என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    • முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 93 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.
    • 2ஆவது இன்னிங்சில் 212 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு- ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி கோவையில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 247 பந்தில் 173 ரன்கள் விளாசினார். தமிழ்நாடு அணியில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் பாலசுப்ரமணியன் சச்சின் (0), என். ஜெகதீசன் (3), பிரதோஷ் ரஞ்சன் பால் (9), அந்த்ரே சித்தார்த் (2), பாபா இந்திரஜித் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் 14 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அம்ப்ரிஸ் 28 ரன்களும், ஜெகநாதன் ஹேம்சுதேசன் 14 ரன்களும், குர்ஜப்னீத் சிங் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 93 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆனது.

    ஜார்க்கண்ட் அணி சார்பில் ஜத்தின் பாண்டே 5 விக்கெட்டும், சஹில் ராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    326 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜார்க்கண்ட் பாலோ-ஆன் கொடுத்தது. இதனால் தமிழ்நாடு அணி தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்தது. நேற்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 52 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

    சித்தார்த் 4 ரன்களுடனும், ஹேம்சுதேஷன் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இன்று 4ஆவது நாள் மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடைபெற்றது. அந்த்ரே சித்தார்த் ஒரு பக்கம் நிலைத்து நின்று விளையாடினார். மறுமக்கள் ஹேம்சுதேஷன் 3 ரன்களிலேயே ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த பாபா இந்திரஜி 22 ரன்னிலும், ஷாருக்கான் 37 ரன்களிலும் வெளியேறினார். அந்த்ரே சித்தார் 80 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அணி 212 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அத்துடன் இன்னிங்ஸ் மற்றும் 114 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை அடைந்தது. ஜார்கண்ட் அணி சார்பில் ரிஷவ் ராஜ் 4 விக்கெட்டும், அனுகுல் ராய் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
    • 7 மாதங்களுக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி விளையாட உள்ளனர்.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை பெர்தில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிர வலை பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    இந்த தொடரின் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் கேப்டனாக கில் களமிறங்குகிறார். மேலும் 7 மாதங்களுக்கு பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி விளையாட உள்ளதால் இந்த தொடர் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் புதிய கேப்டன் கில்லிடம் ரோகித்தின் உறவு எப்படி இருக்கிறது என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு கில் கொடுத்த பதில்:-

    வெளியில் நடக்கும் கதை வேறு. ஆனால் இப்போது எங்கள் உறவில் எந்த வித்தியாசமும் இல்லை. நாங்கள் முன்பு போலவே இருக்கிறோம். எல்லாமே ஒரே மாதிரியாக இருக்கிறது. அவர் மிகவும் உதவியாக இருக்கிறார்.

    நான் அவரிடம் ஏதாவது கேட்க விரும்பினால், நான் அவரிடம் சென்று அவரது கருத்தைக் கேட்பேன்.

    அத்தகைய சூழ்நிலையில் அவர் என்ன செய்திருப்பார் என்று கேட்பேன். அனைவரின் எண்ணங்களையும் நான் பெற விரும்புகிறேன். பின்னர் விளையாட்டைப் பற்றிய எனது புரிதலின் அடிப்படையில், இறுதி முடிவை எடுக்க விரும்புகிறேன்.

    இவ்வாறு கில் கூறினார்.

    • விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.
    • ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பெர்த்:

    இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5 20 போட்டியில் விளையாட ஆஸ்திரேலியா சென்றுள்ளது. இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெர்த்தில் நாளை நடக்கிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட இந்திய நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாத இடைவெளிக்கு பிறகு களம் திரும்புகின்றனர்.

    இந்த நிலையில், ஒருநாள் போட்டி நாளை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    மேலும் ஒருநாள் தொடருக்கான கோப்பையுடன் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லும் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் மிட்செல் மார்ஷ்-ம் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

    இரு அணிகளும் ஒருநாள் போட்டியில் நாளை மோதுவது 153-வது முறையாகும். இதுவரை நடைபெற்ற 152 ஆட்டத்தில் இந்தியா 58-ல், ஆஸ்திரேலியா 84-ல் வெற்றி பெற்றுள்ளன. 10 ஆட்டம் முடிவு இல்லை.

