என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
- இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
3- வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து முதல் வெற்றியை பதிவு செய்தது
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்களும் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி 24 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 26 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டும், மார்க் வுட், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 127 ரன்னில் 8 விக்கெட்டை இழந்தது. இதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். 171 ரன்கள் வரை சென்றது மிகையானது. வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். அவர் நேர்த்தியுடன் பந்து வீசுவது நல்ல பலனை கொடுக்கிறது. இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்
இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷீத் மிக சிறப்பாக பந்துவீசினார். எங்களை ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவே ஆதில் ரஷீத் அனுமதிக்கவில்லை. அதனால்தான் அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார் என்று தெரிவித்தார்.
- வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- மொத்தத்தில் இவர் 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், வருண் சக்கரவர்த்தி தொடர்ச்சியான டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
கடந்த 2021-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வருண் சக்கவர்த்தி சிறிய இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் அணியில் இடம்பிடித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.
இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 24 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் உள்பட ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்சே மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் விக்கெட்டுகள் அடங்கும்.
கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்ததில் இருந்து வருண் சக்கரவர்த்தி பத்து போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சராசரி 10.96 ஆகும். இதில் சிறந்த பந்துவீச்சாக 17 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை எடுத்தது இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் 16 போட்டிகளில் இவர் 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் மட்டும் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அந்த வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒற்றை டி20 தொடரில் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை வருண் சக்கரவர்த்தி பெற்றுள்ளார்.
இதன் மூலம், தொடர்ச்சியாக பத்து டி20 போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். முன்னதாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் பத்து டி20 போட்டிகள் முடிவில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக இருந்தார்.
- டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
- முதலில் ஆடிய இங்கிலாந்து 171 ரன்களை எடுத்துள்ளது.
ராஜ்கோட்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஷமி இடம்பிடித்துள்ளார்.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. பிலிப் சால்ட் 5 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஜாஸ் பட்லர் பென் டக்கெட்டுடன் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. குறிப்பாக பென் டக்கெட் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார். அவர் 28 பந்தில் 2 சிக்சர், 7 பவுண்டரி உள்பட 51 ரன் குவித்து ஆட்டமிழந்தார்.
ஜாஸ் பட்லர் 24 ரன்னில் அவுட்டானார். 2வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 76 ரன்கள் சேர்த்தது.
கடைசி கட்டத்தில் லிவிங்ஸ்டன் அதிரடியாக ஆடி 5 சிக்சர் உள்பட 43 ரன்கள் குவித்தார்.
இறுதியில், இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டும், பாண்ட்யா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- ஜூலையில் நடைபெறும் உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என்றார் டிவில்லியர்ஸ்.
- டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
டர்பன்:
தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் ஜாம்பவான் ஏ.பி.டிவில்லியர்ஸ் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் தற்போது மீண்டும் கிரிக்கெட் களத்திற்கு திரும்பப் போவதாக அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் டிவில்லியர்ஸ் கிரிக்கெட் போட்டிக்குத் திரும்ப வாய்ப்பு உள்ளதாக தெரிவித்திருந்தார்.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்ற உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் (WCL) என்ற தொடர் மிகவும் பிரபலமாக ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இதில் யுவராஜ் சிங் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது இந்த தொடரில் தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக டிவில்லியர்ஸ் பங்கேற்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.
இந்நிலையில், வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் விளையாட உள்ளேன் என டிவில்லியர்ஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக பேட்டியளித்த டிவில்லியர்ஸ், 4 ஆண்டுக்கு முன் நான் அனைத்துவித கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்றேன். மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்ற நினைப்பு இல்லாமல் இருந்தேன். காலம் செல்ல மீண்டும் எனக்கு கிரிக்கெட் போட்டிகளுக்கு திரும்ப வேண்டும் என்ற நினைப்பு தோன்றுகிறது.
அதற்கு காரணம் நான் என்னுடைய மகன்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுகிறேன். அப்போது எனக்குள் இன்னும் கிரிக்கெட் வேட்கை இருந்ததை உணர முடிந்தது. எனவே தற்போது ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். அது மட்டுமின்றி பேட்டிங் பயிற்சியும் செய்து வருகிறேன்.
