என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- அருண் ஜெட்லி மைதானத்தில் இளம் வீரர்களுடன் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.
- ரெயில்வேஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
புதுடெல்லி:
விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது. டெல்லி அணிக்காக விளையாடி வரும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.
இந்நிலையில், ரஞ்சி டிராபி போட்டிக்கான பயிற்சியில் விராட் கோலி நேற்று ஈடுபட்டார். 36 வயதான அவர் டெல்லி அணி வீரர்களுடன் அருண் ஜெட்லி மைதானத்தில் பீல்டிங் மற்றும் பேட்டிங் பயிற்சிகளை மேற்கொண்டார்.
விராட் கோலி பயிற்சி தொடங்கும் முன்னர் தனது கிட் பையை இழுப்பதைக் கண்ட டெல்லி அணி மேலாளர், அவருக்கு உதவுமாறு சில இளம் வீரர்களிடம் சைகை செய்தார். ஆனால் இந்த வாய்ப்பை கோலி திட்டவட்டமாக மறுத்துவிட்டார்.
கோலியின் ஆரம்ப நாட்களில் பயிற்சியாளராக இருந்த பதி, விராட் அவர்கள் உங்களுக்கு உதவட்டும் என கூறியதற்கு, கோலி, என்ன சொல்கிறீர்கள்? இது என்னுடைய கிட், நானே அதை எடுத்துச் செல்கிறேன் என தெரிவித்தார். இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
- டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று தொடங்கியது.
- டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
புதுடெல்லி:
விராட் கோலி 12 ஆண்டுக்குப் பிறகு ரஞ்சி டிராபி தொடரில் விளையாடுகிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடி வருகிறார்.
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி-ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று தொடங்கியது.
இந்நிலையில், டெல்லி அணிக்காக விளையாடும் விராட் கோலியைக் காண காலையில் இருந்தே ரசிகர்கள் திரண்டனர்.
ரசிகர் ஒருவர் பாதுகாப்பையும் மீறி மைதானத்தினுள் சென்று விராட் கோலியின் காலில் விழுந்தார். உடனே பதறிய கோலி அவரை தூக்கி விட்டார். அங்கு வந்த பாதுகாவலர்கள் அவரை மைதானத்தில் இருந்து அப்புறப்படுத்தினர்.
விராட் கோலி ஆடும் இந்தப் போட்டியை ஜியோ சினிமா ஒளிபரப்புகிறது. விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது.
விராட் கோலி பயிற்சி செய்யும்போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ராஜ்கோட்டில் நடந்த 3- வது ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும்.
ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 3 போட்டி முடிவில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா வெற்றி பெற்றது. ராஜ்கோட்டில் நடந்த 3- வது ஆட்டத்தில் இங்கிலாந்து 26 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நாளை ( 31 -ந்தேதி) நடக்கிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை கைப்பற்றுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும். ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். துருவ் ஜூரல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார். நீண்ட இடைவேளைக்கு பிறகு சர்வதேச போட்டியில் ஆடிய வேகப்பந்து வீரர் முகமது ஷமி முதல் ஆட்டத்தில் விக்கெட் எடுக்கவில்லை. இதனால் அர்ஷ் தீப்சிங் அணிக்கு திரும்புவார். கடந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு எடுபடவில்லை. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மட்டுமே தொடர்ந்து நிலையாக பந்து வீசி வருகிறார். பேட்டிங்கில் திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ஹர்திக் பாண்ட்யா நல்ல நிலையில் உள்ளனர்.
ராஜ்கோட்டில் வெற்றி பெற்றதால் இங்கிலாந்து தொடரை இழக்காமல் இருந்தது. நாளைய போட்டியும் அந்த அணிக்கு முக்கியமானது. வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இருக்கிறது. தோற்றால் தொடரை இழந்து விடும்.
இங்கிலாந்து அணியின் பேட்டிங்கில் கேப்டன் பட்லர், டக்கெட், லிவிங்ஸ்டன் ஆகியோரும் பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ், ஆதில் ரஷீத் ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர்.