    இரு அணிகள் இடையே கடைசியாக 2023-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆஸ்திரேலியாவில் கடைசியாக 2020-ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது. 

    • பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஆப்கானிஸ்தானின் முடிவை நான் வரவேற்கிறேன்.
    • முகமது நபி, பரூக்கி உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.

    இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கான் கண்டனத்தை தெரிவித்து உள்ளனர். 20 ஓவர் போட்டி அணி கேப்டன் ரஷீத்கான் கூறும்போது, ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் உயிரிழந்தது குறித்து நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

    பொதுமக்கள் உள்கட்டமைப்பை குறிவைப்பது முற்றிலும் ஒழுக்கக்கேடானது மற்றும் காட்டு மிராண்டித்தனமானது. பாகிஸ்தானுக்கு எதிராக வரவிருக்கும் போட்டிகளில் இருந்து விலகுவதற்கான ஆப்கானிஸ்தானின் முடிவை நான் வரவேற்கிறேன் என்றார். அதேபோல் முகமது நபி, பரூக்கி உள்ளிட்ட வீரர்கள் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

    • ரோகித் சர்மா, விராட் கோலியை ஒவ்வொரு போட்டியிலும் மதிப்பிடுவது சரியானதாக இருக்காது.
    • அவர்கள் விளையாட ஆரம்பித்தவுடன் அவர்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்வோம்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவர் அஜித் அகர்கர் அளித்த ஒரு பேட்டியில், 'ரோகித் சர்மா, விராட் கோலியை ஒவ்வொரு போட்டியிலும் மதிப்பிடுவது சரியானதாக இருக்காது. அவர்கள் விளையாட ஆரம்பித்தவுடன் அவர்களது ஆட்டம் குறித்து மதிப்பீடு செய்வோம்.

    ஆனால் அது அணியில் இடத்தை உறுதி செய்வதற்கான தகுதி தேர்வாக இருக்காது ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் அவர்கள் ரன் குவிக்காவிட்டால் நீக்கப்படுவார்கள் என்றோ, அதே நேரத்தில் ஆஸ்திரேலிய தொடரில் 3 சதங்கள் அடித்தால் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என்றோ அர்த்தம் கிடையாது.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு அனுபவம் வாய்ந்த வீரர்கள் தேவையாக இருந்த போது அவர்கள் ஓய்வு பெறுவதாக தானாகவே தெரிவித்தனர். அவர்களது முடிவை நாங்கள் மதித்தோம்.

    என அகார்கர் கூறினார். 

    • ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது.
    • ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள்.

    இஸ்லாமாபாத்:

    தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது. இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.

    இதற்கு ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கடும் கண்டனத்தை தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக கிரிக்கெட் வாரியம் கூறும் போது, பாகிஸ்தானின் இந்த கோழைத்தனமான தாக்குதலில் துணிச்சலான கிரிக்கெட் வீரர்கள் உயிரிழந்ததற்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

    இந்த துயர சம்பவத்திற்கு பதிலளிக்கும் விதமாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும், அடுத்த மாதம் பாகிஸ்தானில் நடைபெற உள்ள முத்தரப்பு 20 ஓவர் போட்டி தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் அணி விலக முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தது.

    • ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது.
    • கிரிக்கெட் விளையாடி விட்டு சொந்த ஊருக்கு திரும்பும் போது 3 வீரர்கள் பலியாகி உள்ளனர்.

    இஸ்லாமாபாத்:

    ஆப்கானிஸ்தானில் செயல்படும் தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பு, பாகிஸ்தான் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்தாக்குதலை பாகிஸ்தான் ராணுவம் நடத்தியது.

    இதற்கிடையே தெக்ரிக்-இ-தலிபான் அமைப்பினரை குறிவைத்து ஆப்கானிஸ்தானுக்குள் பாகிஸ்தான் வான்வழித்தாக்குதலை நடத்தியது. இதற்கு பதிலடியாக கடந்த வாரம் ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசாங்கம், பாகிஸ்தான் மீது அதிரடி தாக்குதலை நடத்தியது.

    பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தி, ராக்கெட் குண்டுகளை வீசினார்கள். இதையடுத்து இரு நாட்டு ராணுவம் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டது. பொதுமக்களும் பலியானார்கள்.

    இதற்கிடையே கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் தலையீட்டால் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் ராணுவம் திடீரென்று வான்வழித் தாக்குதலை நடத்தியது. ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாக்டிகா மாகாணம் அர்குன், பர்மல் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியது.

    இதில் ஆப்கானிஸ்தானின் 3 இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்பட 8 பேர் பலியானார்கள். 12 பேர் காயம் அடைந்தனர்.

    உயிரிழந்த கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கத்துல்லா, ஹாரூன் என்பது தெரிய வந்தது. உள்ளூர் கிரிக்கெட் வீரர்களான இவர்கள் நட்புப் போட்டியில் பங்கேற்க உர்குனிலிருந்து பாகிஸ்தான் எல்லையில் உள்ள கிழக்கு பாக்டிகா மாகாணத்தின் ஷரானாவுக்குச் சென்றிருந்தனர். பின்னர் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தபோது பாகிஸ்தானின் தாக்குதலில் சிக்கி பலியாகி உள்ளனர்.

    • டாஸ் வென்ற இலங்கை கேப்டன் சமாரி அடப்பட்டு பேட்டிங் தேர்வு செய்தார்.
    • மழை குறுக்கிட்டதால் போட்டி 20 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    கொழும்பு:

    13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகளும் தங்களுக்குள் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

    இந்நிலையில், கொழும்புவில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இலங்கை, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இலங்கை அணி கேப்டன் சமாரி அடப்பட்டு பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி இலங்கை அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 12 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 46 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சில மணி நேரங்களுக்குப் பிறகு மழை நின்றதால் போட்டி 20 ஓவராகக் குறைக்கப்பட்டது.

    இறுதியில் இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 105 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து, டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 20 ஓவரில் 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என தென் ஆப்பிரிக்காவுக்கு இலக்கு நிர்ணயிக்க்கப்பட்டது.

    தொடக்க ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்குஅழைத்துச் சென்றது. இருவரும் அரை சதம் கடந்தனர்.

    வோல்வோர்ட் 60 ரன்னும், தஜ்மின் பிரிட்ஸ் 55 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இறுதியில் தென் ஆப்பிரிக்கா அணி விக்கெட் இழப்பின்றி 125 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அத்துடன் புள்ளிப் பட்டியலில் 2வது இடத்துக்கும் முன்னேறியது.

    • ஜார்க்கண்ட் முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது.
    • தமிழ்நாடு 14 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

    ரஞ்சி கோப்பை தொடரின் முதல் போட்டி கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. தமிழ்நாடு- ஜார்க்கண்ட் அணிகளுக்கு இடையிலான போட்டி கோவையில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜார்க்கண்ட் முதலில் பேட்டிங் தேர்வு செய்து, முதல் இன்னிங்சில் 419 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் இஷான் கிஷன் 247 பந்தில் 173 ரன்கள் விளாசினார். தமிழ்நாடு அணியில் குர்ஜப்னீத் சிங் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் ஐந்து வீரர்கள் பாலசுப்ரமணியன் சச்சின் (0), என். ஜெகதீசன் (3), பிரதோஷ் ரஞ்சன் பால் (9), அந்த்ரே சித்தார்த் (2), பாபா இந்திரஜித் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 14 ரன்கள் எடுப்பதற்குள் முதல் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனால் நேற்றைய 2ஆவது நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 18 ரன்கள் எடுத்து திணறிய நிலையில் இருந்தது.

    இன்று 3ஆவது நாள் ஆட்டமும் தொடங்கியது. இன்றைய ஆட்டத்திலும் தமிழ்நாடு அணி திணறியது. அம்ப்ரிஸ் 28 ரன்களும், ஜெகநாதன் ஹேம்சுதேசன் 14 ரன்களும், குர்ஜப்னீத் சிங் 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்க 93 ரன்னில் சுருண்டது.