இதன்மூலம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள உலக சாம்பியன்ஷிப் லெஜண்ட் தொடரில் நான் விளையாட தயாராகி விடுவேன் என தெரிவித்துள்ளார்.
இந்த தென் ஆப்பிரிக்க அணியில் காலிஸ், கிப்ஸ், ஸ்டெயின், இம்ரான் தாகிர் போன்ற வீரர்களும் விளையாட உள்ளனர்.
டி வில்லியர்சின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
- இரு அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி குஜராத்தின் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது.
ராஜ்கோட்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டி20 போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்கிறது.
இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அர்ஷ்தீப் சிங்குக்கு பதிலாக ஷமி இடம்பிடித்துள்ளார்.
இந்திய அணி விவரம் வருமாறு:
சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), துருவ் ஜுரல், ஹர்திக் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி
இங்கிலாந்து அணி விவரம் வருமாறு:
பில் சால்ட், பென் டக்கெட், ஜோஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேமி சுமித், ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், அதில் ரஷீத், மார்க் வுட், பிரைடன் கார்ஸ்.
- ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கு சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது வழங்கப்படுகிறது.
- 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய்:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு வருடமும் சிறந்த வீரர், சிறந்த வீராங்கனை, சிறந்த ஒரு நாள் அணி, டி 20 அணி, டெஸ்ட் அணி உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வழங்கி வருகிறது.
அதன்படி 2024-ம் ஆண்டிற்கான சிறந்த வீரருக்கு வழங்கப்படும் சர் கார்பீல்ட் சோபர்ஸ் டிராபி விருது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு வழங்கப்படுகிறது என ஐசிசி அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக பும்ரா இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இந்த விருதைப் பெறும் முதல் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஆவார்.
சோபர்ஸ் விருதை ராகுல் டிராவிட் (2004), சச்சின் டெண்டுல்கர் (2010), அஸ்வின் (2016), விராட் கோலி (2017) ஆகியோர் பெற்றுள்ளனர்.
ஏற்கனவே 2024-ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் இவர் தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சென்னையில் நடந்த 2வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வென்றது.
- இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
சென்னை:
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. கொல்கத்தாவில் நடந்த முதல் டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடந்த 2வது டி20 போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்று 2-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி குஜராத்தின் ராஜ்கோட் நகரில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், இந்தியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
இங்கிலாந்து முழுமையற்ற கிரிக்கெட்டை விளையாடியது. அவர்கள் தொடர் தவறுகளைச் செய்தார்கள். இந்தியாவில் விளையாடும்போது ஒரே டெம்போவில் விளையாட முடியாது.
பெங்களூரு டிராபிக்கில் ஓட்டினால் எப்போதும் நான்காவது கியரில் இருக்க முடியாது. இங்கேயும் அதே லாஜிக் தான். சில நேரங்களில் பெங்களூரில் நான்காவது கியரில் கூட செல்ல முடியாது. இதேதான் நீங்கள் இந்தியாவில் விளையாடும் பொழுதும் அதிரடியாக நான்காவது கியரில் விளையாட முடியாது.
இதைத்தான் நான் கடந்த முறையும் சொல்லி இருந்தேன். இந்தியாவில் பயமற்ற கிரிக்கெட் முறை தேவையானது. ஆனால் அது பவர் பிளேவில் மட்டும் இருக்க வேண்டும்.
எல்லா சூழ்நிலைகளும் ஆக்ரோஷமான பேட்டிங்கிற்கு பொருந்தாது. கிரிக்கெட்டில் நிபந்தனைகளே ராஜா என சொல்வார்கள் என தெரிவித்தார்.
- முதலில் ஆடிய இந்தியா 208 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஸ்காட்லாந்து 58 ரன்களில் ஆல் அவுட்டானது.
கோலாலம்பூர்:
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி சூப்பர் 6 சுற்றிn 2வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்துடன் இன்று மோதியது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 209 ரன்கள் குவித்தது. தொடக்க வீராங்கனை கமாலினி அரை சதம் கடந்து 51 ரன்னில் அவுட்டானார்.
மற்றொரு தொடக்க வீராங்கனை கோங்கடி திரிஷா அதிரடியில் மிரட்டினார். இவர் 59 பந்துகளில் 4 சிக்சர், 13 பவுண்டரி உள்பா 110 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 147 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ஸ்காட்லாந்து களமிறங்கியது. இந்திய வீராங்கனைகள் துல்லியமாக பந்துவீசி அசத்தினர்.
