டம் ஒழுங்கைக் காக்கும் நடவடிக்கைகள் முழுவீச்சில் செயல்படுத்தப்படும் என்ற வாக்குறுதியை தமிழக மக்களுக்கு அளிக்கிறோம்.
மக்களைக் காப்பதே அரசின் முதல் கடமை!
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை.
- மாதம் ரூ. 5000 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணிநிலைப்பு வழங்கப்படவில்லை.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பணி நிலைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகம் அருகில் இன்று போராட்டம் நடத்திய பகுதிநேர சிறப்பாசிரியர்களை காவல்துறையினர் கைது செய்து தனி இடங்களில் அடைத்து வைத்துள்ளனர். உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய ஆசிரியர்களை பொங்கல் நாளிலும் கூட கைது செய்து அடைத்து வைப்பது கண்டிக்கத்தக்கது.
பகுதி நேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் மிகவும் நியாயமானவை. மாதம் ரூ. 5000 என்ற மிகக்குறைந்த ஊதியத்தில் பணியில் சேர்ந்த அவர்களுக்கு 13 ஆண்டுகளாகியும் பணிநிலைப்பு வழங்கப்படவில்லை. ஆண்டுக்கு சராசரியாக ரூ. 576 என்ற அளவில் 13 ஆண்டுகளில் ரூ.7500 மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. பணி நிலைப்புக் கோரி பல ஆண்டுகளாக போராடியும் பயன் இல்லாததால்தான் அவர்கள் மீண்டும் போராட வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்களை அழைத்துப் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், அவர்களின் கோரிக்கையை ஏற்று பணி நிலைப்பு வழங்குவதற்கு பதிலாக ரூ.2500 ஊதிய உயர்வு வழங்குவதாக பேரம் பேசுகிறார். அதை ஏற்க மறுத்து ஆசிரியர்கள் போராட்டம் நட்த்தினால் அவர்களை கைது செய்து அடைத்து வைக்கிறார்கள்.
இதன் மூலம் ஆசிரியர்களுக்கு எதிராக அடக்குமுறைகளையும், துரோகங்களையும் திமுக அரசு கட்டவிழ்த்து விட்டு வருகிறது. இதற்கு மன்னிப்பே கிடையாது.
திமுக ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதி ( எண் 181) அளித்தது. அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்ய திமுக அரசு முன்வர வேண்டும். ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் ஆசிரியர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பழிவாங்கும் நடவடிக்கைகள் அனைத்தையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
- மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு
- பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்
வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ரூ.111.96 கோடி நிவாரணம் அவர்களது வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
2025-2026ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவத்தில் பெய்த கனமழை மற்றும் டித்வா புயலின் காரணமாக 1.39 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 01.12.25 அன்று ஆய்வு கூட்டம் நடத்தி, பயிர் பாதிப்படைந்த மாவட்டங்களில் வருவாய் மற்றும் வேளாண்மைத்துறை உடனடியா கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படவேண்டும் என்றும் நெல் உள்ளிட்ட இறவைப்பயிர்களுக்கு நிவாரணத் தொகையாக ஹெக்டருக்கு ரூ.20,000/-ஆகவும் வழங்க உத்தரவிட்டார்.
இவ்வுத்தரவின்படி, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 33 சதவீதத்திற்கும் அதிகமாக பாதிக்கப்பட்ட பயிர் பரப்பு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர்களிடமிருந்து கருத்துரு பெறப்பட்டது. டித்வா புயல் மற்றும் வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து ரூ.111.96 கோடி நிவராணத்தொகை ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின்பேரில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே 2024 நவம்பர் மற்றும் டிசம்பர் மாத வடகிழக்குப் பருவமழை மற்றும் 2025 ஜனவரி மாதம் பெய்த பருவம் தவறிய மழையினால் 5.66 இலட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வேளாண் மற்றும் தோட்டக்கலைப்பயிர்கள் பாதிக்கப்பட்டதற்கு 3.60 இலட்சம் விவசாயிகள் பயன் பெறும் வகையில் ரூ.289.63 கோடி நிவாரணத்தொகை 2025 டிசம்பர் மாதம் ஒப்பளிப்பு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் அரசாணை வெளியிடப்பட்டு நிவாரணத்தொகை விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இயற்கைப்பேரிடர்களால் எப்போதெல்லாம் விவசாயிகள் பாதிக்கப்படுகிறார்களோ அப்போதெல்லாம் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளின் துயர்துடைக்க நேசக்கரம் நீட்டி, அவர்களுக்கு உரிய நிவாரண உதவிகளை அளித்து வருகிறது.
தற்போது ஒப்பளிக்கப்பட்ட நிவரணத்தொகையான ரூ.111.96 கோடி அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி. கிருஷ்ணகிரி. மதுரை. மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நீலகிரி. புதுக்கோட்டை, இராமநாதபுரம். இராணிப்பேட்டை சேலம். சிவகங்கை. தென்காசி. தஞ்சாவூர், தேனி. திருநெல்வேலி, திருப்பத்தூர். திருவள்ளுர், திருவாரூர். தூத்துக்குடி. திருப்பூர். திருவண்ணாமலை. திருச்சி. வேலூர். விழுப்புரம் மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த பாதிக்கப்பட்ட 84,848 விவசாயிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும்." என தெரிவிக்கப்பட்டுள்ளது.