    ஜார்க்கண்ட் அணி சார்பில் ஜத்தின் பாண்டே 5 விக்கெட்டும், சஹில் ராஜ் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    326 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஜார்க்கண்ட் பாலோ-ஆன் கொடுத்தது இதனால் தமிழ்நாடு அணி தொடர்ந்து 2ஆவது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. இன்றைய 3ஆவது நாள் ஆட்ட முடிவில் 52 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

    • இங்கிலாந்து தொடரின்போது உடற்தகுதியுடன் இருந்திருந்தால் அணியில் இடம் பிடித்திருப்பார்.
    • ரஞ்சி டிராபியில் எப்படி விளையாடுகிறார் எனப் பார்க்க வேண்டும்.

    இந்தியாவின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி, ஆஸ்திரேலியா தொடருக்கான ஒயிட்பால் இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. ரஞ்சி டிராபியில் விளையாடும்போது, ஒருநாள் கிரிக்கெட்டில் ஏன் விளையாட முடியாது?. உடற்தகுதிக்கா இந்திய அணி என்னை அழைக்கவில்லை என முகமது ஷமி இந்திய அணியின் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் மீது குற்றம்சாட்டியிருந்தார்.

    ஆங்கில செய்தி நிறுவனமான என்.டி.டி.வியின் உலக மாநாடு 2025-ல் அஜித் அகர்கர் கலந்து கொண்டு பேசினார். அப்போது முகமது ஷமி குற்றச்சாட்டுக்கு பதில் அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    அவர் என்னிடம் சொல்லியிருந்தால், நான் பதில் அளித்திருப்பேன். அவர் இங்கு இருந்திருந்தால், அவருக்கு பதில் கூறியிருப்பேன். அவர் சமூக ஊடகத்தில் என்ன சொன்னார் என்பது எனக்கு தெளிவாக தெரியவில்லை. நான் படித்திருந்தால், அவருக்கு போன் செய்திருக்கலாம். இருந்தபோதிலும், பெரும்பாலான வீரர்களுக்கு எனது போன் எப்போதும் தயாராக இருக்கிறது. கடந்த சில மாதங்களாக அவருடன் பலமுறை பேசியுள்ளேன். ஆனால், இங்கே அதை தலைப்பு செய்தியாக்க விரும்பவில்லை.

    அவர் இந்தியாவுக்கான அற்புதமான வீரர். அவர் சொன்னதை, என்னிடம் சொல்லியிருக்கலாம். இங்கிலாந்து தொடருக்கு முன்னதாக கூட, அவர் உடற்தகுதியின் இருந்தால், இங்கிலாந்துக்குச் செல்வார் என நாங்கள் கூறியிருந்தோம். துரதிருஷ்டவசமாக அவர் உடற்தகுதி பெறவில்லை.

    தற்போது உள்ளூர் தொடர் தொடங்கியுள்ளது. அவர் எப்படி விளையாடுகிறார் என்பதை பார்க்க இருக்கிறோம். தற்போது முதல்சுற்று போட்டி நடைபெறுகிறது. இன்னும் ஒன்றிரண்டு போட்டிகளை பார்க்க வேண்டும். அவர் சிறப்பாக பந்து வீசினால், ஷமியை போன்றவர்களை ஏன் விரும்பாமல் இருக்க வேண்டும். இந்த வருடம் 8 மாதங்களுக்கு முன்னதாக, ஆஸ்திரேலியா தொடரில் கூட, அவர் இடம் பெற வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால், அவர் உடதற்குதியுடன் இல்லை. அடுத்த சில மாதங்களாக அவருடைய உடற்தகுதியை நிலைத்து வைத்திருந்தால், கதை மாறியிருக்கலாம். இந்த கணக்கில், எனக்குத் தெரிந்தவரை, அவர் அந்த இங்கிலாந்து சுற்றுப் பயணத்திற்கு போதுமான அளவு பொருத்தமாக இல்லை.

    இவ்வாறு அஜித் அகர்கர் தெரிவித்தார்.

    • இந்தியா அந்த நேரத்தில் கோப்பையை வாங்கிருக்க வேண்டும்.
    • மைதானத்தில், நீங்கள் உங்கள் படங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தீர்கள்.

    துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.

    இதனால் ஆசிய கோப்பையை, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் தங்களோடு எடுத்து சென்று விட்டனர். கோப்பையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டாலும், இதுவரை இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை.

    தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை யாருக்கும் வழங்கக்கூடாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொசின் நக்வி கட்டளை பிறப்பித்துள்ளார்.

    இந்நிலையில் மொசின் நக்வி செய்வது முற்றிலும் சரியானது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூசப் கூறியுள்ளார்.

    தலைவர் (மொசின் நக்வி) செய்வது முற்றிலும் சரியானது. அவர் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்தியா அந்த நேரத்தில் கோப்பையை வாங்கிருக்க வேண்டும். ஏ.சி.சி மற்றும் ஐ.சி.சி விதிகளின்படி, அவர் ஏ.சி.சி தலைவராக அங்கே நின்று கொண்டிருந்தார். மேலும் கோப்பை அவரது கைகள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

    நீங்கள் அந்த நேரத்தில் அதை வாங்கவில்லை. இப்போ என்ன அவசரம்? கோப்பையை வாங்க வேண்டும் என நினைச்சிருந்தால், நீங்கள் போய் அலுவலத்தில் அதை வாங்கிருக்க வேண்டும்.

    மைதானத்தில், நீங்கள் உங்கள் படங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தீர்கள். நான் அன்றும் அதைச் சொன்னேன். அவர்கள் திரைப்பட உலகத்திலிருந்து வெளியே வருவதில்லை. இது விளையாட்டு, இது கிரிக்கெட், இங்கே திரைப்படங்கள் ஓடாது.

    என்று அவர் கூறினார்.

    • விராட், ரோகித் 2027 உலகக் கோப்பையை தங்களுடைய மனதில் வைத்திருப்பார்கள்.
    • விராட், ரோகித் இந்திய அணியில் இருப்பது தங்கத்தைப் போன்றது.

    ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் 3 ஒருநாள் போட்டி 5 போடிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. ஒரு தொடரில் சுப்மன் கில் தலைமையில் புதிய இந்திய அணி களமிறங்குகிறது.

    கடைசியாக ரோகித் சர்மா தலைமையில் 2024 டி20 உலகக் கோப்பை, 2025 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய அடுத்தடுத்த 2 கோப்பைகளை வென்று இந்தியா சாதனை படைத்தது.

    இதனால் 2027 உலகக் கோப்பையில் ரோகித் சர்மா தலைமையில் இந்தியா விளையாடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் அப்போது அவரால் 40 வயதில் அசத்த முடியுமா என்று சந்தேகிக்கும் தேர்வுக்குழு இப்போதே கழற்றி விட்டுள்ளது. அதனால் 2027 உலகக் கோப்பையில் விராட் கோலி ரோகித் சர்மா ஆகியோர் விளையாடுவது சந்தேகமாக மாறியுள்ளது.

    இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்பும் ரோகித் சர்மாவை இந்திய அணி கழற்றி விட்டதை நம்ப முடியவில்லை என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் மேத்யூ ஹைடன் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட், ரோகித் 2027 உலக கோப்பையை தங்களுடைய மனதில் வைத்திருப்பார்கள். உண்மையில் சாம்பியன்ஸ் டிராபியை வென்ற பின்பும் இந்தியா ரோகித் சர்மாவை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து விடுவித்தது ஏனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

    அதே சமயம் சுப்மன் கில் கேப்டனாக வளர்க்கப்பட வேண்டும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஒரு நல்ல தலைவர் உருவாவதற்கு நேரம் எடுக்கும். விராட், ரோகித் இந்திய அணியில் இருப்பது தங்கத்தைப் போன்றது.

    ஏனெனில் அவர்கள் வீரர்களாக மட்டுமல்லாமல் அணியில் நல்ல ஆலோசகர்களாகவும் இருப்பார்கள். இது அவர்களுடைய கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக இருக்காது என்று நான் நம்புகிறேன். ஆனால் துரதிஷ்டவசமாக உங்களால் காலத்திற்கும் விளையாட முடியாது.

    என்று கூறினார். 

    ×