இறுதியில் ஸ்காட்லாந்து அணி 14 ஓவரில் 58 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் இந்தியா 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா சார்பில் ஆயுஷி சுக்லா 4 விக்கெட்டும், வைஷ்ணவி சர்மா, கோங்கடி திரிஷா தலா 3 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகி விருதை கோங்கடி திரிஷா வென்றார்.
- வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
- ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிகளை (லீக் சுற்றில் 4 புள்ளிகள்) பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இதையடுத்து இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இன்று ஸ்காலாந்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியா சார்பில் கமாலினி 42 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். மற்றொரு துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கொங்கடி திரிஷா 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய திரிஷா 110 ரன்களை விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். சனிகா சால்கே தன் பங்கிற்கு 20 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை குவித்துள்ளது.
இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.
ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 209 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்தியது.
- இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
- ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரராக டிராவிஸ் ஹெட் களமிறங்க உள்ளார்.
கொழும்பு:
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை காலே மைதானத்தில் தொடங்க உள்ளது.
இந்த தொடருக்கான இரு அணிகளும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை அணிக்கு தனஞ்சயா டி சில்வா கேப்டனாகவும் ஆஸ்திரேலிய அணிக்கு ஸ்மித் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான கடைசி 2 போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க பேட்ஸ்மேன்களாக கவாஜாவுடன் சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினார். இந்த தொடக்க வீரர்களில் மாற்றத்தை அந்த அணி கொண்டுவந்துள்ளது.
அதன்படி தொடக்க வீரராக இருந்த சாம் கான்ஸ்டாஸ்-க்கு பதிலாக அந்த அணியின் அதிரடி ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் களமிறங்க உள்ளார். இதனால் இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடக்கம் முதலே அதிரடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார்.
- ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி. கடந்த சில தொடர்களில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இவர் மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்தனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் ஒரே மாதிரியாக தொடர்ச்சியாக ஆட்டம் இழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்திய அணியின் பேட்டிங் சொதப்பிய நிலையில், அனைத்து இந்திய வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது. அதன்படி அனைத்து வீரர்களும் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகின்றனர்.
அந்த வகையில் கழுத்து வலி காரணமாக ஓய்வு இருந்து வந்த விராட் கோலி, தற்போது ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக களமிறங்க உள்ளார். 12 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாட உள்ளார். சீனியர் வீரரான விராட் கோலிக்கு கேப்டன் பதவு கொடுக்க டெல்லி அணி நிர்வாகம் முன்வந்த நிலையில் அதனை கோலி நிகாரித்தார்.
இதனால் ஆயோஷ் பதோனி தலைமையில் டெல்லி அணி களமிறங்குகிறது. வருகிற 30-ந் தேதி ரெயில்வே அணியுடன் டெல்லி அணி மோதுகிறது.
இந்நிலையில் டெல்லி அணியுடன் விராட் கோலி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ மற்றும் பீல்டிங் செய்யும் வீடியோ என கோலி குறித்து பல வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த பயிற்சியின் போது அவரது ரசிகருக்கு தனது கையுறையை பரிசாக வழங்கினார். இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.
- பிக்பாஷ் லீக் தொடரில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
- ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன் சதம் அடித்து அசத்தினார்.
பிக்பாஷ் லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப்போட்யில் வார்னர் தலைமையிலான சிட்னி தண்டரும் நாதன் எல்லீஸ் தலைமையிலான ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் முதலில் விளையாடிய சிட்னி தண்டர் அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி 14.1 ஓவரில் 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த போட்டியில் ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணியின் தொடக்க வீரராக களமிறங்கிய மிட்செல் ஓவன், அதிரடியாக விளையாடிய 39 பந்தில் சதம் அடித்து அசத்தினார். குறிப்பாக ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல இவர் முக்கிய பங்காற்றினார்.
இந்நிலையில் 2015-ல் ரசிகனாக ஹரிகேன்ஸ் அணியின் வெற்றியை ரசித்த ஓவன், 10 ஆண்டுகளுப் பிறகு (2025) ஹரிகேன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வெல்ல ஒரு வீரனாக களத்தில் ஆடியுள்ளார். இந்த இரு புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.






