என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Junior Women's T20 World Cup Cricket"

    • பெண்கள் ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் கோப்பையை வென்று வரலாறு படைத்தது.
    • இந்திய அணியினருக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகையாக வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

    பெண்களுக்கான முதலாவது ஜூனியர் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) கடந்த 14-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் தொடங்கியது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் மற்றும் சூப்பர்சிக்ஸ் சுற்று முடிவில் இந்தியாவும், இங்கிலாந்தும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிஆட்டம் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்தது. இதில் 'டாஸ்' ஜெயித்த இந்திய கேப்டன் ஷபாலி வர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து வீராங்கனைகள் இந்திய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். 17.1 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த அந்த அணி 68 ரன்னில் சுருண்டது.

    அடுத்து சுலப இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 14 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 69 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உலகக் கோப்பையை உச்சிமுகர்ந்தது. இந்தியாவின் திதாஸ் சாது ஆட்டநாயகி விருதையும், இங்கிலாந்து கேப்டன் கிரேஸ் ஸ்கிரிவென்ஸ் தொடர்நாயகி விருதையும் பெற்றனர்.

    பெண்கள் கிரிக்கெட்டில் இதற்கு முன்பு எந்த வடிவிலான உலகக் கோப்பைபையும் இந்தியா வென்றதில்லை. இந்திய சீனியர் அணி 3 முறை இறுதி ஆட்டத்தில் தோற்று இருக்கிறது. ஆனால் இந்திய இளம் படை, அறிமுக உலகக்கோப்பை தொடரிலேயே பட்டம் வென்று சாதித்துள்ளது. அவர்களுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது. இந்த போட்டியை இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா நேரில் சென்று கண்டு களித்தார்.

    இந்நிலையில் வரலாற்று சாதனை படைத்த ஜூனியர் மகளிர் அணிக்கு இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா தலை வணங்கி வாழ்த்தை தெரிவித்தார். பின்னர் அனைத்து வீராங்கனைகளுக்கு கைகுழுக்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    மேலும் இந்தியா-நியூசிலாந்து இடையிலான கடைசி 20 ஓவர் போட்டியை நேரில் பார்க்க ஷபாலி வர்மா தலைமையிலான இந்திய ஜூனியர் அணிக்கு பிசிசிஐ செயலாளர் அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காலாந்துடன் இன்று மோதுகிறது.
    • இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

    கோலாலம்பூர்:

    2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 3 இடங்களை பிடித்த அணிகள் வீதம் 12 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறின. 12 அணிகளும் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    இதன்படி குரூப் 1-ல் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், குரூப் 2-ல் தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, அமெரிக்கா, நைஜீரியா, அயர்லாந்து, நியூசிலாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.

    இந்த சுற்றில் ஒரு அணி தங்கள் பிரிவில் உள்ள குறிப்பிட்ட இரு அணிகளுடன் மட்டும் மோதும். இந்த சுற்று முடிவில் இரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

    இதில் நடப்பு சாம்பியன் ஆன இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிகளை (லீக் சுற்றில் 4 புள்ளிகள்) பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது.

    இதனையடுத்து இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் ஸ்காலாந்துடன் இன்று மோதுகிறது. இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி கோலாலம்பூரில் நடைபெற உள்ளது.

    • வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
    • ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    2-வது ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி தனது முதலாவது சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியுடன் சேர்த்து மொத்தம் 6 புள்ளிகளை (லீக் சுற்றில் 4 புள்ளிகள்) பெற்ற இந்திய அணி அரையிறுதிக்கு ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டது. இதையடுத்து இந்திய அணி தனது 2-வது மற்றும் கடைசி சூப்பர் 6 சுற்று ஆட்டத்தில் இன்று ஸ்காலாந்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.

    இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்தியா சார்பில் கமாலினி 42 பந்துகளில் 51 ரன்களை விளாசினார். மற்றொரு துவக்க வீராங்கனையாக களமிறங்கிய கொங்கடி திரிஷா 59 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

    இறுதிவரை ஆட்டமிழக்காமல் விளையாடிய திரிஷா 110 ரன்களை விளாசினார். இதில் 13 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்கும். சனிகா சால்கே தன் பங்கிற்கு 20 பந்துகளில் 29 ரன்களை குவித்தார். இதன் காரணமாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 208 ரன்களை குவித்துள்ளது.

    இந்தப் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் சதம் அடித்த முதல் வீராங்கனை என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ஸ்காட்லாந்து அணி 20 ஓவர்களில் 209 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்தியது. 

    • முதலில் விளையாடிய இலங்கை அணி 99 ரன்கள் எடுத்தது.
    • ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 88 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    ஜூனியர் மகளிர் டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 99 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சஞ்சனா கவிந்தி 19 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணி தரப்பில் லில்லி பாசிங்த்வைட் 3 விக்கெட்டுகளை விழ்த்தினார்.

    இதனையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி மந்தமாக விளையாடினார். இதனால் அந்த அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக கவோம்ஹே பிரே 24 ரன்கள் எடுத்தார்.

    இதன்மூலம் இலங்கை அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இலங்கை ஏற்கனவே தொடரில் இருந்து வெளியேறி விட்டது. இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில் இலங்கை அணி நாடு திரும்பும்.

    • முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
    • இறுதிப்போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் பிப்ரவரி 2-ந் தேதி மோதுகிறது.

