என் மலர்
நீங்கள் தேடியது "M. Mohammed Yousuf"
- இந்தியா அந்த நேரத்தில் கோப்பையை வாங்கிருக்க வேண்டும்.
- மைதானத்தில், நீங்கள் உங்கள் படங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தீர்கள்.
துபாயில் சமீபத்தில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் (20 ஓவர்) தொடரின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வீழ்த்தி 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை சொந்தமாக்கியது. ஆனால் இந்திய அணி வீரர்கள் ஆசிய கோப்பையை, ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரும், உள்துறை மந்திரியுமான மொசின் நக்வியின் கையால் பெற்றுக்கொள்ள மறுத்து விட்டனர்.
இதனால் ஆசிய கோப்பையை, போட்டி அமைப்பு குழு நிர்வாகிகள் தங்களோடு எடுத்து சென்று விட்டனர். கோப்பையை தங்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் வற்புறுத்தப்பட்டாலும், இதுவரை இந்திய அணியிடம் கோப்பை ஒப்படைக்கப்படவில்லை.
தன்னுடைய அனுமதியின்றி ஆசிய கோப்பையை யாருக்கும் வழங்கக்கூடாது என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொசின் நக்வி கட்டளை பிறப்பித்துள்ளார்.
இந்நிலையில் மொசின் நக்வி செய்வது முற்றிலும் சரியானது என பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் யூசப் கூறியுள்ளார்.
தலைவர் (மொசின் நக்வி) செய்வது முற்றிலும் சரியானது. அவர் சரியான நிலைப்பாட்டை எடுத்துள்ளார். இந்தியா அந்த நேரத்தில் கோப்பையை வாங்கிருக்க வேண்டும். ஏ.சி.சி மற்றும் ஐ.சி.சி விதிகளின்படி, அவர் ஏ.சி.சி தலைவராக அங்கே நின்று கொண்டிருந்தார். மேலும் கோப்பை அவரது கைகள் வழியாக மட்டுமே வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் அந்த நேரத்தில் அதை வாங்கவில்லை. இப்போ என்ன அவசரம்? கோப்பையை வாங்க வேண்டும் என நினைச்சிருந்தால், நீங்கள் போய் அலுவலத்தில் அதை வாங்கிருக்க வேண்டும்.
மைதானத்தில், நீங்கள் உங்கள் படங்களைத் தயாரிப்பதில் மும்முரமாக இருந்தீர்கள். நான் அன்றும் அதைச் சொன்னேன். அவர்கள் திரைப்பட உலகத்திலிருந்து வெளியே வருவதில்லை. இது விளையாட்டு, இது கிரிக்கெட், இங்கே திரைப்படங்கள் ஓடாது.
என்று அவர் கூறினார்.
- பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தை செலுத்த முகமது யூசுப் இந்த முடிவை எடுத்துள்ளார்.
- ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார்.
கராச்சி:
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் திடீரென விலகியுள்ளார்.
இதுதொடர்பாக, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வுக் குழுவில் இருந்து முகமது யூசுப் விலகியுள்ளார். பயிற்சியாளர் பதவியில் தனது கவனத்தைச் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளார் என தெரிவித்துள்ளது.
இவர் ஏற்கனவே பாகிஸ்தான் யு-19 அணிக்கு தலைமை பயிற்சியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மருந்து உற்பத்தியாளர்கள் சங்க அறக்கட்டளையின் செயலாளர் எம்.முகம்மது யூசுப் கூறியதாவது:-
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் 25-ந்தேதி உலகமெங்கும் மருந்தாளுனர் தினம் கொண்டாடப்படுகிறது.
சுற்றுப்புற சூழல், ஒவ்வொருவரின் உடல் கூறுகள், உணவு பழக்கங்கள் நமது வாழ்வில் ஏற்படுத்தும் தாங்கள்கள் புதுப் புது வியாதிகளை தோற்றுவிக்கின்றன. அப்படிப்பட்ட வியாதிக்கெல்லாம் மருந்துகளை கண்டுபிடிக்கும் பெரும் பொறுப்பில் அவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
உடலுக்கு கேடு விளைவிக்கும் நுண்கிருமிகள், வைரஸ், பாக்டீரியா போன்றவற்றை எதிர்கொண்டு கையாண்டு அதன் வீரியத்தை கட்டுப்படுத்தும் மருந்துகளை தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கண்டுபிடித்து வருகின்றனர். அவ்வப்போது பரவும் கொடிய நோய்களுக்கும் உடனுக்குடன் ஆராய்ச்சியில் ஈடுபட்டு பக்க விளைவுகள் இல்லாத நல்ல மருந்துகளை கண்டுபிடிக்கின்றனர். வியாதிகளையும் கட்டுப்படுத்துகின்றனர்.
ஆனால் அவர்களின் தியாகம் வெளியுலகிற்கு தெரிவதே இல்லை. அவர்கள் பற்றி வெளியுலகிற்கு தெரியப்படுத்தவே இந்த தினம் கொண்டாடப்படுகிறது. மருந்துகள் கண்டுபிடிக்கும் மருந்தாளுனர்களுக்கு உலக வளர்ந்த நாடுகளில் கிடைக்கும் அங்கீகாரம் மற்ற நாடுகளிலும் கிடைக்க வேண்டும்.
மருந்தாளுனர் மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை என்றால் மருத்துவர்கள் எப்படி மருந்தை பரிந்துரைக்க முடியும். மருந்துகள் பற்றி விவரம் சொல்பவர்களே மருந்தாளுனர்கள் தானே.
உலகம் முழுவதும் மக்கள் நலனுக்காக பாடுபடும் மருந்தாளுனர்களின் தியாகத்தை போற்றுவோம். நோயில்லா உலகம் படைக்க ஒன்றிணைந்து செயல்படுவோம். எல்லோருக்கும் மருந்தாளுனர் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