இரு அணிகளும் நாளை மோதுவது 28-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 27 ஆட்டத்தில் இந்தியா 15 -ல், இங்கிலாந்து 12-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- இதுபற்றி இருதரப்பும் எவ்வித தகவலும் வழங்காமல் இருந்தனர்.
- மஹிரா ஷர்மாவின் தாய் விளக்கம்.
பிரபல பாலிவுட் நடிகை மஹிரா ஷர்மா. சமீபத்தில் நடைபெற்ற பிக் பாஸ் 13-ல் பங்கேற்ற இவர் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் டேட்டிங் செய்வதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி வந்தன. எனினும், இதுபற்றி இருதரப்பும் எவ்வித தகவலும் வழங்காமல் இருந்தனர்.
இந்த நிலையில், முகமது சிராஜுடன் டேட்டிங் செய்வதாக வெளியான தகவல்களுக்கு மஹிரா ஷர்மாவின் தாய் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், மஹிரா ஷர்மா மற்றும் முகமது சிராஜ் இடையே எவ்வித தொடர்பும் இல்லை. என் மகள் பிரபலமாக இருப்பதால், அவள் பெயரை இப்படி தொடர்புபடுத்துகிறார்கள் என்று தெரிவித்தார்.
சமீபத்தில் முகமது சிராஜ் மற்றும் ஆஷா போஸ்லேவின் பேத்தி சனாய் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. எனினும், இந்த தகவல்களை பொய் என்று சனாய் திட்டவட்டமாக மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நாளை தொடங்குகிறது.
- டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.
டெல்லி:
12 ஆண்டுகளுக்குப் பிறகு விராட் கோலி ரஞ்சி டிராபி தொடரில் விளையாட இருக்கிறார். டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டெல்லி அணிக்காக விராட் கோலி விளையாடுகிறார்.
இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர் விராட் கோலி பங்கேற்கும் போட்டி என்பதால் டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டி நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி நாளை அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
கடந்த வாரம் வரை டெல்லி மற்றும் ரெயில்வேஸ் அணிகள் மோதும் போட்டியை நேரலையில் ஒளிபரப்பு செய்வதற்கான எந்த திட்டமும் இல்லை. ஆனால், தற்போது விராட் கோலிக்கு கூடும் ரசிகர்களின் எண்ணிக்கையால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்து இருக்கிறது. ஜியோ சினிமா விராட் கோலி ஆடும் போட்டியை ஒளிபரப்பும் எனவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஸ்போர்ட்ஸ் 18 தொலைக்காட்சியிலும் இந்த போட்டியை நேரலையில் பார்க்கலாம்.
டெல்லி - ரெயில்வேஸ் அணிகள் ஆடும் போட்டி நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படாமல் போனால் விராட் கோலியை பார்க்க வேண்டும் என அவரது தீவிர ரசிகர்கள் மைதானத்திற்கு வர முயல்வார்கள். எனவே, மைதானத்திற்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கையை குறைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
விராட் கோலி பயிற்சி செய்யும் போதே ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அருண் ஜெட்லி மைதானத்தில் கூடினர் என்பது குறிப்பிடத்தக்கது.
- 2021 நவம்பர் மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார்.
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது.
துபாய்:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர் 2021 நவம்பர் மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரியாக செயல்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது. என்னால் முடிந்தவரை இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
என்று ஜெப் அலர்டிஸ் கூறினார்.
- டிராவிஸ் ஹெட் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
- கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
காலே:
இலங்கை- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது.
அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக கவாஜா , டிராவிஸ் ஹெட் களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் குவித்தனர். குறிப்பாக டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடி அரைசதமடித்து அசத்தினர். அவர் 40 பந்தில் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த லெபுசென் 20 ரன்களில் ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து கவாஜாவுடன் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிலைத்து ஆடி ரன்கள் குவித்தனர். தொடர்ந்து விளையாடிய இருவரும் சதமடித்து அசத்தினர்.
இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 330 ரன்கள் எடுத்தது. கவாஜா 147 ரன்களுடன், ஸ்மித் 104 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் பிரபாத் ஜெயசூர்யா, ஜெஃப்ரி வேண்டர்சே தலா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
- முதலில் விளையாடிய இலங்கை அணி 99 ரன்கள் எடுத்தது.
- ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது.
ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சனா கவிந்தி 19 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் லில்லி பாசிங்த்வைட் 3 விக்கெட்டுகளை விழ்த்தினார்.
இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மந்தமாக விளையாடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கவோம்ஹே பிரே 24 ரன்கள் எடுத்தார்.
இதன்மூலம் இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது. இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை அணி நாடு திரும்பும்.
- ஐ.சி.சி. டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
- இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
துபாய்:
டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.
இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் அவர் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் 2வது இடத்திலும், இலங்கை வீரர் ஹசாரங்கா 3வது இடத்திலும் உள்ளனர்.
பேட்ஸ்மேன்களில் இந்தியாவின் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், பிலிப் சால்ட் 3-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலும் உள்ளார்.
- இலங்கைக்கு எதிராக விளையாடி வரும் ஸ்மித் டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார்.
- தொடர்ந்து விளையாடிய ஸ்மித் சதம் விளாசி அசத்தினார்.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த வீரராக திகழ்பவர் ஸ்டீவ் ஸ்மித். இவர் இந்தியாவிற்கு எதிரான பார்டர் கவாஸ்கர் தொடரிலே 10 ஆயிரம் ரன்களை எட்டும் வாய்ப்பு கிட்டியது. ஆனால், 1 ரன்னில் அந்த சாதனையை படைக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
இந்த நிலையில், இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கம்மின்ஸ் காயம் காரணமாக விலகியதால், ஸ்மித் தலைமையில் ஆஸ்திரேலிய அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணிக்காக முதல் விக்கெட்டிற்கு டிராவிஸ் ஹெட் அதிரடியாக 57 ரன்கள் எடுத்து அவுட்டாகிய நிலையில், அடுத்து வந்த லபுசென் 20 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து வந்த ஸ்டீவ் ஸ்மித் 1 ரன் எடுத்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை எட்டிய ஸ்டீவ் ஸ்மித்திற்கு மைதானத்தில் இருந்த ரசிகர்களும், இரு அணி வீரர்களும் கைதட்டி வாழ்த்து தெரிவித்தனர். கேப்டனாக இருக்கும்போது இந்த சாதனையை அவர் எட்டியிருப்பது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
தொடர்ந்து விளையாடிய ஸ்மித் சதம் விளாசி அசத்தினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 115 போட்டிகளில் விளையாடிய ஸ்மித் 35-வது சதத்தை பதிவு செய்துள்ளார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் 34 சதங்கள் விளாசிய 4 முன்னாள் ஜாம்பவான்களான யூனிஸ்கான் (பாகிஸ்தான்), சுனில் கவாஸ்கர் (இந்தியா), பிரைன் லாரா (வெஸ்ட் இண்டீஸ்), ஜெயவர்தனே (இலங்கை) ஆகியோரது சாதனையை ஸ்மித் முறியடித்துள்ளார்.
- இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் 1 ரன் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை ஸ்மித் கடந்தார்.
- 10 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது ஆஸ்திரேலிய வீரராக ஸ்மித் சாதனை படைத்துள்ளார்.
காலே:
இலங்கைக்கு சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 2 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் (57) அதிரடியாக விளையாடி அரை சதம் கடந்து அவுட் ஆனார். அடுத்து வந்த லபுசென் 20 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து கவாஜா -ஸ்மித் ஜோடி பொறுப்புடன் ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இந்த போட்டியில் ஸ்மித் 1 ரன் எடுத்த போது டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்தார். இதன்மூலம் பல சாதனைகளை ஸ்மித் படைத்துள்ளார்.
10 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது ஆஸ்திரேலிய வீரராக ஸ்மித் சாதனை படைத்தார். முதல் 3 இடங்களில் ரிக்கி பாண்டிங் (13,378), ஆலன் பார்டர் (11,174), ஸ்டீவ் வாக் (10927) ஆகியோர் உள்ளனர். மேலும் ஒட்டுமொத்தமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் ஸ்டீவ் ஸ்மித் 15-வது இடத்தில் உள்ளார்.
அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்தவர்கள் பட்டியலில் ஸ்மித் 5-வது இடத்தில் உள்ளார். இவர் 205 போட்டிகளில் விளையாடி 10 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த வீரர்கள் விவரம்:-
195 - பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்) vs இங்கிலாந்து, மான்செஸ்டர் (2004)
195 - சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) vs பாகிஸ்தான், ஈடன் கார்டன்ஸ் (2005)
195 - குமார் சங்கக்காரா (இலங்கை) vs ஆஸ்திரேலியா, எம்சிஜி (2012)
196 - ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) vs மேற்கிந்திய தீவுகள், நார்த் சவுண்ட் (2008)
205 - ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) vs இலங்கை, காலே (2025)
206 - ராகுல் டிராவிட் (இந்தியா) vs தென்னாப்பிரிக்கா, சென்னை (2008)
10 ஆயிரம் ரன்கள் குவித்த வீரர்கள் விவரம்
சச்சின் டெண்டுல்கர் (இந்தியா) - 15,921 ரன்கள்
ரிக்கி பாண்டிங் (ஆஸ்திரேலியா) - 13,378 ரன்கள்
ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 13289 ரன்கள்
ராகுல் டிராவிட் (இந்தியா) - 13,288 ரன்கள்
ஜோ ரூட் (இங்கிலாந்து) - 12,972 ரன்கள்
அலஸ்டர் குக் (இங்கிலாந்து) - 12,472 ரன்கள்
குமார் சங்கக்கார (இலங்கை) - 12,400 ரன்கள்
பிரையன் லாரா (மேற்கிந்திய தீவுகள்) - 11,953 ரன்கள்
ஷிவ்நரேன் சந்தர்பால் (மேற்கிந்திய தீவுகள்) - 11,867 ரன்கள்
மஹேல ஜெயவர்த்தனே (இலங்கை) - 11,814 ரன்கள்
ஆலன் பார்டர் (ஆஸ்திரேலியா) - 11,174 ரன்கள்
ஸ்டீவ் வாக் (ஆஸ்திரேலியா) - 10,927 ரன்கள்
சுனில் கவாஸ்கர் (இந்தியா) - 10,122 ரன்கள்
யூனிஸ் கான் (பாகிஸ்தான்) - 10,099 ரன்கள்
ஸ்டீவ் ஸ்மித் (ஆஸ்திரேலியா) -10,000* ரன்கள் (தற்போது)
- வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார்.
- இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்.
3- வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி இங்கிலாந்து முதல் வெற்றியை பதிவு செய்தது
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. அதிகபட்சமாக பென் டக்கெட் 51 ரன்களும் லிவிங்ஸ்டன் 43 ரன்களும் எடுத்தனர். வருண் சக்கரவர்த்தி 24 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதனையடுத்து 172 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 26 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா 40 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் ஜேமி ஓவர்டன் 3 விக்கெட்டும், ஜோப்ரா ஆர்ச்சர், பிரைடன் கார்ஸ் தலா 2 விக்கெட்டும், மார்க் வுட், ஆதில் ரஷீத் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.
பின்னர் தோல்வி குறித்து இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 127 ரன்னில் 8 விக்கெட்டை இழந்தது. இதை பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டோம். 171 ரன்கள் வரை சென்றது மிகையானது. வருண் சக்கரவர்த்தி ஒருவரே பந்து வீச்சில் மிகவும் கடினமாக உழைத்துள்ளார். அவர் நேர்த்தியுடன் பந்து வீசுவது நல்ல பலனை கொடுக்கிறது. இனிவரும் போட்டியில் ஷமி சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்
இங்கிலாந்து அணியில் ஆதில் ரஷீத் மிக சிறப்பாக பந்துவீசினார். எங்களை ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்யவே ஆதில் ரஷீத் அனுமதிக்கவில்லை. அதனால்தான் அவர் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளராக இருக்கிறார் என்று தெரிவித்தார்.