    கோலாலம்பூர்:

    2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது. 16 அணிகள் பங்கேற்ற இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டி விட்டது. சூப்பர்6 சுற்று முடிவில் இந்தியா, ஆஸ்திரேலியா (குரூப் 1), தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து (குரூப் 2) அணிகள் தங்கள் பிரிவில் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரைஇறுதிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் இன்று அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டி இந்திய நேரப்படி காலை 8.00 மணிக்கு தொடங்கியது. இதில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

    2-வது அரைஇறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, இங்கிலாந்தை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. அடுத்து வந்த வீராங்கனைகள் இந்தியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர்.

    இதனால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டேவினா பெர்ரின் 45 ரன்கள் குவித்தார். இந்திய தரப்பில் பருனிகா சிசோடியா, வைஷ்ணவி சர்மா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி பொறுப்புடன் ஆடினர். தொடங்க வீராங்கனை ஜி கமலினி- கோங்கடி த்ரிஷா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் எடுத்தது. அதிரடியாக விளையாடிய த்ரிஷா 29 பந்தில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமலினி அரை சதம் அடித்து அசத்தினார்.

    இறுதியில் இந்திய அணி 15 ஓவரில் 1 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 117 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இதன்மூலம் ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்றது.

    இறுதிப்போட்டியில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் அடுத்த மாதம் (பிப்ரவரி) 2-ந் தேதி நடக்கிறது.

    • இந்தியா மீண்டும் பட்டம் வெல்லுமா?
    • இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

    கோலாலம்பூர்:

    2-வது ஜூனியர் பெண்கள் 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) மலேசியாவில் நடந்து வருகிறது.

    இதில் கோலாலம்பூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி, தென் ஆப்பிரிக்காவை (பகல் 12 மணி) சந்திக்கிறது.

    நிக்கி பிரசாத் தலைமையிலான இந்திய அணி இந்த போட்டி தொடரில் தோல்வியை சந்திக்காமல் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. லீக் சுற்றில் வெஸ்ட்இண்டீஸ், மலேசியா, இலங்கையையும், சூப்பர் 6 சுற்றில் வங்காளதேசம், ஸ்காட்லாந்தையும் பந்தாடிய இந்திய அணி அரை இறுதியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை விரட்டியடித்து தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    இந்திய அணியில் பேட்டிங்கில் ரன் குவிப்பில் முதலிடத்தில் உள்ள கோங்காடி திரிஷா (265 ரன்), கமலினி (135) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    பந்து வீச்சில் அதிக விக்கெட் வீழ்த்தி முறையே முதல் 2 இடம் வகிக்கும் வைஷ்ணவி ஷர்மா (15 விக்கெட்), ஆயுஷி சுக்லா (12), பருனிகா சிசோடியா, ஜோஷிதா, ஷப்னம் ஷகீல் கலக்குகிறார்கள்.

    கைலா ரெனேக் தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி லீக் சுற்றில் நியூசிலாந்து, சமோவ், நைஜீரியாவை தொடர்ச்சியாக வீழ்த்தியது. சூப்பர்6 சுற்றில் அயர்லாந்தை வென்றது.

    அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. அரைஇறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அதிர்ச்சி அளித்து முதல்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

    தென்ஆப்பிரிக்க அணியில் பேட்டிங்கில் ஜெம்மா போத்தா, சிமோன் லாரன்ஸ்சும், பந்து வீச்சில் கைலா ரெனேக், மோனலிசா லிகோடி, ஆஷ்லே வான் விக்கும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    இந்திய அணி கோப்பையை தக்கவைத்துக்கொள்ள தனது முழு திறனையும் வெளிப்படுத்தும். அதேநேரத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய உத்வேகத்துடன் களம் காணும் தென்ஆப்பிரிக்க அணி முதல்முறையாக மகுடம் சூட மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகமில்லை. இருந்தாலும் வலுவான இந்திய அணியே மீண்டும் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்புள்ளது.

    • முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி 82 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • அடுத்து ஆடிய இந்தியா 84 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கோலாலம்பூர்:

    2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக வேன் வூர்ஸ்ட் 23 ரன்னும், ஃபே கௌலிங் 15 ரன்னும் எடுத்தனர்.

    இந்தியா சார்பில் கொங்கடி திரிஷா 3 விக்கெட்டும், வைஷ்ணவி ஷர்மா, ஆயுஷி ஷுக்லா, பருனிகா சிசோடியா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை கமலினி 8 ரன்னில் அவுட்டானார்.

    2வது விக்கெட்டுக்கு கொங்கடி திரிஷாவுடன் இணைந்த சானிகா சால்கே ஜோடி பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

    இறுதியில், இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி அசத்தியது. திரிஷா கொங்கடி 44 ரன்னும், சால்கே ஜோடி 26 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • மகளிர் U19 டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது.
    • தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினியை நினைத்து பெருமை கொள்கிறேன்

    2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு துணை முதல்வர் உதயநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு வாழ்த்துகள். அவர்களின் கூட்டுமுயற்சியும், விடாமுயற்சியும்தான் அவர்களை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளது.

    வரலாற்றுச் சாதனை புரிந்த அனைவருக்கும் வாழ்த்துகள். குறிப்பாக அணியில் இடம்பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை கமலினியை நினைத்து பெருமை கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • மகளிர் U19 டி20 உலகக் கோப்பையை இரண்டாவது முறையாகக் கைப்பற்றி இந்திய அணி அசத்தியது
    • வெற்றி பெற்ற இந்திய அணிக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    2-வது ஜூனியர் பெண்கள் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி மலேசியாவில் நடைபெற்றது. இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 82 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, 83 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி 11.2 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 84 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், மகளிர் U19 உலக கோப்பையை கைப்பற்றிய இந்திய அணிக்கு பிசிசிஐ ரூ.5 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

    ×